அத்தியாயம் – 17
“என்ன பயம் உனக்கு? நான் உன்னைய நல்லா பாத்துக்குவேன். முன்னாடிதான் என் வாழ்க்கை கஷ்டமா இருந்துச்சு. இப்போ என்கிட்ட ஒரளவுக்கு எல்லாம் இருக்கு. அதை வச்சு உனக்குத் தேவையான விஷயங்களை என்னால கொடுக்க முடியும்.”
“ம்ம்ம்.”
“நீ ஒன்னும் பயப்படாத சரியா? நான் உன்னைய வசதியா சந்தோஷமா...
அத்தியாயம் – 16
“ஏற்கனவே ஹோம்ல எல்லோரும் வாழ்த்து சொல்லிட்டாங்க. இப்போ இருக்க வாழ்க்கைக்கு சாமியப் பாத்து நன்றியும் சொல்லியாச்சு. இதைவிட என்ன வேணும்? அது மட்டுமில்லாமல் பொறந்த நாளைக்கு பரிசு கொடுக்குறதுலாம் எனக்குப் புடிக்காது. ஏதோ போட்டியில ஜெயச்ச மாதிரி. அதெல்லாம் வெட்டிச் செலவுதான்.”...
அத்தியாயம் – 15
“எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவர் உலகம் அப்படிச் சட்டென நின்று போகும் அளவிற்கு நான் என்ன சொல்லிவிட்டேன்? நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா? இல்லையா? எனக்கு அந்த நேரத்தில் எதுவும் பிடிபடவில்லை. அவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்த பிறகு வரும் அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்.“
“அவர்...
அத்தியாயம் – 14
“ம்ம்ம் கரெக்ட் தான். நீங்க என்னைய மறக்கலாம். ஆனால் நான் உங்கள என்னைக்கும் மறக்க முடியாது. என்னுடைய முக்கியமான நாள்ல என்னோட முக்கியமான ஆசைய நிறைவேற்றிக் கொடுத்த தேவதை நீங்கள். உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம வந்துட்டேன். மனசு உறுத்தலா இருந்தது. அதுனாலதான். ரொம்ப நன்றிங்க.”...
அத்தியாயம் – 13
“இப்போது திரும்பிப் பார்க்கையில் பல விஷயங்களின் தடையங்கள் கூடத் தென்படவில்லை. காலம் பலவற்றை மறக்கச் செய்துவிட்டது. வெளியே சொல்ல முடியாத துன்பங்களையும், தாங்கிக் கொள்ள முடியாத சித்திரவதைகளையும் நான் கடந்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தால், வானமாய் விரியும்...
அத்தியாயம் – 12
செல்ஃபோன் சினுங்கியது. “நைட் டைம்ல பஸ்ல வரக் கொஞ்சம் பயமா இருக்கு. நான் சென்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?” என்று ரூபாவின் குரல் சொன்னதும், அழுத்தம் அதிகரித்தது. அப்போதுதான் அங்கிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்தான்.
“நான் இப்போதான் வீட்டிற்கு வந்தேன்...
அத்தியாயம் – 11
அறைக் கதவை நெருங்கிய போது உள்ளிருப்பவர்களின் சத்தம் கேட்டது. தெளிவாக இதுதான் பேசுகிறார்கள் என்று கேட்கவில்லை. ஆனால் இவர்கள்தான் பேசுகிறார்கள் என்று குரல்கள் காட்டிக் கொடுத்தன. ஒரு குரல் மேடத்தினுடையது. இரண்டாவதாகப் பேசிய குரல் ரூபாவுடையதுதான் என்பதை உறுதிசெய்தான் பிரேம்.
அந்தச்...
அத்தியாயம் – 10
மேடம் வார்த்தைக்கு வார்த்தை மலர் மலர் என்று சொல்லிச் சொல்லிப் பூத்தார். இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அவர்கள் இருவரும் இரவு உணவிற்கு வந்த விஷயத்தையும் குழந்தையின் அசட்டுத்தனத்தோடு சொன்னார். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
செல்ஃபோனை அனைத்து மேசையில்...
அத்தியாயம் – 9
“உன்னை மாதிரி அறிவாளியா காதல் மன்னனா இருந்தா அவசியம் இல்லை. அப்படி இல்லாதவங்களுக்கு அவசியம்தானே?“
ஒரு துளி வெட்கத்தோடு “நமக்கு இந்தக் காதல் கத்தரிக்காயப் பற்றியெல்லாம் சுத்தமா தெரியாது மேடம். அம்மாவா பாத்து தாலி கட்ட சொன்னாங்க கட்டுனேன் அவ்வளவுதான்” என்றான் பிரேம்.
