எங்குத் திரும்பினும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய தோட்டங்கள் என உடலுக்கும் மனத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் இருந்தது அவ்விடம்.
முதல் நாள் அங்குச் சென்றதும் இயற்கையை ரசித்தவர்களாய் நிறையத் தற்படங்கள் எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தவர்கள்...
அவனின் செயலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், தான் சொல்லியதற்காகத் தங்களது படங்களைப் போடாது விமானப் படத்துடன் போஸ்ட் போட்டவனைக் கனிவுடன் பார்த்தவளாய், "உங்களுக்கு இன்ஸ்டால போஸ்ட் போடுறது பிடிக்குமா கார்த்தி?" எனக் கேட்டாள்.
கைப்பேசியில் தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில்...
"இந்த ஜீன்ஸ் டாப் உனக்கு நல்லாருக்கும் வள்ளி. இதை ட்ரையல் பார்த்துட்டு வா" என்று அவளின் கையினில் துணிகளைக் கொடுக்க,
"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு...
அவர்களின் கடை இன்றும் மூடப்பட்டு இருக்க, வீட்டு கதவும் மூடியிருந்தது போல் தான் தெரிந்தது.
'இன்னிக்கும் கடையைத் திறக்கலையா? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கேட்டா என்ன பதில் சொல்றதுனு திறக்காம இருந்திருப்பாங்களா இருக்கும். அப்பா அம்மாவை தலை நிமிர்ந்து வாழ வைக்கிறேன்னு வைராக்கியமா இருந்த நானே...
மறுநாள் காலை கண் விழித்த கார்த்திகேயன் தனதருகே உறங்கிய நிலையிலும் அழகுப் பதுமையாக இருக்கும் மனையாளைப் பார்த்து ரசித்தவனாய் தனது கைப்பேசியை எடுத்தவன் தனது முகத்தை அவளின் முகத்தருகே வைத்தவாறு, இருவரது முகங்கள் மட்டும் தெரியும் வண்ணம் தற்படங்களை (செல்ஃபி) எடுத்தான்.
அவளின் உறக்கம் கலையாது...
"வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கிட்டியாடி! அதான் ஆத்தா அப்பன் கூட வேணாம்னு கண்டவன் கையைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிற" எனக் கத்தியிருந்தார் முத்துலட்சுமி.
திருத்தணியில் திருமணம் முடிந்ததும் முருகனை வணங்கச் சென்ற பொழுது, "அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நான்...
திருத்தணி முருகன் கோவிலினுள்ளே அமைந்திருந்த மண்டபத்தில் எளிமையாய் நடந்தேறியது வள்ளி கார்த்திகேயனின் திருமணம்.
வள்ளியின் கழுத்தில் கார்த்திகேயன் தாலியைக் கட்டியவாறே அவளின் காதினுள், "இந்த முருகன் வள்ளியோட காதல் வாழ்வு மாதிரியே நம்மளோட வாழ்வும் என்னிக்குமே காதல் நிறைஞ்ச வாழ்க்கையா தான் இருக்கும்...
காதல்
பிரிவு
ஏக்கம்
சுகவதை
அவன் நேசம்!
வாரத்திற்கு ஒரு கவிதையைப் பதிவிட்டு விடுவாள் வள்ளி.
அவன் சிங்கப்பூர் சென்றிருந்த முதல் வாரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டிருந்தாள்.
எப்பொழுதும் அவள் வரிவரியாய் நீண்ட கவிதையாய் எழுதியே வாசித்திருந்தவனுக்குத் தன்னுணர்வுகளை நான்கே சொற்களில் அவள்...