Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பூங்குன்றன் வேலைக்கு போக தயாராகி வந்தான். குழலி அவனுக்கு சாப்பிட உணவு எடுத்து வைத்தாள்.
அப்படியே குழலியும் சாப்பிட உட்கார்ந்தாள்.
பூங்குன்றன் சாப்பிட்டு கொண்டே " அதை படித்தாயா?" என்று அரைகுறையாக கேட்க,
குழலி, கணவன் வாட்சப் மெசேஜை தான் கேட்கிறான் என்று " நீங்கள் உடை மாற்ற போன பிறகு, நான் உங்களுக்கு டிபன் செய்ய போய் விட்டேன். நான் எங்க உங்க வாட்சப்பிற்கு வந்த பதில் மெசேஜை படித்தேன் " என்று சலிப்புடன் சொன்னாள்.
பூங்குன்றன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு" நான் எதைப் பற்றி கேட்கிறேன், நீ எதைப் பற்றி சொல்கிற?" என்று சொல்ல,
குழலி" நீங்கள், உங்கள் வாட்சப்பில் வந்த, இனிய காலை வணக்கம் சீனியர் பற்றி தானே கேட்டிங்க?" என்று விரக்தியுடன் சொல்ல,
பூங்குன்றன், சிரித்து கொண்டே" நான் கேட்டது, ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்தாயா?" என்று கேட்டு விட்டு, சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு போய் கழுவப்போனான்.
குழலி " நீங்கள் இப்படி தெளிவாக கேட்கனும், அதைவிட்டு அரைகுறையாக நீ அதைப் படித்தாயா?, என்று கேட்டால் எனக்கு எப்படி புரியும் " என்று சொல்லி விட்டு,
சாப்பிட்ட தட்டை பூங்குன்றன் கழுவப் போகும் போது, " நான் தான் தட்டை கழுவுவேன்ல, நீங்கள் ஏன் எப்ப பாரு சாப்பிட்ட உடனேயே நீங்களே கழுவி வைக்கிங்க?" என்று அன்பாக கேட்க,
பூங்குன்றன் " நான் எங்கண்ணன் கூட இருக்கும் போதும், சாப்பிட்ட தட்டை நானே கழுவி வைச்சுடுவேன் " என்று சொல்லி விட்டு தட்டை கழுவி விட்டு, கையை துண்டில் துடைத்து கொண்டே வந்து சேரில் உட்கார்ந்தான்.
குழலியும்" அது நீங்கள் உங்கள் அண்ணிக்கு கொடுக்கிற மரியாதை.
நான் உங்கள் மனைவி தானே, அதனால் நான் உங்கள் தட்டை கழுவ மாட்டேனா? அல்லது கழுவக் கூடாதா?"என்று கேட்க,
பூங்குன்றன் " அப்படி எல்லாம், நாம் சாப்பிட்ட தட்டை நாமே கழுவுவதால் ஒரு பிரச்சனையும் இல்லையே " என்று சொல்லி விட்டு, " அந்த புத்தகத்தை படித்தாயா?" என்று கேட்க,
குழலி, " இருங்க நானும் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டு வாரேன்." என்று சொல்லி விட்டு கழுவ சென்றாள்.
தட்டை கழுவி விட்டு" காஃபி போட்டு எடுத்து வரவா?" என்று கேட்க,
பூங்குன்றன் " ம்ம், கொண்டு வா" என்றான்.
குழலியும் இருவருக்கும் காஃபி போட்டு எடுத்து கொண்டு வந்து, ஒரு டம்பளரை பூங்குன்றனிடம் கொடுத்து விட்டு, ஒரு டம்ளரை அவள் வைத்து கொண்டு மற்றொரு சேரில் உட்கார்ந்தாள்.
குழலி காஃபி ஒரு மடக்கு குடித்ததும் " அடடே சீனி போட மறந்து விட்டேனே.!" என்று சொல்லி விட்டு, பூங்குன்றனிடம் உள்ள காஃபி டம்ளரையும் வாங்கி கொண்டு போய் காஃபியில் சீனி சேர்த்து கொண்டு வந்தாள்.
பூங்குன்றன் " இப்போது குடிக்கலாமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்க, குழலியும் ம்ம் என்பது போல சிரித்து கொண்டே தலையாட்டினாள்.
குழலி " என்ன கேட்டிங்க, அந்த புத்தகத்தை படித்தாயா, என்றா?" எனக் கேட்க,
பூங்குன்றன், ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான்.
குழலி " அதில் ஒரு கதையுடன் ஒரு விளக்கம் இருந்தது. எனக்கு கதை புரிந்தது ஆனால் அதில் ஆளுமை திறன் பற்றிய விளக்கம் புரிய வில்லை" என்றாள்.
பூங்குன்றன், காஃபி குடித்து விட்டு, எழுந்து போய் டம்ளரை கழுவி வைத்து விட்டு வந்து, " அப்படியா.!,
அந்த புத்தகத்தை கொண்டா பார்க்கலாம் " என்று சொல்ல, குழலியும் காஃபி டம்ளரை கழுவி வைத்து விட்டு, ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து பூங்குன்றனிடம் கொடுத்து விட்டு" உங்களுக்கு வேலைக்கு நேரம் ஆகவில்லையா?" என்று கேட்க,
பூங்குன்றன், மொபைலில் டைம் பார்த்து விட்டு, " இன்னும் நேரம் இருக்கு" என்று சொல்லி விட்டு,
" எந்த கதை?" என்று கேட்க,
குழலி, தான் படித்த கதையை எடுத்து காட்டினாள்.
பூங்குன்றன், குழலி காட்டிய கதையை படிக்க ஆரம்பித்தான்.
கதையில்,
ஒரு தொழில் அதிபரின் மனைவியிடம், அவரின் தம்பி " அக்கா, மாமா, கம்பெனியில் எனக்கு முக்கிய பொறுப்பு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்ததால், என்னை மற்ற வேலைக்காரர்கள் மதிக்க வில்லை" என்று புகார் சொன்னார்.
அதற்கு அக்கா " நீ தானே இதுவரை முக்கிய பொறுப்பில் இருந்த, இப்ப உன்னை மாற்ற வேண்டிய காரணம் ஏன்?" என்று கம்பெனி பற்றிய விவரம் தெரியாமல் கேட்க,
அதற்கு தம்பி" ஒரு வருடத்திற்கு முன்பு வந்த ஒருவன், மாமாவிடம் என்னைப் பற்றி தப்பு தப்பா சொல்லி, அவன் நல்ல பெயர் வாங்கி விட்டான்.
போதாக்குறைக்கு, கூட வேலை செய்பவர்களிடம் இவன் ஓனருக்கு மச்சான், அதான் நம்மிடம் திமிரைக் காட்டுகிறான்,அதனால் இவனை பதவியில் இருந்து இறக்க நீங்கள் ஓனரிடம் இவனைப் பற்றி தப்பா சொல்லுங்க என்று தூண்டி விட்டான்,
அதனால் அவர்களும் மச்சானிடம் என்னைப் பற்றி தப்பா சொல்லி, என் முக்கியமான பதவியை பிடுங்கி அவனுக்கு கொடுக்க வைத்தார்கள் " என்று சொல்லி விட்டு,
" நீ தான் அக்கா, எப்படியாவது மச்சானிடம் சொல்லி மீண்டும் அந்த முக்கிய மான பொறுப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி பொறுப்பு கிடைத்தால் தான் எனக்கு கம்பெனியில் உள்ள வேலைக்காரர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும் " என்று அழுவாத குறையாக சொன்னான்.
அக்காவும்" சரி மச்சான் வரட்டும் சொல்றேன், நீ கவலைப் படாமல் போ" என்றார்.
கணவன் வந்ததும், மனைவி தன் தம்பிக்கு ஆதரவாக பேசினார்.
கணவன்" ஓ அப்படியா.!, உன் தம்பியை கூட வேலை செய்பவர்கள் மதிக்க வில்லையா?, அப்படி என்றால் உடனே மீண்டும் உன் தம்பிக்கு பதவி உயர்வு கொடுக்கிறேன் " என்று சொல்லி விட்டு" நாளைக்கு நீயும் என் கூட வா, உன் தம்பிக்கு பொறுப்பு கொடுத்ததைப் பார்த்து விட்டு, வேலைக்காரர்கள் மரியாதை கொடுப்பதை பார்க்கலாம் " என்றார்.
மறுநாள் மாலையில் கம்பெனிக்கு ஓனரும் அவர் மனைவியும் வந்தார்கள்.
