Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
படலம்- 2. (1)
'இங்க பாருங்க... எந்த ஜாதி சணத்துக்கும் பயபுட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நம்ம அப்பா அல்ப் ஆயுசுல போகும்போது, நீ சொல்ற எந்த ஜாதி சனமும் நமக்கு உதவி பண்ணல. நான் தான் இந்த குடும்பத்தை சின்ன வயசுல இருந்து என் ரத்தத்தை வியர்வையா சிந்தி உங்கள காப்பாத்தி இருக்கேன்' என்று விநாயகம் ஆதங்கத்தில் பேசியதும்,
'ஓ!! உங்களால தான் எங்களுக்கு இந்த வாழ்க்கை கிடைத்தது என்று குத்தி காட்டுறியா?' என கேட்டாள் சாமுண்டீஸ்வரி.
'நான் யாரையும் குத்தி காட்டல. இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு. நான் வினிதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு பிடிக்கல,அவ்ளோ தானே. சரி. நீங்க யாரும் என்கூட பேச வேண்டாம். அம்மா நீங்க சொல்லுங்க. நீங்க எங்களை ஏத்துப்பீங்களா மாட்டிங்களா'என்று தன் அன்னையின் பதிலுக்காக காத்து இருந்தார் விநாயகம்.
அந்த இடத்தில் சித்ராதேவிக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து இருக்க,
'அம்மா... எவனுக்கோ பிறந்த பிள்ளை உன் பிள்ளையயை அப்பான்னு கூப்பிடுறத நீ வேணும்னா கேட்டு சந்தோஷப்படு. ஆனா எங்கனால அதெல்லாம் சகிச்சுகிட்டு இவங்க கூட வாழ முடியாது' என்று பரமேஸ்வரி எடுத்தேரிந்து பேசினாள்.
'அம்மா... யாரு இந்த ஆன்ட்டி. ஏன் இவங்க இப்படி கத்துறாங்க. இவங்களுக்கு என்ன பிரச்சனை. ஆன்ட்டி...ரொம்ப கத்துனா BP வரும். BP வந்தா ஹார்ட் அட்டாக் வரும். ஹார்ட் அட்டாக் வந்தா அப்புறம் நீங்க சாமிகிட்ட போயிடுவீங்க' என்று சிறுமி சித்ராங்கி மழலை குரலில் பேச,
'ஏய் குட்டி சாத்தான். என் அம்மா ஏன் சாமிகிட்ட போகணும்' என்று முறைப்புடன் அங்கே வந்தான் சிறுவன் கதிர்வேலன்.
'டேய் கதிரு... பெரியவுங்க பேசும் போது நீ ஓரமாய் போய் நில்லு' என்று ஆறுமுகம் சொல்ல,'சின்ன மாமா... அப்போ இந்த வாண்டு மட்டும் பெரிய மனுஷியா' என்று கேட்டான் சிறுவன்.
'அம்மா... இவங்களை விடுங்க. நீங்க சொல்லுங்க. எங்கள நீங்க ஏத்துப்பீங்களா மாட்டிங்களா' என்று விநாயகம் கடைசி முறையாக கேட்க,'அம்மா உங்கள என்னைக்குமே ஏத்துக்க மாட்டாங்க' என்றாள் சாமுண்டிஸ்வரி.
தனக்கு அடுத்து பிறந்த தங்கைளை பேச அனுமதித்து தன் தாய் அமைதியாக இருப்பதை பார்த்த விநாயகத்தின் மனதும் இரும்பாக மாறி இருக்க,
'சரி... நீங்க யாரும் எங்களை ஏத்துக்க வேண்டாம்' என்ற விநாயகம் பெருமுச்சுடன்,
'புது வீட்டு சாவியை தாங்க. நாங்க அங்க போய் தங்கிக்கிறோம்' என்றார்.
'என்ன புது வீட்டு சாவியா!! அத ஏன் நீ கேக்குற, அந்த வீட்டுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு' என்று சாமுண்டிஸ்வரி தன் அண்ணனை கேள்விக்கேட்க,
'நான் கேட்காம வேற யாரு கேப்பாங்க. ம்... சாவியை கொடு' என்று பல்லை கடித்தான் விநாயகம்.
தன் அண்ணனின் கோவத்தை பார்த்து தங்கைகளின் முகம் மாறிபோக,
'ஆறுமுகம்... பெரியவன்கிட்ட வீட்டு சாவியை கொடுங்க' என்றார் சித்ராதேவி கட்டளையாக.
'அம்மா...' என்று பரமேஸ்வரி ஏதோ சொல்ல வர...' நான் சொன்னதை மட்டும் பண்ணு' என்று சித்ராதேவி கோவமாக கத்தினார்.
'நான் என் மனைவி பொண்ணோட புது வீட்டுல தான் இருப்பேன். இதுவரை நான் சம்பாரித்து அனுப்பிய எல்லா பணத்துக்கும் உண்டான கணக்கு வழக்கை நாளைக்கு காலையில என்கிட்ட எடுத்துட்டு வந்து கொடுங்க' என சாரங்கம் மற்றும் பரந்தாமனை பார்த்து சொன்ன விநாயகம் வினிதாவை அழைத்துக்கொண்டு சிறுமி சித்ராங்கியுடன் கோவிலில் இருந்து வெளியேறி இருந்தான்.
காது குத்து விஷேஷம் இறுதியில் நடக்காமல் இருக்க...
