• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை.🌹

பகுதி 2.

கதிர்வேலனை மாமா சார் என்று முல்லை அழைத்ததும் ஜீவானந்தம் சிரித்தார்.

'ஐயோ வலிக்குது கதிர்' என சரண்யா மேலும் கண்களை கசக்கியதும்,'அப்போ மரியாதையா கதிர் சாருன்னு கூப்பிடு' என்றார் கதிர்வேலன்.

'ஓகே ஓகே கதிர் சார் என்னை விட்டுடுங்க' என சரண்யா கெஞ்சியதும் தான் கதிர்வேலன் அவளை அடிப்பதை நிறுத்தினார்.

'ஜீவா மாமா! பாவம் சரண்யா அவளை அனுப்ப சொல்லிடுங்க' என முல்லை சொன்னதும், 'சரண்யா நீ கிளம்பு' என்றார் ஜீவானந்தம்.

'அடியே முல்லை... எல்லாம் உன்னால தான். இரு இரு! உனக்கு ஒரு நாள் இருக்கு' என சரண்யா தலையயை தடவிக்கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

'ஏன் டா இப்படி பிரச்சனை பண்ணுற,
சரி இந்தா ரவா லட்டு' என ஜீவா அவர் கையில் இருந்த இனிப்பை கதிர்வேலன் முன்னே நீட்டினார்.

'கொடு கொடு சரக்குக்கு யூஸ் ஆகும்' என இனிப்பை வாங்கி கதிர்வேலன் தன் பேண்ட்டில் வைத்து கொண்டார்.

'முல்ல உனக்கு மறுபடியும் பஸ் எத்தனை மணிக்கு' என ஜீவானந்தம் கேக்க,'4pm மணிக்கு மாமா' என்றாள்.

'அப்போ ஒன்னு பண்ணு! நீ அப்பாவை பார்த்துட்டு உன் வீட்டுக்கு கிளம்பு' என ஜீவானந்தம் சொல்ல,'வேணா மாமா, யாராவது பார்த்துட்டா பிரச்சனை ஆகிடும்' என்றாள் முல்லை.

'இதுக்கே பிரச்சனை வருமுனா அப்புறம் எப்படி நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர முடியும்?'என கதிர்வேலன் கேட்டதும்,
'அது... அது நான்' என தயங்கினாள் முல்லை.

'டேய் தம்பி! ஏன் டா இப்பவே அதெல்லாம் பேசி முல்லையை பயமுறுத்துற,
முல்லை நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்' என அழைத்தார் ஜீவானந்தம்.

தன் மாமனின் பேச்சை மீற முடியாமல் முல்லையும் பாண்டியனின் இல்லத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்தாள்.

'அண்ணா... நீ இவள வண்டியில அழைச்சிட்டு போ' என கதிர்வேலன் தன் புல்லட்டில் இருந்து இறங்கி சாவியை ஜீவானந்தத்திடம் நீட்டினார்.

'அப்போ நீ எப்படி டா வீட்டுக்கு வருவ?' என ஜீவானந்தம் கேக்க,'நான் போய் சுந்தரியை பார்த்துட்டு வரேன்' என்ற கதிர்வேலன் தன் பாக்கெட்டில் இருந்த ரவாலட்டை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

ஜீவானந்தம் புல்லட்டை ஸ்டார்ட் செய்து தன் அருகே நின்றிருந்த முல்லையை பார்த்து, 'நம்ம வீட்டுக்கு போகலாம்… நீ வந்து உக்காரு' என்றார்.

அந்த நிமிடம், அவளுக்குள் புது ஜீவன் புகுந்தது போல உணர்ந்தவளின் கனவுகள் எல்லாம் கரை ஏற,
புன்னகையுடன் புல்லட்டின் பின்சீட்டில் காதலனின் பின்னால் அமர்ந்தாள் முல்லை.

மூன்று வருடத்திற்கு முன்னே கோவில் திருவிழாவில் முல்லையிடம் 'தவறாக நடக்க முயன்ற பார்வதியின் தம்பி கேசவனிடம் இருந்து உன்னை காப்பாற்றியது என் அண்ணன் தான்'
என்று பாண்டியனின் மகள் ரோஜா சொன்னதில் இருந்து தான் முல்லைக்கு ஜீவானந்ததம் மீது காதல் உணர்வு ஏற்பட்டது.

