Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
அன்பு நினைவுகள்!
"ம்ம் இருக்கேன் கா".
"ரெண்டு சூனியகார பொம்பளைங்க கிட்ட மாட்டிக்கிட்டு தான் படாத பாடென்றாள்".
"அடியேய் சீம சித்துராங்கி,நாட்டு முள்ளு வாங்கி".யாரை பார்த்துடி சூனியக்காரினு சொல்லுற?.வாய் இருக்காதுடி என்றார் ராக்கம்மா பாட்டி".
"ஏன்,உங்க வாய் எங்கே போச்சாம்?, என் வாய்க்கு வந்து நிக்குறீங்களென்றாள்".
"ச்சூஊஊஊஊ....இதுங்க பஞ்சாயத்துக்கு ஒரு முடிவே இல்லையாடானு அன்பு சொல்ல,நல்லா சொல்லுணா.எப்போ பாரு,என் கிட்ட வம்புக்கு வருவதே சிலருக்கு வேலையென்றாள்".
"ஆமாடி,எங்களுக்கு வேலையில்லை பாரேன்னு கண்ணம்மா பாட்டி சொல்ல, அதில் என்ன சந்தேகமென்றாள்".
"ஜனா போதும்டி.நம்ப பாட்டி தானே விடுடி என்றவாறே தங்கைக்கு வாங்கி வந்ததை எடுத்து வந்து வேணி நீட்ட, சூப்பரூ என்றாள்".
"பின்னர் மாரியப்பனும் வீட்டிற்கு வர, நலம் விசாரித்து விட்டு,இரவு உணவை சாப்பிட்டு படுத்தனர்".
"அதிகாலையில் கண்விழித்த வேணி, தன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டு தூங்கும் தங்கையின் தூக்கம் கலையாதவாறு எழுந்து போய், முகம் கழுவியவள், வாசல் தெளித்து கோலமிட,திண்ணையில் படுத்திருந்த மாரியப்பனுக்கும் விழிப்பு வந்தது".
"ஏத்தா,செம்பை எடுத்து வா,நான் போய் திருமுகம் கடையில் டீ வாங்கிட்டு வாறேன்.சரிப்பா என்றபடியே உள்ளே வந்த வேணியும்,சொம்பில் தண்ணீரோடு எடுத்து வந்து கொடுத்தாள்".
"அந்த தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவியவர், துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு டீக்கடையை நோக்கிச்சென்றார்".
"ராக்கம்மா பாட்டியும் எழுந்து வாசலுக்கு வர, வேணி பக்கத்து வீட்டு அக்காவோடு பேசிக்கொண்டு நிற்பது தெரிந்தது".
"எம்மாடி வேணி என்று குரல் கொடுத்தார்".
"பாட்டியின் குரலைக்கேட்டவள் நான் வரேன்கானு சொல்லிட்டு வர,அந்த மாடு கிட்ட என்ன பேச்சு?".
"வயித்தெரிச்சல் புடிச்சவள்,அவள் கண்ணுல கொள்ளி வைக்கணும், நீ உள்ளே வா என்று பேத்தியை கையோடு கூப்பிட்டுக்கிட்டு வீட்டின் உள்ளே சென்றார்".
"மற்ற இருவரும் தூங்கி எழவும், மாரியப்பன், டீ, பன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்".
"பின்னர் அனைவருக்கும் டீயும், பன்னும் கொடுத்து விட்டு, வேணியும் குடித்து முடித்தவள்,காலை என்ன சமைக்கயென்றாள்".
இருக்கா, நான் ஆக்குறேனென்று ஜனனி சொல்ல, பார்ரா!என் தங்கச்சி அவ்வளவு பெரிய பொண்ணாகிட்டாளா என்க, ம்ம் என்று ஜனனியும் சிரித்தாள்".
"சரி யாரோ சமைங்க, ஆனால் பசிக்கு வயிற்றுக்கு போடுங்களென்ற அன்பு, வீட்டிலிருந்த டீவியை ஆன் பண்ணியவன், சேனலை மாற்றிக்கொண்டே வர, கிழக்குச்சீமையிலே படம் ஓடிக்கொண்டிருந்தது".