கம்பெனிக்குள் சென்று, தங்கள் நிறுவன தயாரிப்பு பேக்கேஜிகளைப் பார்த்து விட்டு, ஓனர் தன் மனைவியின் தம்பியை அழைத்தார்.
அவரும் வந்து" சொல்லுங்க மச்சான் " என்றார். " இந்த பேக்கேஜ் அழகாக இருக்கிறது இது யார் கொடுத்த யோசனை என்று கேட்க, அந்த பேக்கேஜ் நல்ல முறையில் வர யோசனை கொடுத்தவர் அங்கே வர, ஓனர் மச்சான்" இது நான் கொடுத்த யோசனை தான் மச்சான் " என்று சுய பெருமை பேசினார். உண்மையில் இந்த யோசனை சொன்னவயை திட்டி விட்டு, நான் சொன்னது போல செய் என்று அதிகாரம் செய்தான். ஆனால் இப்போது அந்த பேக்கேஜ் நல்ல முறையில் வந்ததும் அது நான் கொடுத்த யோசனை என்று பெருமையாக சொல்கிறான்.
மனைவியிடம், " உன் தம்பி திறமையை பார் " என்று சொல்ல , அவரும் பார்த்து விட்டு" ஆமாம் இந்த பேக்கேஜ் நல்லா இருக்கு," என்று சொல்லி விட்டு தம்பியை பாராட்டினார்.
அடுத்து இன்று எவ்வளவு பேக்கேஜ் ஆகியிருக்கிறது?" ஓனர் என்று கேட்க, அதற்கு" மச்சான் , இன்னைக்கு இவ்வளவு தான் ஆச்சு " என்று சொல்ல,
ஓனர்" நேற்றைய விட இன்று பேக்கேஜ் குறைய காரணம் என்ன "என்று கொஞ்சம் அதிகாரமாக கேட்க,
உடனே " எங்கே, எந்த வேலைக்காரனும் சரியாக வேலை செய்ய மாட்டேங்குறாங்க , " என்று கோபமாக சொன்னான்.
ஓனர் " ஓ, வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்யவில்லையா ஏன்?" எனக் கேட்க
" அது மச்சான், இன்று ஒரு வேலைக்காரருக்கு லோ பிரசராகி கீழே விழுந்ததில் அடிபட்டு விட்டது. அதனால் மற்ற வேலைக்காரர்கள் அவரிடம், உடல் நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் நேரத்தை கடத்திவிட்டார்கள் " என்று எரிச்சலுடன் சொல்ல,
ஓனர்" என்னது அடிபட்டு விட்டதா...!" என்று ஆதங்கமாக கேட்க,
" மச்சான், அதெல்லாம், சின்ன அடி தான், அதுக்கு நீங்க ஏன் கவலையாக கேட்கிறீங்க?" என்று சொல்ல,
தம்பி சொன்னதைக் கேட்டு அக்காவுக்கு கோபம் வந்தது.
" அது என்ன சின்ன அடி, பெரிய அடி என்று கணக்கு போட்டு சொல்ற, இப்ப அவர் எங்கே?என்று கேட்க,
அதற்கு தம்பி " அக்...கா , கொஞ்சம் அடி அதிகம் தான். ஆனால் அவர்களுக்கு பாவம் பார்த்தால் நமக்கு தொழில் நடக்காதே" என்று சொல்லி முடிப்பதற்குள்,
" வாயை மூடுடா, அதென்ன அவர்களுக்கு பாவம் பார்த்தால் நமக்கு தொழில் நடக்காது என்று சொல்லுவ, அவர்கள் உழைப்பு இல்லாமல் நாம் இல்லை. இப்ப அவர் எங்கே?" என்று கோபமாக கேட்க,
அப்போது மருத்துவமனைக்கு போய் கட்டு போட்டு விட்டு, அங்கே வந்தார்.
அவரைப் பார்த்ததும், ஓனரும், அவர் மனைவியும் " என்னாச்சு..!" என்று அன்பாக கேட்க,
அடிபட்டவர் " எனக்கு லோ பிரசர் வந்ததால், கீழே விழுந்ததில் அடிபட்டது" என்று சொல்லி விட்டு, ஓனர் மச்சினனை, ஓனர் திட்டக் கூடாது என்று, " உங்கள் மாப்பிள்ளை தான் உடனே என்னைத் தூக்கி விட்டு,
மருத்துவமனைக்கு போக சொன்னார்" என்று சொன்னதும்,
" பார்த்தியா அக்கா, நான் தான் அவரை தூக்கி விட்டு மருத்துவ மனைக்கு போகச் சொன்னேன்,
நீயும் விசயம் புரியாமல் திட்டின என்றால் வேலைக்காரர்கள் என்னை எப்படி மதிப்பார்கள்?" என்று லேசான கோபத்துடன் கேட்டான்.
