• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
❤ஓவியம் 6

முல்லை தன் அக்கா ஷாமிலியுடன் கதிரின் வீட்டுக்கு வர, அவளைப் பார்த்த கதிர், நீ எப்படி வந்த?” என்று கேட்க, “கார்ல ரைட் எடுத்து லெப்ட் எடுத்து ஸ்ட்ராயிட்டா வந்தோம் மாமா” என்றாள்.
“ஏய்! என்ன கிண்டலா? எதுக்கு நீ இங்க வந்த இப்போ?”
“எதுக்கு மாமா வருவாங்க? உங்களைப் பார்க்க தான் வந்தேன் மாமா.”
“என்னது மாமாவா?”
“அதானே. மாமா எல்லாம் சொல்லக்கூடாது.” என்றான் மணி.
“இவரு என் மாமாதான். சரி உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்று முல்லை கேட்க,
“ம...ம...மணி.”
“ம்... மணி மாமா. நான் என் மாமாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது நடுவுல நீங்க மணி ஆட்டினிங்கன்னா, மணி மண்டையிலேயே நான் அடிப்பேன்.”

“ஐயோ! ஒய் டென்சன். யூ கண்டினியூ.” என்றான் மணி.
“அந்த பயம் இருக்கட்டும். சொல்லுங்க கள்வன் மாமா எங்க போறீங்க?” என்றாள் கணவனைப் பார்த்து.
“ஏய்! இங்க பாரு. நீ ஒரு புனிதமான தொழில் செய்யும் திருடின்னு நினைச்சி தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன். நீ போலீஸ் என்று தெரிந்த உடனே உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் கூட பரவாயில்லை. என் சித்திக்கு உன்ன சுத்தமாவே பிடிக்கல. அதனால அன்னைக்கு நடந்த கதையை நீ ஒரு கனவாக நினைத்து மறந்துடு. இப்ப வழியை விடு நாங்க கிளம்பறோம்” என்றான் கதிர்.
கீதாவைப் பார்த்து, “ஆன்ட்டி” என்றழைத்தாள் முல்லை.
“ஐயோ நான் போண்டி.” என்று கீதா கத்த,
“என்ன ஆன்ட்டி? என்னை உங்களுக்கு பிடிக்கலையா?”
“ஐயையோ நான் அப்படி சொல்லவே இல்லையே.”
“பார்த்தீங்களா மாமா. ஆன்ட்டிக்கு என்னை பிடிச்சிருக்காம்.”
“கிழவி இருடி உனக்கு இருக்குது” என்றான் கதிர்.
“டேய் போடா. இவளைப் பார்த்த உடனே எனக்குக் காலெல்லாம் நடுங்குதுடா.”
“எனக்கு எல்லாமே நடுங்குது” என்றான் மணி.

“ம்... மணி சத்தம் கேக்குதுடா.”
“ஏய் கொஞ்சம் கம்முனு இருடா மேடம் நீங்க உள்ள வாங்க” மகனை அதட்டி மருமகளை உள்ளே அழைத்தார்.
“மருமகள் வரேன். எனக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க மாட்டியா ஆன்ட்டி.”
“ஏய் கிழவி! இவகிட்ட என்ன பேச்சு. வா நம்ம போகலாம்.”
“ஹலோ உள்ள போங்க”
“ஏய் என்ன மிரட்டுரியா?” கதிர் கேட்க,

“யாரு மிரட்டுறது? நான் என் மாமியார் வீட்டுக்கு வரேன். இப்போ என்னை வீட்டுக்கு உள்ளே விடுறீங்களா? இல்ல நீங்க எல்லோரும் கவர்ன்மென்ட் மாமியார் வீட்டுக்கு வரீங்களா” என்றாள் திமிராக.
“ஐயோ மவனே இதுவரை நம் வம்சத்துல யாரும் போலீஸ் ஸ்டேஷனக்கு போனது இல்ல. எனக்கு வேற கல்யாணமே ஆகலை. இப்போ போய் நான் ஸ்டேஷன் போனால், உனக்கு யாருடா இனிமே சித்தப்பாவா வருவாங்க?”
“என்ன உளறுற?” என்று எரிச்சலாகக் கேட்டான்.
“என்னை யாருடா கட்டிப்பிங்கான்னு கேட்டேன்.”
“கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அத்த. கவலைப்படாதீங்க. சரி வாங்க வாங்க நேரமாகுது. அட வாங்க மாமா” என்று கணவனையும் இழுத்தாள்.

“ஏய்! இங்க பாரு என்ன பத்தி உனக்கு தெரியாது. போ நீ.”
“அதை தெரிஞ்சுக்கத்தான் மாமா வந்து இருக்கேன். அக்கா நீ போயி அந்த ரூமை அலங்காரம் பண்ணு.” என்றாள் கூலாக.
“ஏய் என்ன அலங்காரம்?”
“என்ன மாமா தெரியாத மாதிரியே கேட்கிற. இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் மாமா. மணி மாமா என் அக்காவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?” என்றாள் அவனிடமும்.
“இதோ இதோ உடனே போறேன்” என்று அவன் செல்ல,
“டேய் மணி! உன்னோட மண்டையை கட்டயெடுத்து அடிக்கப் போறேன் பாரு. உன் மணி அடிக்கிற வேலையை என்கிட்டயே காட்டுறியா?” என்று கதிர் கத்தினான்.
“மச்சான் என்னை என்னடா பண்ண சொல்ற? நீயாவது அடிப்ப. அவ பிச்சிடுவேன்னு சொல்றா. என்னை மன்னிச்சிடு மச்சான்” என்று சொன்னபடி மணியும், ஷாமலியும் ஒரு அறைக்குள் போனவர்கள், அந்த ரூமை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
“அத்தை இந்தாங்க பால்” என்று கீதாவிடம் முல்லை கொடுக்க,
“எனக்கு தெரியும்மா. இவன் என்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டினானோ, அன்னைக்கே எனக்கு பால் என்று தெரியும்” என்றார் கீதா.
“அய்யோ அத்தை காமெடி எல்லாம் பண்ணாதீங்க. இந்தப் பாலை சுண்டக் காய்ச்சி, பாதாம் பருப்பு, முந்திரிப் பயிறு எல்லாத்தையும் போட்டு முதலிரவுக்குக் கொடுங்க.”
“நீ உள்ள வரும் போதே பயிறு இறைய போகுதுனு நினைச்சேன்.”
“ம்... புரியல அத்த?”
“இல்ல. கடனை உடனை வாங்கியாவது அத்தனை பருப்பும் போட்டு தரேன்” என்றார்.
“சரி போங்க காய்ச்சி வையுங்க. கள்வரே இந்தாங்க உங்களுக்கு டிரஸ்” என்று ஒரு பையை நீட்டினாள்.
“எனக்கு வேணான்டி. என்னை கடுப்பேத்தி பார்க்காத.”
“தம்பி அவுங்களை வாடி போடின்னு கூப்பிடாத. சித்தியால இந்த வயசுக்கு மேல அடி எல்லாம் தாங்க முடியாதுடா மவனே!”
“கிழவி அதுக்கு என்னை இப்ப என்ன பண்ண சொல்ற?”
“அவ என்ன எல்லாம் செய்ய சொன்னாலும் அதெல்லாம் செஞ்சுடு.”
“நீ எல்லாம் ஒரு சித்தியா?”
“டேய் நானு சித்தியா இருக்க போய் தான்டா இதெல்லாம் சொல்றேன். இங்க பாரு. இந்த வயசுக்கு மேல எனக்கு இதெல்லாம் தேவையா? போங்கடா நான் போய் பாலை காய்ச்சறேன்” என்று சென்றார்/
“முல்லை எல்லாம் ரெடி ஆயிடுச்சு. நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா. போ” என்று வந்தாள் ஷாமிலி.
“ஓகே. நீ களம்பு. நாளைக்கு காலைல வா போதும்.”
“ஏய் என்னடி?”
“ஆமாக்கா. நீ கிளம்பு. அப்புறம் நாளைக்கு காலை டியூட்டி இருக்கு. சோ யூனிபார்ம் எடுத்துக்கிட்டு காலையிலேயே வந்துடு பிளீஸ்.”
“ம்ம்ம்... சரி வரேன்” என்றாள்.
“ஏய் எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டியா?”
தங்கையை முறைத்தாலும் சிரிப்புடன் “ஆல் தி பெஸ்ட். ஆல் தி பெஸ்ட். மணிபோயிட்டு வரேன்” என்று அவனிடமும் சொன்னாள்.
