Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பூங்குன்றன் வீட்டுக்கு குழலி
மனம் முழுவதும் வலிகள் நிறைந்து வந்தாள்.
பூங்குன்றனும் குழலி சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவளுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று, அவள் பிறந்த வீட்டைப் பற்றி எதுவும் பேசாமல், அவளை சந்தோஷமாக இருக்க நிறைய முயற்சி செய்தான்.
குழலி, பூங்குன்றன் செயலுக்கு உள்ளுக்குள் மகிழ்ந்தாள். ' இவரை ஏன் நம் அப்பாவும், அண்ணனும் தப்பா புரிந்து கொண்டார்கள் '
என்று மனதில் நினைத்து கொண்டாள்.
ஒரு வாரம் கழித்து பூங்குன்றன் பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றான். அங்கே அந்த நிறுவனர் " வாங்க வாங்க" என்று புன்னகையுடன் வரவேற்றார்.
பூங்குன்றன் , நிறுவனர் வரவேற்றதற்கு "ம்ம்" என்று சிரித்த முகத்துடன் தன் அலுவலை பார்க்க சென்றான்.
பூங்குன்றன் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து வீட்டில் வைத்து, நக்கீரனிடம் " அண்ணா, நான் வேறு வீடு பார்த்து போகிறேன்" என்று சொல்ல, நக்கீரன் எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் " சரி டா, உனக்கு எது தோன்றுகிறதோ அப்படியே செய்" என்று சொல்லி விட்டு, சுசீலாவிடம் கண் ஜாடையில், இப்போ உனக்கு திருப்தியா என்று கோபமாக பார்ப்பது போல் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றார்.
பூங்குன்றன், குழலியை அழைத்து கொண்டு, வேறு ஒரு ஊரில் தான் ஒரு வீடு வாடகைக்கு பிடித்த வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வீட்டுக்குள் போனதும், குழலி வீட்டைச் சுற்றி பார்த்து விட்டு, அங்கே இருந்த வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பார்த்து விட்டு பூங்குன்றனிடம் " வீடு நல்லா இருக்கிறது, திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை எது நடந்தாலும் என்னிடம் சொல்வீர்களே,.! இப்ப இந்த விசயத்தை ஏன் சொல்ல வில்லை" என்று செல்லமாக கோபப்பட்டாள்.
மனைவியின் முகத்தில் தெரிந்த புன்னகையை வைத்து, " நீ அங்கே இருந்த ஒவ்வொரு நொடியும், என் அண்ணியின் வீட்டு பெருமைகளை கேட்டு புழுவாக துடித்ததை உணர்ந்தேன். அதான் உனக்கு சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று இந்த ஏற்பாடை செய்தேன். எல்லாமே இன்ஸ்டால் மென்டில் தான் வாங்கினேன் " என்றான்.
அந்த வாடகை வீட்டில்
வாழ்க்கையை இரசித்து வாழ்ந்தார்கள் பூங்குன்றன் குழலி தம்பதியர் .
ஒருமாதம் கழித்து அலுவலகத்தில் இருந்து, மதிய வேளையில் வீட்டுக்கு வர, அங்கே குழலி வீட்டு வாசலில் வைத்து ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
பூங்குன்றனைப் பார்த்ததும் நடுக்கம் வந்து " நீங்க..." என்று வார்த்தைகள் வராமல் தவித்தாள். அந்த இளைஞனும் அங்கே இருந்த கிளம்ப தயாரானான்.
பூங்குன்றன் " யார் இவர்?" என்று சாதாரணமாக கேட்க,
குழலி " அது வந்து..." என்று இழுக்க,
ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதேபோல் ஒரு இளைஞனிடம் வீட்டு வாசலில் வைத்து பேசியதை பார்த்து விட்டு, அண்ணனும் அப்பாவும் அடிக்காத குறையாக திட்டியதும், அம்மாவும் அறிவுரை என்ற பெயரில் மனம் நொந்து போகும் அளவு பேசியதும் நினைவுக்கு வந்தது. 'மேலும் கணவரும் தன்னை திட்டுவாரோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டு பதட்டம் ஆனாள்'.
