Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
டெல்லி:
அம்மா இவங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க வந்திருக்கிறார்களென்று ஜூலி சொல்லவும்,அப்படியா சொல்லுங்க என்று எஸ்தர் கேட்க,பின்னர் விஷயத்தை சொல்லவும் எஸ்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
நாம செய்யும் செயலுக்கு ஒரு பாராட்டு கிடைப்பது எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பதை உணராதவர் இல்லையே...
இத்தனை வருஷமாக விளையாட்டுக்கு கூட அவரின் செயலை மகி பாராட்டியதில்லை.இன்று யாரோ ஒருவர் பாராட்டுவதை கேட்டு பூரித்து போயிருந்தார்.
அவர் அமைதியாக இருப்பதை பார்த்த அந்த பெண்மணியோ தப்பா எடுத்துகிட்டாங்க போலனு ஜூலியிடம் சொல்லவும்,அதைக் கேட்டு சுதாரித்தவர் அப்படி ஏதும் இல்லை...
"தாராளமா ரெடி பண்ணி தரேன்"
மெட்டீரியல் நீங்க வாங்கி தறீங்களா இல்ல நானே வாங்கட்டுமா என்கவும்,நீங்களே வாங்கிடுங்க. ஜூலிக்கும் ரூபாவுக்கும் அந்த அவுட் பிட் நல்லா இருந்தது.. சரிங்க என்றவர் பின்னர் தனது ஃபோனிலிருந்து கூகுள் பே பண்ணி விடுவேன் என்கவும்,முதல்ல டிரஸை ரெடி பண்ணி தரேன்.புடிச்சிருக்கான்னு பாருங்க,மற்றதை பிறகு பேசிக்கலாமென்று எஸ்தர் சொல்லிவிட,அந்த பெண்மணியும் சரிங்களென்றார்.
ஒரு நிமிஷம் இருங்க டீ எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனவர் அவருக்கு டீ கொண்டு வந்து கொடுக்க அவரும் குடித்துவிட்டு சந்தோஷமாக அங்கிருந்து சென்றார்.
அம்மா எனக்கு ஒரு விஷயம் தோணுது ஆனா அது சரி வருமா என்னன்னு தெரியல என்கவும்,சொல்லு ஜூலி என்ன விஷயம் என்க,நீங்க ஏன் இதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது?
அந்த திதிக்கு பிடிச்ச போல, அவங்க பொண்ணு போட்டுட்டு போனால் அவள் மூலமா இன்னும் நாலு அஞ்சு பேரு கிட்ட இந்த விஷயம் போகும்போது உங்களை பற்றி தெரியும்மா.
எனக்கு கோச்சிங் கொடுக்கிறதுக்கெல்லாம் சரிப்பட்டு வராது.என்னோட மனதிருப்திக்காக இதனை செய்கிறேன் டா என்கவும் சரிங்கம்மா இது உங்களோட விருப்பம்..
அப்படி ஒவ்வொரு வாய்ப்பு கிடைச்சா அதை பயன்படுத்திக் கொள்ளலாமே என்கவும் சரிமா பார்க்கலாமென்றார்.நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது.
இவர்கள் இருவருக்கும் தைத்ததை விட இன்னும் கொஞ்சம் வேற டிசைனில் கரினாவுக்கும் ரெடி பண்ணியவர் அவங்களை வந்து வாங்கிட்டு போக சொல்லுமானு ஜூலியிடம் சொல்ல,அவளும் அதே போல் போன் பண்ணி திதி டிரஸ் ரெடியா இருக்கு வாங்களென்றாள்.
சிறிது நிமிடத்தில் தனது மகளோடு அங்கு வந்தவர்,டிரஸை பார்த்து அசந்து போனார்.
எவ்வளவு என்க துணி வாங்கிய பில்லை அவரிடம் கொடுத்தவர் உங்களோட விருப்பம் என்கவும், வெளியில வாங்கினால் இந்த டிரஸ் எவ்வளவு ரேட் ஆகும் என்பது எங்களுக்கு தெரியுமென்று அவர் மனசாட்சிப்படி எஸ்தருக்கு பணத்தை கொடுத்தார்.