“அம்மா தயவுசெய்து போமா.” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
“மணி மாம்ஸ் நீங்களும் கிளம்பலாமே” என்றாள் முல்லை.
“அம்மா எனக்கு வீடு வாசல் எல்லாம் இல்லம்மா. என்னை எங்கம்மா போ சொல்ற?”
“இந்தாங்க காசு. நீங்க போய் ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கோங்க.”
“ஏன்? எதனால என் ஃப்ரெண்ட் போகணும்? இந்த வீட்டுக்கு கடவுள் மாதிரி அவன். நான் இருக்கிற வரைக்கும் இங்கதான் இருப்பான்.” என்று கோவப்பட்டான் கதிர்.
“மணி மாம்ஸ். நீங்க ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கிறீங்களா? இல்ல கேஸ் போட்டு உள்ள தள்ளவா?”
“இல்ல நான் நடுரோட்டில் கூட இருப்பேன். எனக்கு பிரச்சனை இல்லை. மச்சான் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொன்னபடி மணி கிளம்பினான்.
கீதா கை நடுக்கத்துடன் பாலை எடுத்து வந்து முல்லையிடம் தந்து, “எம்மா நான் எங்க போய் தூங்க?” எனக் கேட்டார்.
“அய்யோ அத்த. நீங்க இந்த வீட்டிலேயே இருக்கலாம். இந்த மாதிரி நேரத்துல வீட்ல ஒரு பெரியவங்க இருக்கிறது நல்லதுதானே.”
“இல்லமா. நானும் போய் ரோட்ல படுத்துக்கிறேன்.” என்றார் பவ்யமாய்.
“ஐயையோ! மருமக வீட்டுக்கு வந்த முதல் நாளே, மாமியார வீட்டை விட்டு துரத்திட்டா என்ற பாவம் எனக்கு வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க அத்த. மாமா ஒரு அஞ்சு நிமிஷம் நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன். இந்தாங்க நீங்களும் போய் வேட்டி சட்டையே கட்டிக்கோங்க.” என்றாள் முல்லை.
“என்னால் எல்லாம் கட்ட முடியாது.” வீம்பு செய்தான் கதிர்.
“நோ ப்ராப்ளம். நீங்க இதே காஸ்ட்யூமில் இருங்க. ஐ அம் ஹாப்பி” என்று சொன்னபடி முல்லை உள்ளே போனாள்.
“ஏய் கிழவி அவள் பல்ல தட்டுவன்னு பாத்தா, அவளுக்கு பால் காச்சி தர. உன்னை என்ன செய்யுறது?” என்று பல்லைக் கடித்தான் கதிர்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“போடா இவனே. அவ கோவமா பேசினால் கூட, நம்ம ஏதாவது அவளை பற்றி கணக்கு பண்ணலாம். ஆனா, அவ சிரித்து பேசுறத பார்த்தா எனக்கு அள்ளு விடுதுடா. இந்த இருவது வருஷ சர்வீஸ்ல, நான் இப்படி பயந்ததே இல்ல.”
“இரு அவளை என்ன பன்றேன் பாரு.” என்றான் கதிர்.
“யாரு? நீ? போடா.” என்றார் கீதா.
கதிர் கோவமாக, “இல்ல. அவளை கழுத்த பிடித்து...” என்று சொல்ல வருவதற்குள், முல்லை அழகிய பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு, தேவதை ஒன்று தென்றலைப் போல மிதந்து வருவதைப் பார்த்த கதிர் தன்னை மறந்து வாய் பிளந்தவன், காதலாகப் பார்த்து, “இல்ல. அவள் கழுத்தை கட்டி பிடிச்சு முத்தம் தந்து, ஐயோ என்ன ஒரு அழகு” என்று எதோ சொல்ல வந்து எதையோ மாற்றினான்.
“அடிங்கொய்யால. அவ உன்ன வச்சு டைம் பாஸ் பண்ணுறா. உன் வாயில குத்து குத்துன்னு குத்த போறா பாரு. நீ ஏன்டா அவளை ரசிக்குற? டேய்! மவனே! உனக்கு பாடிதான்டா ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குடா. இப்ப தான் அவளை எனக்கு பிடிக்கலைனு சொன்ன. இப்ப என்னமோ வாயை பொளக்குற. இது சரியில்லைடா மவனே” என்றார்.
“ஏய் கிழவி! எனக்கு அவள பிடிக்கும். ஆனால், அவ என் பொண்டாட்டி இல்ல.”
