New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை.
பகுதி 1.
பவளவாய் இதழ்களின் இடையே முத்துப்பற்கள் ஒளி வீச முல்லை கலகலவென்று நகைத்தாள்.
தன் தோழியின் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் சரண்யா.
'ஏண்டி முல்ல அங்குட்டு என்னத்த கண்டுட்டு இப்படி சிரிக்கிறவ?' சரண்யா கேட்டதும்,
பதில் தராமல் தன் சிரிப்பை அடக்கிகொண்டாள் முல்லை.
'பொண்ணுங்க சிரிச்ச போச்சு புகையில்லை விரிச்சா போச்சுன்னு பெரியவுங்க சொல்லிருக்காங்க, பொட்ட புள்ளைங்களுக்கு எங்காவது அடக்கம் இருக்கா!' பொறிந்து தள்ளினார் அதே பேருந்தில் பயணிக்கும் பின் இருக்கையில் இருக்கும் மூதாட்டி ஒருவர்.
'இந்தா கிழவி! இந்த சவடால் எல்லாம் உன்ற வுட்டுல வளறுற பொட்டை புள்ளைக்கு சொல்லிக்கொடு, நாங்கெல்லாம் 2k kids' என்றாள் சரண்யா அலட்சியத்துடன்.
'வாயை பார்த்தியா இவளுங்களுக்கு, இதுங்க எல்லாம் எங்கன போய் குப்பை கொட்ட போகுதோ!' என முணுமுணுத்துக் கொண்டார் மூதாட்டி.
'இந்தாடி முல்ல... உன்னால தான் ஊருல போற வர கிழவி எல்லாம் என்னை கரித்து கொட்டுதுங்க, எனக்கு உன் சவகாசமா வேண்டா தாயி' தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிடு போட்டப்படி எதிர் இருக்கையில் அமர்ந்தாள் சரண்யா.
தன் தோழியின் கோவத்தை பெரிது படுத்தாமல் முல்லை கைகடிகாரத்தை பார்த்தாள்.
பெரிய முள்ளுடன் சின்ன முள்ளும் எண் பனிரெண்டின் மேல் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருக்க, நொடி முள் இவர்களை பிரிக்க கைக் கடிகாரத்துக்குள் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது.
'இன்னும் ஒரே ஸ்டோப்பிங் தான், என் மாமனை காணப் போறேன். ரெண்டு வருடங்கள் கடந்து என் மாமனை நேரில் பார்க்கும் போது என்ன பேசப் போறேன், எப்படி பேசப் போறேன்' இப்படியாக தனக்குள் நிறைய கேள்விகள் முல்லையின் மனதில்.
'முதலில் மாமனை பார்த்ததும் அவகளுக்காக நானே பண்ண ரவா லட்டை கொடுக்கணும். அப்புறம் அவகளுக்காக நான் வாங்கிய கைக் கடிகாரத்தையும் கொடுக்கணும். முக்கியமா மாமாவுக்காக வாங்கிய நீலக்கல் மோதிரத்தை நானே என் கையால் அவருக்கு போட்டு விடணும்' இப்படியாக முல்லை தன் மனதில் நிறைய திட்டத்தை வகுத்துக்கொண்டாள்.
திருச்சி விடுதியில் இருந்து நேரே தன் ஊரான சிவகங்கைக்கு செல்லாமல் முல்லை குன்னக்குடிக்கு செல்ல இருப்பதற்கு காரணம் அவளின் மாமா மீது உள்ள தீராத காதல் தான்.
சிவகங்கையில் வசிக்கும் லட்சாதிபதி முருகன் தெய்வானையின் ஒரே புதல்வி தான் முல்லை.
முல்லையின் ஐந்து வயதில் தெய்வானை குளியலறையில் வழுக்கி விழுந்து இறைவனடி சேர்ந்தார்.
தெய்வானையின் ஒரே அண்ணன் தான் குன்னக்குடியின் பஞ்சாயத்து தலைவர் பாண்டியன்.
பாண்டியனுக்கு தெய்வானை மற்றும் கஸ்தூரி என்று இரண்டு தங்கைகள்.
தன் தங்கையான தெய்வானையை முருகனுக்கும்,
கஸ்தூரியை ஜெகதீஷுக்கும்
திருமணம் செய்துக்கொடுத்தார் பாண்டியன்.
பாண்டியனின் மனைவி பெயர் லட்சிமி.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
மூத்தவன் ஜீவானந்தம்,
நடுவானவன் கதிர்வேலன்,
இளையவள் ரோஜா.
ரோஜாவை இன்றேடுத்த நொடியே
லட்சுமி இயற்கை எய்தினார்.
லட்சுமியின் மறைவுக்கு பிறகும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் பாண்டியனே தனது மூன்று பிள்ளைகளுக்கும் தாயுமானவனாக மாறி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார்.
பாண்டியனின் மூத்த தங்கை தெய்வானையின் மறைவில் சந்தேகம் இருப்பதாக பாண்டியன் தன் மச்சான் முருகன் மீது காவல்துறையில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் இன்று வரை முருகனுக்கும் பாண்டியனுக்கும் மாமன் மச்சான் தகராறு வளர்ந்து கொண்டுத் தான் வருகிறது.
அதோடு இல்லாமல் சிறுமியாக இருந்த முல்லையை பார்த்துக் கொள்வதற்காக முருகன் இரண்டாவதாக பார்வதியை திருமணம் செய்து கொள்ள,
இவர்களின் இடையே இருந்த மோதல் சில சமயங்களில் கைகளப்பில் முடிந்த வரலாறும் உண்டு.
இரண்டு குடும்ப பகையையும் மீறி முல்லை தன் தாய்மாமன் பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக வாழ ஆசைகொண்டாள்.
முல்லை தன் பள்ளிப்பருவத்தில் இருந்தே திருச்சி விடுதியில் தான் தங்கி இருக்கிறாள்.
விடுமுறை நாட்களில் கூட சொந்த ஊருக்கு வர பிடிக்காத முல்லைக்கு தன் மாமனை திருமணம் செய்துகொண்டு பாண்டியனின் குடும்பத்தோடு நிறைவான வாழ்க்கையை வாழ தான் ஆசை.
முல்லையின் அப்பா முருகனுக்கு தன் மகள் மீது பாசம் இருந்தாலும் வெளிப்படையாக கட்டிகொள்ளாத மனிதன்.
முல்லையின் சித்தி பார்வதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் முல்லையை அவர் அம்மா என்று அழைக்க சொல்ல, எப்படியாவது பார்வதியின் தம்பி கேசவனுக்கு முல்லையை திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்ற கனவும் பார்வதிக்கு உண்டு.
என்னதான் பாண்டியனுக்கு முருகன் மீது கோவம் இருந்தாலும் தன் தங்கை தெய்வானையின் ஜாடையில் பிறந்த முல்லை மீது அவருக்கு அதிக பிரியம் இருக்கத்தான் செய்தது.
இரண்டு குடும்பத்தின் நடுவே இருக்கும் பிரச்சனை தெரிந்தும் முல்லை பூப்படைந்த நாளில் பாண்டியன் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு முறை செய்ய போனவரை வீட்டுக்குள் விடாமல் முருகன் அழுசாட்டியம் செய்தார்.
'இந்தப்பா முருகா! உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் தாய் மாமன் சீரை செய்ய வேண்டியது பாண்டியன் தான்.
அவங்க வந்து முறை செய்யுற வரைக்கும் நீ அந்த பக்கம் ஒதுங்கி நில்லு' என்று ஊர் தலைக்கட்டுகள் எடுத்து சொல்ல, வேறு வழி இல்லாமல் முருகனும் ஒதுங்கி நின்றார்.
முல்லையின் 13 வயதில் அவள் ருதுவான
நிகழ்வை சீரும் சிறப்புகமாக செய்து முடித்த பாண்டியனுக்கு அந்த நொடி முல்லையை தன் வீட்டின் மருமகளாக அழைத்து வர வேண்டும் என்ற எண்ணமும்
தோன்றியது.
என்னதான் முல்லை தன் அக்கா தெய்வானையின் மகளாக இருந்தாலும் கஸ்தூரிக்கு முல்லை மீது சின்ன வெறுப்பு இருக்க தான் செய்தது.
கஸ்தூரியின் கணவன் ஜெகதீஷ் குடிகாரன் என்பதால் அவர்களின் ஒரே புதல்வி மீனாவை எப்படியாவது பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் கஸ்தூரி மனதிலும் இருக்க தான்
செய்தது.
இப்படியாக இவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்று திருச்சி விடுதியில் தங்கி சமையல் கலைகல்லூரியில் படிக்கும் முல்லை தன் மாமனை காண அவள் தோழியுடன் கிளம்பி வருகிறாள்.
முல்லை பயணித்து வந்த பேருந்தும் அவள் இறங்க வேண்டிய இடத்தில் வந்து புகையை கக்கிக்கொண்டு நின்றது.
தன் ஊர் காரர்கள் யாரேனும் தன்னை இங்கே பார்த்துவிடுவார்கள் என்று பயந்த முல்லை தன் தாவணியால் முக்காடு போட்டுக் கொண்டு தன் மாமனைத் தேடி அவள் தோழி சரண்யாவுடன் கருவேலங் காட்டுக்குள் நுழைந்தாள்.
சரண்யாவின் ஊரும் குன்னக்குடி என்பதால் அவள் தைரியமாக இருக்க,
'சரண்யா யாராவது பார்த்திட போறாங்க உன் தலையில தாவணியை போட்டு மறைச்சிக்கோ' என்றாள் முல்லை.
'நீதான் ஊரு விட்டு ஊரு வந்து காதலிக்கிற, இது என்னோடு ஊரு, நான் எதுக்காக மறஞ்சுகிட்டு வரணும்' என்றாள் சரண்யா.
சரண்யாவும் முல்லையும் காட்டுப் பகுதிக்குள் செல்ல,'என்னடி உன் மாமனை ஆளை காணோம்? நீ அவரைப் பார்க்க இன்னைக்கு வரேன்னு அவருக்கு தெரியுமா தெரியாதா?' கேட்டாள் சரண்யா.
'காலையில நம்ம பஸ் ஏறும்போதே நான் மாமாவுக்கு மெசேஜ் அனுப்பிட்டேன் இன்னும் கொஞ்ச நேரம் காத்திரு வந்துடுவாரு' என்ற முல்லையின் விழிகள் தன் மாமனை தேடியது.
அரை மணி நேரம் கடந்து இருக்கும்,
'என்னடி இம்புட்டு நேரம் ஆகுது இன்னும் உன் மாமனை காணோமே! உன் மாமனுக்கு போன் பண்ணி எங்க இருக்கான்னு கேளு' என்றாள் சரண்யா.
சரண்யா சொன்னது போலவே முல்லையும் தன் மாமனுக்கு போன் செய்து பார்த்தும் பயனில்லாமல் போனது.
தூரத்தில் புல்லட் சத்தம் கேட்க,
'முல்ல...உன் மாமன் தான் வராரு, நான் கிளம்புறேன் புள்ள. வீட்டுக்கு போனதும் எனக்கு போன் பண்ணு. இங்க இருந்து நேரத்தோட கிளம்புடி. இல்லாட்டி உன் அப்பன்காரன் உன்ன தேடி பஸ் ஸ்டாண்டுக்கு உன் மாமன் கேசவனை அனுப்பி வெச்சிட போறான்' என்ற சரண்யா முல்லையை அதே இடத்தில் விட்டு விட்டு அவள் வீட்டிற்கு செல்ல முயன்ற அவளை வழியிலேயே தடுத்து நிறுத்தினான் பாண்டியனின் இரண்டாவது புதல்வன் கதிர்வேலன்.
பாண்டியனின் மூத்த பையனான ஜீவானந்தமும்
இரண்டாவது புதல்வனான கதிர்வேலனும் ஒன்றாக பைக்கில் வந்து இறங்கினார்கள்.
'அண்ணா...நீ போயி வந்த வேலைய பாரு, நான் இந்த சீமை சிறுக்கி கிட்ட கொஞ்சம் பேசிட்டு இருக்கேன்' என்றான் கதிர் வேலன்.
'டேய் தம்பி... இந்த புள்ள கிட்ட உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? இங்க பாருமா சரண்யா, நீ வீட்டுக்கு கிளம்பு' என்றான் ஜீவானந்தம்.
ஜீவானந்தம் தன் தந்தைக்கு அடுத்தபடியாக பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்று நடத்தும் பொறுமையின் சிகரமான அந்த ஊரே போற்றும் நல்லவன்.
ஆனால் கதிர்வேலனோ படிப்பை பாதியில் நிறுத்தியவன், ஊர் ஊராக சுற்ற வேண்டும் என்று ஆசை கொண்டு தன் குடும்பத்திற்கும் அவன் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் லாரி ஓட்டும் இளம் ஓட்டுநர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கதிர்வேலனும் நன்றாக படித்து பட்டப்படிப்பை முடிக்கப் போகும் தருணத்தில் வாழ்க்கையை வெறுத்து குன்னக்குடியை விட்டே ஓடியவன் எங்கெல்லாம் சுற்றி திரிந்து தன் தங்கை ரோஜாவின் அன்பிற்காகவும் தன் அண்ணன் ஜீவானந்தத்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தும் மீண்டும் ஊருக்கு திரும்பியவன் குன்னக்குடியின் சாபக்கேடு என்று அனைவராலும் திட்டி தீர்க்கப்படும் இளைஞன்.