பிரேமைப்...
அத்தியாயம் – 8
“சாமர்த்தியமான சிலர் இதை ஏற்ற வகையில் கையாண்டு கடந்து வந்து தங்களுக்கிடையே இருக்கும் நேசத்தைப் பாதுகாப்பார்கள். அதை எப்படிக் கையாள்வது என்பதில் எந்தத் தெளிவும் இல்லாதவர்களிடம் ஒவ்வொரு முரண்பாடான விஷங்கள் நடக்கும்போதும் விரிசல் இன்னும் அகலமாகிக் கொண்டே செல்லும். முன்பிருந்த பற்று...
அத்தியாயம் – 7
பிரேமிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் கைக் கடிகாரத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண், உடனே சட்டென அமைதியானாள். ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்கான அறிவிப்பு ஒளிபரப்பானது. அதை அவள் மௌனமாகக் காது கொடுத்துக் கேட்டாள். கேட்க்கும்போது தன் கண்களையும் இறுக்கமாக...
அத்தியாயம் – 5
என்னைப் போல அவர்களும் அன்பிற்காக ஏங்கும் ஒரு வெள்ளந்தியாக இருக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே இருக்கிறது என்று என் படுக்கையறைக்குள் மௌனமாகச் சீறிக்கொண்டிருந்தேன்.
மலரின் திருமணத்திற்கு செல்லும் அந்த நாள்தான் நான் அவளைச் சந்திக்கும் கடைசி நாளாக இருக்கும் என்கிற பயம்...
அத்தியாயம் – 4
அந்த விரிசலில் பூத்த பூதான் அன்பு. நான் இழந்ததை, அது இழப்பு இல்லையெனச் சொல்லி என்னை நானே ஏமாற்றுவதைக் கைவிட முயற்சி செய்தேன்.
எவ்வகையிலெல்லாம் எனக்கு அன்பு கிடைக்குமோ அதையெல்லாம் தேடித்தேடி அள்ளிக் கொள்ள ஆசைப்பட்டேன்.
அந்த ஆசையில் மலர்ந்தவள்தான் என்னுடைய உதவியாளர் மலர். அவள் என்...
அத்தியாயம் – 3
“ என்ன திடீரென அமைதியாகிட்டீங்க?”
“நீ ஏன் இப்படி இருக்க?”
“எப்படி?”
“நீ கேள்வி கேட்டா மட்டும் போதுமா? உன் கேள்விக்குப் பதில் வேணாமா? நீ முதல்ல கேட்ட கேள்விக்கே நான் இன்னும் பதில் சொல்லல. அதுக்குள்ள அடுத்தடுத்து கேள்வியாக் கேட்டுட்டே போறீயே இது நியாயமா?”
“சரி சொல்லுங்க.”...
அத்தியாயம் – 2
அவளை எப்படியாவது என் பக்கம் திருப்ப முயற்சித்து அவள் உள்ளங்கையைத் தொட்டேன். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கையை அவள்வசம் இழுத்து இறுக்கமாகப் படித்துக்கொண்டாள்.
ஆனால், அப்போதும் கூட அவள் கண்களைத் திறக்கவில்லை. அவளுக்கு நான் யாரென்று தெரியாது ஆனாலும் என்னை இறுக்கமாகப்...
அத்தியாயம் – 1
சிரிப்புடன் வரவேற்க சிலரும், கண்ணீரோடு வழியனுப்பச் சிலுரும் கும்பலாக நிறைந்திருந்தார்கள். நீண்ட நெடு ஒட்டி வைத்த பெட்டிகள் கூச்சலிட்டுக் கொண்டு, வரவும் போகவுமாக இருந்தார்கள். அவைகள் அனைத்தும் மறக்கவியலா பயணங்களை நமக்குப் பரிசாக்கும் தேவ தூதுவர்கள். அவைகள் நம் அனைத்து வகையான...
அத்தியாயம் - 32
ஜோதா அக்பர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து பிறகு அவர்களுடைய வாழ்க்கை வசந்தமாக மாறியது. வாழ்கை நல்ல திசையை நோக்கித் திரும்பும் போது அக்பருடைய அம்மா இறந்துவிட்டார்கள். தன்னுடைய ஆணிவேர் சிதைந்ததைத் தாங்க முடியாத சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தார் அக்பர்...
அத்தியாயம் - 31
எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் அவன் அடைய வேண்டிய இலக்கு மட்டுமே மனதில் வைத்து ஆதி தயாராகிக் கொண்டிருந்தான். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்த ஆதிக்கு ஒரு நல்ல செய்தி தேடி வந்தது.
மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி...