Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பூங்குன்றன் " கேரக்டர் என்றால், அவன் குணாதிசயங்கள்" என்றான்.
குழலி "புரியவில்லை" என்றாள்.
பூங்குன்றன் " உனக்கு புரியும் படி சொல்கிறேன். உன் மாமா மகன் ஆறுமுகம், அன்று முதல் முறையாக இங்கே வைத்து பேசினான் அல்லவா?
அதன் பிறகு அவன் இந்த பகுதிக்கு தினமும் வந்து இருக்கலாம். ஆனால் உன்னை எப்போதாவது பார்க்க வந்தானா? " என்று கேட்க,
குழலி ," இல்லை" என்று சொல்லி கொண்டே அதற்கு ஏற்றார் போல தலையாட்டினாள்.
பூங்குன்றன் " உன்னிடம் இதுவரை போனில் பேசி இருக்கிறானா?" என்று கேட்க, குழலி மீண்டும் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.
பூங்குன்றன் " என் கணிப்பு படி அவன் நல்லவனாக, அதாவது பெண்களுக்கு மரியாதை கொடுப்பவன் என்று நினைக்கிறேன்" என்று சொல்ல,
குழலி " அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?" என்று கேட்டு விட்டு, " எங்க ஊர்க் காரன் அதுவும் போக அவன் எங்க சொந்தக்காரன், அவனைப் பற்றி எங்கள் குடும்பத்திற்கு தெரியாதது,
நீங்கள் அவனை ஒரு முறை தான் அதுவும் சில நிமிடங்கள் தான் பார்த்தீர்கள், பிறகு எப்படி அவன் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவன் என்று சொல்றீங்க? "
என்று கேட்க,
பூங்குன்றன்" ஒரு உதாரணம் சொன்னால் போதுமா?" என்று கேட்க,
குழலி" ம்ம் " என்றாள்.
"அவன் கூட நேற்று பைக்கில் போனாய் அல்லவா?, அவன் உங்கள் ஊருக்கு போக இங்கே இருந்து ஒரு காட்டு பாதை உள்ளது, ஆனால் அவன் உன்னை அப்படி அழைத்து போகாமல், வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் வழியாக தான் பைக்கில் கூட்டிட்டு போய் இருப்பான் " என்று சொல்ல,
குழலி" அட ஆமாங்க, அவன் அப்படித் தான் போனான். நான் கூட எங்க அப்பாவை பார்க்க போக வேண்டும் என்று அவசரத்தில் அவனிடம் ஏதாவது குறுக்கு வழி இருந்தால் அது வழியாக சீக்கிரம் போ என்று சொன்னேன். ஆனால் அவன் அந்த குறுக்கு வழி சரியில்லை என்றும், நான் தினமும் அப்படித் தான் இங்கே வருவேன் என்றும், இப்போது உன்னை அழைத்து போகும் போது இடையில் வண்டி ரிப்பேர் ஆனால் நடுக்காட்டில் நிற்க முடியாது. நான் மட்டும் என்றால், வண்டியை இங்கே போட்ட விட்டு யாரிடமாவது லிப்ட் கேட்டு போய்விடுவேன். நீயும் என் கூட வரும் போது, வேறு ஒரு பைக்கில் உன்னை ஏற்றி விட முடியாது, அதான் மெயின் ரோட்டில் போகிறேன் "என்று சொன்னான்" என்றாள்.