இது தான் காதல் என்று அறியாத வயதிலேயே முல்லை தன் மாமன் பிள்ளைகள் ஜீவானந்தம் கதிர்வேலன் என்று இருவரிடமும் அன்பாகவே பழகி வந்தாள்.

கதிர்வேலன் கோவக்காரர் என்பதால் அவரிடம் இருந்து சற்று தள்ளி நின்ற முல்லையிடம் ஜீவானந்தம் தான் சகஜமாக பேசி முல்லையை அடிக்கடி தன் வீட்டுக்கு அழைத்து வருவார்.

இரண்டு வருடங்கள் சொந்த ஊருக்கே வராத முல்லையிடம் போனில் மட்டுமே பேசும் ஜீவானந்தம், தன் எல்லை மீறாமல் அன்புடன் மட்டுமே பேசும் தன் மாமனிடம் முல்லை அவள் மனதை பறிகொடுத்து விட்டாள்.

ஜீவானந்ததுக்கும் முல்லை மீது அதிகப்படியான காதல் இருந்த நிலையில் தன் தந்தையின் சம்மததோடு முல்லையை மனமுடிக்க வேண்டும் என்று ஆசைகொண்டார்.

ஜீவானந்தமும் முல்லையும் புல்லட்டில் பாண்டியன் வீட்டுக்கு சென்று இறங்கினார்கள்.

வீட்டு வாசலில் பத்து புள்ளி கோலம் போட்டு நடுவில் சாணம் பிடித்து அதில் பூசணி பூவை வைத்து இருந்தாள் பாண்டியனின் செல்ல புதல்வி ரோஜா.

ரோஜா உள்ளுரில் படிக்கும் 19வயது பெண். படிப்பு நேரம் போக சமையலில் தான் ரோஜாவின் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

முல்லையை உறவு முறையை தாண்டி ரோஜா தன் தோழியாக தான் எண்ணுவாள்.

மொட்டை மாடியில் நின்று இருந்த ரோஜா, ஜீவானந்தம் தன் வீட்டுக்கு முல்லையை அழைத்து வருவதை பார்த்து,

'அப்பா அப்பா...பெரிய அண்ணன் உங்க மருமகளை வீட்டுக்கு அழைச்சிட்டு வராரு' என உற்சாமாக கத்திக்கொண்டே படியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தாள்.

முல்லை என்றால் பாண்டியன் அவர்களுக்கு அதிக பிரியம். அதை ஜீவானந்தமும் அறிந்திருந்தார்.

அதனால் தான் ரெண்டு வருடம் கடந்து முல்லையை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

'உள்ள வா முல்லை' என ஜீவானந்தம் முல்லையின் கையை பிடித்து தான் உள்ளே அழைத்து வந்தார்.

ஜீவானந்ததின் கையை பிடித்து உள்ளே செல்லும் பேதையின் மனதில் வருங்காலத்தில் இப்படியே மருமகள் என்ற உரிமையோடு இதே இல்லத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

'முல்ல... எப்படி இருக்க? ' என ஆத்மார்த்தமான அன்போடு முல்லையை வரவேற்றார் பாண்டியன்.

'மாமா எப்படி இருக்கீங்க?' என சிரித்த முகத்துடன் தன் தாய் மாமனை நலம் விசாரித்த முல்லையின் இதழ்களில் புன்னகை பூக்க பாண்டியனின் கால்களில் விழுந்து ஆசியை பெற்றுக்கொண்டாள்.

தன் தங்கையின் மறு உருவமான முல்லையை ஆரதழுவி கைகுழந்தையை போல அவள் நெற்றியில் முத்தமிட்டு,'நான் நல்லா இருக்கேன்' என்றார் பாண்டியன்.

'என்ன முல்ல... அப்பாவை பார்த்ததும் என்னை மறந்துட்டியா?' என ரோஜா தன் கையில் இருந்த நீர் குவளையை முல்லை முன்னே நீட்டியதும்,'ஏய் வாலு...அது என்ன முல்லையை பேர் சொல்லி கூப்பிடுற!ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு' என்றார் ஜீவானந்தம்.

தன் மகனின் பேச்சில் இருந்தே முல்லையை ஜீவானந்ததுக்கு பிடித்து போன விஷயம் பாண்டியன் அறிந்துகொண்டார்.