"அதை வைத்து விட்டு தோட்டத்தில் போய் பல்லை விலக்கிக்கொண்டு உள்ளே வர, அந்த நேரம் கீதாவும் வீட்டிற்கு வர, டிவியிலோ, அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே, பருவம் சுமந்து வந்த பாவாடை தாவணியே என்ற பாடல் ஓடியது".
"கீதாவை பார்த்தவன் திகைத்து போனான்".
"சிறு பெண்ணாக பார்த்தவளோ, இன்று பருவம் எய்திய பின், பாவாடை தாவணியில் கண்கள் படபடக்க நின்றவளை பார்த்தவனுக்கு, உள்ளுக்குள் ஏதோ செய்தது".
"கீதாவும், அன்புவை பார்த்து அதிர்ந்து தான் போனாள்".
"அவளுக்கும் அதே நிலமை தான்".
"கீது என்ற வேணியின் சத்தத்தில் இருவரும் கலைந்தனர்".
"அக்கா என்று போய் வேணியை கட்டிக்கொண்டாள்".
"எப்படி இருக்க என்க, ம்ம் நீ அங்க அம்மா அப்பா, தம்பிலாம் நல்லா இருக்காங்களானு பேசிக்கொண்டே
காலை டிபனை செய்து முடித்தனர்".
"ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தவனுக்கு, கீதாவிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை".
எப்பா.... என்ன நம்மை இப்படி சுத்த வைக்குறாள்?.
"அடேய் அன்பு,அடக்கி வாசிடானு தனக்குள் சொல்லிக்கொண்டான்".
"பின்னர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவை சாப்பிட்டு முடிக்க, மாரியப்பன் பெரிய வீட்டிற்கு வேலைக்கு செல்ல, பாட்டிகள் இருவரும் வயல் வேலைக்கு சென்றனர்".
"வீட்டில் இருந்த நால்வரும் சிறு வயதில் குதித்து விளையாடிய குளத்திற்கு சென்றனர்".
"தாமரை குளத்தை பார்த்ததும், நால்வருக்கும் சிறு வயது நினைவுகள் வந்தது".
"சோமுவும், மாரியப்பனும் தான் இவர்கள் நால்வருக்கும்,இந்த தாமரை குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்தவர்கள்".
"இன்றும் நீச்சல் அடிக்க வந்தாலும் அன்பு, ஜனனி, வேணி மூவரும் தண்ணீரில் இறங்க, கீதாவோ கரையிலே நின்றாள்".
"அன்பு தான் அவள் வராததை பார்த்து, குட்டி அங்க பாருடா என்றான்".
"பின்னர் இருவரும் பார்த்து விட்டு, அடியேய் ஏண்டி மேலே நிக்கிற?". இறங்கி வா எருமைனு ஜனனி கூப்பிட,இல்லை நான் இங்கையே இருக்கேனென்று சொல்ல, என்னாச்சிடி?.எருமைக்கு போட்டியா தண்ணியில் கிடப்பியே, இப்போ என்ன வந்துச்சி என்றாள் வேணி".
"தொண்டை கரகரப்பா இருக்குற போல இருக்குக்கா, அதனால் நான் கரையிலே இருக்கேன்".
"அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாமல், மற்ற மூவரும் தண்ணிக்குள் நீந்தி போட்டி போட்டுக்கொண்டு அக்கரையை தொட்டு வந்து மகிழ்ந்தனர்".
"நேரமும் கடந்து செல்ல மூவருக்கும் பசியெடுக்க, தண்ணியில் இருந்து ஏறி மேலே வந்தனர்".
"அன்புவோ குளத்தில் பரித்து எடுத்து வந்த தாமரையை, கீதாவின் முன்பு நீட்டினான்".அதை வாங்கும் போது, அவன் தலையிலிருந்த நீர் துளிகள் கீதாவின் மேல் பட்டு தெரித்தது".
இரத்தினபுரி- பிளாஷ்பேக்:
"பின்னர் நண்பர்கள் சாப்பிட்டு முடித்து, அரட்டையோடு நேரத்தை போக்கினர்".
"மாலை டீ குடித்துக்கொண்டு டெலசில் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏய் நில்லு நில்லு என்ற குரல் கேட்டு,சத்தம் வந்த திசை நோக்கி ருத்ரன் பார்க்க, அங்கே இரட்டை ஜடை பின்னிய பெண்ணெருத்தி, இரண்டு வாண்டுகளை துரத்திக்கொண்டு ஓடினாள்".
"ருத்ரனின் பார்வை சென்ற திசையை பார்த்த ராம், அங்கு வந்து பார்த்து விட்டு, அது ஆசிரமம்டா என்றான்".
"ஓஓஓ என்றவன், மீண்டும் அந்த குரல் கேட்காதாயென்று யோசனையாக, சில நிமிடத்தில் பாட்டு பாடும் சத்தம் கேட்டது".
"ஆர்கலி தான் பாடுறாளென்று ராம் சொல்ல,ஓஓஓ என்றான் ருத்ரன்".
" ஆமாம், யார்டா அந்த ஆர்கலி?, பெயரே வித்யாசமா இருக்குடா".
" ஆமாம் டா".
" 11 த் படிக்குறாள்".
" அந்த ஆசிரமத்தில் தான் வளருறாள்".
" கனடா வரும் வரை அவர்களோடு தான் என்னுடைய நேரம் போகுமென்றான்"..
"சரிடா, போதும்டா சாமி உன் ஆர்கலி புராணமென்றான் விக்டர்".
"என்னடா சைட்டானு ஆது கேட்க,அடி செருப்பால.பண்ணாடைப்பயலே அவள் தங்கச்சி போலடா.இன்னொரு முறை இப்படி பேசுன,வாய் இருக்காதென்று ராம் திட்ட,சரிடா சரி என்றான் ஆது".
"என்ன மச்சி பயந்துட்டியா?, நீ தான் தைரியமான ஆளாச்சேடானு பிலிப் சொல்ல,ஏண்டா?, ஏன்?.அந்த எருமை கிட்ட நான் வாங்கி கட்டிக்கணும், நீ நல்லா வேடிக்கை பார்க்கணும்".
நல்லா வருவடா நீ".
"சரிடா வாங்க கீழே போகலாமென்று ருத்ரன் சொல்ல, பின்னர் நண்பர்களும் கீழே வந்தனர்.இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு வந்து படுத்து விட்டனர்".
"சூரியன் தன் இருப்பை காட்டிக்கொண்டு கிழக்கிலிருந்து உதயமாக ஆயத்தமானான்".
"தூங்கி எழுந்த ருத்ரன் நண்பர்களை பார்க்க, மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
"பின்னர் தனது ஜாக்கிங் டிரஸை போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் கதவை திறந்து சாத்தி விட்டு படியில் இறங்கி கீழே வர,அங்கே வரலெட்சுமியும் சிவனும் டீ குடித்துக் கொண்டிருந்தனர்".
"ருத்ரனை பார்த்தவர் இரு ருத்ரா பிளாக் காஃபி கொண்டு வரேனென்று சொல்ல, வந்து குடிக்கிறேன் ஆன்டி என்றவன், வெளியே வந்து பார்க்க, லேசாக புகை மூட்டம் போல் பனி புகை தெரிந்தது".
"அதன் அழகை ஒரு நிமிடம் ரசித்தவன், பின்னர் மெயின் கேட்டை திறந்து ஜாக்கிங் ஓட தொடங்கினான்".
"நேற்றிரவே தெருவை பற்றி தெரிந்து கொண்டதால்,ருத்ரன் ஜாக்கிங் கிளம்பி விட்டான்.இன்னும் சிலர் ரோட்டோரமாக வாக்கிங் போவதும் தெரிந்தது".