" இப்ப புரிகிறதா?, நான் அவனைப் பற்றி சொன்ன கணிப்பு சரிதானே?" என்று பூங்குன்றன் கேட்க,
குழலியும்" ஆம், உங்கள் கணிப்பு படி அவன் நல்லவன் தான். ஆனால் ஏன் அவனை அப்படி தப்பாக சொல்கிறார்களோ?" என்று சொல்லி விட்டு,
குழலி"என்னைப் பற்றி உங்கள் கணிப்பு என்ன?" என்று கேட்க,
பூங்குன்றன் 'குழலியை திருமணம் செய்தது முதல் இப்போது வரை அவளின் நடவடிக்கைகள் வைத்து , ஒரு யூகம் செய்து விட்டு ' குழலியிடம் " என் கணிப்பு படி, நீ நல்லா படிச்சு இருந்தா வக்கீலாக ஆகியிருப்ப.!" என்று சொல்ல,
குழலி " ம்க்கும், நடக்காததை பற்றி பேசாதீங்க"என்று சலிப்புடன் சொல்ல,
உடனே பூங்குன்றன் மனைவியின் முகம் மாறியதைக் கண்டு " வக்கீல் என்றால், கோர்ட்டில் போய் வாதாடுவது, ஆனால் உன் திறமை எதிரில் கேள்வி கேட்பவரை மடக்கும் விதமாகவும், அதே நேரத்தில் உன் பக்கம் உள்ள கருத்தை அழுத்தமாகவும், நியாயமாகவும் சொல்வது, என்று வைத்துக் கொள்வோம்" என்று சொல்ல,
குழலி யின் முகம் கொஞ்சம் பிரகாசமானது." அப்ப நான், உங்கள் கணிப்பு படி நான் எந்த துறையில் சாதிப்பேன்?" என்று ஆர்வமாக கேட்க,
பூங்குன்றன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, " நீ எதிர் காலத்தில் அரசியலில் சாதிப்ப.!" என்று சொன்னான்.
குழலி" அப்படியா.! , நான் அரசியலில் சாதிப்பேனா...!" என்று சந்தோசமாக கேட்டு விட்டு, "அரசியலில் என்றால்,
நிறைய துரோகிகள் கூட இருப்பார்களே, அவர்களை எப்படி கண்டு பிடிப்பது, மற்றும் சமாளிப்பது?"என்று கேட்க,
பூங்குன்றன், உடனே " துரோகிகளை சுலபத்தில் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் அவர்கள் நமக்கு நல்லது செய்வது போல் துரோகம் செய்வதை புரிந்து கொண்டால் சுலபமாக தப்பிக்கலாம் " என்று சொல்ல,
குழலி" அதான், அதை எப்படி கண்டு பிடிப்பது?" என்று கேட்க,
பூங்குன்றன்" நீ முதலில் அரசியலுக்கு போ, நான் அப்போது உனக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் சொல்கிறேன் " என்று சொல்லி விட்டு, "இப்ப நாம எங்காவது வெளியே போய் வருவோமா?" என்று கேட்க, குழலியும்"சரி"என்று சொல்லி விட்டு கிளம்ப சென்றாள்.
முதலில் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கே சாமி தரிசனம் செய்து விட்டு, ஒரு புத்தக திருவிழா வுக்கு சென்றார்கள்.
குழலி" நான் புத்தக திருவிழாவுக்கு வருவது, இது தான் முதல் தடவை " என்றாள். பூங்குன்றன்" ஓ அப்படியா.! " என்று கேட்டு விட்டு, "உங்கள் அப்பா, அண்ணன் யாரும் இதுவரை உன்னை புத்தக திருவிழாவுக்கு அழைத்து போனதில்லையா?" என்று கேட்க,
குழலி இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.
இருவரும் புத்தக திருவிழாவில் உள்ள புத்தகங்களை பார்த்து விட்டு,
'ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி' என்று ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை பூங்குன்றன், அந்த புத்தகத்துக்குரிய பணத்தை கொடுத்து வாங்கினான்.
அதை குழலியிடம் கொடுத்து விட்டு " இதை நீ வீட்டில் இருக்கும் போது படித்து உன் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்" என்று சொல்ல,
குழலி " ம்ம் சரி" என்றாள்.
புத்தக திருவிழாவை பார்த்து முடிந்ததும், இருவரும் ஒரு ஹோட்டலுக்கு போய், தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
குழலி, கணவனிடம் " நான் இந்த மாதிரி வெளியே எங்கேயும் வந்ததில்லை, அதேபோல் ஹோட்டலிலும் சாப்பிட்டதில்லை. எனக்கு பிடித்த உணவை என் அண்ணன் வாங்கி வந்து வீட்டில் கொடுப்பான், உங்கள் கூட இப்படி வந்தது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது" என்று சொல்லி விட்டு, கண்ணில் இருந்து வந்த ஆனந்த கண்ணீரை பூங்குன்றன் உட்பட அங்கே ஹோட்டலில் யாரும் பார்க்கவாறு துடைத்து கொண்டாள்.
பூங்குன்றன் வீட்டுக்கு வந்ததும், குழலியிடம் " நாளையிலிருந்து எனக்கு வேலை அதிகமாக இருக்கும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் பற்றிய கருத்து கணிப்பு கேட்க நானும், எங்கள் நாளிதழுக்கு புதிதாக வந்த ஒரு பெண்ணும் சேர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் பற்றிய கருத்து கணிப்பை பொதுமக்களிடம் கேட்க இருப்பதால் வீட்டுக்கு வர முன்ன பின்ன ஆகும் " என்று சொல்ல,
குழலி" என்னது நீங்களும் ஒரு பெண்ணும் சேர்ந்தா...!" என்று அதிர்ச்சியாக கேட்க,
பூங்குன்றன்" ஆம், எங்கள் நாளிதழ் புதிது என்பதால் வேலைக்கு ஆட்கள் குறைவு தான். அதான் நிறுவனர் என்னையும் புதிதாக வந்த புத்திசாலித்தனமும் தைரியமும் நிறைந்த அந்த பெண்ணும் மட்டும் போதும் என்று சொல்லி விட்டார் " என்றான்.
" மேலும் என் மீது நம்பிக்கை வைத்து நிறுவனர் சொல்லி இருப்பதால், நான் மிகவும் பொறுப்புடன் இதை முடித்து கொடுத்து, கருத்து கணிப்பில் எங்கள் நாளிதழ் சொன்ன முடிவே சரியாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு நான் உழைக்க வேண்டும் " என்றான்.
குழலிக்கு மட்டும், அந்த பெண்ணைப் பற்றி பெருமையாக சொன்னது
ஒரு நெருடலாக இருந்தது.
அந்த நெருடல் நெருப்பு பொறி, பெரிய எரிமலையாக மாறும் என்று கணிக்க தவறினான் பூங்குன்றன்.
மறு நாள் பூங்குன்றன் அலுவலகம் சென்றதும், நிறுவனர், பூங்குன்றனையும் புதிதாக வேலைக்கு வந்த புத்திசாலி என்று பூங்குன்றன் சான்றிதழ் கொடுத்த,
மாதவியையும் தன் அறைக்கு வரச் சொன்னார்.
இருவரும் நிறுவனர் அறைக்கு சென்றதும், நிறுவனர், இருவரையும் " அமருங்கள்" என்று சொல்லி விட்டு,
"இது நம் நாளிதழ் நடத்தும் முதல் தேர்தல் கருத்து கணிப்பு. இங்கே தென் மண்டலத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில் மட்டும் முதலில் கருத்து கணிப்பு நடத்துவோம். அதன் முடிவை பொறுத்து, அடுத்த பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் கருத்து கணிப்பு நடத்துவோம். அதனால், மற்ற நாளிதழ்களில் வராத புதிய கருத்து கணிப்பாக இது இருக்க வேண்டும். மேலும் உங்கள் இருவரின் பொறுப்பை அறிந்து தான், உங்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து உள்ளேன். பொதுமக்கள் அரசியல் வாதிகள் மீது சொல்லும் குறையும் உண்மைதானா என்று அதையும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் "என்றார்.
"நம் நாளிதழுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் "என்று சொல்லி விட்டு, " கருத்து கணிப்பு எடுக்கும் இடங்களில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், என்னை எந்த நேரத்திலும் அழைக்கலாம்"என்று சொல்லி விட்டு, " நீங்கள் போகலாம்" என்று சொல்லி விட்டு நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
பூங்குன்றனும், மாதவியும், இருவரும் நிறுவனர் அறையை விட்டு வெளியே வந்ததும், பூங்குன்றன் மாதவியிடம் " எப்போதிலிருந்து பொது மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கலாம்?' என்று கேட்க,
அதற்கு மாதவி " நீங்கள் இந்த நாளிதழில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர் என்றும், உங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததும் என்று தெரிந்து கொண்டேன்." என்று சொல்லி விட்டு,
" நீங்கள் சீனியர், நீங்கள் எப்ப சொல்றீங்களோ, அப்போதே ஆரம்பித்து விடலாம்" என்று புன்னகையுடன் மாதவி சொன்னாள்.