'இருக்கட்டும் மாமா, ரோஜா எப்போதும் போலவே என்னை பேர் சொல்லியே கூப்பிடட்டும்' என முல்லை சொன்னதும்,'இப்போ என்ன சொல்ல போற பெரியவனே' என நாக்கை துத்திக்காட்டி தன் அண்ணனை ஒழுங்கு காட்டினாள் ரோஜா.

'நீ வந்து உக்காரு மா. அப்புறம் படிப்பெல்லாம் முடிஞ்சிடுதா? மேற்கொண்டு என்ன பண்ண போறதா உத்தேசம்?'என பாண்டியன் வினாவியதும்,

'வேற என்ன! உடனே உங்க பையனுக்கும் முல்லைக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் இவ இப்படியே இங்கன செட்டில் ஆகிட போகிறாள்' என சிரித்தாள் ரோஜா.

தன் மனதில் எழுந்த வார்த்தைகளை ரோஜாவின் வாய்மொழியில் கேட்ட முல்லைக்கு வெட்கம் வந்தது.

முல்லையின் நாணம், அவளது மனம்கவிந்த காதலை பாண்டியனுக்கு வார்த்தைகளில்லாமல் சொல்லும் ஒரு வெளிப்படையான படம் போல இருந்தது.

'அப்போ சீக்கிரமா முறைப்படி உன் அப்பனை பார்த்து பொண்ணு கேட்கட்டுமா' என்று பாண்டியன் கேக்க,

'என்ன அண்ணா! யாரை பொண்ணு கேக்க போற? எங்க போய் பொண்ணு கேக்க போற!' என கேள்வியை எழுப்பிக் கொண்டே தன் மகள் மீனாவை அழைத்துக் கொண்டு கஸ்தூரி தன் அண்ணன் பாண்டியனின் வீட்டிற்குள் உரிமையோடு நுழைந்தார்.

'சித்தி எப்படி இருக்கீங்க?' என முல்லை தன் அம்மாவின் தங்கையை நலம் விசார்த்தவள்,'மீனா!' என்று தன் சகோதரியை அன்பாக கட்டிக்கொண்டாள்.

'முல்ல... உன்ன நான் இங்கன பாப்பேன்னு நினைக்கவே இல்ல. எப்படி முல்ல இருக்க?' என மீனா நலம் விசார்க்க,'நான் நல்லா இருக்கேன் மீனா. சித்தி நீங்க நல்லா இருக்கீகளா' என மீண்டும் முல்லை கேட்டாள்.

'ஏதோ இருக்கோம், ஆனா உன் அளவுக்கு நாங்க நல்ல இல்லை தான்' என கஸ்தூரி வார்த்தைகளின் உக்கிரத்திலும், பார்வையின் தீப்பொறியிலும், முல்லையை பார்த்தாலே கஸ்தூரியின் மனசு கொதிக்கும் என்று பாண்டியன் நன்றாகவே தெரிந்தவனாயிருந்தார்.

'அத்த... இப்போ முல்லை என்ன கேட்டுச்சுனு நீங்க இப்படி வெடிக்கிறிங்க' என ஜீவானந்தம் கேட்டதும்.'ஏன் பா ஆனந்த், பணம் இல்லாத நாங்கெல்லாம் முல்லையை பத்தி பேசவேக் கூடாதா' என விடுக்கென்று கேட்டார் கஸ்தூரி.

'கஸ்தூரி...வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிடாத! நீ தேவையில்லாததை எல்லாம் பேசி சின்னஞ்சிறுசுங்க மனசுல விஷத்தை விதைக்காதே' என பாண்டியன் தன் தங்கையை கண்டித்ததும்,

'ஆமா...நாங்க தான் விஷத்தை விதைக்கிறோம்' என முணுமுணுத்தப்படி தன் கையில் இருந்த கேசரி டப்பாவை மீனாவிடம் நீட்டிய கஸ்தூரி,
'இந்தாடி...உன் மாமனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், உன்னை கட்டிக்க போறவனுக்கு நீயே இனிப்பை கொடு' என்றாள்.

குடிகார கணவனுடன் கழித்த துயரமான நாட்கள் கஸ்தூரியின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியிருந்தன.

அந்த வேதனையை தன் மகள் மீனா அனுபவிக்கக் கூடாது என எண்ணி ஜீவானந்தனுடன் மீனாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கஸ்தூரியின் மனதில் உறுதியான இலட்சியமாக மாற்றியது.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21

ஜீவானந்தமும் முல்லையும் ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொண்டு முழுதாக 24 மணி நேரம் கடக்காத நிலையில் மீனாவை ஜீவானந்தத்திற்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தன் சித்தி பேசிய வார்த்தைகள் முல்லையின் மனதை முள்ளாக குத்தியது.