"இரண்டு தெருவை தாண்டி முடித்தவன் மூன்றாவது தெருவில் ஓடி வர,அது ஒரு சந்து பகுதி என்பதால் எதிரில் வரும் ஆள் தெரியாமல் இவன் திரும்ப,அந்த நேரம் அங்கு ஓடி வந்தவள் மேல் மோத, ஆஆஆ என்று கீழே விழுந்தாள்".
"கண்ணிமைக்கும் நொடியில் நடந்து விட்ட நிகழ்வால், அய்யோ பாப்பா என்றவாரே அவளை தூக்கி விட்டவனை பார்த்து முறைத்து நின்றாள்".
"தன் முன்னால் முறைத்து நிற்பவளை பார்த்த ருத்ரனுக்கு ரசனையானது. குண்டு கண்கள் உருட்டி, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, காதை மறைத்து ஸ்கார்ப் கட்டிக்கொண்டு பொம்மை போல் நின்றிருந்தாள்".
"என்னமா பாப்பா அடி பட்டுவிட்டதா என்று மீண்டும் ருத்ரன் கேட்க, என்ன மேன் கொழுப்பா?".
"நான் என்ன பால்வாடியா போறேன்?.
பாப்பா கூப்பானு, ஐ ஆம் 11 த் ஸ்டேன்டர்டு என்றாள்".
"ஓஓஓ...,பெரிய படிப்பு தானுங்கக்கா என்றான்".
"என்ன அக்காவா என்று கால்களை கீழே உதைத்தவள், கண்ணு தெரியாத ஆளுலாம் எதுக்கு வாக்கிங் வரணும்.வீட்டிலே இருக்க வேண்டியது தானேயென்று திட்ட,அவள் திட்டுவதை கேட்டு ருத்ரனிற்கு சிரிப்பு தான் வந்தது".
"சரி பாப்பா சாரி என்றவன், பாப்பாவை மட்டும் அழுத்தி சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்".
"நெட்லிங்,லேம்ப்போஸ்ட் என்று திட்டிக்கொண்டே அவளும் அங்கிருந்து சென்று விட்டாள்".
"பின்னர், ஜாகிங் முடித்து வீட்டிற்கு வந்தவன், லெட்சுமி குடுத்த காஃபியை குடித்து விட்டு மேலே வர, மற்ற நண்பர்களும் எழுந்தனர்".
"காலை 9- 10.30 நல்ல நேரம் என்பதால், பந்தல் கால் ஊன்றுவதற்கும், நலுங்குக்கும் வீட்டில் உள்ள சொந்தக்கார பெண்கள் அதற்கான வேலை செய்து கொண்டிருந்தனர்".
"ஐய்யரும் சொன்ன நேரத்தை விட சிறிது நிமிடத்திற்கு முன்பே வந்து சேர, வாங்க சாமி என்று சொல்லி விட்டு, அவர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுக்க ஒரு ஆளையும் அமர்த்தினர்".
"எல்லாம் தயாரானதும், முதலில் பெரியவர்கள் சேர்ந்து சாமிக்கு பூஜையை முடித்து,பந்தல் கால் ஊன்றி முடித்தனர்.பின்னர் மணையில் உட்கார வைத்து, ராம்க்கு நலுங்கை ஆரம்பித்து வைத்தார்கள்".
"நடப்பவைகளை நண்பர்கள் எல்லாரும் அதிசயமாக பார்த்துக்கொண்டே தங்கள் ஃபோனில் வீடியோவாகவும் எடுத்துக்கொண்டிருந்தனர்".
"நல்லவிதமாக நலுங்கு வைத்து முடிய, ராம் குளித்து முடித்து புதுத்துணியை போட்டுக்கொண்டு வந்த பின்னர், சாமிக்கு தீபத்தை காட்டி விட்டு, சமைத்த உணவை பந்தியில் பரிமாற, கேலி கலாட்டாக்களோடு வந்தவர்களும் சாப்பிட்டு சென்றனர்".
"அப்பொழுது கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசலை பார்த்த ருத்ரனோ உள்ளே வருபவளை பார்த்து திகைத்தான்".