New member
- Joined
- Dec 18, 2024
- Messages
- 3
- Thread Author
- #1
பிரியமுடன் பிரியன்
"எனக்கு நீ வேண்டாம். என்னை விட்டுப் போடா" ஆங்காரமாய்க் கத்தியிருந்தாள் பவித்ரா.
"பைத்தியம் மாதிரி பேசாதடி" அவளுக்கு இணையாக அவளின் கணவன் பிரியனும் கத்த,
இவர்களின் சத்தத்தில் எட்டு மாத குழந்தையான தியா பயந்து வீறிட்டு அழுதாள்.
உடனே அறைக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கியவள், "ச்சோ ச்சோ ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல. பாப்பா பயந்துட்டீங்களா! சும்மா அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருந்தோம்டா பட்டுக்குட்டி" கொஞ்சி சமாதானம் செய்தவளாய் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
கோபத்துடன் மனைவியை முறைத்தவனாய், "இப்ப என்ன தான் சொல்ற பவித்ரா" என மீண்டுமாய்க் கேட்க,
"அறிவிருக்காடா உனக்கு? குழந்தை முன்னாடி கத்துற" என்றவளாய் குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு முகப்பறைக்கு வருவதற்குள் வெளியே சென்றிருந்தான் பிரியன்.
சென்னையில் இவர்களின் வசிப்பிடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை இருப்பதினால் வழமைச் செயலாய் தனது கோபத்தைத் தணித்துக் கொள்ளக் கடற்கரை நோக்கிச் சென்றிருந்தான்.
அங்கே கடலலையை நோக்கியவனாய் மணலில் அமர்ந்திருந்தவனுக்கு மனத்தைச் சூழ்ந்திருந்தன குழப்பக் கேள்விகள்.
தங்களது இருபத்தைந்தாவது வயதில் பிரியனும் பவித்ராவும் வீட்டை எதிர்த்து மணம் புரிந்து கொண்டனர். ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இடையில் காதல் அரும்ப, பெற்றோர்கள் அதனை எதிர்க்க, நண்பர்கள் உதவியுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பிரியனுக்கு உடன் பிறந்த தம்பியும், பவித்ராவுக்கு உடன் பிறந்த தங்கையும் இருந்தனர். தங்களுக்குப் பின்பு பிறந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைக்கொள்ளாமல் இவர்கள் எடுத்த முடிவு பெற்றோர்களுக்குப் பெரும் மனவலியைக் கொடுத்திருந்தது. அதனாலேயே குழந்தைப் பிறந்த பின்னும் இவர்கள் மீது கோபம் குறையாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர். பிரியனின் தாய் சிவப்ரியா மட்டும் அவ்வப்போது அவனிடம் பேசிக் கொள்வார்.
கண்களை மூடியவாறு மணலில் படுத்திருந்தவனின் கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். தாயின் அழைப்பு என்றதும் அழைப்பெடுத்துப் பேசினான்.
"எங்கடா இருக்க?" என்றவர் கேட்டதும்,
"பீச்ல இருக்கேன்மா" என்றான்.
"ஓ பொண்டாட்டி பிள்ளையோட பீச்சுக்குப் போயிருக்கியா?" எனக் கேட்டார்.
"இல்லம்மா! அவளும் பாப்பாவும் வீட்டுல இருக்காங்க. நான் மட்டும் தான் வந்தேன்"
"என்னது அவங்களைத் தனியா விட்டுட்டு வந்தியா? அறிவு இருக்காடா உனக்கு?" மனைவி சொன்ன அதே வாக்கியத்தைச் சொல்லி தாயும் கத்தவும்,
"ஆமா எனக்கு அறிவு இல்லை. நான் முட்டாள் தான். மூளை இல்லாத முட்டாள் பிள்ளையைத் தான் நீ பெத்து வச்சிருக்க. சந்தோஷமா உனக்கு" அத்தனை ஆத்திரத்துடன் உரைத்திருந்தான்.
அவனின் பதிலில் இவரின் பெற்ற வயிற்றில் சுருக்கெனக் குத்த, "ஏன்டா இப்படிப் பேசுற! நான் சும்மா சாதாரணமா தான்டா சொன்னேன்" என்றார்.