முல்லையின் உள்ளத்தில் சலனமெழுந்ததைக் கண்ணாடிபோல் வாசித்த ஜீவானந்தம்,
காதலாக அவளது கண்களை நோக்கி, 'நீ எனக்கு தான்'என உறுதி கூறினார் .

அதே நேரத்தில், அருகில் இருந்த கஸ்தூரியை பார்த்து,'அத்த...நா மீனாவையா கல்யாணம் பண்ணப்போறேனா!? இது என்ன புது கதை?'என்று குழப்பத்துடன் கேட்டார் .

'என்ன ஆனந்த் இப்படி கேக்குற! மீனா பிறந்ததுமே உங்க வீட்டு மருமகன்னு நான் முடிவு பண்ணிட்டேனே' என கஸ்தூரி சொல்ல, 'நீங்க முடிவு பண்ணா போதுமா! உங்க பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ண வேண்டாமா? என கேட்டார் ஜீவானந்தம்.

ஜீவானந்தம் எழுப்பிய கேள்வி கஸ்தூரியின் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்தக் குழப்பத்தில் மீனாவின் பார்வை தயக்கத்துடன் ஜீவானந்தத்தை நோக்கி கெஞ்சிக் கேட்டதுபோல் இருந்தது.
அந்த பார்வையைப் பார்த்து, அதே நேரத்தில் முல்லை அசைவில்லாமல் கேள்வியோடு மீனாவை பார்க்க அப்போது சரியாக கதிர்வேலன் வீட்டுக்குள் நுழைந்தார்.

கதிர்வேலனை பார்த்த முல்லை அச்சதுடன் ஜீவானந்தம் பின்னே மறைந்துக்கொள்ள,அங்கே இருந்த யாரையும் கண்டும் காணாமல் தன் அறைனுள் சென்று கதவை அடைத்துகொண்டார் கதிர்வேலன்.

மீனாவை கண்டுகொள்ளாமல் சென்ற கதிர்வேலனை சந்தேகமாக முல்லை பார்த்து இருக்க,

'ஏன் ஆனந்தா, என்ன சொல்ல வர்றே? என் பொண்ணு ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா?' என மீண்டும் கஸ்தூரி கேட்டாள்.

'அத்த...உங்க பொண்ணு என்னை மட்டும் இல்ல,வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா, ஏன்னா அவ கதிரை காதலிக்கிறாள்' என்றார் ஜீவானந்தம்.

'என்ன! குடிகார பையனை என் பொண்ணு காதலிக்கிறாளா?!' என பிழிந்தெழுந்த குரலில் கஸ்தூரி கேக்க,

அந்த நேரத்தில் தன்னுடைய அம்மா அருகிலிருந்ததையும் மறந்து மீனா தைரியமாக முன் வந்தவள்,
'ஆமாம்மா... ஆனந்த் மாமா சொன்னது தான் உண்மை. எனக்கு கதிர் மாமனை தான் பிடிச்சிருக்கு' என்றாள் உறுதியாக.

மீனாவின் வார்த்தைகள் அம்பாக பாய்ந்தவுடன் கஸ்தூரியின் முகத்தில் வலி தெரிந்தது.

கஸ்தூரி அதே வலியோடு மீனாவின் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்தவள்,தன் மகளை இழிவான வார்த்தைகளில் வறுத்தெடுத்தாள்.

'ஒரு குடிகாரனை கட்டிக்கிட்டு என் வாழ்க்கை நாசமாயிட்டது போதாதுன்னு நீயும் இன்னொரு குடிகாரனையே காதலிக்கறியா?! என் வயித்துல உன்னை சுமந்து பெத்ததுக்கு... நான் கருப்பையில்லாம இருந்திருக்கலாம்' என்ற கஸ்தூரியின் வார்த்தையில் மீனா கதறி அழுதாள்.