பிறகு ஓனரும் அவர் மனைவியும்,
வேறு ஒரு பக்கம் சென்று அங்குள்ள தங்கள் பேக்கேஜ்களை பார்த்தார்கள்.
அங்கே இருந்த அனைத்து பேக்கேஜ்களும் மிக மிக அழகாக இருந்தது. " இதை யார் செய்தது என்று முதல் நாள் பொறுப்பில் இருந்தவரை அழைத்து ஓனர் கேட்க ",
அவர்" இன்றும் அழகாக பேக் செய்ய யோசனை சொன்னவர் தான் " என்று சொல்ல, ஓனர் உடனே" இன்று பேக் செய்ய யோசனை கொடுத்து யார்? என்று கேட்க, இன்று யோசனை கொடுத்தவர் அங்கே வர, அப்போது ஓனர் மாப்பிள்ளையும் அங்கே வர,
ஓனர் " இருவரில் யார் இந்த யோசனை கொடுத்தது? " என்று கேட்க,
ஓனர் மாப்பிள்ளை " நான் தான் மச்சான்" என்றதும், ஓனர், " ஓ அப்படியா...! , எங்கே இப்போது ஒரு பேக்கிங் செய்து காட்டு" என்று சொல்ல,
ஓனர் மாப்பிள்ளை, திருதிருவென முழித்தார். ஓனர் " உன் முழியே சொல்லிடுச்சு, இதை யார் செய்தார்கள் என்று" என கோபமாக சொல்ல, ஓனர் மாப்பிள்ளை தலையை கவிழ்ந்து கொண்டான்.
ஓனர், அழகான பேக்கேஜ் செய்ய யோசனை கொடுத்தவரை அழைத்து கேட்க, அவர் " நான் இங்கே வேலைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நான் வந்த அடுத்த வாரத்திலேயே இந்த பேக்கேஜ் யோசனை பற்றி இங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் உங்கள் மாப்பிள்ளையின் சொன்னேன். அவர் எனக்கு யோசனை சொல்ற வேலை வைச்சுக்காத என்று சொல்லி திட்டி அனுப்பினார். பிறகு நேற்று பொறுப்பு ஏற்ற இவர், என்னை அழைத்து இந்த பேக்கேஜ் செய்து பற்றியும், இதில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல இருக்கும் என்றும் யோசனை சொன்னார். அதன் படி செய்தேன்" என்றார்.
" சரி நீங்கள் போகலாம்,"என்று சொல்லி விட்டு, முதல் நாள் பொறுப்பில் இருந்தவரிடம்" நீங்கள் கொடுத்த யோசனையும் இதில் இருக்கிறதே, பிறகு ஏன் அவரை சொன்னீர்கள்? " என்று ஓனர் கேட்க,
அதற்கு" முதலில் இந்த யோசனை சொன்னது அவர் தான். மேலும் நல்ல யோசனை சொன்னவரை தட்டிக் கொடுத்தால் தான், அவர் இன்னும் உற்சாகமாக வேலை செய்வார் " அதான் அவரை சொன்னேன் என்றார்.
ஓனர், தன் மனைவியிடம்" இப்போது புரிகிறதா?, ஏன் உன் தம்பியிடம் இருந்து பொறுப்பை பிடுங்கி இவருக்கு கொடுத்தேன்" என்று கேட்க,
ஓனர் மனைவி" இப்போது புரிந்து கொண்டேன். உங்களைப் போல் இவரும் தனக்கு கீழ் வேலை செய்பவர்களை வேலைக்காரராக பார்க்காமல், அவர் யோசனையும் கேட்டால் கம்பெனி முன்னேறும் என்பதையும், என் தம்பியை பற்றியும் புரிந்து கொண்டேன் " என்றார்.
அதோடு கதை முடிந்
து இருந்தது.
இதில் இருந்து நீங்கள் எந்த ஆளுமை திறனை கண்டு பிடித்தீர்கள் என்று அதை எழுதிய ஆசிரியர் கேள்வி கேட்டுருந்தார்.
தொடரும்,