• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 22, 2024
Messages
2
குணா தனது 11 மாத பெண் குழந்தை இனியாவை தூக்கி போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்த குணாவின் மனைவி வதனி "என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?மாமா,அது சின்ன புள்ள இப்படி தூக்கி போட்டு விளையாடின கை குழந்தைக்கு கொல்லாத்து விழுந்திடுச்சினா என்ன பண்ணுவீங்க ,உடம்புக்கு எதாவது சேராமல் போயிட்டா "என்றாள்.

"ஏண்டி எப்ப பார்த்தாலும் நொய்யி நொய்யின்னுக்கிட்டே இருக்க. என் புள்ளடி அப்படியா விட்டுவிடுவேன்" என்றான் சிரித்து முகத்துடன்..

"நீங்கள் விட்டு விடுவீங்கனு சொல்லல. எல்லா நேரமும் பிள்ளைக்கு சேராது ,அத தான் சொல்ற மாமா" என்று வாயை கோணித்து காண்பித்து விட்டு வீட்டுக்குள் நுழைய.. அவளது புடவையை பிடித்து இழுத்தான்.

" விடுங்க மாமா "என்று சினுங்கினாள்."உன்னை விட்டுட்டு" என்று புடவையோடு சேர்த்து அவளை பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். மற்றொரு கையால் தன் குழந்தையை பிடித்துக் கொண்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான் .

"பாப்பா ரொம்ப சமத்து டி உன்ன மாதிரியே" என்றான் ."நீங்க தான் சொல்லிக்கணும் "என்று சிரித்தாள். "பின்ன இல்லையா ?"என்றான்." உங்கள மாதிரியே தான் இருக்கா ,உங்க பொண்ணு "என்றாள். "அவ கூட ஏன் டி போட்டி போடுற, நம்ப பொண்ணு தான டி "என்றான்.

அதனால தான்... "வர வர உங்களுக்கு என்ன கண்டுக்கவே நேரம் இல்ல, அவளை கொஞ்ச தான் நேரம் இருக்கு" என்று முனைவி விட்டு நகர்ந்தாள். அவளைப் பார்த்து சிரித்தவன்." நீ இல்லாம அவ வரல என் வது குட்டி "என்று அவள் தலையில் முட்ட. சிரித்தாள்." சரி சரி போதும் ,வீட்ல ஆளுங்களா நிறைஞ்சி இருக்காங்க ,இந்த நேரத்துல தான் நீங்க உங்க சேட்டையெல்லாம் காமிப்பீங்களா? எல்லாரும் என்ன நினைப்பாங்க "என்றாள்.


" யார் என்ன நினைச்சா, எனக்கு என்னடி வந்துச்சு ,என் பொண்டாட்டி புள்ளைய நான் கொஞ்ச செய்றேன்"என்றான் சிரித்து முகத்துடன்.."கொஞ்சுவீங்க கொஞ்சுவீங்க ,உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, உங்க அம்மால இருந்து ,உங்க உறவுக்காரங்க வரைக்கும் ,என்னதான் எல்லாரும் குத்தம் சொல்லுவாங்க ,ஒரு பொட்டச்சி ஆயிரம் பேரு வர போக இருக்க இடத்தில் இப்படித்தான் புருஷன் கூட ஒட்டி கிட்டு நிப்பாளானு? என்ன தான் சொல்லுவாங்க என்று முறைத்தாள்.

" போடி கூறு கெட்டவளே! "என்று தன் மனைவியின் தலையில் தட்டி விட்டு "சரி போய் வேலையை பாரு , நேரம் ஆகுது இல்ல ,எத்தனை மணிக்கு கிளம்பலாம் வீட்ல இருந்து ,ஆளுங்க எல்லாம் வந்துட்டாங்க இல்ல "என்று கேட்டான். "பரவாயில்லை என் மாமாவுக்கு இப்ப வாச்சு அக்கறை வந்திருக்கே" என்று சிரித்தவள்." எல்லாரும் வந்துட்டு இருக்காங்க மாமா, நம்ம இங்க இருந்து இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் கிளம்பிடலாம் என்று அத்தை சொன்னாங்க.நமக்கு பக்கத்துல தான மாமா கோவில் இருக்கு சொந்த பந்தம் எல்லாம் காலைல வரதா சொல்லிட்டாங்க ,காலை சாப்பாடு ஹோட்டல்ல சொல்லியாச்சு, எனக்கு வேலை வைக்க வேணாம்னு நீங்க சொல்லிட்டீங்க" அப்புறம் என்ன வேலை என்று சிரித்தாள்.