"பின்னே பெத்த அம்மாவும் கட்டின பொண்டாட்டியும் அறிவிருக்கா உனக்குனு திட்டினா மனுஷனுக்கு எப்படி இருக்குமாம்" என்று கோபத்துடன் கேட்டிருந்தான்.
மகனின் கூற்றில் அவனது இல்வாழ்வில் ஏதும் பிரச்சினையோ எனக் கலங்கியவராய், "என்னடா எதுவும் சண்டையா அவ கூட" எனக் கேட்டார்.
இது வரை தங்களது வாழ்வில் நிகழ்ந்தவை எதையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாது இருந்தவன், மனத்தை அழுத்திய பாரத்தைத் தாங்கவியலாது இன்று தாயிடம் உரைத்திருந்தான்.
"ம்ப்ச் என்ன பிரச்சினைனே தெரியலைம்மா. சும்மாவே கத்துறா! பாப்பா பிறந்ததுலருந்து எனக்குத் தூக்கமே இல்லமா. பகல் முழுக்க அவ தனியா பாப்பாவை கவனிச்சிக்கிறனால நைட் முழுக்க நானும் அவக்கூட முழுச்சிட்டு இருப்பேன். எனக்கும் ரிலாக்ஸேஷன் வேணும் தானேமா. எனக்கு ஞாயித்துக் கிழமை மட்டும் தான் லீவ்! இன்னிக்கு எனக்குப் பிடிச்ச வெப் சிரீஸ் பார்த்துட்டு இருந்தேன். அது அவளுக்குச் சுத்தமா பிடிக்கலை. அவளுக்குப் பிடிக்காததை நான் பார்க்கிறேன்னு சண்டை போடுறா! வாரத்துல ஆறு நாளும் ஓடி உழைக்கிறவன் ஒரு நாள் எனக்குப் பிடிச்சதை செஞ்சா இவளுக்குக் கோபம் வருது. என்னை விட்டு போய்டுனு கத்துறா? குழந்தை பிறந்ததுலருந்தே இப்படித் தான் இருக்காமா. இவளுக்கு என்ன ஆச்சுனே புரியலை" என்று புலம்பினான் பிரியன்.
"எங்க பேச்சைக் கேட்டிருந்தா இப்படிக் கொடுமைக்கார பொண்டாட்டிக்கிட்ட நீ இடிபடுற நிலைமை வந்திருக்குமா... இவ வேண்டாம் உனக்குனு சொன்னேனே கேட்டியா?" என்று சிவப்ரியா தொடங்கவும், அவனுக்குள் கோபம் எரிமலையாய் பொங்க,
"ஆத்தா மாரியாத்தா தெரியாம உன்கிட்ட புலம்பிட்டேன். உன்கிட்ட பேசுறதுக்கு என் பொண்டாட்டியே பரவாயில்லைனு என்னைப் புலம்ப விட்டுடாதமா" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான்.
தன்னைச் சமன் செய்தவனாய் திரும்பவும் வீட்டிற்குச் சென்றவன் அவளிடம் பேசாது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றினான். பவித்ராவும் அவனிடம் பேசாது கோபமாகவே அன்றைய நாளை கடத்தியிருந்தாள்.
மறுநாள் காலை குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்து சுற்றி தலையணையை வைத்து விட்டு சமையல் வேலையைப் பவித்ரா செய்து கொண்டிருக்க, குழந்தையைத் தனது பார்வையில் வைத்துக் கொண்டே அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் பிரியன்.
அச்சமயம் வாசலில் அழைப்பொலிக் கேட்டு கதவைத் திறந்தவன் அங்கு நின்றிருந்த அன்னையைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.
திருமணமான நாளிலிருந்து இன்று வரை, குழந்தை பிறந்த சமயம் கூட வராது இருந்த தாய் இன்று தனது வீட்டிற்கு வந்திருப்பதைப் பார்த்து மகிழ்வதற்குப் பதிலாகப் பயம் தான் மேலோங்கியது அவனுக்கு.
'அய்யய்யோ ஏற்கனவே அவ கோபத்துல இருக்காளே இதுல இவங்களும் வந்து கொடுமைக்கார பொண்டாட்டினுலாம் சொன்னா எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுவாளே என் பொண்டாட்டி' என மனத்திற்குள் அலறினான்.
"ம்மாஅஅஅஅ... என்னம்மா திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்க! நீ மட்டும் தான் வந்திருக்கியா? அப்பா தம்பிலாம் வரலையா? " அதிர்ந்த பார்வையும் சிரித்த முகமாய்க் கேட்ட மகனை முறைத்தவராய்,
"ஏன்டா உன் அப்பா தம்பிலாம் இல்லாம வந்தா என்னை வீட்டுக்குள்ள விட மாட்டியா நீ?" என்றவர் அவனைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்றார்.
வீட்டிற்குள் எங்கு நின்று பேசினாலும் அனைத்து அறைகளிலும் கேட்கும் விதமாய் அமைக்கப்பெற்ற அந்த வீட்டில், கணவனின் பேச்சுச் சத்தம் கேட்டு சமையலறையின் வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள் பவித்ரா. இது வரை ஒளிப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த மாமியாரை முதல் முறையாக நேரில் பார்த்ததில் என்ன செய்வதென்று புரியாத நிலை அவளுக்கு.
"வாங்க அத்தை" பதட்டத்தை மறைத்து சிரித்த முகமாய் வரவேற்றாள்.
அவசரமாக ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவளை மெச்சுதல் பார்வையுடன் பார்த்தவராய் வாங்கி அருந்தியவர், "நல்லாயிருக்கியாமா?" எனக் கேட்டார்.
"நல்லா இருக்கேன் அத்தை" என்றவள், "அவருக்கு லன்ச் கட்டனும். பாதிலேயே விட்டுட்டு வந்துட்டேன்" என்றவளாய் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள,
'இப்ப எதுக்காக அம்மா வந்திருக்காங்க' எனச் சிந்தித்தவனாய் அன்னையைப் பார்த்திருந்தான் பிரியன்.
"என்னடா திருதிருனு முழிச்சிட்டு என்னைய பார்த்துட்டு இருக்க! ஆபிஸூக்கு நேரமாகலையா உனக்கு! போய்க் கிளம்பு! நான் இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கே தான் இருப்பேன். ஆபிஸ் போய்ட்டு வந்து பொறுமையா என்னை ரசிக்கலாம்" என்றவராய் அவனுடனேயே உள்ளே சென்றவர், குழந்தையைக் கண்டு ஆனந்த கண்ணீர் மல்க தூக்கிக் கொஞ்சினார்.
"இவ்வளோ பாசம் வச்சிட்டு ஏன்மா குழந்தை பிறந்தப்ப கூட வராம இருந்துட்ட?" என்றவன் கேட்டதற்கு, "அப்ப ஒரு விதமான கோபம். எப்படியோ என் பையன் சந்தோஷமா இருக்கான்னு இருந்துட்டேன். ஆனா நேத்து நீ இந்தக் கொடுமைக்காரிக்கிட்ட படுற கஷ்டத்தைக் கேட்டப் பிறகு எனக்குத் தூக்கமே வரலைடா. அதான் காலைலயே உன் அப்பாகிட்டயும் தம்பிகிட்டயும் ரெண்டு நாள் சமாளிச்சிக்கோங்கனு சொல்லிட்டு வந்துட்டேன். இனி எப்படி என் முன்னாடி உன்னை இவ கொடுமைப்படுத்துறானு பார்த்துடுறேன்" என்றவர் அதட்டலாய் சொல்லும் போதே, 'அய்யோ அம்மா வாயை மூடு! அவளுக்குக் கேட்கப் போகுது' என்றெண்ணியவனாய் பதட்டத்துடன் நின்றிருக்க, இதை எல்லாம் அறையின் வாசலில் நின்று கேட்டவாறு உக்கிரமாய் அவனை முறைத்திருந்தாள் பவித்ரா.
"அம்மாஆஆஆ" என்று பற்களைக் கடித்தவாறு தாயை அவன் முறைக்க, "என்னை ஏன்டா முறைக்கிற? நான் உண்மையைத் தானே சொன்னேன். நான் ஏன் உன் பொண்டாட்டியைப் பார்த்துப் பயப்படனும்" என்றவர் கேட்டதில்,
'நீயாச்சு உன் மருமகளாச்சு' என்றவனாய் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றிருந்தான் பிரியன்.

Last edited: