Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் – 12
செல்ஃபோன் சினுங்கியது. “நைட் டைம்ல பஸ்ல வரக் கொஞ்சம் பயமா இருக்கு. நான் சென்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?” என்று ரூபாவின் குரல் சொன்னதும், அழுத்தம் அதிகரித்தது. அப்போதுதான் அங்கிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்தான்.
“நான் இப்போதான் வீட்டிற்கு வந்தேன். அங்கேதான் வந்திருக்கேன்னு சொல்லியிருந்தால், வெயிட் பண்ணியிருப்பேன்ல?”
“எப்போதும் எட்டு மணிக்கு மேலேதானே கிளம்புவீங்க அதனாலதான்.”
“லேசா தலை வலி. வீட்டுக்கு வந்துட்டேன். சரி நீ அங்கையே இரு. நான் வந்தர்றேன்.”
“இல்லைங்க பரவாயில்லை. நான் பஸ்லயே வந்துக்குறேன்.”
“சொல்றதக் கேளுமா.”
“ம்ம்.”
இன்னும் எத்தனை நாள், எத்தனை விஷயங்களில் இந்தப் பதற்றமும், படபடப்பும், அவதியும் என்னைத் துரத்திக் கொண்டே செல்லுமோ தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டே பைக்கை ஓட்டிச் சென்று ரூபாவை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அடுத்து என்ன நடக்கும் என்கிற பயம் அவன் வேல்விழி இடுக்குகளில் ஒட்டியிருந்தாலும், தனக்கு எதிரே அவனுக்காகக் காத்திருந்த ரூபாவின் கண்களில் இதுவரை அவன் பார்த்திராத ஓய்வு தெரிந்தது. அவள் பார்வையில் நெருடல் இல்லை. அதற்குப் பதிலாக நிம்மதியிருந்தது. ஆரம்பத்தில் இதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்குள் இருந்த பயம் கண்ணுக்கெதிரே இருக்கும் உண்மையை மறைத்துவிட்டது.
அவன் பைக்கை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்ததும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தவள் மெல்ல நடந்து வந்து அவன் பின்னால் உட்காரும்போது எதிர்பாராத விதமாக அவளுடைய வலது கை அவனது இடது தோளை உறசியது, வலது தொடை அவனது முதுகுப் பகுதியை உறசியது. அப்போது ஏதோ அதிக வோல்டேஜ் மின்சாரம் அவன் உடலுக்குள் புகுந்து சில எதிர்வினைகளை நிகழ்த்திவிட்டு வெளியேறியது போலத் தெரிந்தது.
அப்போதுதான் அவன் மர மண்டைக்குப் புரிகிறது அவள் முதன் முறையாக அவன் பக்கத்தில் அமர்கிறாள் என்று.
அந்த நிலையில் அவனுக்கு உலகம் ஒரு புள்ளியானது. அவன் உணர்வு மட்டும் பரந்து விரிந்தது. தானாகச் சற்று முன்னே நகர்ந்து உட்கார்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். அவன் நகர்ந்ததும் அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவனது தோள்பட்டையிலிருந்து கையை நீக்கினாள். இந்த அத்தனை காட்சிகளும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்தது.
அது முடிவாக இருந்தாலும் அது ஏதோ ஒன்றின் தொடக்கமாக இருப்பதை அவன் உணர்ந்தான். அந்த ஏதோ ஒன்றிற்கு பெயர் தேடி தோற்றே போனான். உலகம் வழக்கத்தைப் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவனை மட்டும் அவனுக்கே தெரியவில்லை.
கண்களை இருக்கமாகக் கட்டிக்கொண்டு காற்றின் சிக்கலான செய்திகளுக்கு நடுவே நான் யார்? என்று கேட்டுக்கொண்டே தன்னைத் தானே தேடினான்.
“ம்ம் போலாம்ங்க” என்று ரூபாவின் குரல் கேட்டதும். வண்டி தானாக நகர்ந்தது. சத்தியமாக அவன் ஓட்டவில்லை. வண்டி வீட்டை நோக்கி நகர நகர அவன் மட்டும் ஏனோ ரயில் நிலையத்தின் பக்கம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். ஆனால் அப்போதும் அவன் வண்டியில்தான் அமர்ந்திருந்தான்.
கடவுளின் நல்லாசியால் வீடு வந்து சேர்ந்த இருவரும், இரவு உணவு உண்டார்கள் வெவ்வேறு அறையில். ஆனால் ரூபா என்னவோ பிரேமிற்கு ஊட்டி விட்டாள். ஆழமான சீனிக் கிணற்றிற்குள் குதித்தான் பிரேம். அவனுக்கு அதிலேயே இருகிப் போக ஆசை. அப்போதுதானே எறும்பாய் அவள் நினைவுகள் வந்து ஏறிக் குதித்து இன்பமாகக் கூத்தாடும்?
அன்று இரவெல்லாம் அவனுக்கு உறக்கமே இல்லை. அவளுக்கும்தான். ஆனால் பிரேமின் அம்மா என்னவோ அமைதியாக உறங்கிப் போனாள். அவள் எதிர்பார்த்து வேண்டிய நாளைத் தன் கண்களால் அவள் பார்த்துவிட்டாள். அடுத்தடுத்து நடப்பதெல்லாம் இனிதே நடக்கும் என்பதில் நம்பிக்கை சற்று கூடுதல் என்பதால் தான் சுமந்த பாரத்தைத் தரையிறக்கி வைத்துவிட்டு உறங்கினாள். இத்தனை நாள் தன் கனவில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் இனிமேல் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
அதைப் பார்த்துப் பூரிக்கத் தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உறங்கிப் போனாள்.
மேடத்தைச் சந்திக் போய், எதுவும் பேசாமலே எப்படி இவளுக்குள் இத்தனை மாற்றங்கள்? எனக்குத் தானாகவே அழைத்து, என்னிடம் அன்பான கோரிக்கை விடுத்து, நான் வரும்வரை காத்திருந்து, என் அருகில் அமர்ந்து வந்தவள் ரூபாதானா? இல்லை வேறொரு ஆளா? ஒன்றும் புரியவில்லையே ஆனால் இந்த மாற்றம் வாழ்வை வண்ணமயமாக்க இன்றியமையாதது. இது எனக்குத் தேவை. இது எனக்குப் பிடித்திருக்கிறது என்று தன் இடப்பக்க மார்பைத் தடவிக் கொண்டே நிலவிடம் பேசிக்கொண்டிருந்தான் பிரேம்.
அவன் பேசுவதை அயராது கேட்டுக் கொண்டிருந்த நிலவோ சூரியனுக்கு வழிவிட்டு மறைந்தது. வானம் வெளிச்சமாகும் முன்னரே வழக்கத்தைப் போலப் பிரேம் வியாபாரத்திற்காக ரயில் நிலையம் வந்துவிட்டான்.
நேற்றிருந்த பயம் அவனுக்கு இன்றைக்கு இல்லை. ரூபா தாராளமாக மேடத்தைச் சந்திக்கட்டும் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழட்டும் என்று மனதை லேசாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தான். காரணம், நேற்றைய நாள் கொடுத்த நம்பிக்கையின் அளவு மிகப்பெரியது.
ரூபா, மேடத்தின் சொல்படி சரியாகப் பத்து மணிக்கு அலுவலகத்தில் இருந்தாள். அவளை வரவேற்று எதிரில் அமர்ச் செய்து விசிரிச் சொடுக்கியை சொடுக்கிவிட்டு, வேர்வையைத் துணியால் துடைத்தபடியே உட்கார்ந்த மேடம், “நான் கண்டிப்பா சொன்னதால முன்னவே வந்துட்டியா?” என்று சிரித்தார்.
“இல்லை மேடம். கரெக்டா இப்போதான் வந்தேன்.”
“சரி சரி. ஸாரி நேற்று ஆஃபிஸ் டைம் முடிஞ்சதாலதான் எதுவும் பேச முடியாம போச்சு. இன்னைக்கு எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம். சரியா?”
“சரிங்க மேடம்.”
“ம்ம்ம் உன்னைப் பற்றிச் சுருக்கமா சொல்றியா?”
“சரி சொல்றேன்.”