"பின்ன மதியம் அங்க போய் நீ ஒரு இடத்துல உட்காராம ஓடியாடி வேலை செய்வ டி ,இங்கேயும் செஞ்சுட்டு அங்க போய் செய்ய கஷ்டமாவும் ,அலைச்சலாவும் இருக்காதா ?நம்ம வீட்டு ஆளுங்க மட்டுமா?" என்றான் அக்கறையாக ...

"சரி"என்று சிரித்துக் கொண்டு நகர்ந்து விட்டாள் ."மாமா இப்படியே விளையாடிட்டு இருக்காத, பாப்பாவ கீழ விட்டுட்டு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடுங்க ,நம்ம வீட்டு விசேஷம் நம்ம புள்ளையோட காது குத்து மாமா" என்று விட்டு அவன் துரத்தி வருவதற்குள் வீட்டிற்குள் ஓடிவிட்டாள் சிரித்துக் கொண்டே..

இரண்டு அடி எடுத்து வைத்தவன். பின்னால் "என்னடா மருமகனே ,என் மக பின்னாடியே தான் சுத்துற போல" என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய தாய் மாமா வர. சிரித்துக் கொண்டே தன் தலையை கோதியவன் ."வாங்க மாமா "என்று வரவேற்றான். அதன் பிறகு அவள் சொன்னது போல் அவனுக்கு வேலை பளு இழுத்துக்கொள்ள. வந்த சொந்தக்காரங்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்தான் .நேரமாக வண்டியும் வந்திருக்க ,நெருங்கிய உறவினர்கள் வந்து இருக்க ,அனைவரும் அழைத்துக் கொண்டு இரண்டு ஊர் தள்ளி இருக்கும் தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்று ,தங்களது அன்பு மகள் யாழினிக்கு காது குத்து ஏற்பாடு விமர்சையாக செய்திருந்தான் குணா .

வதனி ,குணா இருவரது ஒரே மகள் இனியாவிற்கு வதனியின் அண்ணன் மணியின் மடியில் உட்கார வைத்து காது குத்தப்பட்டது. குழந்தையை விட வதனியே அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்ய. சுற்றி உள்ள அனைவரும் அவளை பார்த்து கேலி செய்ய அனைவரையும் பார்த்து முறைத்து விட்டு ,கண்கள் கலங்க வேறு பக்கம் திரும்ப." என்னடி என்ன சொல்லிட்டு ,நீ கண் கலங்குற " என்றான் குணா.

" சின்ன பிள்ளை மாமா, எப்படி அழுவுற பாருங்க, காது சிவந்துடுச்சு" என்று சொல்ல."அப்படித்தான்டி இருக்கும். நமக்கும் இப்படித்தானே காது குத்திருப்பாங்க "என்று சிரித்துவிட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

சுற்றியுள்ள உறவுகள் எல்லாம் "என்னடா புள்ள அழுதுட்டு இருக்கு, அத விட்டுட்டு உன் பொண்டாட்டியை கொஞ்சி கிட்டு ,அவ கண்ண தொடைச்சிட்டு இருக்க" என்று கேட்டு சிரித்தார்கள். சிரித்த முகத்துடன் அனைவரையும் பார்த்தவன் "அத்த என் புள்ளைய பார்த்துக்க தான் சுத்தி நீங்க இத்தனை உறவு இருக்கீங்களே ?அப்புறம் என்ன? என் பொண்டாட்டி கண்ணீரை நான் துடைக்காம வேற யார் துடைப்பா? "என்றான் .