“ஆமாடா. நம்பிட்டேன். போடா போய் வேலையப் பாருடா. போயி அவ என்ன சொல்றாளோ அத செய்.” என்றார் ஓவியகீத்து.
“அத்த.” என்று பாசமாக அழைத்தாள்.
“அம்மாடி! நீ தயவு செய்து என்னை அத்தன்னு மட்டும் கூப்பிடாதமா. நீ அத்த அத்த என்று சொல்லும் போதெல்லாம், என் காதுல செத்த செத்தன்னு விழுது.” என்றார்.
“ஏன் கவலைப்படுறீங்க? உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நான் இருக்கிறேன்.” என்றாள் முல்லை.
“நீ இருப்ப தாயி. நான் இருப்பேனா?”
“இனி எல்லோரும் நல்லா இருப்போம் அத்த. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னபடி முல்லை அறைக்குள் போக. கதிர் கட்டிலில் கோபமாக அமர்ந்திருந்தவனின் அருகில் சென்று முல்லை அமர்ந்தாள்.
“மாமா.”
“இங்க பாருங்க. உங்களுக்கு நல்லா தெரியும். நான் ஏதோ தெரியாம உங்க கழுத்துல தாலி கட்டிட்டேன். நீங்க அதற்காக எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடுங்க. ஆனா, உங்களுக்கும் எனக்கும் எல்லாம் செட்டாகாது” என்றான்.
“ஏன் செட்டாகாது மாமா?”
“அது எதுவும் செட்டாகாது. அவ்வளவுதான்.”
“அதுதான் என்ன செட்டாகாது?” என்று கதிர் அருகில் முல்லை செல்ல, “ஏய்! இப்போ ஏன் என்கிட்ட வரீங்க?” என்று பதறினான் கதிர்.
“மாமா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. ஐ லவ் யூ மாமாக். நீ என்னை ஏத்துப்பியா?”
“நீ முதல்ல தள்ளு. ஏன் இப்படி கிட்ட நிக்குற. தள்ளிப் போ.”
“மாமா உன் கைதான் என் இடுப்புல இருக்கே. நான் எப்படிப் போறது? என்னை பார்த்து ஏன் பயப்படுற. நான் உன் பொண்டாட்டி தானே?” என்றாள்.
“இல்ல. நீ என் பொண்டாட்டி எல்லாம் இல்ல.”
“சரி. அப்போ நீ கட்டின தாலியை உன் கையாலேயே கழட்டிடு.” என்று முல்லை சொல்ல, கதிர் முல்லையின் கழுத்தில் கை வைக்கப் போனவன், முல்லையின் கலங்கிய கண்களை பார்த்ததும், அவன் கையை தானாக எடுத்துவிட்டான்.
“உன் கண்ணு... இந்தக் கண்ணை பார்த்து என்னால இந்த மாதிரி எல்லாம் பண்ண முடியாது.” என்றான்.
“எனக்கு தெரியும். என் கண்ணை உங்களுக்கு பிடிக்கும் மாமா. என் கண்ணுக்குள் நீங்க இருந்தீங்க. இருக்கீங்க. இருப்பீங்க.” என்றாள் முல்லை.
“இங்க பாருங்க. நீங்க சொல்றது எனக்கு புரியல. ஆனா, நீங்க போலீஸ் என்று எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் தாலி கட்டிருக்க மாட்டேன். நான் ஏதோ தெரியாமல் கட்டிட்டேன். நீங்களே கழட்டி என் கையில் கொடுத்துருங்க.”
“மாமா நீங்க முதல்ல இப்படி உட்காருங்க.” என்று கையைப் பிடித்து இழுக்க,
“ஏய்! என்னைத் தொடாதே” என்று தள்ளி அமர்ந்தான்.
“சரி மாமா. நான் தொடல. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.”
“இல்ல இல்ல. நீங்க என்னமோ என் கால்ல விழுவதைக் பார்த்தா. பலிகொடுக்க போகும் ஆட வெட்ட வர மாதிரியே இருக்கு.” என்று பயந்தான்.
“மாமா நான் இருக்கும் வரை உனக்கு ஒன்னும் ஆகாது.”
“ஐயோ போதும். உனக்கு என் மேல காதல் எல்லாம் இல்ல. எதோ ஒரு வகையில் நீ என்னை அர்ரெஸ்ட் பண்ண பாக்குற?” என்றான் பதற்றம் விலகாது.
“ஆமா. இங்க என்ன சினிமாவா எடுக்குறாங்க. நான் உண்மையாவே உன்னை லவ் பண்றேன் மாமா.”
“இல்ல. நான் நம்ப மாட்டேன்” என்றான்
“சரி மாமா. நான் என்ன பண்ணா நம்புவ?”
“அது... அது... ஏய் முதல்ல நான் ஏன் உன்னை நம்பனும்?” என்று முதலில் திணறி பின் வேகமாகக் கேட்டான்.
“ஏன்னா நான் உன் பொண்டாட்டி.”
“இல்ல இல்ல. நீ எனக்கு பொண்டாடியாக உனக்கு தகுதியில்ல.”
“மாமா பிளீஸ். அப்படி பேசாத. மனசுக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் முல்லை.
“இங்க பாரு உண்மைய சொல்லணும்னா...” என்று அவன் முடிக்கும் முன்,
“நீயும் போலீஸா மாம?” என்று கேட்டாள்.
“என்ன? நானா? கடுப்பைக் கிளப்பாதே. எனக்கு போலீஸ் பிடிக்காது. என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணமே இந்த காக்கி சட்டை தான்.”
“மாமா!” என்றாள் அதிர்ந்து போய்.
“ம்... நான் சீரியஸா சொல்றேன். போய்டு.”
“மாட்டேன் மாமா. இனிமே நீ தான் என் கணவன். இது தான் என் வீடு. பிளீஸ் என்னை இங்கேயே இருக்க விடு.”
“இல்ல நீ சொன்னா கேக்க மாட்ட. இரு உன்னை...” என்று சொன்னபடி கதிர், முல்லையின் கையைப் பிடித்து வெளியே அழைத்து போக முயல, முல்லை கதிரை கட்டி அணைத்தவள், தன் மேனியில் அவனைத் தாங்கியப்படி❤❤, “மாமா பிளீஸ். ஏன் இப்படி பண்ணுற? நீயும் நானும் காதல் பண்ணலாம் வா மாமா.” என்றாள்.
“முடியாது. நீ திருடியா இருக்கும் போது உன் மேல எனக்கு வந்த காதல், இப்போ கொஞ்சம் கூட இல்ல. எனக்கு உன்னை பிடிக்கல.”
“மாமா! என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா. எனக்காக நீ என்னவெல்லாம் பண்ணியிருக்க தெரியுமா?” என்றாள் முல்லை.
“என்ன சொல்லுற? நான் என்ன பண்ணினேன்?” என்றான் புரியாது.
“மாமா என் கண்ண பாரு. நான் யாருன்னு உனக்கு தெரியலயா?”
“யார் நீ? எனக்கு தெரியலையே?”
“நான் தான் மாமா. உன்னுடைய முல்லையோ...” ❤❤என்று முல்லை சொல்ல வருவதற்குள் முல்லையின் கைபேசி மணி அடிக்க❤❤
கதிரோ, “எப்பா நம்ம எஸ்கேப். ஏய்! நீ பேசு நான் வெளியே நிக்குறேன்.” என்றான்.
“ரூம் விட்டு வெளிய போன, போன் காலையும், உன் காலையும் சேர்த்து கட் பண்ணிடுவேன்.” என்று முல்லை பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் மீண்டும் அவளது கைபேசி மணி அடித்தது.
அதை எடுத்து, ஹலோ! சொல்ல,
“மேடம் நீங்க முல்லையோவியம் தானே?” என்று கேட்டான் ஒருவன்.
“ஆமாங்க. நான் ஓவியா தான் பேசுறேன்.” என்று முல்லை சொல்ல கதிர் கோபமாக அவளின் கழுத்தைப் பிடித்து, “ஏய்! உன் பேர் முல்லை தானே?” என்றான் கோபமாக.
“அ...அது வந்து...”
“ஏய்! நீ என்ன பேர் சொன்ன? அப்போ நீ... நீதான் அந்த ஓவியாவா?” ❤❤என்று கதிர் கேட்க. முல்லையின் கண்கள் கலங்கியபடி கதிரை பார்த்தாள்.
“யார் இந்த முல்லையோவியமும்? கதிரோவியமும்? இவர்கள் இருவருக்குள் இருக்கும் சம்பந்தம் என்ன?
பார்ப்போம்❤❤
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top