பூங்குன்றன் " இவர் உனக்கு தெரிந்தவரா?" என்று கேட்க,
குழலி" ம்ம்" என்று சொல்லி விட்டு முழிக்க,
பூங்குன்றன் " தெரிந்தவர் என்றால்,
வீட்டுக்குள் அழைத்து போய் பேச வேண்டியது தானே? , அவரிடம் வீட்டுக்கு வெளியே வைத்து பேசினாள் அவர் உன்னை தவறாக நினைப்பார் அல்லவா?" என்று சொன்னதும்,
குழலிக்கு அப்போது தான் நிம்மதியான மூச்சு விட்டாள்.
அந்த இளைஞனும், பூங்குன்றனிடம்"
நான் இவள் ஊர் தான். இவள் எனக்கு அத்தை மகள். இங்கே நான் கொரியர் அலுவலகத்தில் கொரியர் கொடுக்கும் வேலை செய்கிறேன் " என்று தன்னை தானே அறிமுகம் செய்தார்.
பூங்குன்றன்" ஓ அப்படியா, அப்ப நீங்க எனக்கு தம்பி " என்று சொல்லி விட்டு, "குழலி என் தம்பிக்கு காபி போட்டு கொடு " என்று சொல்ல,
அந்த இளைஞன்" இல்லை எனக்கு நிறைய கொரியர் கொடுக்கும் வேலை இருக்கிறது, நான் இன்னொரு நாள் வருகிறேன் " என்று இருவரிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
பூங்குன்றனும் வீட்டுக்குள் போய் " இன்று அலுவலகத்தில் வேலை அவ்வளவாக இல்லை. லேப் டாப்பில் தான் வேலை.அதான் அங்கே இருந்து லேப் டாப்பில் பார்ப்பதை விட, இங்கே தனியாக நீ இருப்பாய் அல்லவா? அதான் இங்கே வந்து பார்த்துக்கலாம் என்று மதியமே வந்து விட்டேன் " என்று சொல்லிக் கொண்டே, உடையை மாற்றி கைலிக்கு மாறினான்.
குழலிக்கு இன்னும் பதட்டம் போகவில்லை. ' அப்பா, அண்ணன், அம்மா திட்டியது போல் கணவரும் திட்டுவார் 'என்று உள்ளுக்குள் பயந்து கொண்டு இருந்தாள்.
பூங்குன்றனும், மனைவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவளை இயல்பாக்க, மனைவியிடம் கொஞ்சலம் கெஞ்சலும் செய்ய ஆரம்பித்தான்.
கணவனின் கொஞ்சலும் கெஞ்சலும் குழலிக்கு புதிய அனுபவமாக இருந்தது. அவளும் அந்த ஆனந்தத்தில் மூழ்கி போனாள்.
குழலி இயல்பு நிலைக்கு வந்ததும், பூங்குன்றன் குளிக்க சென்றான்.
குளித்து விட்டு வந்து லேப் டாப்பில் தன் அலுவலைத் தொடர்ந்தான்.
குழலி அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டாள். மாலையில் பூங்குன்றே காஃபி போட்டு விட்டு, மனைவியை எழுப்பினான் " சூடான காஃபி ரெடி எழுந்திருங்க மேடம்" என்று சொல்ல,
குழலியும் கணவனின் செல்ல அழைப்பில் தூக்கம் கலைந்து எழுந்து"நீங்கள் ஏன் காஃபி போட்டீர்கள்? , என்னை எழுப்பி இருந்தால் நான் போட்டு இருப்பேன் ல" என்று சொல்ல,
பூங்குன்றன் " எனக்கு லேப் டாப்பில் அப்போதே வேலை முடிந்தது. ஒரு காஃபி குடிக்கனும் போல் தோன்றியது. அதான் உனக்கும் சேர்த்து போட்டு எடுத்து வந்தேன்" என்று சொல்ல,
குழலி எழுந்து போய் வாய் கொப்பளித்து விட்டு வந்து கணவனின் பாசம் நிறைந்த காஃபியை குடித்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை சிறப்பாக நடத்தினார்கள்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, பூங்குன்றன் ஒரு செய்தி சேகரிப்பதற்காக அவசர வேலையாக வெளியூர் சென்று இருந்தான். அப்போது அவனுக்கு குழலியிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று " சொல் மூக்கி" என்றான். சில நேரங்களில் செல்லமாக மனைவியை மூக்கி என்று அழைப்பான். மறுமுனையில் சத்தம் வராமல் இருக்க "லைனில் இருக்கிறாயா? " என்று பூங்குன்றன் கேட்க,
குழலியின் அழுகை சத்தம் தான் வந்தது. பூங்குன்றன் பதறிப் போய்" என்னாச்சு குழலி" என்று கேட்க,
குழலி அழுது கொண்டே " எங்க அப்பா கால் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டிருக்கிறார் என்று என் அம்மா போன் செய்து சொன்னார்" என்றாள்.
பூங்குன்றன் " ஓ அப்படியா, இப்ப எப்படி இருக்கிறாராம்? உன் அப்பா"என்று கேட்க,
குழலி அழுது கொண்டே"அடி அதிகம் தானாம். வீட்டில் தான் இருக்கிறாராம்.
நான் போய் பார்த்து விட்டு வரட்டுமா?" என்று தயங்கியவாறே கேட்க, பூங்குன்றன்" என்னிடம் இதற்கு எல்லாம் அனுமதி கேட்க வேண்டுமா? என்னை புரிந்து வைத்தது அவ்வளவு தானா? " என்று சொல்லி விட்டு,
" நீ முதலில் போய் பார்த்து விட்டு, அங்கே இருந்து விட்டு நாளைக்கு கூட வா, ஏனெனில் நான் வெளியூர் போய் இருக்கிறேன். இன்று வீட்டுக்கு வருவது சந்தேகம் தான் " என்றான்.
குழலி" அப்ப நான் எங்க அப்பாவை பார்க்க போகலாம் தானே?" என்று கேட்க, பூங்குன்றன்" நான் இவ்வளவு நேரம் அதானே சொன்னேன் " என்று சொல்லி விட்டு" எனக்கு ஒரு முக்கியமான கால் வருகிறது, நான் பிறகு பேசுகிறேன் "என்று அழைப்பை துண்டித்தான்.
குழலியும் 'அப்பாவைப் பார்க்க ஊருக்கு போக இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டுமே ' என்று மனதில் நினைத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வர, அவர்கள் ஊரில் உள்ள இளைஞன் இங்கே கொரியர் வேலை செய்பவன் இருசக்கர வாகனத்தில் செல்ல, அதைப் பார்த்ததும் ஒரு யோசனை தோன்றியவளாக, அவனை அழைத்தாள்.
அவனும் குழலி குரல் கேட்டு வண்டியை நிறுத்தி விட்டு " என்ன மதினி" என்று சொல்ல,
உடனே குழலி " என்ன புதுசா மதினின்னு கூப்பிடுற" என்று கேட்க,
அந்த இளைஞன் " அதான் அன்னைக்கே உங்கள் கணவர் என்னை தம்பி என்று சொல்லி விட்டாரே, அப்ப நீங்க எனக்கு மதினி தான்" என்று சொல்ல,
" நீ வேற நான் இருக்கும் சூழ்நிலையை புரியாமல்" என்று சொல்ல, அந்த இளைஞன் " என்ன ஆச்சு குழலி" என்று ஆதரவாக கேட்க,
குழலி " தன் அப்பாவுக்கு அடிபட்டதை
சொல்லி விட்டு, இப்போது ஊருக்கு போக வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி மாறி செல்ல வேண்டும். நேரமும் அதிகமாகி விடும். அதான் நீ ஊருக்கு போன என்றால், உன் கூட வரத்தான் "என்றாள்.
அந்த இளைஞனும் யோசித்து விட்டு" ம்ம் சரி, எனக்கும் வேலை முடிந்து விட்டது. ஒரே ஒரு கொரியர் மட்டும் ஒரு லாட்ஜில் கொடுத்து விட்டு ஊருக்கு போக வேண்டும், போகும் போது கொடுத்து விட்டு போகலாமா?"
குழலியும் அப்பாவை பார்க்க இருக்கும் ஆர்வத்தில் "சரி _என்று சொன்னாள்.
இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றார்கள்.அந்த லாட்ஜ் முன்னால்
இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, " குழலி இங்கே இரு, நான் போய் அங்கே கொடுத்து விட்டு கையெழுத்து மட்டும் வாங்கி வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு அந்த லாட்ஜை நோக்கி சென்றான்.
'உள்ளே போய் ரொம்ப நேரம் ஆகியும் அவன் வரவில்லையே ? அப்பாவை வேற பார்க்க போக நேரம் ஆகிவிடுமோ?' என்று யோசித்து கொண்டு இருக்கும் போது, அந்த இளைஞன் வந்தான்.
" சாரி குழலி, கொரியர் ஓனர் பெயரில் வந்து இருப்பதால் ஓனர் வந்து தான் வாங்கி விட்டு கையெழுத்து போடுவார் என்று மேனேஜர் சொன்னார்" என்றான்.
குழலி" இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? " என்று கேட்க, அந்த இளைஞன்" இப்போது ஓனர் வந்து விடுவார் என்று மேனேஜர் சொன்னார்" என்றான்.
" நீ உள்ளே வந்து உட்கார், இங்கே எவ்வளவு நேரம் தான் நிற்ப?" என்று சொல்ல, குழலியும்"ம்ம் " என்று சொல்லி விட்டு அவனுடன் லாட்ஜ் ரிசப்ஷன் நோக்கி சென்றாள்.
சிறிது நேரத்தில் லாட்ஜ் ரொம்ப பரப்பாகியது. அந்த பரபரப்பு அடங்கும் முன் ஒரு போலீஸ் ஜீப் அங்கே வந்தது. அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்களும் நேராக ரிசப்ஷன் நோக்கி சென்றார்கள்.
இன்ஸ்பெக்டர்,அங்கே போய் ரிசப்னிஷ்டிடம் " இங்கே இருந்து யாரும் வெளியே போகக்கூடாது கதவை அடைங்கள்" என்று சொல்லி விட்டு, காவலர்களிடம் " நீங்கள் மேலே போய் யாராவது சந்தேகப்படும் படி இருந்தால் அவரை கைது செய்யுங்கள்" என்றார்.
குழலியும், கொரியர் கொடுக்க வந்த இளைஞனும், ரொம்ப பதட்டமானார்கள். கொரியர் இளைஞன், எழுந்து இன்ஸ்பெக்டரிடம் போய் " சார் நான் கொரியர் கொடுக்க வந்தேன்" என்று பவ்யமாக சொல்ல, இன்ஸ்பெக்டர் அவனை ஏற இறங்க பார்த்து விட்டு " இப்ப அதுக்கு என்ன?"என்று அதிகாரமாக கேட்க,
அந்த இளைஞன் இன்னும் பவ்யமாக " நான் இன்னும் சில இடங்களுக்கு கொரியர் கொடுக்க வேண்டும் என்றும், இங்கே வந்த காரணத்தையும், இந்த லாட்ஜுக்கு வந்த கொரியரையும் காட்டி" விளக்கம் சொல்ல, இன்ஸ்பெக்டர் "உன் ஐடியை காட்டு" என்றார்.
அவனும் ஐடியை காட்ட, இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்து விட்டு " சரி நீ போகலாம்" என்று சொல்ல,
உடனே அந்த இளைஞன் " வா குழலி, நாம் போகலாம்" என்று சொல்ல,
இன்ஸ்பெக்டர், குழலியை பார்த்து விட்டு " இது யார்?"என்று கேட்க,
அந்த இளைஞன் " இவள் என் அத்தை மகள்"என்று சொல்ல,
இன்ஸ்பெக்டர் சந்தேகத்துடன் " கொரியர் கொடுக்கும் போது இவரையும் ஏன் அழைத்து வந்த? "
என்று கேட்டு விட்டு, "நீங்கள் இருவரும் அங்கேயே இருங்கள்.
நான் சொன்ன பிறகு நீங்கள் போகலாம்" என்று அதிகாரமாக சொன்னார்.
தொடரும்,