"சுத்தம், நல்ல பொண்டாட்டி ,நல்ல புருஷன் தான்டா "என்று சுற்றி உள்ள அனைவரும் சிரிக்க . கேலியும் கிண்டலுமாக,காதுகுத்து விழாவும் நல்லபடியாக நடந்து முடிய, விருந்தையும் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அப்பொழுது குழந்தை இனியா தத்தி தத்தி நடந்து கொண்டு வந்தவள் . ம்மா பா...பா.... அப்பா என்று மழலை குரலில் சொல்ல.கனவில் இருந்து திடுக்கிட்டு வெளியில் வந்த வதனி தன் குழந்தையை அள்ளிக் கொஞ்சி விட்டு "என்னடா தங்கம் "என்று இவ்வளவு நேரம் கையில் இருந்த தனது கணவனின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இவ்வளவு நேரம் நடந்த அனைத்தும் கனவு தான் ,என்பது புத்திக்கு உரைக்க.. தன் கண்ணில் துளிர்த்து நிற்கும் நீரை துடைத்துக் கொண்டே "என்னடா தங்கம்" என்று குழந்தையை தூக்க. அ....அ...அப்பா...பா என்று குழந்தை மழலை குரலில் சொல்ல. "என்ன?" என்று ஒரு நிமிடம் அதிர்ச்சியானவள்.

' என்றோ ஒருநாள் தனது கணவன் போனில் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க உன்கிட்ட சொல்லாம கொள்ளாம தாண்டி உன் முன்னாடி வந்து நிற்ப்பேன் வது குட்டி ' என்று சொன்னது நினைவில் வர. தன் கணவன் தனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக சொல்லாமல் வந்து நிற்கிறாரோ ?என்று எண்ணி குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் ஓடி வந்தாள்.

அப்பொழுது ஹாலில் தன் வீட்டை சுற்றி உறவினர்கள் இருக்க. ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் பார்த்தாள். அப்பொழுது தான் குழந்தை மீண்டும் "அ...ம்மா அ...ப்பா" என்று ஹாலில் இருக்கும் டிவியை காட்ட .அதில் தங்களது கல்யாண வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தவள். அதில் தன்னுடன் ஜோடியாக இருக்கும் தனது கணவனின் போட்டோக்களையும் ,வீடியோக்களையும் பார்த்தவளுக்கு கண்கள் மேலும் கலங்கியது.

'இதுக்கு தான் ஆசைப்பட்டு உன்னை கட்டிக்கிட்டேனா மாமா . இப்படி என்னை விட்டுட்டு நீ ஒரு மூலையில், நான் ஒரு மூலையில் கஷ்டப்படணும்னு இருக்கே மாமா' என்று மனதிற்குள் எண்ணி புழுங்கிக் கொண்டு, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ஆனால் ,சுற்றியுள்ள உறவினர்களை பார்த்து கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அப்பொழுது "அண்ணி ,அண்ணா போன் பண்ணி இருக்காரு. உங்களுக்கு ரெண்டு ,மூணு டைம் போன் பண்ணாராம், நீங்க எடுக்கலையாம் என்று கொழுந்தனார் உறவில் இருக்கும் ஒருவன் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க.

"சரிங்க சின்ன மாமா" என்று போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய ரூமுக்கு சென்று "சொல்லு மாமா "என்று சுரத்தே இல்லாமல் சொல்ல." என்னடி புள்ளைக்கு விசேஷம் இருக்கு ,இப்படி சுரத்தே இல்லாம சொல்லுங்க மாமா சொல்ற" என்றான்.

இவ்வளவு நேரம் அழுகையில் இருந்தவள் . பொரிய தொடங்கி விட்டாள். "பின்னா நான் என்ன சொல்லணும், நினைச்சுட்டு இருக்க மாமா ,சுத்தி உறவுக்காரங்க இருக்காங்க, நம்ம பிள்ளைக்கு காது குத்து விழா ,ஆனா என் பக்கத்துல நீ இல்லையே மாமா ?"என்றாள் கண்கள் கலங்க, குரல் கம்ம ..."வது குட்டி" என்றான்.

" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை மாமா "என்று சொல்ல."என்னடி இப்படி எல்லாம் பேசுற "என்றான் அவனும் ஆதங்கமாக...

" வேற எப்படி பேசணும்னு நினைக்கிற, சுற்றி இத்தனை உறவு இருக்கிறது விட ,எனக்கு நிதான மாமா முக்கியம்."

