- Thread Author
- #1
14. உதயாவிடம் மாட்டிக்கொள்ள போகும் லீலா சரண்..
சஞ்சனா வீட்டில்...
தாய்மார்கள் மூவரோடு லட்சுமி அம்மாவும் சேர்ந்து காலை உணவை தயாரித்துக் கொண்டு இருக்க...
இன்னைக்கே நீங்கள் அனைவரும் கிளம்பியே ஆக வேண்டுமா... இன்னும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் தானே என்று லட்சுமி அம்மாள் கையில் இருந்த வெங்காயத்தை உரித்துக் கொண்டே கேட்டார்.
உனக்கு தெரியாத லட்சுமி இந்த மூணு வாழும் சேர்ந்து போட்ட போடில்... உன் அண்ணன்கள் மூணு பேரும் சேர்ந்து எங்கள் அனைவரையும் இங்கு எடுத்து வந்து விட்டார்கள். அங்கு போட்டது போட்டபடி அப்படியே கிடக்கல்லவா என்ன தான் ஆட்கள் பார்த்துக் கொண்டாலும், அவரவர் வேலையை பக்கத்தில் இருந்து பார்த்தால் தானே நன்றாக இருக்கும்.
உன் பெரியண்ணன் இங்கு இருக்கும் வரை மகள்கள் மேல் பாசத்தில் அப்படியே இருப்பார் ஆனால் அங்கு சென்றதற்கு பிறகு அப்படியே கம்பெனி கம்பெனி என்று அலைய ஆரம்பித்து விடுவார். அதற்குப் பிறகு என் பாடு தான் பெரும்பாடாக இருக்கும் என்று ஜெயா தன்னுடைய புலம்பலை புலம்ப..
அட நீங்க வேற அக்கா பெரிய மாமாவாது, கம்பெனியில் அவருக்காக இல்லை என்றாலும் நம்ம கிட்ட வேலை செய்பவர்களுக்காகவாவது... ஓய்வு கொடுத்து அந்த நேரத்தில் வீட்டிற்கு சாப்பிட வருவாரு ஆனால் இங்கே அந்த கதையா இருக்கு...
சிட்டில நாலு கடையை வாங்கி வைத்துண்டு ஒரு பிரேக் டைம்ல இன்னொரு கடைக்கு இன்னொரு கடைக்கு இன்னொரு கடைக்குனு மாத்தி மாத்தி போயிட்டு சாப்பிட கூட வராமல் இவர் உயிரை வாங்குவார் என்று புவனாவின் அப்பா விஜயனை கவிதா கழுவி கழுவி ஊத்தி கொண்டு இருந்தாள்.
இருவரின் புலம்பல்களை கேட்டுக் கொண்டு இருந்த மீனாட்சி... ஆமாக்கா உண்மையாலுமே மாமா ரெண்டு பேரும் ரொம்ப மோசம்.. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் தான்... ஆனா நம்ம ஆளு இருக்காரு பாருங்க ஷங்கர் சரியான சிஐடி சங்கர் தான்... அவர் எங்கே இருக்கிறார் என்ன பண்றார் எதுவுமே யாருக்குமே தெரியாது... எனக்கு என்னவோ இன்னும் கூட பயமாகத்தான் இருக்கு எங்கேயாவது இருந்து அம்மா.. மிதுனாவை அக்கா என்று சொல்லிக் கொண்டு ஏதாவது ஆணோ பெண்ணோ வந்து நிற்பார்கள் என்று பயமாகத் தான் இருக்கு என்று புலம்பினால் மீனாட்சி.
ஒவ்வொருவரின் புலம்பல்களையும் கேட்டுக் கொண்டு இருந்த லட்சுமி...
அட என்ன கண்ணுகளா இப்படி புலம்புகிறீர்கள்.. அது சரி நம்ம லீலாவுக்கு வயசு ஆயிட்டே போகிறதே அவளுக்கு எதுவும் வரன் பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
ஆமாக்கா உதயாவும்.. லீலாவும் ஒரே செட்டு தான் இருவரில் யாருக்காவது முதலில் சரியான ஜாதகம் வந்தால் முடித்து விடலாம் என்று தான் இருக்கிறோம். ஆனால் இருவரிடம் கேட்டாலும் இருவருமே இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனாலும் தெரிந்தவர்கள் தரகர்னு எல்லார்கிட்டயும் சொல்லி தான் வைத்து இருக்கிறோம் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த சரண்...
ஹலோ தாய் குலங்களா இன்று ஈவினிங் டிக்கெட் புக் செய்து விட்டேன்.
என்ன பண்றீங்க அவங்கவங்க ஜோடி புறாக்களோடு அழகா இங்கு இருந்து கிளம்பி திருச்சிக்கு போறீங்க. நானும் லீலாவும் இங்கேயே எங்களுக்கு வேலை தேடிக் கொள்ளப் போகிறோம்.