“உனக்கு நான் உன்னை நீ, வா, போன்னு சொல்றதுல எந்தப் பிரச்சினையும் இல்லைல? பொதுவா என் கிளைண்ட்ஸ் கிட்ட நீங்க, வாங்கன்னுதான் பேசுவேன். நீ எனக்குக் கொஞ்சம் நெருங்கமா ஃபீல் ஆகுறதாலதான் இப்படி.”
“மேடம் நீங்க எப்படி வேணாலும் என்னைக் கூப்பிடலாம்.” சற்று சிரித்த முகத்தோடு தலையைச் சாய்ந்துக்கொண்டு பக்கச் சுவற்றில் மாட்டியிருந்த வரைபடத்தைப் பார்த்தபடியே தான் யார் என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“என் பெயர் ரூபா. நேற்றே சொல்லியிருந்தேன். உங்களுக்கு நியாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். என் பிறப்பு பற்றியும், நான் வளர்ந்த விதம் பற்றியும், என் அதிர்ஷ்டம் பற்றியும், நீங்கள் எனக்கு யார் என்று தெரியாததற்கு முன்பே புலம்பித் தீர்த்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் விலாவாரியாகச் சொல்கிறேன்.”
“அம்மா அப்பாவின் அரவணைப்பிலும் அன்பிலும்தான் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை தொடங்குகிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் என் தாயின் வயிற்றில் கருவுற்றிருக்கும்போதே என் தந்தையை இழந்தேன்.”
“என்னைப் பெற்றுப் போடும் கடமை இருந்ததால் என்னவோ என் தாய் நான் பிறக்கும்வரை உயிரைக் கையில் பிடித்துவைத்திருந்தாள். நான் பிறந்தேன். அவள் இறந்தாள். என்மீது இருந்த பாசத்தைவிட அவளுக்கு அவளுடைய கணவனின் இழப்பு பெரியதாக இருந்திருக்கிறது. அதுவும் நியாயம்தான். அன்பைக் கொடுப்பதை விட, பெறுவதில் சுகம் அதிகம். அந்தச் சொகுசு இனிமேல் கிடைக்காதோ என்கிற ஏமாற்றத்தில் உயிரை விட்டாள் பைத்தியக்காரி, அவள் மகளும் அவளைப் போல ஒரு பாசக்காரிதான் என்பதைப் புரியாமல்.”
“அப்பாவும் அம்மாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் சொந்த பந்ததின் அனுசரணை இல்லை. அக்கம் பக்கத்தினரின் ஆதரவில்தான் வளர்ந்தேன். அடுத்த வீட்டு உப்பின் துவர்ப்பு என்பதை கண்ணீரால்தான் தெரிந்துகொண்டேன். உணர்வு ரீதியிலான குடைச்சல்கள் அதிகம் இருந்தது. ஒரு கொத்தடிமையைப் போல எங்கள் வீடிருந்த தெருவில் உள்ள அத்தனை வீடுகளிலும் வேலை பார்த்திருக்கிறேன் விவரம் தெரியாமல். எல்லோரும் விளையாடும்போது வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த எனக்கு அப்போது தெரியவில்லை உண்மையான இழப்பு எதுவென்று.”
“புத்தகப் பையின் கனம் தாங்காமல் அழுது அடம்பிடித்து விடுப்பு எடுக்கும் பிள்ளைகளின் பைகளைத் தொடும்போது அவை என்னைக் கட்டியணைப்பது போல இருக்கும். சூழல் அப்படியேதான் இருந்தது.
ஆனால் நான் மாறினேன். பள்ளிக்குப் போய்ப் பாடம் படிக்க முடிவு செய்தேன்.”
“நான் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போது யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏதோ ஆசையில் போகிறேன், நாளைக்கே எனக்குச் சலித்துவிடும் போகாமல் இருந்துவிடுவேன். அது மட்டுமில்லாமல் சீருடை, நோட்டுப் புத்தகம் எல்லாம் வாங்க வேண்டும் என்றால் பணம் வேண்டும். அது எனக்கு எங்குக் கிடைக்கும்? படிப்பெல்லாம் ஒத்துவராது ஓய்ந்துவிடுவேன் என்று எல்லோரும் நிறைத்தார்கள்.”
“சீருடை, புத்தகங்கள், நோட்டுக்கள், பேனா, பென்சில் என எதுவும் இல்லாமல் யாரோ குப்பையில் தூக்கியெறிந்த புகைப்பிடித்த காலண்டர் அட்டையை, அழுக்குப் பிடித்து ஓட்டை விழுந்த மஞ்சள் பைக்குள் திணித்து வைத்துக்கொண்டு ஏதோ ஒரு குறுட்டு நம்பிக்கையில் ஒரு வாரத்திற்கு மேல் பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.”
“படிப்பது எழுதுவது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பள்ளிக் கூடம் போவது அவசியம் என்று மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். திண்ணாட்டியும் குடிக்காட்டியும் தினமும் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.”
“பள்ளிக்கூடத்திலும் யார் நீ? என்ன? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. சொல்லப்போனால் மூன்று மாதங்களாக வருகைப் பதிவேட்டில் கூட என் பெயர் இல்லை. பள்ளியில் சேர்வதற்கான முறை தெரியாமல் வருடத்தின் கடைசி மூன்று மாதத்தில் நானாகவே யாரிடமும் எந்த அனுமதியும் கேட்காமல் தினமும் போய் வகுப்பில் அமர்ந்துகொள்வேன்.”
“ஆரம்பத்தில் டீச்சரும் என்னைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் ஆர்வத்தைப் பார்த்தபிறகு, “இந்த மூன்று மாதங்கள் முடியட்டும், அடுத்த வருடம் தொடங்கியதும் உன் பெயரை எழுதிக் கொள்ளலாம்” என்று டீச்சர் சொன்னார்கள்.
அதே போல அடுத்த வருடம் பள்ளியில் சேர்ப்பதற்காகப் பெயர் எழுதுகையில், “உன் பெயர் என்ன?” என்கிற கேள்வி வரும்போதுதான் தெரிந்தது எனக்குப் பெயரே இல்லை என்று.”
“நான் தவிப்பதைப் பார்த்து மனமிழகிய டீச்சர் “உன்னை எல்லாரோம் எப்படிக் கூப்பிடுவார்கள்?” என்று கேட்டார். எல்லோரும் என்னை “ஏய்“ “ஏய்” என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவும் ஏதாவது சில்லறை வேலைகள் இருந்தால் மட்டும். மற்ற நேரங்களில் நான் யார் கண்களுக்கும் தெரிந்ததில்லை. இதை அந்த வயதில் நுணுக்கமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கையைப் பிசைந்துகொண்டு டீச்சரை விழித்துப் பார்த்தபடி நின்றிருந்தேன்.”
“ஒரு மனிதனுக்கு வீடு, பதவி, நிலம், சொத்து, காசு, பணமெல்லாம் ரெண்டாவதுதான். ஒரு மனதனுக்கு அடிப்படை அடையாளம் என்பது பெயர்தான். பெயர் என்றால் வெறும் பெயர் அல்ல அதற்குப் பின்னால் இருக்கும் நம் குணாதிசயம். நல்ல குணத்தோட வளந்து பேரும் புகழுமா வாழ்ந்து நல்ல பெயரெடுக்கனும் சரியா? என்று என் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி, “ரூபா” என்று எனக்குப் பெயர் வைத்தார் மேரி டீச்சர்.”
“ரூபா என்றால் அழகு என்பது பொருள். உன்னைப் போலவே உன் வாழ்வும் அழகானதாக மாற வேண்டும். அதற்காகத்தான் மேரி டீச்சர் உனக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறாள். நீ அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டுமென்று வாழ்த்தி என் கைபிடித்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற தமிழ் டீச்சரின் பற்றுதல்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.”
“பிறப்பதற்கு முன்பே அப்பனை விழுங்கினாள். பிறந்தவுடனே ஆத்தாளை விழுங்கினாள். இனி யாரை விழுங்கப் போறாளோ என்று காதுரைக்கப் பேசுபவர்களை ஒவ்வொரு நாளும் கடந்து பள்ளிக்குச் சென்ற நாட்களெல்லாம் கசப்பு தடவிய இனிப்பு.”
...தொடரும்...