"நமக்காக தாண்டி நான் இங்க இருக்கேன் ,எனக்கு மட்டும் ஆசையா என்ன ?என் பொண்டாட்டி புள்ளையை அங்க விட்டுட்டு இவ்வளவு தூரத்துல நின்னு அவங்கள பாக்கணும்னு. பொண்டாட்டி புள்ளைன்னு அவங்களோட இருக்கணும்னு எனக்கும் ஆசை இல்லையா ?"என்றான்.

" ஆசை இருந்து என்ன பண்ண. எங்கள இங்க தனியா தவிக்க விட்டுட்டு, நீயும் அங்க தனியா தவிச்சுக்கிட்டு தானே இருக்க ,நீயும் உங்க சந்தோசமா இல்லாம ,நானும் இங்க சந்தோஷமா இல்லாம ,எதுக்கு மாமா இப்படி ஒரு வாழ்க்கை?" என்று கேட்டாள்.

" என்னடி இப்படி எல்லாம் கேக்குற ?எதுக்குனா என்ன டி அர்த்தம் வாழ வேணாமா ?"."ஏன்? மாமா காசு மட்டும் தான் வாழ்க்கையா?"." பின்ன அது தாண்டி வாழ்க்கை". "போ மாமா இங்கிருந்து ,நீ பத்து ரூபா சம்பாரிச்சு கொடுத்தாலும் ,என் புருஷனோட இருக்கன்னு சந்தோஷத்துல நான் வாழ்ந்து இருப்பேன் . இப்ப நீ அங்க அனாதை மாதிரி, நீ சாப்டியா இல்லையானு தெரியாம நான் இங்க தவிச்சுக்கிட்டு, நீ அனுப்புற காசுல நான் இங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்னு நீ என்ன நினைச்சுட்டு , என்ன மாமா ஒரு வாழ்க்கை இது வலியோடும், ஏக்கத்தோடும் ஒரு வாழ்க்கை உனக்கும் , எனக்கும் வேணுமா மாமா? என்று கேட்டாள் .

" நான் அங்க இருந்தா , நம்ப புள்ளைக்கு இந்த அளவுக்கு கிராண்டா காது குத்து செய்ய தான் முடியுமா ?இல்ல வந்திருக்க உறவு தான் இத்தனை கூட்டமா வந்திருக்குமா ?" என்றான்.


"போ மாமா, எப்ப பாத்தாலும் இப்படியே பேசிட்டு இருக்க, இந்த கூட்டமும் எனக்கு வேணாம் ஒன்னும் வேணாம் மாமா .நம்ம மூணு பேரு மட்டும் போய் பொங்கல் வச்சு, நம்ம புள்ளைக்கு காது குத்திட்டு சந்தோசமா வர்றது எப்படி ?இருக்கும் .இப்ப நீ இல்லாம புள்ளைய நான் தூக்கிட்டு தனியாக போய் பிள்ளைக்கு காது குத்திட்டு வர்றது எப்படி மாமா இருக்கும் ?கஷ்டமா இருக்காதா ?குரல் தழுதழுக்க கேட்டாள்.

"என்னடி வது குட்டி இப்படி எல்லாம் பேசுற ?மாமாவுக்கு மட்டும் ஆசையா ?எனக்கும் கஷ்டமா தான்டி இருக்கு ,உன்னையும், புள்ளையும் விட்டுட்டு தனியா இருக்கிறது "என்று அவனும் வருத்தம் தேய்ந்த குரலில் சொல்ல.

'தனக்காவது ,தன்னைத் தேற்ற குழந்தை என்ற ஒன்று தன் அருகில் இருக்கிறது. ஆனால் , கடல் கடந்து இருக்கும் தனது கணவனுக்கு ஆற்றுவோர் தேற்றுவோர் கூட யாரும் இல்லை 'என்பதை உணர்ந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு "ஒன்னும் இல்ல,நான் நல்லா இருக்கேன்,ஆமாம், நீ சாப்டியா ?"என்று கேட்டாள்.

'தனக்காக தன்னை தேற்றிக்கொண்டு பேசுகிறாள் 'என்பதை உணர்ந்தவன்."நான் நல்லா இருக்கேன் டி ,எனக்கு என்ன?" என்று அவனும் மனைவிக்காக தன்னை தேற்றிக்கொண்டு "வது குட்டி உண்மையாவே மாமா ஒரு நாளைக்கு உன் முன்னாடி சர்ப்ரைஸா வந்து நிப்பேன்டி ,புள்ள பொறந்த நாளைக்கு வந்து விடுவேன்" என்றான்.
 