அப்புறம் உதயா அண்ணா இங்க ஏதோ ப்ராஜெக்ட் விஷயமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் உதயா அண்ணா வேலை முடித்துக் கொண்டு நாளைக்கு ஈவினிங் கிளம்பி வருவார். அதனால் எந்த இடையூறும் இல்லாமல் ஜோடி புறாக்கள் அனைவரும் ஜாலியா லவ் பண்ணிக்கிட்டே திருச்சிக்கு போவீங்களாம் என்று கிண்டல் செய்தான் சரண்.
டேய் என்னடா ஏற்கனவே இந்த மூணு எருமை மாடுகளும்... இங்கே தான் இருக்கிறார்கள் இப்பொழுது நீங்கள் இருவரும் இங்கே இருந்தால்.. அங்கே நாங்கள் என்ன பண்ணுவது உதயா பாவம் இல்லையா அவன் மட்டும் தனியாக அங்கே இருப்பான் என்று வருத்தப்பட்டார் மீனாட்சி.
அதுதான் நீ சித்தி நான் கூட எங்கே எங்களுக்காக வருத்தப்பட்டீர்களோ என்று நினைத்தேன். உதயா அண்ணாவிற்காக தான் வருத்தப்படுகிறீர்கள் அப்பயும் அப்படித்தானே என்று கேட்டான் சரண். இப்படி கேட்பதால் அவன் உதயாவின் மீது பொறாமை பட்டு அல்ல விளையாட்டுக்காக தான் கேட்டுக் கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அங்கு வந்த லீலாவும் அப்படி கேளு சரண் அண்ணா எப்ப பாரு இந்த மீனாட்சிக்கு... உதயா அண்ணா மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் என்று அவளும் தன் பங்கிற்கு வரிந்து கட்டி கொண்டு வந்தாள்.
முதலில் சரண் அப்படி பேசும் போதே மீனாட்சி முகம் வாடியது என்றால் லீலா பேசிய பிறகு எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்.
இப்போது ஜெயா, கவிதா, லக்ஷ்மி மூவரும் லீலா, சரண் இருவரையும் ஆளுக்கு ஒன்றாக அதாவது லஷ்மி பூரி கட்டையையும், ஜெயஸ்ரீ தோசை திருப்பியையும், கவிதா கிச்சனில் இருந்து கத்தியையும் கையில் வைத்து கொண்டு... முப்பெரும் தேவியரும் காளி தேவியின் மறு உருவம் போல் உக்கிரமாக நின்றனர்.
இங்கு நடந்தது எதுவும் தெரியாமல் .. நம்ம த்ரீ ரோசஸ் படை வேலைக்கு கிளம்பி கீழே வர.. அதே நேரம் வழக்கம் போல் ரிஷ்வந்த்தும் வர..
தப்பிச்சோம் டா சாமி என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க.. தங்களது சித்தி மீனாட்சியை தேடி சென்றனர்.
கிச்சனில் இருந்த மூன்று பேரின் முகங்களும்.. கோபமாகவும் வருத்தமாகவும் இருப்பதை பார்த்து விட்டு சஞ்சனா என்ன ஆச்சு மா என்று கேட்டாள்.
இதுவரை அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் லட்சுமி நால்வரிடமும் சொல்ல...
சஞ்சனாவிற்கு தன் தாய் ஜெயா மீது தான் கோபம் வந்தது. அம்மா எல்லாம் உன்னால் தான் அவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது நீ என்ன செய்தாய்... சமையல் கட்டில் என்ன பூப்பறித்துக் கொண்டு இருந்தாயா என்று கோபமாக திட்டி விட்டு செல்ல...
இப்போது புவனா தன் தாய் கவிதா வை பார்த்து ஒழுங்கு மரியாதையா ஜெயாம்மா ஃபீல் பண்ணாமல் பார்த்துக் கொள்... நான் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க போறேன்.. நான் அந்த பஞ்சாயத்து முடித்து விட்டு வருவதற்குள் இங்கு நீ ஜெயாம்மாவை சரியான நிலையில் வைத்து இருக்கவில்லை என்றால்...
நீ பெத்து விட்டிருக்கியே இரண்டையும் கைமா பண்ணி சாப்பிட்டுவேன் பார்த்துக்கொள் என்று மிரட்டி விட்டு சென்றாள் புவனா.
அதற்குள் மற்ற மூவரும் லீலா சரண் இருவரையும் தேடி செல்ல...
மொட்டை மாடியில் சந்தன முல்லையின் பந்தலுக்கு கீழே உதயா அமர்ந்து இருக்க அவனின் மடியில் தலை வைத்து படுத்து இருந்தாள் மீனாட்சி.
கீழே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல், தன்னுடைய லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த உதயா தன் மடியில் தன்னுடைய சித்தி வந்து படுத்ததும்... அவர்களின் முக ஓட்டத்தில் இருந்தே கீழே யாரோ எவரோ ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டவன்..
தன்னுடைய லேப்டாப்பை எடுத்து அதை அதன் பேக்கில் வைத்து விட்டு, எதுவும் கேட்காமல் தன் சித்தியின் தலையை வருடி கொடுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
சிறிது நேரத்தில் தன் மடியில் ஈரத்தை உணர்ந்தவன் அது தன்னுடைய சித்தியின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் ... என்று உணர்ந்த பிறகு அவனுடைய அமைதி முற்றிலுமாக தொலைந்து போய் பதறியவன் ....
தனது சித்தியை எழுப்பி தன் தோளில் சாய்த்து கொண்டு... ஆதரவாக அவர்களின் தலையை தடவிக் கொண்டே என்னாச்சு சித்து(சித்தி).. மா... என்று பரிவாக கேட்டான்.
அவனின் கைவருடலிலேயே அவனுடைய உள்ளம் எந்தளவுக்கு பதைத்துக் கொண்டு இருக்கிறது என்று புரிந்து கொண்ட மீனாட்சி..
மெல்ல தன் மகனின் முகத்தைப் பார்த்து.. பயப்படாதே உதயா.. நான் தான் தவறு செய்து விட்டேன் என்று சொல்லி விட்டு அமைதியாக எழுந்து அமர்ந்தாள் மீனாட்சி.
ஓஹோ அப்படியா.. ஆமாம் அப்படி என்ன தான் தவறு செய்து விட்டு இங்கு வந்து அழுது கொண்டு இருக்கீங்க என்று மெல்ல ஆரம்பித்து கோபத்தை
தனக்குள் அடக்க முடியாமல் சற்றே வேகமாக என்ன நடந்தது சொல் சித்து மா என்று கேட்டான் உதயா.
தன் மகனின் கோப முகத்தை பார்த்து விட்டு அய்யய்யோ என்ன எவ்வளவு பெரிய மடத்தனம் பண்ணி வைத்து இருக்கிறேன் நான் என்று தன்னைத் தானே நொந்து கொண்ட மீனாட்சி..
ஒன்றும் இல்லை கண்ணா... எதுக்காக இப்ப நீ இவ்வளவு கோபப்படுகிறாய்.. அந்த அளவுக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.. சரி சரி நீ ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாய் தானே.. எப்போ அந்த வேலை முடியும் காலை சாப்பாட்டிற்கு நீ கீழே வருகிறாயா இல்லை எங்கே கொண்டு வரவா என்று தன்னுடைய வருத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் இயல்பாக பேசுவது போல் பேசினார் மீனாட்சி.
சரியாக அந்த நேரம் லீலாவும் சரணும் மாடியில் வந்து பார்க்க...
அவர்கள் இருவரின் உரையாடல்களையும் சரியாக கேட்டும் கேட்காமலும் ... இருவருமே தங்களுடைய அண்ணனின் அருகில் வந்து அண்ணா சாரி அண்ணா என்று சொல்லி விட்டு இருவரின் காதுகளை மற்றவர் பிடித்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்று தோப்பு கரணங்களை போட்டனர்.
அவர்கள் இருவரும் போடும் தோப்பு கரணங்களை பார்த்து மீனாட்சியின் அழுகைக்கு இவர்கள் தான் காரணம் என்று யூகித்துக் கொண்ட உதயா...
சித்து மா நீ கீழே போ என்று மீனாட்சியை அனுப்பி வைக்க எண்ணி போக சொன்னான்.
ஆனால் மீனாட்சி உதயாவின் கோபம் அறிந்து.. இல்ல கண்ணு என் மீது தான் தவறு இருக்கிறது எப்பவும் உன்னை மட்டும் நான் அனைவரிடமும் விட்டுக் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருக்கப் போய் தானே இவர்கள் இருவரும் அந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார்கள்.
அப்போ என்னுடைய வளர்ப்பில் தானே நான் பாகுபாடு காட்டி இருக்கிறேன் என்று அர்த்தம்.. நான் தான் இவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு இருந்த லீலா, சரண் இருவரையும் அணைத்து கொண்டு சாரி டா என்று கேட்க...
அதற்கு மேல் பொறுமை இழந்த உதயா... சித்து மா இப்ப நீ கீழே போறியா இல்லையா என்று வேகமாக கேட்டான்.
அவனின் கோபத்தில்.. எதுவும் பேசாமல் மீனாட்சி கீழே சென்றாள்.
அப்போது சஞ்சனா, புவனா, மிதுனா ரிஸ்வந்த் நால்வரும் மேலே வர...
புவனாவை பார்த்து பாப்பா நீ கீழே போய் மீனாட்சி சித்துவை பாரு என்று அனுப்பி வைத்தான்.
சரிங்க அண்ணா என்று அவள் கீழே சென்றதும்..
உதயா தன் தங்கை தம்பி இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான்...
லீலா சரண் இருவருக்கும்....
என்ன ஆகப் போகிறது...
இணைந்திருங்கள்
சொல்லவா ... வேண்டாமா...