• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
குழலி, கொரியர் இளைஞனிடம் " நான் வெளியே நின்றாலும் நின்னுருப்பேன், உள்ளே வந்து உட்கார் என்று சொன்ன, இப்ப பாரு இப்படி ஆச்சு" என்று வருத்தத்துடன் சொன்னாள்.

அந்த இளைஞன் " மன்னிச்சிடு குழலி"என்று தன் இருகையை கும்பிடுவது போல் காட்டி விட்டு " எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது" என்று சொல்ல,

குழலி"பரவாயில்லை விடு, நீ என்ன வேண்டும் என்றா இப்படி செய்த?" என்று அவனுக்கு ஆறுதலாக பேசி விட்டு, " என்ன பிரச்சினையாம்?" என்று கேட்க, அவன்" தெரியாது " என்று சொன்னான்.

அப்போது இன்ஸ்பெக்டருக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற இன்ஸ்பெக்டர் " ம்ம் சொல்லுங்க" என்றதும், எதிர் முனையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் " கள்ள நோட்டு கும்பலின் தலைவனை பிடித்து விட்டோம்" என்றதும், இன்ஸ்பெக்டர் " வெரிகுட், நான் அங்கே உடனே வருகிறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

தன் உடன் வந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்களும் இன்ஸ்பெக்டருடன், சப் இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு போக, ரிசப்ஷன் நோக்கி வந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் ரிசப்ஷனிடம் " இங்கே எந்த பிரச்சனையும் இல்லை.அதனால் இங்கே உள்ளவர்கள் வெளியே போகலாம்.வெளியே உள்ளவர்கள் உள்ளே வரலாம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

போலிஸ் ஜீப் அந்த லாட்ஜுக்கு வந்ததும், அங்கே ஒரு பத்திரிகை நிருபர், என்ன விசயமாக இருக்கும் என்று வேவு பார்த்தார்.

போலிஸ் ஜீப் வெளியே போனதும்,
குழலியும் அந்த கொரியர் இளைஞனும் படபடப்புடன் வெளியே வந்ததை அந்த பத்திரிக்கை நிருபர் ஒரு போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார்.

பிறகு என்ன விசயமாக போலிஸ் வந்தது என்று வேவு பார்த்ததில், கள்ள நோட்டு கும்பலில் உள்ள ஒருவன் இந்த லாட்ஜில் தங்கி இருப்பதாகவும், அவன் இங்கே யாரோ ஒருவர் மூலம் கள்ள நோட்டை கொடுக்க இருப்பதாகவும் தகவல் வர, போலிஸ் அதான் இங்கே வந்துள்ளது என்றும், போலிஸ் இங்கே வரப்போவதை லாட்ஜ் ஓனருக்கு போலிஸ் ஸ்டேஷனில் இருந்த ஒருவர் மூலம் தகவல் கிடைக்க, அதை அவர் லாட்ஜ் மேனேஜரிடம் சொல்ல, அதான் லாட்ஜ் பரபரப்பானது என்று அந்த நிருபர் அறிந்து கொண்டார்.

மேலும் இதில் நமக்கு தேவையான தகவல் கிடைக்காததால், இதை செய்தியாக்க முடியாது என்று நினைத்து வேறு செய்தியை தேடிச் சென்றார்.

கோமதியாள் புரம் -
குழலி வீட்டு முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு "பார்த்து இறங்கு குழலி" என்று சொல்ல, குழலியும் இறங்கி விட்டு " ரொம்ப நன்றி" என்று சொல்லி விட்டு " நீயும் பார்த்து போ" என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்குள் சென்றாள்.

குழலியை பார்த்ததும் அவள் அம்மா ஆனந்த அதிர்ச்சி ஆனார்.

"குழ...லி...!"என்று சொல்ல, " அம்மா...!" என்று குழலியும் சொல்ல,
இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால், இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து வந்தது.

குழலி, கண்ணீரை துடைத்து விட்டு " அப்பா எங்கே இருக்கிறார், அடி அதிகமா?" என்று கேட்க, " அடி அதிகம் தான். ஆனால் வலி உன்னைப் பார்த்து விட்டால் குறைந்து விடும் " என்று அம்மா சொல்ல, உடனே குழலி தன் அப்பாவை பார்க்க அப்பாவின் அறைக்கு சென்றாள்.

அங்கே சுந்தரம் லேசா அரைத்தூக்கத்தில் இருக்க, "அப்பா " என்று குழலி யின் குரல் கேட்டு கண் விழித்தார்.

குழலியைக் கண்டு கண் கலங்கினார். " நல்லா இருக்கியா?" என்று கேட்க, " எனக்கென்ன குறைச்சல், நான் நல்லா இருக்கிறேன் அப்பா " என்று சொல்லி விட்டு,அப்பாவின் காயத்தை பார்த்து அழுதாள்.

சுந்தரம் " சின்ன அடி தான். ஒன்னும் பயப் பட தேவையில்லை. உனக்கு நான் அடிபட்டு இருக்கிறேன் என்று எப்படி தெரியும்?"என்று கேட்க,

"நான் தான் சொன்னேன் " என்று குழலி அம்மா, தன் மகளுக்கு காஃபி போட்டு எடுத்து வந்து மகளிடம் கொடுத்தாள்.

குழலி அம்மா" மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கிறாரா? , தனியாக குடித்தனம் போயாச்சு என்று கேள்வி பட்டேன் " என்றார்.

குழலி" ஆமாம் அம்மா. இப்போது வேறு ஊருக்கு ஒரு வாடகை வீடு பிடித்து அங்கே இருக்கிறோம் " என்று சொல்லி முடிக்கும் போது, அங்கே வளவன் வந்தான்.

வளவனைப் பார்த்ததும், குழலி " அண்ணே" என்று சொல்ல,

வளவன் கோபமாக " அந்த பொறுக்கி பயல் கூட ஏன் பைக்கில் வந்த?" என்று கேட்க,

குழலி அம்மாவும், சுந்தரமும் ஒன்று போல் " யார் கூட வந்தா?" என்று கேட்க,

வளவன், அவன் அம்மாவைப் பார்த்து " உன் தூரத்து அண்ணன் மகன் ஆறுமுகம் கூடத் தான், இவள் பைக்கில் வந்தாள்" என்று சொல்ல,

சுந்தரமும், குழலி அம்மாவும், குழலியை திட்டினார்கள்.

குழலி அம்மா " அட அறிவு கெட்டவளே, அந்த பொறுக்கி கூடவா பைக்கில் வந்த?" என்று திட்ட,

குழலி" எல்லோரும் என்னைய திட்டியாச்சா?" என்று கோபமாக கேட்க,

குழலி அம்மா, உடனே சாந்தமாகி " உன்னை குறை சொல்வதற்காக உன்னை திட்ட வில்லை. நீ அவன் கூட பைக்கில் வந்ததை யாராவது உன் மாப்பிள்ளையிடம் சொன்னால், அவர் உன்னை தப்பா நினைக்க கூடாது, அதான் உன்னை திட்டினேன்" என்று சொல்ல,

அதற்கு குழலி " அவர் எல்லாம் தப்பா நினைக்க மாட்டாரு" என்று சொல்லி விட்டு, "அன்று ஒரு நாள் மதியம் இவனிடம் பேசியதை பார்த்து விட்டு, என் கணவர் கூட, ஏன் வெளியே நின்று பேசுற, தம்பியை உள்ளே கூட்டிக் கொண்டு பேசு என்று சொன்னார் " என்றாள்.

உடனே வளவன்" ம்கூம், உன்னை ஏமாற்ற நாடகம் போட்டாலும் போடுவான். இல்லை உன் புருஷன் ஏதாவது ஒரு தப்பு பண்ணியிருப்பான், அதிலிருந்து தப்பிக்க உன் கிட்ட நடிச்சிருப்பான் "என்று சொல்ல,

குழலி" போதும் நிறுத்துண்ணே, நீ எப்போதும் அவரை தப்பா தான் நினைக்கிற? என் திருமணம் முடிந்து இங்கே இருந்து போன பிறகு ஒரு முறை கூட உன்னைப் பற்றி அவர் தப்பா சொன்னது இல்லை " என்று கணவனுக்கு ஆதரவாக பேச,

அங்கே சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு" சரி சரி, நீ சந்தோஷமாக இருக்கிற இல்ல, அது போதும் எனக்கு " என்று வளவன் சொன்னான்.

குழலி" அம்மா அவர் வெளியூருக்கு போய் இருக்கிறதால, என்னை இங்கேயே இரவு தங்கி விட்டு நாளைக்கு வரச் சொன்னார் " என்று சொல்ல, குழலி அம்மா" அதுக்கென்ன ராசாத்தி, இது உன் வீடு நீ எப்ப வேணும்னாலும் வரலாம், தங்கலாம் "என்று சொல்லி விட்டு, " ராத்திரிக்கு சாப்பாடு என்ன செய்ய?" என்று கேட்க, குழலி" நீ எது செய்தாலும் பரவாயில்லை மா, உன் கையால செஞ்சு சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு...! " என்று சொன்னாள்.

மறுநாள், குழலி தன் அப்பாவிடம்" நான் என் வீட்டுக்கு போய் வருகிறேன் பா " என்று சொல்லும் போதே அழுகை வந்தது. சுந்தரம்" அழாமல் போ மா, அடிக்கடி இங்கே வா" என்று சொல்லி விட்டு அவரும் அழ ஆரம்பித்தார்.

குழலி அம்மாவும் அழுது கொண்டே " அண்ணன் கூட பார்த்து போ" என்று சொல்லி விட்டு, " டே வளவா, தங்கச்சியை பார்த்து கூட்டிட்டு போ" என்றாள்.

வளவன் தன் இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து விட்டு " வா குழலி" என்று சொல்ல,
பெற்றோரை பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தாள்.

வளவன் குழலி வண்டியில் ஏறியதும் " நான் உன்னையை உன் வீட்டுக்கு எல்லாம் வந்து விட மாட்டேன், அந்த தெருவில் இறக்கி விடுவேன், நீ இறங்கி போய்க்கோ" என்று சொல்லி விட்டு வண்டியை இயக்கினான்.

குழலி வீடு இருக்கும் தெரு முனையில் தங்கச்சியை இறக்கி விட்டு " நான் திரும்ப திரும்ப சொல்றேன்னு தப்பா நினைக்காதே, உன் மாப்பிள்ளை மீது ஒரு கண் வைத்து கொள். எனக்கு அவன் மீது இன்னும் நம்பிக்கை வரலை" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

குழலி ' அண்ணன் ஏன் இன்னும் நம் கணவர் மீது கோபத்தில் இருக்கிறான் ' என்று யோசித்து கொண்டே, தன் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அப்போது பூங்குன்றன் அழைப்பு விடுத்தான். அழைப்பை ஏற்ற குழலி" சொல்லுங்க" என்றாள். மறுமுனையில் உள்ள பூங்குன்றன் " நான் இப்போது தான் நம்ம ஊருக்கு வந்தேன். அலுவலகத்துக்கு போய் விட்டு வீட்டுக்கு வருகிறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.

பூங்குன்றன் வீட்டுக்கு வந்ததும்,
குழலியிடம் " உங்க அப்பா எப்படி இருக்கிறார்?, உங்க அம்மா, அண்ணன் என்ன சொன்னார்கள்?" என்று கேட்க, குழலி " ம்ம், எங்க அப்பாவுக்கு கொஞ்சம் பெரிய அடி தான். ஆனால் என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் வலி இல்லை என்று சொன்னார்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"எங்க அம்மா உங்களைப் பற்றி விசாரித்தார்" என்று சொல்ல,

பூங்குன்றன் " அப்ப, உங்க அப்பாவும் அண்ணனும் என்னைப் பற்றி எதுவும் கேட்கவில்லையா?" என்றதும்,

குழலி, வேகமாக " கேட்டார்கள்" என்று சொல்லி விட்டு பேச்சை மாற்றும் விதமாக, " நீங்கள் போன வேலை நல்ல படியாக முடிந்ததா?" என்று கேட்க, 'மனைவி தன்னிடம் பேச்சை மாற்றுகிறாள் ' என்று மனதில் நினைத்து கொண்டு,

" ஆம். நல்ல படியாக முடிந்தது"என்று, சொல்லி விட்டு, " நீ நேற்று உங்க
அப்பாவை பார்க்க எப்படி போன?" என்று சாதாரணமாக கேட்க,

குழலிக்கு ' இவரிடம் நடந்த எல்லா விசயத்தையும் உண்மையை மறைக்காமல் சொல்லலாமா?' என்று யோசிக்கும் போது,

" குழலி, உன்னைத் தான் கேட்கிறேன்"என்று பூங்குன்றன் மீண்டும் பேச,

குழலி, நிதானத்திற்கு வந்தவள் " ஆங், என்ன கேட்டிங்க ?" என்று சொல்லி விட்டு, அவளே பேச்சைத் தொடர்ந்தாள். " அந்த கூத்தை ஏன் கேட்குறீங்க, எங்க மாமா மகன், அதான் அன்னைக்கு வீட்டுக்கு கூட வந்தானே, அவன் கூட தான் ஊருக்கு போனேன்" என்று முழுமையாக சொல்லாமல், பாதியை மட்டும் சொன்னாள்.

பூங்குன்றன் உடனே " அவன் கூடவா போன...!" என்று அதிர்ச்சியாக கேட்க,

பூங்குன்றன் அதிர்ச்சியாக கேட்க,
குழலி, குழம்பி போனாள். பயத்தில் திருதிருவென முழித்தாள்.

பூங்குன்றன் அவள் திருதிருவென முழிப்பதை பார்த்து விட்டு " நான் இப்ப என்ன கேட்டேன் என்று இப்படி திருதிருவென முழிக்கிற" என்று கேட்க,

குழலி பயத்தில் " நான் அவ... கூட..." என்று பேச்சு வராமல் இருப்பதை பார்த்து விட்டு,

பூங்குன்றன் " நான் எதுக்கு கேட்டேனா? அவன் கூட பைக்கில் போனால் உங்கள் ஊரில் உள்ளவர்கள், அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உன்னை தப்பாக நினைக்க கூடாது அல்லவா? , அதான் கேட்டேன்." என்று சொல்ல,

குழலி, இதைக் கேட்டு பயம் குறைந்து" ஊரில் யாரும் தப்பா கேட்க வில்லை, ஆனால்...?" என்று இழுக்க,

பூங்குன்றன்" ஊரில் யாரும் தப்பா நினைக்க வில்லை, ஆனால்? என்றால், வேறு யாரு தப்பா நினைத்தார்கள்? என்று கேட்க,

குழலி " தன் வீட்டில் அண்ணன், அம்மா, அப்பா, திட்டியதை" சொன்னாள்.

பூங்குன்றன்" சே சே, அந்த தம்பியை பார்க்க பொறுக்கி போல தெரியலை " என்று சொல்ல,

குழலி" எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க, நானே என் அண்ணன் சொன்னதில் இருந்து பயந்து கொண்டு இருக்கிறேன்.இனிமேல் அவனைப் பார்த்தால் கூட பேசக் கூடாது " என்றாள்.

பூங்குன்றன் சிரித்து கொண்டே" உன் அண்ணன் சொன்னான் என்று சொல்கிறாயே, உன் மனசுக்கு அவன் கேரக்டர் எப்ப
டி தோன்றுகிறது?" என்று கேட்க,

குழலி" நீங்கள் சொல்வது புரியவில்லை, கேரக்டர் என்றால்?"
என்று பதில் கேள்வி கேட்டாள்.

தொடரும்,
 
Member
Joined
Jun 3, 2025
Messages
92

நல்ல புருஸா தான் இருக்கிறான்... எழுதற அண்ணன் என்ன ஏழரை எடுத்து விட்டுருக்குனு தெரியவில்லை இவர்கள் இரண்டு பேர் வாழ்க்கையில்🙃🙃🙃🙃🙃😟😟
 
ஒன்னும் ஆகாது
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top