Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
வழக்கமாய் எழும் நேரம் தாண்டிச்சென்றே எழுந்தவளுக்கு, இரவெல்லாம் அழுதபடியே தூங்கியது, தற்பொழுது தலை வலித்தது.குளித்து ரெடியாகி கீழே வந்தவள், அம்மா என்று கூப்பிட ,எந்த சத்தமும் இல்லை.
அம்மா தாமரை என்று விஸ்வத்தின் குரல் கேட்டு திரும்பி பார்க்க, பூரணியும், மாறனும் சொந்தக்காரவங்க ஒருத்தருக்கு உடம்பு முடியலைனு போயிருக்காங்க.
அவங்க வர ஈவ்னிங் ஆகிடும்மா.
நீ வந்த பிறகு உன் கிட்ட சொல்ல சொல்லிட்டு தான் போனாள்மா.
அப்படியா அங்கிள் என்றவள், தலை வலிக்குது, நான் காஃபி போட்டுக்கட்டுமா என்று தயங்கியவாரு கேட்க,எனக்கும் சேர்த்து போடேன்.
ம்ம் என்றவள் இதோ என்று இருவருக்கும் காஃபியை தயாரித்தவள், இரண்டு கப்பில் எடுத்துக்கொண்டு வந்து, அங்கிள் என்று கூப்பிட்டுக்கொண்டே வர,விஸ்வத்தை காணும்.
எங்கே போனாங்களென்று சுற்றி பார்த்தவள், ஒரு வேளை ரூமிற்குள் இருப்பாங்களோ என்று கதவை தட்ட, எந்த சத்தமும் இல்லை.
காஃபி வேறு ஆறிடுமே என்றபடியே வாசல் பக்கம் வந்து பார்க்க, சில அடி தள்ளி நின்று அவர் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
புல் தரை கார்டனில் போட்டிருக்கும் சேரின் அருகில் வந்தவள்,அங்கிருந்த டீப்பாயின் மேலே காஃபியை வைக்கும் போது, அந்த லேப்டாப்பில் தெரிந்த உருவத்தை பார்த்து வி. வி என்று அதிர்ந்தாள்.
வி. வி,என்று சொல்லும் போது, இவ்வளவு நேரம் போன் பேசி விட்டு திரும்பி வந்தவரின் காதில் விழுந்தது.
தாமரை நீ என்ன சொன்ன என்க, அங்கிள் இவங்க,இவங்க என்று வி. வி. போட்டோவை பார்த்து கேட்க, என்னோட மனைவி வினிதா விஸ்வம்.
இப்போ உயிரோட இருக்காளா?, இல்லையானே தெரியலை? என்று சொல்லி விஸ்வம் கண் கலங்க, என்னாஆஆஆஆஆ என்று அதிர்ந்து போனவள் அங்கிள் நீங்க என்ன சொல்லுறீங்க?, அப்போ பூரணி அம்மானு அவள் தடுமாற, பூரணிக்கு தெரியும் மா.
பசங்களுக்கு மட்டும் தான் தெரியாது என்றவர், தனது கடந்த காலத்தை சொல்ல தொடங்கினார்.
என்னோட பூர்வீகம் நீலகிரி தான் என்றவர்,முப்பது வருடத்திற்கு முன்பு டெக்ஸ்டைல்ஸ் கோர்ஸ் சம்பந்தமாக படிக்க, நான் லண்டனுக்கு போயிருந்தேன்.அங்கு என் கூட படித்தவள் தான் வினிதா வில்லியம்ஸ்.
முதலில் இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு இருவருக்கும் நட்பை தாண்டி காதல் வந்து விட்டது.
மூன்று வருஷம் படிப்பு முடிஞ்சிது, தாலி கட்டிக்கொள்ளாமல், கணவன் மனைவியாக தான் வாழ்ந்தோம்.
நான் படிப்பு முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, அங்கு உள்ள கோயிலில் ஹிந்து முறைப்படி அவளை கல்யாணம் பண்ணிட்டு தான் இந்தியாவிற்கு வந்தேன்.
இங்கு வந்து எங்க அப்பாவோட பிஸ்னஸை பார்த்து கிட்டு, நேரம் வரும் போது வினிதா பற்றி எங்க அப்பா,அம்மா கிட்ட விஷயத்தை சொல்லலாமென்று இருக்கும் போது, திடீர்னு எங்க அப்பாக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது.
அப்பா சாகுறதுக்கு முன்பு உன்னை குடும்பமா பார்க்க ஆசைப்படுறேன் என்க..
நான் வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்ல வரும் போது, எனக்கு தாலி பிச்சை போடுப்பானு எங்கம்மா கதறி அழுதாங்க.சூழ்நிலை கைதியானேன். என்ன பண்ணுறதுனு புரியலை.
நாளுக்கு நாள் அப்பாவோட உடல் நிலை மோசமாவது தெரிந்து, அம்மாவோட சொந்தக்கார பொண்ணான பூரணியை கட்டி வச்சாங்க.கல்யாணம் முடிந்த இரண்டு நாளில் எங்க அப்பா இறந்துட்டாங்க.