முதன் முதலாக தனக்கு தெரிந்த கைத்தொழில் மூலமாக சம்பாதித்த பணத்தை கை நீட்டி வாங்கிய எஸ்தருக்கு கண்கள் கலங்கியது.
"உன்னால பத்து பைசாக்கு புண்ணியம் இருக்கா தண்டசோறு என்ற வார்த்தைகள் காதில் ஒலித்தது".
எஸ்தரை பார்த்தவர்கள் ஏதோ ஒரு சங்கடத்தில் இருக்கிறார் என்பது புரிந்து கொண்டு இருவரிடமும் தலையசைத்து விட்டு அவர்களும் செல்ல,அதேப்போல் ஜூலியும் ரூபாவும் எதுவும் கேட்காமல் அமைதியாக ரூமிற்குள் சென்று விட்டனர்.
சிறிது நிமிடங்கள் சென்று கண்ணை துடைத்தவருக்கு தனது அண்ணனிடம் பேச வேண்டுமென தோணியது.
ஒரு வாரத்திற்கு முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்தோணிக்கு ஏதோ ஆபத்து போல் பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தவரின் முகத்தில் வேர்வை துளிகள் முத்து முத்தாய் பூத்திருந்தது.நேரம் என்னவென்று பார்க்க நள்ளிரவு மூன்று மணி என்று காட்டியது.
என்ன இப்படி ஒரு கனவென்று யோசித்தவர் அண்ணன் கிட்ட பேசணுமென்று நினைக்க,எங்கே தான் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் அவர்கள் தங்களை தேடி வந்து விடுவார்களோ என்று இன்னொரு பக்கம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
ஒரு வாரமாக இதே சிந்தனையிலே இருந்தவர் இன்று ஒரு முடிவோடு எப்படியாவது அண்ணனின் குரலையாவது கேட்டு விட வேண்டும் என்று நினைத்தவர் ஜூலி ஜூலி என்று கூப்பிட அவர் சத்தத்தை கேட்டு வெளியே வந்தவள் சொல்லுங்கம்மா என்றாள்.
உன்னுடைய ஃபோனை கொஞ்சம் குடுக்குறியாம்மா என்கவும் அதுக்கு ஏன் மா இவ்வளவு பாவமாக கேட்கிறீங்க? நாங்களே உங்களுக்கு ஒரு போன் வாங்கி கொடுக்கணுமென நினைச்சிட்டு இருந்தோமேன்றாள்.
"அய்யோ எனக்கு எதுக்கு போன்"
அதான் நீங்க எல்லாம் வீட்ல இருக்கீங்களே என்கவும்,நாங்க வேலைக்கு போயிட்டாக்க ஒரு அவசரத்துக்கு உங்களுக்கு வேணுமே மா.
அது நீங்க வேலைக்கு போன பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்போதைக்கு எனக்கு பேசுற அளவுக்கு அப்படி யாரும் இல்லை.
தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு ஏதோ உடம்பு சரியில்லாத போல கனவு கண்டேன்.மனசு ஒரு மாதிரியாக இருக்குது டா.
அவர்களை மட்டும் நலம் விசாரிச்சுக்கிறேனென்று பாவமாக சொல்ல,மா அதுக்கு ஏன் இப்படி கெஞ்சுறீங்க என்று முறைத்தவள் நீங்க எதா இருந்தாலும் உரிமையா கேளுங்களென்று தான் உங்க கிட்ட சொல்றேன்.
அப்போ எங்களை உங்க புள்ளையாவே ஏற்றுக்கொள்ளலை இல்லையா என்று ஜூலி வருத்தமாக கேட்க..அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதம்மா.
நான் பெத்த புள்ளையா தான் உங்களை நினைக்கிறேன் என்று பதறிப் போய் சொல்ல அவரின் பதட்டத்தை பார்த்தவள் அப்புறம் எதுக்கு இப்படி அனுமதி எல்லாம் கேக்குறீங்க என்று முறைத்தாள்.