பூங்குன்றன் " ம்ம்" என்று சொல்லி விட்டு, " முதலில் நாம் ஒரு குறிப்பிட்ட சட்ட மன்ற தொகுதியை பற்றியும், அங்கே உள்ள நிறை குறைகளை முதலில் தெரிந்து கொள்வோம். அதன் பிறகு அந்த தொகுதியில் போய் நாம் பொது மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த வசதியாக இருக்கும் " என்றான்.
மாதவியும், தம்சப் செய்து விட்டு" அப்படியே சீனியர் " என்றாள்.
மாதவி" நேற்றே நம் இருவருக்கும் இந்த அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பு கிடைக்க போவது என்னது என்றும், அதற்கு தகுந்தாற்போல் ஒரு சட்ட மன்ற தொகுதியின் நிறை குறைகளை பற்றி நான் நேற்றே அலசி ஆராய்ந்து விட்டேன் " என்றாள்.
பூங்குன்றன் மனதுக்குள் ' உண்மையில் இவரிடம் புத்திக் கூர்மை அதிக அளவு உள்ளது என்று மாதவியை பாராட்டினான் '
மாதவியிடம்" வெரிகுட், அந்த தொகுதியை பற்றி நீங்கள் ஆராய்ந்ததை சுருக்கமாக என் வாட்சப்பிற்கு அனுப்புங்கள் " என்று தன் நம்பரை முதல் முறையாக மாதவியிடம் கொடுத்தான்.
மாதவி சிரித்து கொண்டே" நான் நேற்றே உங்கள் நம்பரை இங்கே உள்ள ஒருவரிடம் வாங்கி விட்டேன் " என்றாள்.
மறுநாள் காலையில் பூங்குன்றன்
வாட்சப்புக்கு,
இனிய காலை வணக்கம் சீனியர் என்று டைப்பிங் மெசேஜும் ஒரு மஞ்சள் இதய இமோஜியும் இருந்தது.
பூங்குன்றன் குளிக்க சென்றதால், வாட்சப் நோட்டிபிகேசன் சத்தம் கேட்டு, அது என்ன மெசேஜ் என்று பார்த்தாள்.
(பூங்குன்றன் மொபைலை எப்போதும் லாக்கில் போடமாட்டான் மேலும்,
மனைவி தன் மொபைலை பார்க்கவும் தடை சொல்ல மாட்டான். ஏனெனில் அவனைப் பொறுத்தவரை தவறு இருந்தால் தானே பயப்பட வேண்டும் என்று எப்போதும் மனைவி தன் மொபைலில் ஏதாவது பார்க்கலாம் என்று அனுமதி கொடுத்து இருந்தான்.)
'இனிய காலை வணக்கம் சீனியர், அதுவும் ஒரு இதயம் வேற இருக்கு ,
நம்பரும் புதுசா இருக்கே?' என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கும் போது, பூங்குன்றன் குளித்து விட்டு வர, அவனிடம் " இது யார் புது நம்பராக இருக்கு?" என்று சந்தேகமாக குழலி கேட்க,
உடனே பூங்குன்றன் தலையை துவட்டிய வாறு, " பெயர் இருக்கா?" என்று கேட்க,
குழலி " பெயர் எல்லாம் இல்லை, இனிய காலை வணக்கம் சீனியர் என்றும் ஒரு இதயம் இமோஜியும் உள்ளது" என்றாள்.
பூங்குன்றன், குழலியிடம் இருந்து போனை வாங்கி, அந்த வாட்சப் மெசேஜை பார்த்து விட்டு, சிரித்து கொண்டே" மஞ்சள் கலர் இதய இமோஜி என்றால், நமக்கு அன்பானவர் அல்லது பாசமானவர் என்று அர்த்தம் " என சொல்லி விட்டு, அந்த நம்பருக்கு, இனிய காலை வணக்கம். தாங்கள் யார் என்று அறிந்து கொள்ளலாமா?" என்று பதில் அனுப்பினான்.
அப்போது குழலி "அதான் அந்த அன்பானவர் யார்?" என்று கேட்க,
பூங்குன்றன்" அதான் அனுப்பி இருக்கிறேன்
. இன்னும் அவர் பார்க்க வில்லை. பார்த்ததும் பதில் அனுப்புவார் " என்று சொல்லி விட்டு வேலைக்கு போக உடை மாற்ற சென்றான்.
தொடரும்,