ஆறு மாசம் வரை நான் வினிதாவ தொடர்பு கொள்ளவேயில்லை.
பூரணியோட சொந்த ஊர் பூனா தான்.
அம்மாவும் கொஞ்ச நாளில் இறக்க, பூரணி கிட்ட நான் விஷயத்தை சொன்னேன்.
அழுதவள் சரி முதல்ல போய் வினிதாவ நேரில் பார்த்து பேசுங்கனு சொன்னாள்.
நானும் திரும்ப லண்டன் போனேன், ஆனால் அவள் அங்கு இல்லை.
மூன்று மாதத்திற்கு முன்னாடியே வினிதாவோட அம்மா இறந்து போய்ட்டதாகவும், அன்றைக்கே அங்கே இருந்து போய்விட்டதாக சொன்னாங்கள்.
அன்றிலிருந்து இப்போ வரை அவளை பற்றி எதுவும் தெரியலைனு விஸ்வம் கண் கலங்க, ஆன்ட்டி சிங்கப்பூரில் இருக்காங்க.தி பேமஸ் டிசைனர் வி. வி. தான் ஆன்ட்டி என்று தாமரை சொல்ல, என்னாயென இப்பொழுது விஸ்வம் அதிர்ந்து போனார்.
என் வினி உயிரோட இருக்காளா?, சொல்லுமா?, உனக்கு எப்படி அவளை தெரியுமென்று பதறினார்.
என்னை இங்க அனுப்பி வைத்ததே ஆன்ட்டி தான். அதுவும் இல்லாமல் லீனா அக்கா, ஆன்ட்டி கிட்ட தான் அசிஸ்டென்டா வேலை பாக்குறாங்கள்..
என்னம்மா சொல்லுறனு விழி பிதுங்கி நின்றவரை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு நிமிஷம் என்றவள், மாடியில் இருக்கும் தனது லேட்டாப் மற்றும் ஃபோனை எடுத்து வந்து, வி. வி. நம்பருக்கு வீடியோ கால் பண்ண,அட்டென் பண்ணிய வி. வி. ஏஞ்சல் என்றார்.
என்ன இந்த நேரத்தில், அதும் வீடியோ கால் என்க, லேப்டாப்பை விஸ்வம் பக்கம் திருப்ப,நீண்ட வருடங்களுக்கு பின்னர் பார்த்துக்கொண்ட இருவரும், அதிர்ந்தனர்.
விஷு என்று வி. வி சொல்ல,வினி என்று விஸ்வம் சொன்னதைக் கேட்டு அந்த பக்கத்தில் இருந்து கால் கட் ஆனது.மீண்டும் தொடர்பு கொள்ள ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
அம்மாடி தாமரை எனக்கு ஒரு விஷயத்தை சொல்லு?.
உனக்கு எப்படி வினிய தெரியும்?.
தாமரையும் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பற்றி விஸ்வத்திடம் சொல்ல தொடங்கினாள்.
ஏழு வயது அண்ணன் மகள் தாமரையோடு நீலகிரிக்கு வந்து சேர்ந்தார் வேதா.அங்கிருந்த மலைவாழ் மக்கள், வேதா யாரென்று தெரிந்து ஆனந்த தாண்டவமாடினர்.
ஏனென்றால் அந்த மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய, அந்த கிராமத்திற்கு யாருமே இதுவரை வருவதில்லை.
இப்போ இருக்கும் வசதி போல அப்பொழுது, போக்குவரத்து வசதி இல்லாததே முதல் காரணம்.
பின்னர் அவர்களெல்லாம் சேர்ந்து வேதா தங்குவதற்காக அழகான குடிலை செய்து கொடுத்தனர்.
நாட்கள் செல்ல செல்ல வேதாவின் குணம் ,அங்கு இருக்கும் மக்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அரசாங்கத்திடம் பேசி சிறு சிறு வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுத்தார்.
மலை கிராமத்திற்கு இதுவரை யாருமே பணிபுரிய வரவில்லை.வேதாவே விரும்பி போனதால், வேதா கேட்பதை செய்து கொடுக்க சொல்லி அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
பின்னர் பிள்ளைகளுக்கு சிறிய பள்ளிக்கூடமும் அரசாங்கம் அவர்களுக்கு கட்டி கொடுத்தது.
அதே போல் மருத்துவமனையும் பழைய கூரையை பிரித்து விட்டு சிமெண்ட் கட்டிடமாக மாறியது.வேதா வந்த ஒரு வருடத்திற்குள் அந்த மலை கிராமமே புதிய தோற்றத்தில் மாறியதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
சுற்றுலா தளம் அருகில் என்பதால் நிறைய பேர் வந்து பார்த்து செல்வார்கள்.
இப்படி ஒரு நாள் வேதாவும் தாமரையும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கிருந்த மலையை நோக்கி யாரோ ஒரு பெண் வேகமாக போவது தாமரைக்கு தெரிந்தது.
வேதா கூட வந்தவள், அந்தப் பெண் போகும் திசையை நோக்கி ஓட, தாமரை எங்கே போறனு வேதாவும் பின்னாடியே போனார்.
மலையின் மேல் ஏறிய அந்த இளம் பெண், குதிக்க போகும் போது அவள் கையை தாமரை எட்டிப்பிடிக்க, பேலன்ஸ் பண்ண முடியாமல் இருவரும் தடுமாறி பள்ளத்தில் உருண்டனர்.
ஐயோ காப்பாத்துங்க என்று வேதா கத்தி கதற ,அந்த வழியாக வந்தவர்கள் இவர் குரலை கேட்டு ஓடி வந்தனர்.
பள்ளத்தில் விழுந்து கிடந்தவர்களை கை நீட்டி காட்டினார். பின்னர் அவர்கள் கீழே இறங்கி பார்க்கும் போது, வினிக்கு கை கால்களில் நான்கு அடிபட்டு இருப்பது தெரிந்தது.
தாமரை அங்கிருந்த புல் மண்டிய இடத்தில் விழுந்ததால் அவளுக்கு பெரிதாக எந்த காயமும் இல்லை. அதிர்ச்சியில் மட்டுமே அவள் மயங்கி இருப்பது தெரிந்தது.
இருவரையும் சிரமப்பட்டு மேலே தூக்கிக்கொண்டு வேதா இருக்கும் குடிலுக்கு வந்தார்கள்.
நர்சாக இருந்தாலும் சற்று முன்னர் நடந்த அதிர்ச்சியால் வேதாவிற்கு என்ன பண்ணுவதென்று ஒன்னும் புரியவில்லை.
மலைவாழ் மக்களில் இருந்த வைத்தியர் தான் வினியின் கை, கால்களுக்கு கட்டு போட்டு, உள்ளுக்குள் பச்சிலையையும் கொடுத்தார்.
வினியின் கை கால்கள் சரியாக இரண்டு வாரம் ஆனது.அவரிடம் வேதா எதுவுமே கேட்கவில்லை, ஆனால் நன்கு கவனித்துக் கொண்டார்.
பள்ளிக்கு போயிட்டு வந்த தாமரை ஒருநாள் வினியிடம் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும் போது, தற்கொலை தீர்வு இல்லை என்று பள்ளியில் பாடம் எடுத்தது பற்றி சொல்ல, அந்த சிறுபிள்ளையின் வார்த்தை வினியின் மனதிற்குள் ஆழமாக பதிந்தது.
தாமரை உறங்கி விட்டாள் என்பதை பார்த்து,தனது பெயர் வினிதா விஸ்வம் என்றும்,லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும், தன் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், இந்தியாவிற்கு வந்து பத்து வருடங்கள் மேலாகுது.
இன்று வருவார், நாளை வருவாறென்று காத்திருந்து வருடம் போய்விட்டதாகவும், அவருடைய ஊர் நீலகிரி என்பது மட்டும் தெரியும்.அதை வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து ஒவ்வொரு ஊராக தேடியும்,அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
பெற்றோரும் இல்லை, கணவனை பற்றியும் எதுவும் தெரியவில்லை, இனி எதற்கு வாழனுமென தற்கொலை பண்ணிக்க போகும் போது தான், மலையில் நடந்ததென்று சொல்லி அழுதாள்.
சிறிது நேரம் சென்று வினிதாவின் அழுகை நின்றது.
தற்கொலை பண்ணிக்கொண்டாள் தீர்வு என்று எல்லாரும் நினைத்தால் என்ன ஆவது?.வாழ்க்கையில் உனது லட்சியம் என்ன?, இந்த உலகத்தில் தாய் தந்தை இல்லாதவர்களெல்லாம் வாழவில்லையா? .
இரண்டு கண்ணில்லாதவர்கள், கை கால் இல்லாதவர்கள் உழைத்து வாழும் போது, உனக்கு எதற்கு இந்த முடிவு?.
அதோடு தான் படித்த சைக்காலஜி படிப்பை வைத்து, வினிதாவின் மனதிற்குள் தைரியத்தை உருவாக்கினார்.
அன்றிலிருந்து வினிதாவிடமும் நல்ல மாற்றம் தெரிந்தது. தாமரை ஒவ்வொருவரின் ஆடைகளை உற்று பார்ப்பதை பார்த்த வினிதா, ஏன் அவங்க டிரஸை அப்படி பாக்குறாய்?.
அவங்க டிரஸ் அப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்று, அந்த சின்ன வயதில் அவள் சொல்வதை கேட்டு அவளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை உணர்ந்து கொண்டாள்.
உடனே தாமரையை அழைத்துக் கொண்டு கீழே இருக்கும் டவுனிற்கு சென்றவள் வரைவதற்கான கலர் பென்சில்களையும், வண்ணம் தீட்டுவதற்காக வாட்டர் பெயிண்ட், பேப்பர் சார்டெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்து, உனக்கு தெரிந்ததை எல்லாம் இதில் வரை என்றாள்.
தாமரையும் தனக்கு தெரிந்ததை வரைந்து இருவரிடமும் காட்ட, அதில் இருக்கும் ஓவியங்களை பார்த்த இருவருக்கும், அதிர்ச்சியாக இருந்தது.