ஹாஸ்பிடல்:
சார் வர சொன்னீங்களே என்றவாறு ருத்ரனும் தீபனும் டாக்டர் கர்ணாவிடம் கேட்க ஆமாம் ஒரு முக்கியமான விஷயத்திற்காக தான் உங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னேன்.
அதாவது ஒவ்வொரு ஸ்டேட்லையும் கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ் இருப்பது உங்களுக்கு தெரியும் தானே என்கவும்,எஸ் சார் என்றனர்.
இன்னும் இரண்டு மாதத்திற்கு மதுரையில் இருக்கும் மெடிக்கல் காலேஜுக்கு கெஸ்ட் லக்சராக நீங்கள் ரெண்டு பேரும் போகணும் என்னாயென்று இருவரும் அதிர்ந்தானுங்கள்.
உங்கள் ரெண்டு பேர் மேல உள்ள நம்பிக்கையில் தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன் டா.உங்களுக்கு தெரிந்ததை ஸ்டூடண்ஸிற்கு சொல்லி கொடுங்கள்.இதால் உங்கள் மூளையும் கொஞ்சம் வேலை செய்யுமே என்றபடி தட்டில் இருந்த பர்கரை எடுத்து சாப்பிட்டார்.
இருவரும் அவரைப் பார்த்து முறைக்க , வேண்டுமா என்று அவர்களிடம் நீட்ட, வேணாம் நீங்களே சாப்பிடுங்கள் என்றனர்.சார் நாங்க தான் இங்கு வேலை பார்த்துட்டு இருக்கோமே பிறகு எப்படி அந்த காலேஜுக்கு போக முடியும் என்று யோசனையோடு ருத்ரன் கேட்க....
ஹா ஹா என்று சிரித்தவர் ஏன்டா நான் இண்டியன் மெடிக்கல் கவுன்சிலிங்கோட ஹெட்.அப்ப என்கிட்ட கேக்க மாட்டாங்களா என்கவும்,ஓஓஓ நீங்க பண்ணிய வேலை தானானு தீபன் பல்லை கடிக்க...எஸ்... மீ தான்.
கொஞ்ச நாள் உங்களுக்குக்கும் ரிலாக்ஸேசன் கிடைக்கும் டா.புதுசா பொண்ணுங்களை பாக்கலாம் நல்லா சைட் அடிச்சிட்டு என்ஜாய் பண்ணலாம் என்கவும் சார்...
என்ன சார் இப்படி பேசுறீங்களென்று தீபன் குஷியாக கேட்க,ருத்ரனோ அவரை முறைக்க....எஸ் பாய்ஸ்...
லைப்ல ஒரு சேஞ்சஸ் வேண்டும்... எப்ப பாத்தாலும் ஹாஸ்பிடல் ஆபரேஷன்னு சுத்திட்டு இருக்க கூடாதென்றார்.
இதைக் கேட்ட தீபன்,மச்சி சார் சொல்றது நல்ல ஐடியா டா.உன் தங்கச்சியை வருஷ கணக்கா பார்த்து போர் அடிக்குதுடா.நாம போகலாம் டா என்க,வெளியில வாடா முகரையை பேத்துடறேனென்று தீபன் காதில் விழும் போல ருத்ரன் முணுமுணுத்தான்.
வனிச்சூர்:
இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் சொல்லுடி?பெரியவங்க தானே, நீ இறங்கி போ.ஆனா உங்க அப்பா கிட்ட பேசுனு நான் சொல்ல மாட்டேன்.
என்னமோ தெரியல ஆரம்பத்திலிருந்து உங்க அப்பாவ எனக்கு பிடிக்கவே இல்லைனு செழியன் சொல்ல,அதற்கும் அமைதியாகவே இருந்தாள்.
மேலும் மனைவியை சங்கடப்படுத்த விரும்பாமல் சரி செல்லம் இன்னும் இங்கிருந்தால் மாமா மூடு மாறிடுவேன் அப்புறம் என்ன வேணாலும் நடக்கலாம்.