'அம்மா...'என மீனா மேலும் பேசும் முன்னே,'நீ வாயை மூடு, இங்க பாரு அண்ணா! என் மகளை தான் நீ ஆனந்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். என் மகளை விட்டுட்டு வேற எவளையாவது உனக்கு மருமகளா அழைச்சிட்டு வரணும்னு நினைச்சினா அப்புறம் உனக்கு கூட பிறந்த பிறப்பே இனி இல்லைனு என்னை தலை முழுகிடு'
என கஸ்தூரி தன் மகள் மீனாவை அழைத்துக்கொண்டு பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தன் சகோதரியின் பேச்சும் செயலும் பாண்டியனுக்கு வருத்தத்தை கொடுத்தாலும், மீனா கதிர்வேலனை நேசிப்பதை அறிந்த பாண்டியன் மகிழ்ச்சி தான் அடைந்தார்.

'அப்பா... அத்தை கோவமெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நீங்க கவலைப்படாதீங்க' என ஜீவானந்தம் தன் தந்தைக்கு தைரியம் கொடுக்க, அப்போது பாண்டியனுக்கு அலைபேசி மூலம் அழைப்பு வந்ததும் பாண்டியன் அவர் அறைக்குள் சென்று பேச ஆரம்பித்தார்.

'முல்ல... நீ அண்ணன்கிட்ட பேசிட்டு இரு, நான் உனக்கு குடிக்க சர்பத் கொண்டு வரேன்' என வேகமாக ரோஜா அடுப்பணைக்குள் நுழைந்ததும்,
கவலையாக இருந்த முல்லையின் கையை பிடித்து தன் அறைக்குள் அழைத்து சென்றார் ஜீவானந்தம்.

'என்ன முல்ல... ஏன் இப்போ வெசனப்படுற!கஸ்தூரி அத்த பேசுனத நினைச்சு பீல் பண்றியா' என ஜீவானந்தம் கேக்க,
'அத்த சொன்னது மாதிரி பாண்டியன் மாமா மீனாவுக்கு உங்கள கல்யாணம் பண்ணி வச்சிடுவாரா?' என பாவமாக கேட்டாள் முல்லை.

'அப்பா அப்படியெல்லாம் சொல்ல மாட்டாரு முல்ல... அவரே சொன்னாலும், ஏன்? அந்த கடவுளே சொன்னாலும் இந்த ஆனந்தன் தான் என் முல்லைக்கு'என ஜீவானந்தம் முல்லையின் கையில் உள்ள அவர் கொடுத்த மோதிரத்தை சுட்டிக்காட்டினார்.

'ஹையோ மாமா... நானும் உங்களுக்கு பிறந்தநாள் பரிசு வாங்கியாந்தேன்' என முல்லை தன் பையில் இருந்த நீல கல் மோதிரத்தை எடுத்து ஜீவானந்தம் எதிரே நீட்டியதும்,'நீயே போட்டு விடு' என தனது வலது கையை தன் காதலியின் முன்னே நீட்டினார் ஜீவானந்தம்.

முல்லை காதல் பார்வையோடு அவள் கையில் இருந்த மோதிரத்தை ஜீவானந்தம் விரலில் அணிவிக்கும் முன்னே,'ஆனந்தா...'என அழைத்த பாண்டியனின் குரலில் அவசரம் இருந்தது.

'என்னாச்சு? ஏன் அப்பா இவ்ளோ பதட்டமா கூப்பிடுறாரு!?' என ஜீவானந்தம் தன் அறைக்குள் இருந்து வெளியே வந்ததும் அவர் பின்னே முல்லையும் வந்தாள்.

'ஆனந்தா...ஸ்கூல்ல ஒரே பிரச்சனையாம் பா! நம்ம ஸ்ரீனி வாத்தியாரை யாரோ அடிச்சிட்டாங்களாம், நீ சீக்கிரம் வா என்ன ஏதுன்னு போய் பார்த்துட்டு வருவோம்,
போ... போய் காரை எடு' என பாண்டியன் அவசரமாய் வீட்டில் இருந்து வெளியேற,

'முல்ல... நீ ரோஜாகிட்ட பேசிகிட்டு இரு, நாங்க வந்ததும் நீ கிளம்பலாம்' என்ற ஜீவானந்தம் தன் தந்தையோடு காரில்
தனியார் பள்ளியை நோக்கி விரைந்தார்.

அந்த ஊரில் என்ன பிரச்சனை நடந்தாலும் பாண்டியனும் ஜீவானந்தனும் மட்டுமே முதல் ஆளாக சென்று தீர்த்து வைப்பவர்களுக்கு, இன்று இவர்கள் செல்லும் பிரச்சனைக்கு மூல காரணமே கதிர்வேலன் தான் என தெரியாமல் போனது.

