• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
11. புதிய வரவும்... வெள்ளை பேயும்..

சிட்டியை தாண்டிய பகுதியாக இருந்தா
லும் அதிக தொலைவில் இல்லாமல் இருந்தது அந்த ரெசிடென்சியல் ஏரியா. அங்கு இருந்த ஒவ்வொரு வீடுகளும் பல ஏக்கர்களில் இருந்து.

அதில் வெள்ளை மாளிகையாக ஜொலித்தது ஒரு அரண்மனை.

அந்த அரண்மனைக்குள் நுழைவதற்கே எப்படியும் இரண்டு கிலோமீட்டர் ஆவது பயணிக்க வேண்டியதாக இருக்கும் அந்த அளவுக்கு நீண்ட அழகான பாதைகளை தாண்டி தான்... அரண்மனையின் முகப்பு வாயில் இருக்கும். ஒரு புறம் நாட்டு காய்கறிகளும், தென்னை மரங்களும் பலவகையான கொடிகளும் நிறைந்து இருக்க மறுபுறத்தில்... இத்தனை விதமான பூக்களா என்று வியந்து பார்க்கும் வகையில் அவ்வளவு கலர்களில் அத்தனை விதமான மலர்களும் பூத்துக் குலுங்க...

மெதுவாக நடந்து சென்றாலும் அந்த இரண்டு கிலோமீட்டர் பயணம் உடலுக்கு மிக ஆரோக்கியமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு மிக அழகாக இருந்தது அந்த அரண்மனையின் இரு பக்க அமைப்பு.

அந்த இரவிலும் அது இரவு தானா என்பது போல் இருந்தது... அந்தக் கோட்டையில் ஒளிர்ந்து கொண்டு இருந்த வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில்... நாம் இருப்பது பூலோகத்தில் தானா என்பது போல் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக அது ஏதோ ஒரு தோட்டம் என்று தான் நினைப்பார்கள் ஆனால் அந்தத் தோட்டத்தை தாண்டி அதற்குள் இருந்த அரண்மனையை அதிகம் யாரும் கண்டு இருக்க மாட்டார்கள்.

இதோ முதலில் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன் தன்னுடைய வெள்ளை ஃபெராரியில் வேகமாக அங்கு வந்தவன் தன்னுடைய அரண்மனைக்குள் நுழைய போகும் போது தான் அவனுக்கு எதிரில் இருந்து ஒரு ப்ளூ கலர் பொலினோவில் ஒரு பெண் பார்த்துக் கொண்டே போனாள்.

டிரைவர் இந்த தோட்டத்திற்குள் நீ சென்று இருக்கிறாயா என்று காரில் அமர்ந்து இருந்த பெண் தன்னுடைய டிரைவரிடம் கேட்டாள்.

மேடம் எனக்கு தெரிந்து உள்ளுக்குள்ள மிகப்பெரிய அரண்மனை ஒன்று இருக்கிறதாக சொல்லிக் கொள்கிறார்கள். நம் கண்களுக்கு மட்டும் தான் தோட்டம் தெரிகிறது இரண்டு கிலோமீட்டர் பிறகு ஒரு அரண்மனையும் அதற்குப் பின் பக்கமாக பல ஏக்கரில் தோட்டமும் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்..

ஆனால் எனக்கு தெரிந்து இதுவரை வெளி ஆட்கள் யாரும் இதற்குள் போனதாக தெரியவில்லை மேடம்.

ஓகே இப்போ ஒரு ஃபெராரிக்காரர் உள்ள போச்சு அதை பத்தின டீடெயில்ஸ் எதுவும் உனக்கு தெரியுமா என்று கேட்டாள்.

மேடம் அங்க கேட்டில் இருக்கும் வாட்ச்மேன் நம்ம வீட்டு வாட்ச்மேனும் அண்ணன் தம்பிகள் தான் என்று நினைக்கிறேன் மேடம். அதனால் நம்ம வாட்ச்மேன் இடம் கேட்டால் டீடைல்ஸ் தெரியும் என்று சொன்னான்.

ஓகே நீ இப்போதைக்கு பேட்மிட்டன் கிளப்புக்கு போ.. அங்கே என்னுடைய பிரண்ட்ஸ்களுடன் மீட் இருக்கு. மார்னிங் விசாரித்துக் கொள்ளலாம் ஒன்றும் அவசரம் இல்லை என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.

இங்கு தன் வீட்டிற்குள் வந்த சனாதன்... தன் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வரும் பொழுது...

தங்கள் அண்ணனும், தம்பிகளும் தங்கள் கார்களில் வந்து இருந்தனர்.

அவர்களும் தங்கள் அறைகளுக்குச் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு டைனிங் ஹாலில் வந்து அமர...

அங்கே நல்ல கிராமத்து பாணியில் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு சரோஜா அம்மா வயது 60 இருக்கும் ஆனாலும் சுற்றிலும் இருக்கும் தோட்ட வேலைகளை பார்த்து.. அந்த வீட்டிற்கு மிகவும் பொறுப்பான தலைமை அதிகாரியாக இருப்பவர். தோற்றத்தில் அவர் 50 தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நல்ல திடஹாத்திரமான ஆள். இவர்களின்.. தந்தை ஜெடிக்கு ஒரு வகையில் அக்கா முறையில் உள்ளவர்.

வாங்க கண்ணுகளா.. இன்று நாள் எப்படி போனது என்று கேட்டுக் கொண்டே வந்தவர்... அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு.. புட்டும் கருவாட்டுக் குழம்பும் ஊற்றினார்.

வாசனையை முகர்ந்து பார்த்த லிபின்... ம்ம்... ஆஆஆ... செம்ம வாசம் அத்தை... அப்படியே ஆள தூக்குது உங்க கருவாட்டுக் குழம்பு வாசம் என்று மோப்பம் பிடித்துக் கொண்டு இருந்தவனின் தலையில் தட்டினான் கர்ணா.

டேய் சாப்பாட்டை என்னைக்கும் வாசம் பிடிக்காதன்னு எத்தன தடவ சொல்றது... ஒழுங்கா சாப்பிடு என்ற மிரட்டினான்.

அட விடு கண்ணு ஏதோ சின்ன புள்ள.. ஆசையா செஞ்சுட்டு போகட்டுமே... அங்க பாரு புள்ள மூஞ்சி சின்னுண்டா போயிடுச்சு...

நீ சாப்பிடு ராசா என்று சொல்லியவள்... லிபின் அருகில் வந்து ஊட்டியும் விட்டார்.

அவனும் சிறுபிள்ளை போல் அவர்களிடம் வாங்கிக் கொண்டே தன் அண்ணனை பழிப்பு காட்டினான்.

மற்றவர்களும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிட்டார்கள்.

அத்தை டின்னருக்கு வெறும் புட்டு மட்டும் தானா என்று கேட்டான் சனாதன்.

ஐயோ இல்லை செல்லம் ஆப்பம் இருக்கு சொதி இருக்கு... தேங்காய் பாலும் இருக்கு. அதோடு இடியாப்பமும் செய்து இருக்கிறேன். உனக்கு எது வேண்டுமோ சொல் உங்கள் அனைவருக்கும் பிடித்தது போல் தான் சமைத்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு...

அனைவருக்குமே தங்க கின்னியில் இடியாப்பமும் தேங்காய் பாலும் ஊற்றி ஊற வைத்து இருந்த கின்னங்களைக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தார்.

இதை கடைசியாக சாப்பிடுங்கள் இரவு நல்லா தூக்கம் வரும் என்று சொல்லிக் கொண்டே அனைவருக்கும் பரிமாறினார்.

அப்போது சரோ மா ... சரோ... ஓஓஓஓ. ... என்று ராகத்தோடு கத்திக்கொண்டே 22 வயது இளம் பெண் ஒருத்தி ஹாலில் வந்து அமர்ந்தாள்...

என்ன ஆச்சு சரோ... உன் பஞ்ச பாண்ட மருமகன்கள் வந்துவிட்டார்களா என்று கேட்டுக் கொண்டே ஹாலில் இருந்த அந்தப் பெரிய எல் இ டி டிவி ஆன் பண்ணியவள்...

அதில் அவளுடைய ராக்கிங் ஸ்டார் அல்லு அர்ஜுன்... ஆள வைகுண்ட புறத்தில் இருந்து டிஜே சாங் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருக்க... பாடலின் சத்தத்தை அதிகரித்து வைத்தவள் மற்றவர்கள் அனைவரையும் ஏன் சுற்றத்தில் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை... டிவியில் ஆடிக் கொண்டு இருக்கும் அல்லு அர்ஜுன் மேலே கண்ணு இருக்க...

இங்கே பாடலின் ஒலி கேட்டதுமே... கடவுளே ராமா இந்த பெண்ணை வைத்து என்ன தான் செய்யப் போகிறேனோ என்று சலித்துக் கொண்டாலும் சரோஜா மா அவரின் முகத்தில் புன்னகையே இருந்தது.

யாரு மா இது என்று கேட்டார்கள் அனைவருமே...

நம்ம ஊரு பொண்ணு தான் கண்ணுகளா.. அப்பா அம்மா இரண்டு பேரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் அவளின் சிறு வயதிலேயே... அவளுடைய தாத்தா அத்தை கவனிப்பில் தான் வளர்ந்தாள்.. 22 வயதில் அவள் பார்க்க கூடாத அனைத்து கொடுமைகளையும் அனுபவித்து விட்டாள்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் நான் ஊருக்கு போயிருந்த சமயம் அவளைக் காப்பாற்றி இங்க அழைத்து வந்தேன்.. நம்ம நுங்கம்பாக்கம் பிரான்ச்சில் தான் ஒர்க் பண்றா... அந்த பிரென்ச் மேனேஜருக்கு இவதான் அசிஸ்டன்டா இருக்காப்பா...

அந்த பிரான்சுக்கு உங்களில் யார் போகிறீர்கள் என்று கேட்டார்.

அத்தை நான் தான் அந்த பிரான்ச் எடுத்த பொறுப்பா பாக்க போறேன் என்று கர்ணா சொன்னான்.

ஓஓஓ.. நீயா ரொம்ப சந்தோஷம்பா.. கொஞ்சம் அவள் துடுக்கத்தனமாக தான் இருப்பாள் ஆனால் மிகவும் நல்ல பெண் கண்ணு... என்று சொன்னார்.

சரி எங்க உங்க நல்ல பொண்ணு உங்களை வந்த வேகத்தில் அப்படி கத்துக்கிட்டே வந்தா இப்ப அங்க இவ்வளவு டிவி சவுண்ட் சத்தமா வச்சு கேட்டு கிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள் என்று கேட்டான் கர்ணா.

அதுவா அவளுக்கு அந்த நடிகரின் மீது அப்படி ஒரு பைத்தியம்.. அது சன் மியூசிக் இல் அந்த பாடல் ஒளிபரப்பாகி இருந்தால் பாடல் முடிந்ததும் எழுந்து வந்து விடுவாள்.. அது இல்லாமல் கே டிவியில் படமாக போட்டு இருந்தார்கள் என்றால்... விளம்பரத்திற்கு தான் இனி எழுந்து வருவாள். அதுவரை அவள் உலகத்தில் அந்த கதையின் நாயகன் அருகில் தான் இருப்பாள்... அவள் கூட வேலை செய்யும் ஏதோ ஒரு பெண்ணிற்கு திருமணம் என்று போயிட்டு இரண்டு நாள் கழித்து இப்பொழுது தான் வீட்டிற்கு வருகிறாள் என்று சொன்னார் சரோஜா.

இதுவரை சரோஜா அத்தை சொல்லி அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த மிதுன்... அது என்ன பழக்கம் மா இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாமல் வெளியே தங்கி இருந்து வருகிறாள் என்று மிதுன் தேவ் கேட்டான்.

தம்பி 22 வருடங்களாக நம்ம ஊரு விட்டு அவள் அதிகம் வெளியில் வந்ததே இல்லை.. காலேஜ் கூட ஹாஸ்டலில் தங்கி தான் படித்தாள். அவள் பார்த்த முதல் திரைப்படம் இப்போ ஓடிக்கொண்டு இருக்கிற அந்த படம் தான்.. அதுவும் நம் வீட்டிற்கு வந்து இந்த டிவியில் பார்த்தது தான்.. நான் தான் அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன்..

அவளுடன் பழகிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும் அவள் எப்படிப்பட்ட பெண் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது.. பாடல் முடிந்து கே டிவியில் விளம்பரம் போடப்பட்டு இருக்க...

ஹலோ சரோ மா... என்று கத்திக் கொண்டே டைனிங் டேபிள் வர... சரியாக அந்த நேரம் கர்ணா சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவும் இடம் செல்ல திரும்பவும்...

இவள் அவன் மீது இடிப்பது போல் சென்று... கடைசி நொடி பொழுதில் இடிக்காமல் கண்களை இறுக மூடி நின்றாள்.

கர்ணா ஒரு நிமிடம் அவளை பார்த்து விட்டு.. அவள் தடுமாறாமல் தான் நிற்கிறாள் என்று தெரிந்த பிறகு .. அவளை தாண்டி சென்று விட்டான்.

அதே போல் மற்றவர்களும் அவளை பார்த்து இளம் புன்னகையோடு எழுந்து சென்று விட்டார்கள்.

அனைவரும் சென்ற பிறகு சரோஜா...

செல்லம் இப்படியே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்க போற வா பசிக்குது சாப்பிடலாம் என்று அழைத்தார்.

அப்போது தான் கண்களை திறந்தவள்... சரோமா இங்கே கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒரு டெவில் நின்னுது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டாள் மிகவும் அமைதியாக..

அவள் கேட்ட விதத்தில் சிரிப்பு வந்தாலும் அமைதியாக... என்ன சொல்ற கண்ணு ... நிஜமாவா சொல்ற என்று பயந்தது மாதிரியே அவளிடம் கேட்டார் சரோஜா...

அட சாமி சத்தியமா தான் சொல்கிறேன்... என்று சொல்லியவள் அதிர்ந்து நின்றாள்...
என்ன... ?????¿¿¿¿...

இணைந்திருங்கள்

சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top