நடுநிசி நாய்கள் ஓலமிட, நள்ளிரவு நேரத்தில் அவ்வீட்டின் வாசலை கடந்து ஒருவனை இரத்த வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு சென்றது ஒரு உருவம்...
இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க,
இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே...
அந்தி மாலை நேரம் அந்த காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்த காவலனிடம் "அப்புறம் எப்போ கல்யாணம் ராம்?.. வயசு 32 ஆச்சு... பேசாம எவளையாவது கூட்டிட்டு வா.... இங்கேயே கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்... உன் அழகுக்கும் பாடி கட்டிங்க்கும் பொண்ணுங்க லைன் ல நிப்பாங்க..." என கேலி என நினைத்து, அவன் நிலை...