அவ்வளவு பெரிய வீட்டில் ஜீவானந்தமும் பாண்டியனும் வெளியே சென்றதும் தனித்து விட்டது போல உணர்ந்த முல்லை அடுப்பணையில் இருக்கும் ரோஜாவை தேடி சென்றாள்.

ரோஜா வேக வேகமாக தட்டில் நல்லி எலும்பாக பார்த்து எடுத்து வைத்தவள், முல்லையை பார்த்ததும்,
'வா முல்ல! இத வாத்திக்குக் கொண்டு போய் கொடுத்துட்டு வரியா! அப்புறமா நம்ம நிம்மதியா உக்காந்து நிறைய கதை பேசலாம்' என தட்டை முல்லை முன்னே நீட்டினாள் ரோஜா.

'என்ன நானா! வேணாம் ரோஜா, நீயே போய் அவுகளுக்கு கொடு. எனக்கு அவுகள பார்த்தாலே பயமா இருக்கு' என முல்லை அஞ்சியதும்,

'ஏன்? நான் என்ன காட்டேரியா' என நகைப்புடன் கேட்டுக்கொண்டே அடுப்பணைக்குள் வந்த கதிர்வேலன் தன் தங்கையின் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு முல்லையை பார்த்த கோவபார்வையில் அவள் விதிர்விதிர்த்து போனாள்.

'வாத்தி, நீ ஏன் இப்போ இங்க வந்த! நீ உன் ரூமுக்கு போ' என ரோஜா தன் அண்ணனை கோபத்துடன் மிரட்டியதும்,'ஆமா நீ சாப்பாடு பண்ற படிப்பு தானே படிக்கிற?' என முல்லையை பார்த்து கேட்ட கதிர்வேலன் அடுப்பணையின் மேடையில் ஏறி அமர்ந்துகொண்டார்.

'ஆமா...'என மெல்லிய குரலில் முல்லை பதில் சொன்னதும்,'அப்போ எனக்கு ஒரு sunny side up ரெடி பண்ணு' என்றவர், இடுப்பில் சொருகி வைத்து இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து அங்குள்ள கண்ணாடி கிளாஸ்ஸில் ஊற்றுவதை பார்த்து முல்லைக்கு முகமெல்லாம் வேர்த்து போனது.

'என்ன முட்டையை நீ போட்டு தருவியா, இல்ல! உன் அப்பன் முருகன் வந்து போடுவானா' என கதிர்வேலன் கேட்டதும்,'நா... நானே போட்டு தரேன்
மாமா சார்'
என வேக வேகமாக
தாவாவை நடுத்தர சூட்டில் வைத்து, அதில் எண்ணெயை ஊத்தி,
எண்ணெய் சூடானதும், ஒரு முட்டையை உடைத்து மெதுவாக தாவாவில் ஊற்றினாள்.

முட்டையின் வெள்ளை பகுதி வெந்ததும் மஞ்சள் பகுதி மேலே வேகாமல் மென்மையாகவே இருந்த நிலையில் உப்பு மிளகு தூள் தூவி sunny side up ரெடி செய்து கதிர்வேலன் முன்னே நீட்டியதும்,

'நாட் பேட்' என்றவாரு ஒரே வாயில் முட்டையை விழுங்கி, கூடவே மதுவையும் குடித்து விட்டு அடுப்பணையில் இருந்து வெளியேறிய கதிர்வேலனின் செயலைக்கண்டு குழம்பி போனாள் முல்லை.

'ரோஜா... மாமா சாருக்கு என்னாச்சு, நான் லாஸ்ட் டைம் பார்க்கும் போது கூட யாரோ ஒருத்தர் குடிச்சிட்டு வகுப்புக்கு வந்ததுக்கே மாமா சார் அவங்களுக்கு தண்டனை கொடுத்தாரே!ஆனா இப்போ என்ன இவரே இப்படி குடிக்கிறாரு 'என முல்லை கேட்டதும்,

'எல்லாம் காதல் படுத்துற பாடு தான்' என ரோஜா சொல்ல,'என்ன? அப்போ!
மாமா சாரும் மீனாவை காதலிக்கிறாரா?' என்ற முல்லையின் கேள்விக்கு ஏற்ப அவளின் விழிகளும் விந்தை பேசியது.

-தொடரும் 🌹

Thank you all for reading my story.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top