அதால் இன்னைக்கு நான் வேலைக்கு லீவு போடற போல வந்தாலும் வரலாமென்கவும்,கணவன் சொன்னதை கேட்டு பதறியடித்து எழுந்தவள் ஒழுங்கு மரியாதையா வேலைக்கு கிளம்புங்க.
நான் போய் டிபன் செய்கிறேனென்று வேக வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.மனைவியின் பதட்டத்தை ரசித்தவன் நைட் இந்த ரூமுக்கு வந்து தாண்டி ஆகணும் என்றவாறு குளிக்க சென்றான்.
குளித்து தயாராகி கீழே வர அங்கே ஷமீராவும் காலை டிபனை தயார் பண்ணி முடித்திருந்தாள்.
அம்மா என்றவாறு டைனிங் டேபிள் முன்னால் வந்து செழியன் உட்கார,
அம்மாடி உன் புருஷன் சாப்பிட வந்துட்டான் கொண்டு வந்து வை மா என்ற வானதியோ தோட்டத்திலிருந்து பறித்து எடுத்துட்டு வந்திருந்த பூவை தொடுத்துக் கொண்டிருந்தார்
ஹாட் பாக்ஸை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தவள் கணவனுக்கு பரிமாற,சாப்பிட்டவனோ சரி நான் போயிட்டு வரேன் பாய் என்று மனைவிக்கு முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான்.
தம்புசாமி வீடு:
அம்மா இன்னும் என்ன தான்மா பண்ற மனுஷனுக்கு பசி உயிரே போகுதென்று கவிதாவும் கண்மணியும் கத்திக் கொண்டிருக்க,இதோ வந்துட்டேன் டி என்றவாறு அங்கு வந்து புவனாவோ இருவருக்கும் சிகப்பரிசி புட்டையையும் பால் கொழுக்கட்டையும் கொடுக்க,பசியில் வேகவேகமாக சாப்பிட்டனர்.
இதில் மலருக்கு வச்சிருக்கேன் மறக்காமல் போகும் போது எடுத்துட்டு போ கண்மணியென்று சொல்லியவாறு தூக்குவாளியை டேபிளின் மேலே வைத்தார்.
அதை பார்த்தவள் என்னம்மா மருமகளை ஓவரா காக்கா புடிக்கிற போல,இன்னைக்கு அவளுக்கு புடிச்சதாவே செஞ்சிருக்கியே என்கவும் ஏண்டி ஏன் அப்படி கேக்குற.என்னைக்கா இருந்தாலும் அவள் என் மருமகள் தாண்டி.இதுல என்ன சந்தேகம்...
ம்கும் வாயால தான் சொல்றியே தவிர உன் மவனுங்களுக்கு கட்ட வேண்டியதுதானேனு உள் அர்த்தத்தோடு கண்மணியும் கேட்க, மூணு பேர்ல யாருக்காச்சும் கட்டலாம்னு,எனக்கும் ஆசையா தான் இருந்துச்சு..
உன் பெரிய அண்ணனுங்கள் தான் அவனுங்களுக்கு பிடித்த போல கட்டிகிட்டானுங்க.கண்ணாவுக்காவது மலரை கட்டி வைக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்குடியென்கும் போது தம்புசாமி தாத்தாவும் மருமகள் பேசியதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டுதான் உள்ளே வந்தார்.
ஏன் நீ வாயை திறந்து சொன்னாக்க உன் வாயில இருக்க முத்து எல்லாம் கொட்டிடுமா மா என்று கண்மணி கேட்க, அப்படி இல்ல டி.அவனுங்க ரெண்டு பேரும் போல இவனும் எந்த பொண்ணையாவது விரும்பினால் என்ன பண்றது அந்த எண்ணம் தான் என்று புவனா சொல்ல,யம்மா சின்னண்ணன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வராதும்மா என்று சிரிக்க,
அம்மா சாப்பாடு எடுத்து வை நேரம் ஆயிடுச்சு என்றவாறு கண்ணனும் வேலைக்கு போக தயாராகி வந்தான்.