New member
Joined
Dec 22, 2024
Messages
2
சிரித்துக் கொண்டே "இன்னும் இருவது நாள் தான் மாமா இருக்கு "என்றாள்."முடிஞ்ச அளவுக்கு வர பாக்கறேன் டி , வர போக செலவு , அங்க வந்தா சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வரணும், வெறும் கையை வீசிட்டு வர முடியாதே அந்த செலவு அப்படின்னு நிறைய இருக்கு " என்றான்.



"எப்ப பாத்தாலும் , இதையே தான் சொல்லுவியா, இதுக்கு மேல பேசாத விடு மாமா ,நமக்கு இது தான்னு எழுதி இருந்தா என்ன பண்ண முடியும் "என்று தன்னைத் தேற்றி கொண்டு ,தனது கணவனையும் தேற்றி விட்டு ,சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள். "சரி மாமா , நேரம் ஆகுது "என்று சொன்னாள்.



"எத்தனை மணிக்கு கிளம்புறீங்க கோவிலுக்கு" என்று கேட்டான். "இங்கிருந்து 9 மணி போல போலன்னு சொன்னாங்க மாமா அத்தை 11:00 மணிக்கு கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து காது குத்திக்கலாம் அப்போதான் நல்ல நேரம் இருக்குன்னு சொன்னாங்க" என்றாள்.



"சரி டி அங்க போயிட்டு வீடியோ கால் பண்ணு ,பாப்பாவுக்கு மொட்டை அடிக்கிறத பாக்கணும்" என்றான். "நீ அவ பொறக்குறதையும் சரி, அவளோட ஒவ்வொரு அசைவையும் சரி ,இப்போ அவளோட காது குத்தையும் சரி ,எல்லாத்தையும் நேரிலிருந்து ரசித்து பார்க்காமல் ,வீடியோ காலில் தான் பாக்கணும்னு இருக்கு இல்லையா ?"என்று விரக்தியாக சிரித்தாள் .



"வது "என்றான் கவலையாக..



"ஒன்னும் இல்ல விடு"என்று சந்தோஷமாக இரண்டு வார்த்தை பேசி விட்டு போனை வைத்தாள். நேரம் ஆகுவதை உணர்ந்து வெளியில் வர .அனைவரும் வண்டியில் ஏறி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து நல்ல படியாக காது குத்திவிட்டு வீட்டிற்கு வந்தார்கள் .



சுற்றியுள்ள உறவினர்கள் எல்லாம் கணவன் மனைவியாக ஜோடி ஜோடியாக நிற்க. தான் மட்டும் தனியாக தன் மகளுடன் இருப்பதை பார்த்து விட்டு ஏக்கமாகவும், கவலையாகவும் போனில் இருக்கும் தனது கணவனின் முகத்தை பார்த்தாள்.



இத்தனை வலிகளுக்கு நடுவிலும் ,'தன் வாழ்க்கையின் நிதர்சனம் ' புரிய அமைதியாக அதை ஏற்றுக் கொண்டாள்.



வதனி போன்று இங்கு பல பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் காதல் கூட கனவாக தான் அவ்வபோது மின்னி செல்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் கணவன்மார்களும் ஒன்னும் சந்தோஷமாக இருந்து விடவில்லை .தன் குடும்பத்திற்காக என்று தன் சந்தோஷத்தையும், ஏக்கங்களையும், கவலைகளையும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு தன் குடும்பத்திற்காக என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.



அதேபோல, அதே குடும்பத்திற்காக என்று எண்ணி இங்கே பல பெண்களும் தங்களது சிறு சிறு ஆசைகளுக்கும் ,உணர்வுகளுக்கும் கூட மதிப்பளிக்க முடியாமல் தான் இருக்கிறது.



இவர்களைப் போன்று இங்கு 'நிறைய பெண்களுக்கு கனவாக தான் மின்னுகிறது அவர்களின் காதல்'..







முற்றும்.🙏
 
Top