'என்னடா இதெல்லாம். நம்ம ஒன்னு நினைச்சா இங்க ஒன்னு நடக்குது' என்று தன் தம்பியின் காதை கடித்தான் சாரங்கம்.
'இங்க வச்சி எதையும் பேச வேண்டாம். வாங்க வீட்டுக்கு போகலாம்' என்று சாமுண்டிஸ்வரி சொல்ல, இவர்கள் அனைவரும் கோவிலில் இருந்து வெளியேறி இருந்தார்கள்.
அன்றைய தினம் இரவு நேரம் தன் மூத்த மகன் தன்னுடைய பேச்சை மீறி விட்டான் என்ற கவலையில் சித்ராதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்க, மொத்த குடும்பமும் மருத்துவ மனையில் குவிந்து இருந்தார்கள்.
தன் அம்மா மருத்துவமனையில் இருப்பதை கேள்விப்பட்ட விநாயகம்,'வினிதா... சித்து தூங்குறா.நீ அவளை பார்த்துக்கோ. நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்' என்று சொல்ல,'நாங்களும் உங்ககூட வரோமே' என்றார் வினிதா.
'இல்லமா... நீங்க வந்தா அவங்கயெல்லாம் உன் மனசு கஷ்ட்டப்படுற மாதிரி எதாவது பேசுவாங்க. நீ சித்துக்கூட இரு. நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்' என்ற விநாயகம் பதற்றதுடன் தன் அம்மாவை பார்க்க சென்றான்.
நேரம் நள்ளிரவு மூன்று மணியை கடந்து இருக்கும்.
விநாயகம் சோர்வாக வீடு திரும்பியவனுக்கு தன் இரண்டு தங்கையும், அவர்களின் கணவரும் இறுதி வரை தன் அம்மாவை பார்க்க அனுமதிக்கவே இல்லை என்ற கோவம் அவன் மனதில் வெறுப்பாக மாறி இருந்தது.
விடிந்ததும் எப்படியாவது தன் அம்மாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் நுழைந்த விநாயகம்,'வினிதா... சித்து...' என்று இருவரின் பெயரை சொல்லி அழைக்க.சட்டென்று அங்கே மின்சாரம் அனைந்து இருள் சூழ்ந்து இருந்தது.
'வினிதா...வினிதா எங்க இருக்க' என்று மீண்டும் விநாயகம் அழைக்க, ஒற்றை தீக்குச்சியின் ஒளியில் வினிதாவின் கலங்கிய விழிகளும், இதழ் ஓரத்தில் வேதனை நிறைந்த புன்னகையும், நெற்றியில் வடியும் குருதியும் பார்த்து,'வினிதா...' என்று விநாயகம் பதறிய தருணம்,
'அம்மா...' என்ற சிறுமி சித்ராங்கியின் குரல் தூரத்தில் விநாயகத்தின் காதில் ஒலித்தது.
'சித்து...சித்து எங்கம்மா இருக்க நீ...உனக்கு என்னாச்சு' என்று விநாயகம் கதறியவன் கண்களை இருள் சூழ்ந்து இருக்க.
கனமான இரும்பு பொருளைக்கொண்டு விநாயகத்தின் பின் தலையில் யாரோ ஓங்கி அடித்த வேகத்தில்,'சித்து...' என்ற விநாயகம் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.
ஒரு வாரம் கடந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதித்து இருந்த விநாயத்தை பார்க்க அவரின் தாய் சித்ராதேவி வந்து இருக்க,
'சித்து... என் சித்து எங்க?' என்ற வார்த்தையை மீறி விநாயகம் வேறு வார்த்தையை பேசவே இல்லை.
'விநாயகம்... என்னை பாரு. அம்மாவை பாரு' என்று சித்ராதேவி தன் மகனை அழைக்க,'சித்து... சித்துவை பார்க்கணும்.
நான் சித்துவை பார்க்கணும்' என்ற தன் மகனின் நிலையை பார்த்து சித்ராதேவி வேதனையடைந்தார்.
'அம்மா... நீங்க என்ன! இவருக்கு நடந்த உண்மையை எடுத்து சொல்லுவீங்கன்னு பார்த்தா. இவர்கூட சேர்ந்து நீங்களும் அழுதுகிட்டு இருக்கீங்க' என முகத்தில் அறைந்ததை போல பேசினாள் பரமேஸ்வரி.
'இங்க பாரு அம்மா, உன் புள்ள அழைச்சிட்டு வந்த பொம்பள! அவளோட புள்ளையை தூக்கிகிட்டு நாங்க கொடுத்த பணத்தை வாங்கிகிட்டு இந்த ஊர விட்டே போயிடுது' என்றாள் சாமுண்டிஸ்வரி.
சாமுண்டி பொய் தான் சொல்கிறாள் என்று சித்ராதேவிக்கு தெரிந்தாலும். அங்கே அவர் எந்த உண்மையையும் பேசும் நிலையில் இல்லை என்பதே உண்மை.
'சித்து... நான் சித்துவை பார்க்கணும்' என்று மீண்டும் மீண்டும் விநாயகம் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்க, அப்போது தான் அவன் பெறாத பெண் குழந்தை மீது அவன் எந்த அளவுக்கு அன்பு வைத்து இருக்கிறான் என்ற உண்மை சித்ராதேவி உணர்ந்துக்கொண்டார்.

Last edited: