Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
குழலி 'அண்ணன் சொன்னதையும், தன் கணவரின் அண்ணி சுசீலா தன் பிறந்த வீட்டு பெருமைகளை சொன்னதையும் ' யோசித்து பார்த்தாள்.
வளவன் " என்ன யோசிக்கிற?" என்று கேட்க, குழலி " ஆம் நீ சொன்னது போல, அவர் அண்ணி வீட்டில் இருந்து வந்த சீர்வரிசையை தடுக்க வில்லை போல," என்றாள்.
ஆனால் நக்கீரன் திருமணம் நடக்கும் போது, பூங்குன்றனுக்கு சின்ன வயது, மேலும் அப்போது வரதட்சணை மற்றும் சீர் வரிசை பற்றி முழுமையாக தெரியாமல் இருந்த வயது என்று குழலி யோசிக்க வில்லை.
வளவன் பேச்சை தொடர்ந்தான்." மாப்பிள்ளை பெருந்தன்மையாக சீர் வரிசை வேண்டாம் என்று சொல்லி விட்டு வேலைக்கு போய் விடுவார், ஆனால் அவர் அண்ணி உன்னை உன் வீட்டில் இருந்து ஒன்றும் கொண்டு வர வில்லை, என்று ஏளனமாக பார்ப்பார். அதனால் நீ நம் வீட்டு சீர்வரிசையை உன் வீட்டுக்கு கொண்டு போக மாப்பிள்ளையிடம் பேசி சம்மதிக்க வை" என்று சொல்லி விட்டு வேறு பக்கம் சென்றான்.
குழலிக்கு ' என்னடா இது, அம்மா சொன்னதையே அண்ணனும் சொல்றான். ஆனால் நம் கணவரிடம் எப்படி பேசி சம்மதிக்க வைப்பது' என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
வெளியே போய் வந்த பூங்குன்றன் நேராக குழலி இருக்கும் இடம் செல்ல,
பூங்குன்றனைப் பார்த்த குழலி அம்மா " குழலி உன் மாப்பிள்ளை வந்துட்டார். நீ உன் அறைக்கு போ" என்று சொல்ல, குழலியும், தன் கணவரை பார்த்து விட்டு " இதோ வருகிறேன்" என்று பூங்குன்றனை நோக்கி சென்றாள்.
சுந்தரம் சீர் வரிசை ஏற்றி வந்த வேன் டிரைவரிடம் " கொஞ்சம் லேட் ஆகும் போல..." என்று சொல்ல, உடனே டிரைவரும் " நாங்க இங்க இறக்கி வைத்து விட்டு போகிறோம். இல்லை என்றால் எங்கள் முதலாளி திட்டுவார்" என்று சொல்லி விட்டு, தன் கூட வந்த ஆளுடன் எல்லா சீர் வரிசை பொருட்களையும் சுந்தரம் வீட்டில் இறக்கி வைத்து விட்டு சென்றார்கள்.
பூங்குன்றன் வீட்டுக்கு செல்ல தயாரானாள் குழலி.
வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு,
அப்பா அம்மா அண்ணனிடம்
அறிவுரைகளையும், ஆசிர்வாதம் தையும் வாங்கி கொண்டு, அப்படியே
குழலி அம்மா வழி உறவுகள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு கண்ணீரோடு பூங்குன்றனோடு செல்ல வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
வெளியே, பூங்குன்றன் - குழலி செல்வதற்கு ஒரு கார் தயாராக இருந்தது. குழலி வீட்டில் உள்ள உறவுகள் குழலியை பூங்குன்றன் வீட்டில் விட வருவதற்காக ஒரு சுமோ தயாராக இருந்தது. அப்படியே ஒரு லோடு வேனும் வந்தது.
பூங்குன்றன் அனைவரையும் பார்த்து விட்டு " லோடு வேன் எதற்கு என்று?" குழலியிடம் கேட்க,
குழலி பதில் சொல்லாமல் இருக்க
சுந்தரம் " குழலிக்கு சீர் வரிசை ஏற்றி கொண்டு வருவதற்கு" என்று மீண்டும் எங்கோ பார்த்து சொல்ல,
பூங்குன்றனுக்கு மாமனாரின் முகம் கொடுத்து செயலை உள்ளுக்குள் புரிந்து கொண்டான்.' அவர் மகள் அவரை விட்டு பிரியப் போகிறாள் என்ற வருத்தம் இல்லை. நம் மீது தான் ஏதோ கோபத்தில் இருக்கிறார் ' என்று நினைத்துக் கொண்டான்.
அப்போது குழலி" அப்பா இதெல்லாம் அவருக்கு பிடிக்காது என்று சொன்னாரே? பிறகு ஏன்?" என்று கேட்க,
சுந்தரம், குழலியிடம்" அதெல்லாம் தெரியாது. உன்னோடு சேர்த்து இந்த வீட்டு சீர் வரிசை பொருட்களும் வரும் " என்று சொன்னார்.
உடனே பூங்குன்றன் நிதானமாக" இந்த வீட்டில் இருந்து என் மனைவி மட்டும் வந்தாள் போதும். அவளே எனக்கு பெரிய சீ..." என்று சொல்லி முடிப்பதற்குள்,
சுந்தரம், கோபமாக " இந்த வீட்டு சீர் வரிசை வேண்டாம் என்றால், இந்த வீட்டுப் பெண்ணும்..." என்று ஏதோ சொல்ல வந்தவரோ பாதியில் பேச்சை நிறுத்தினார்.
அங்கே இருந்த குழலி வீட்டினர் அதிர்ச்சியாக...! , அப்போது அங்கே அந்த அதிர்ச்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக, நக்கீரன் மற்றும் சுசீலா, காரில் வந்து இறங்கினார்கள்.
நக்கீரனையும் சுசீலாவையும், குழலி அம்மா " வாங்க மாப்பிள்ளை, வாமா சுசீலா" என்று வரவேற்றார்.
சுசீலா " என்ன சித்தி, எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வர தயாராகி விட்டீர்கள் போல?" என்று சிரித்துக் கொண்டே பேசினார்.
பூங்குன்றன்,அண்ணனையும் அண்ணியையும் வரவேற்று விட்டு " அண்ணா கார் யாருடையது?" என்று கேட்க, நக்கீரன் " உன் அண்ணியின் அப்பாவுடையது. செகன்ட் ஹேண்டில் வாங்கியது..." என்று மேற்கொண்டு சொல்லுமுன்,
வளவன், குழலியைப் பார்த்து" பார்த்துக்கோ, உன் மாப்பிள்ளையின் அண்ணன் மட்டும் அவர் மாமனார் வீட்டில் சீர்வரிசையாக கார் வாங்கியிருக்கிறார் "என்று ஏளனமாக சிரித்தான்.
பூங்குன்றனுக்கு கோபம் வந்து" என் அண்ணன் ஒன்னும் இந்த காரை சீதனமாக வாங்க வில்லை " என்று சத்தமாக சொல்ல,
அங்கே ஏதோ பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று நக்கீரனும் சுசீலாவும் புரிந்து கொண்டு,
சுசிலா, குழலி அம்மாவிடம்" என்ன சித்தி, எதுவும் பிரச்சினையா?" என்று கேட்க,
குழலி சித்தி" அதெல்லாம் ஒன்னும் இல்லை சுசீலா " என்று சொல்ல,
" பிறகு ஏன் எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிகிறது " என்று சுசீலா கேட்க,
அப்போது சுந்தரம்" மகளே சுசீலா " என்க,
சுசீலா" சொல்லுங்க சித்தப்பா " என்று கேட்க,
சுந்தரம்" நான் கேட்கிறேன் நீ கோபப்படக்கூடாது " என்று சொல்ல,
சுசீலா" சும்மா தயங்காமல் கேளுங்கள் சித்தப்பா " என்று சுசீலா சொல்ல,
"நீ உன் பிறந்த வீட்டில் இருந்து சீர் வரிசை என்ன கொண்டு வந்த?" என்று சுந்தரம் கேட்க,
சுசீலா ஒரு நிமிடம் யோசித்து விட்டு" இப்ப எதுக்கு சித்தப்பா இதெல்லாம் கேட்கிறீங்க " என்று கேட்க,
குழலி அம்மா" அவர் கிடக்கிறாரு, நீ முதலில் வீட்டுக்குள்ள வா " என்று சொல்லும் போது, நக்கீரன்" என்ன மாமா பிரச்சினை?" என்று சுதந்திரத்தைப் பார்த்து கேட்க,
சுந்தரம்" பூங்குன்றன் சீர் வரிசை வேண்டாம் என்று சொன்ன அனைத்தையும் சொல்ல" , அதைக் கேட்டு நக்கீரன் பதில் சொல்லும் முன்,
சுசீலா" சித்தப்பா, இதெல்லாம் என் கொழுந்தனுக்கு பிடிக்காது என்று பெண் பார்க்க வந்த அன்றே சொன்னோமே? , இப்ப எதுக்கு தேவையில்லாமல் பிரச்சினை " என்று சொல்லி முடிக்கும் போது,
வளவன் சுசீலாவைப் பார்த்து ஒருமையில்" நீ எப்படி அந்த வீட்டுக்கு விளக்கேற்ற போனியோ? அதேபோல் என் தங்கையும் போக வேண்டும் " என்று சொல்ல,சுசீலாவுக்கு கோபம் வந்தது.அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.
பூங்குன்றன் கோபமாக" எப்படி என்
அண்ணியை நீ என்று உரிமையில் சொல்லுவ? மரியாதை கொடுத்து பேச தெரியாதா? உனக்கு என்று வளவனைப் பார்த்து கேட்க,
சுசீலா, நடக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு, " பரவாயில்லை, இவன் என் தம்பி தான், அதான் அக்கா என்று உரிமையுடன் சொல்கிறான்" என்று அங்கிருந்தவர்கள் முன்னால் சொன்னாள்.
பூங்குன்றன் " இல்லை அண்ணி, நீங்கள் எனக்கு அம்மா மாதிரி, ஆனால், குழலி அண்ணன்..." என்று பேச முடியாமல் திணற,
சுசீலா,மனதுக்குள் ' கொழுந்தன் தன்னை அடிக்கடி அவமானம் செய்கிறான் என்று நினைத்தோம், ஆனால் அவன் மனதில் நம்மை அம்மாவாக நினைக்கிறான் ' என்று நினைத்து சந்தோசப்பட்டாள்.
பூங்குன்றன் பேச முடியாமல் திணறி நிற்க, வளவன் " ஆமா நீ பெரிய நியாயம் தெரிஞ்சவன் மாதிரி பேசுவ?" என்று சொல்ல,
பூங்குன்றன், வளவனிடம் எகிறிக் கொண்டு " என்ன ஜாடையில் பேசுற?" என்று கோபமாக கேட்க,
வளவன் " ஜாடையில் எல்லாம் கேட்க வில்லை, நேரிடையாக தான் கேட்கிறேன். அன்னைக்கு என் தலைவர் பிறந்தநாளுக்கு ஏதோ சாதி வசனம் இருந்ததால் பிறந்தநாள் செய்தி போட முடியாது என்று சொன்னாயே.!, இப்போது உன் அண்ணன் காரில் சாதி வசனம் எழுதி இருக்கிறது, இது எந்த ஊர் நியாயம்?" என்று கேட்க,
அப்போது நக்கீரன், சுந்தரம் அருகில் சென்று " என்ன மாமா, உங்கள் மகன் என்ன உண்மை தெரியாமல் பேசுகிறான். இது என் மாமனார் செகன்ட் ஹேண்டில் வாங்கிய கார் என்று வந்தவுடனேயே சொன்னேனே!, அந்த காரின் பழைய ஓனர் சாதி வசனம் எழுதி இருந்தால் அதற்கு நாங்க என்ன செய்ய? இது என்ன நியாயம்?" என்று கேட்க,
அங்கே இருந்த உறவினர்கள் எல்லோரும் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.
ஏனெனில் அவர்கள் ஒரு கருத்து சொல்ல வந்து அது பிரச்சினையாகி
பிறகு கல்யாண வீடு கலாட்டா வீடு நம்மால் ஆகி விடக்கூடாது என்று அமைதியாக இருந்தார்கள்.
சுந்தரம் " என்ன கேட்டீங்க மாப்பிள்ளை? என் மகன் கேள்வி கேட்டது எந்த ஊர் நியாயம் என்றா?
ஏன் உங்கள் தம்பி செய்த அநியாயம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? " என்று கேட்க,
பூங்குன்றன் அதைக் கேட்டு விட்டு, " என்ன மாமா நீங்களும் புரியாமல் பேசுறீங்க, நான் அன்னைக்கு வளவன் தலைவர் பிறந்தநாள் செய்தி போட முடியாது என்று சொல்ல வில்லை. ஆனால் சாதி வசனம் போட்டு தான் செய்தி போட முடியாது என்று சொன்னேன் " என்று விளக்கம் கொடுக்க,
சுந்தரம், பூங்குன்றனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு" ஆமாம் நான் புரியாமல் தான் பேசுகிறேன் " என்று சொல்ல, அங்கே இருந்த அனைவரும், சுந்தரத்திடம் ஏன் இப்படி என்று கேட்க,
பூங்குன்றன்" ஏன் மாமா இப்படி?
நான் ஏதாவது தவறாக செய்து இருந்தால் மன்னிக்கவும் "என்று பாவமாக கேட்க,
சுந்தரம்" ஆமாம் நீங்க தப்பா தான் செய்தீங்க "என்று சொல்லி விட்டு, " அன்னைக்கு நல்லவன் மாதிரி என் கடைக்கு வந்து அடையாளம் தெரியாதவர்களிடம் எதுவும் வாங்காதீர்கள் என்று சொல்லி விட்டு,
அந்த பக்கம் போய் போலிஸில் என்னை போதை மருந்து வைத்து இருப்பதாக போட்டு கொடுத்ததை மறக்க முடியுமா?"என்று சொல்ல,
பூங்குன்றன் உட்பட அங்கே இருந்த அனைவரும் இதைக் கேட்டு ஆச்சரியமாக...! பார்த்தார்கள்.
வளவன்" ஓ அதுவும் இவன் வேலை தானா? " என்று பேச, அங்கே நக்கீரன் தன் தம்பிக்காக பேச, இறுதியில் அங்கே வாக்குவாதம் முத்திப்போய்
வளவன், நக்கீரனை அடிக்க கையை ஓங்க,
குழலி" அண்ணா..." என்று கத்த,
அனைவரும் அமைதியானார்கள்.
பூங்குன்றன்" எனக்கு அப்பா மாதிரி உள்ள என் அண்ணனை அவமரியாதை செய்த இந்த வீட்டுக்கு இனிமேல் என் கால் படாது " என்று சொல்லி விட்டு, " குழலி வா நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று கூப்பிட,
குழலி பூங்குன்றன் சொன்னதைக் கேட்டு யோசிக்க,
பூங்குன்றன்" என் மேல் நம்பிக்கை இருந்தால் வா, என் மீது எந்த தவறும் இல்லை" என்று சொல்லி விட்டு அந்த வீட்டு வாசல் படி தாண்டி தெருப்பகுதிக்கு வந்தான்.
குழலி அழுது கொண்டே, தன் பெற்றோர்களிடம் கண்ணாலேயே, நான் போய்ட்டு வருகிறேன் என்று சொல்ல, வளவன் " போ போ, அவன் உன்னையும் ஒரு நாள் ஏமாற்றுவான் அப்போது நீ இங்க தான் வரணும்" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான்.
குழலி சித்தி, பூங்குன்றன் அருகே வந்து "இங்கே நடந்த பிரச்சினைக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மாப்பிள்ளை" என்று சொல்ல,
பூங்குன்றன் " நீங்க ஏன் அத்தை மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..." என்று சொல்லும் போது,
நக்கீ
ரன் " கிளம்புடா" என்று ஒரு அதட்டல் போட, அங்கே இருந்த பூங்குன்றன், குழலி சுசீலா மற்றும் நக்கீரன் அனைவரும் கிளம்பினார்கள்.
தொடரும்,