Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சீமக்கரை....
கதிர் வீடு...
தேர்தல்ல நிற்க போவதை பற்றி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?.என் தங்கச்சி குடும்பத்துல தான்,வழிவழியா தலைவரா இருக்காங்கனு உனக்கு தெரியுமா?,தெரியாதா?.
என் தாத்தன் காலத்திலிருந்து இந்த பதினாறு ஊருக்கும் தலைவரா இருந்திருக்காங்க.அப்படி இருக்கும் போது,உனக்கு எதுக்கு இந்த வேலை?.
சரி,பதவி மேல ஆச வந்துச்சே,அதை நீ எங்ககிட்ட சொல்லியிருந்தால், அன்புவை வாபஸ் வாங்க வச்சிருப்பேனே.ஏன்னா,அன்புக்கு தேர்தல்ல நிற்க கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.
ஊர் மக்கள் எல்லாரும் என்கிட்டயும், சிவசாமி மச்சான்கிட்டையும் பிடிவாதமா கேட்டு கிட்ட பிறகு தான், என் மருமவன் தேர்தல்ல நின்னுச்சினு தெரியுமானு கேள்விகளால் மகனை துளைத்தெடுத்த பிரகாசம், பதில் சொல்லு பெரியவனே என்க.
பெருமாளோ,தந்தையின் கேள்வியில் நிலை குலைந்து நின்றார்.நீ இப்படி வாய மூடி கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?.
அமைதியா இருப்பது நல்லதில்லைனு பிரகாசம் சொல்ல,அப்பொழுது முத்துவோ,அப்பா, நம்ப குடும்பம் பிரியிறதுக்கும், கதிர் இப்படி நடந்து கொண்டதுக்கும் மூல காரணிகளே, அந்த கண்ணனும்,அவன் பொண்ணு தேவியும் தான்.
என்னா என்று அனைவரும் அதிர்ந்தனர்.
ஆமாப்பா,அந்த ஆள் தானென்று பெருமாளும் சொல்லத் தொடங்கினார்.
பள்ளிக்கூடத்திலிருந்தே கண்ணன் எங்க கிட்ட சரியா பேச மாட்டான்.தானா போய் பேசுவோம், ஆனாலும் அவன் எங்களை பெருசா எடுத்துக்கவில்லை.பிறகு அவனை கண்டுக்காம விட்டுட்டோம்.கல்யாணம் ஆன பிறகு, கண்ணன் என் கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சான்.
எல்லா விஷயத்திலும் என்னை உயர்த்தி பேசுவான்.அதுலாம் சேர்த்து அவன் மேல எனக்கு நம்பிக்கையை விதைச்சிட்டு.எல்லா நல்லது கெட்டதுக்கும்,என் கிட்ட எல்லாரும் ஆலோசனை கேட்கும் போதெல்லாம்
சாதாரண மனுஷனா இருக்கும் போதே நீ நல்ல முடிவு எடுக்குற. பதவி இருந்தால் இன்னும் நல்லா இருக்குமென்க,அந்த ஆசையெல்லாம் இல்லைனு நானும் சொல்லிட்டேன்.
ஆனால், எனக்கே தெரியாமல் எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா, அந்த ஆசைய வளர்த்து கிட்டு இருந்திருக்கான்.ஒரு கட்டத்தில்,அந்த பதவி இருந்தால் பெருமையா இருக்குமேனு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.
வழக்கமா உங்க அத்தை வீட்டில் தானே ஜெயிக்கிறாங்க,இந்த முறை நீ நில்லு அப்படின்னு கண்ணன் தான் எனக்கு ஏத்தி விட்டான்.
"அன்பழகன் அமைதியானவன்".
நல்லது கெட்டதுங்களுக்கெல்லாம் அதிரடியான முடிவெடுக்க மாட்டான்.
நீயோ நேர்மையா பட்டுனு ஒடைச்சு சொல்லிவிடுவாய்.உனக்கு தான் இந்த பதவி சரியா வரும்னு எனக்கு கொம்பு சீவி கிட்டே இருந்தான்.நானும் கண்ணனோட பேச்சைக் கேட்டு ஆட ஆரம்பிச்சிட்டேன்.
அப்போ வேட்பாளரா அன்பு நின்னான். நீங்க எல்லாரும் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தது, எனக்கு கோபம் தான் வந்துச்சு.
நம்ம வீட்ல யாரும் ஒரு வார்த்தை கூட நீ தேர்தலில் கலந்துக்குறியானு கேட்கலையேனு நான் வருத்தப்பட,கண்ணன் தான் என்னை சமாதானப்படுத்தி,பேர் குடுக்க சொன்னான்.
எல்லார்கிட்டையும் நாங்க ஓட்டு கேட்டு போகும் போதெல்லாம் எங்களுக்கு முன்ன அன்புவும், கவிதாவும் அவங்க கூட பேசிட்டு போய்க்கொண்டு இருந்தாங்க.
இது எதார்த்தமா நடக்குல,உன் மச்சான் வேண்டும்னு பண்ணுறான்னு கண்ணன் என் கிட்ட சொல்லிட்டே இருந்தான்.
எலெக்சனுக்கு முதல் நாள், நாங்க வந்துட்டு இருக்கும்போது, ரெண்டு மூணு பேருக்கு அன்புவும், கவிதாவும் பணம் கொடுக்கறதை பார்த்தோம்.
அப்பொழுது கண்ணன் என்கிட்ட சொன்னது என்னவென்றால், எல்லாரும் அன்புக்கே ஓட்டு போடணும்னு பணம் கொடுத்துட்டு இருக்கிறான்.
இது ஒரு வாரமா நடக்குது.நான் சொன்னால் நீ நம்ப மாட்ட.இப்போ நேரிலே பாருன்னு..அதை பார்த்ததும் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.
பதவிக்காக என்ன வேணாலும் உன் மச்சான் பண்ணுவான்.
பொண்டாட்டியோட அண்ணன் நீ, முதல் முறையா தேர்தல்ல நிக்கிற, உனக்காக ஏன் அந்த பதவியை விட்டு கொடுக்க கூடாதுனு கண்ணன் என் கிட்ட கேட்டான்.எனக்கும் அது தான் தோனுச்சி.
மக்கள் மேல உள்ள நம்பிக்கையில் ஜெயித்த பின்னர்,அன்பு கிட்ட இதை பற்றி சண்டை போடனும்னு அமைதியா இருந்துட்டேன்.
அதேப்போல எலக்சன் முடிஞ்சி,ரிசல்டும் வந்தது.
அன்பு தான் தேர்தல்ல ஜெயிச்சான்னு மைக்கில் சொன்னதை கேட்டதும்,நான் தான் அப்பவே சொன்னேன் இல்லையா.
அன்புக்கு பதவி ஆசை வந்துட்டுனு.
பணத்தை கொடுத்து ஜெயிச்சிட்டான் பாருனு கண்ணன் என்கிட்ட சொன்னதை கேட்டு, எனக்கு தேர்தல்ல தோற்ற அவமானமும், அன்பு ஜெயித்ததும், கண்ணன் குத்தி காட்டி பேசுனதும் சேர்த்து ரொம்ப ஆத்திரம் வந்துட்டு.
இப்பவே எல்லாருக்கு முன்ன போய் நீ கேளு, அப்போ தான் உனக்கு நியாயம் கிடைக்கும்னு கண்ணன் சொன்னதை கேட்டு, நானும் அன்பு கிட்ட போனேன்.
அப்போ எல்லாரும் அன்புவை வாழ்த்திட்டு இருந்தாங்க.அதைப் பார்த்ததும் இன்னும் எனக்கு ஆத்திரம் வந்துருச்சு.பணத்தை கொடுத்து ஜெயிச்சிட்டு, என்ன தோற்கடித்த பெருமையாடானு நான் தான் அன்புவை முதல்ல அரைஞ்சேன்.
என்ன மச்சான் சொல்லுறா?, நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியலைனு அன்பு கேட்க,தெரியாத போல நடிக்கிறியாடானு சொல்லிட்டு, ஆத்திரத்துல பணத்துக்காக உன் பொண்டாட்டி, புள்ளைய கூட அனுப்புவடானு கேட்டுட்டேன்.
அதை கேட்டு அன்புக்கு கோவம் வந்துச்சி, பிறகு தான் என்னை அடிச்சான்.அன்றைக்கு எல்லாருக்கும் முன்பு என்னை அடிச்சது மட்டும் தான் எனக்கு மனசுல இருந்துச்சி.கோவத்துல நான் பேசுனதை மறந்துட்டேன்.
கண்ணன் இத்தனை வருஷமா என்னை பகடைக்காயா பயன்படுத்தி குளிர் காஞ்சிருக்கான்னு நேற்று தான் தெரியும். கதிரும், சீதாவும் நேற்று கேள்வி கேட்ட போது, என்னால் பதில் சொல்ல முடியலை.
சரி கோயில்ல போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலானு போகும் போது, கண்ணன் வீட்டுல வேலை செய்யும் குப்பன், குடியில பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்.
அதாவது கதிருக்கு கள்ளுல போதைய கலந்து கொடுத்து, தேவிய பற்றி பேச சொல்லிருக்கு அந்த புள்ளை.
ஆனால் குப்பனோ அன்பு என்னை அடிச்சதையும், தாமைரைக்கு வேற பையன் கூட கல்யாணம் கட்ட போறதை பற்றி, பேசிருக்கான்.
இதுக்கு கண்ணனோட மவள் காசு குடுத்ததுனு சொன்னதையெல்லாம் நான் கேட்டு, தேவி கிட்ட ஏன் இப்படி பண்ணுனனு கேட்பதற்காக, கண்ணன் வீட்டுக்கு போயிருந்த போது தான், எனக்கு இந்த உண்மை தெரிஞ்சிது.
கண்ணன் அவன் மகன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க, வெளியே நின்ற நானும், என்னை தேடிட்டு வந்த முத்துவும் கேட்டான்.
உன்னால தான்டா எங்க குடும்பம் பிரிஞ்சிதுனு முத்து அடிக்க போக, தேவும் நானும் தான் தடுத்தோம், கண்ணன் முகத்தை கூட எனக்கு பாக்க புடிக்கலை.
தம்பிய கூட்டிட்டு வந்துட்டேன் என்று தனக்கு தெரிந்தவற்றை பெருமாளும் சொல்லி முடித்தார்.
வள்ளி, முத்து, பெருமாள் மூவரும் இதுவரை சொல்லியதையெல்லாம் கேட்டவர்கள், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தனர்.
என்னைக்கு கவிதாவ அத்தனை பேருக்கு முன்னால் தப்பா பேசுனேனோ, அன்று இருந்து சீதா என் கிட்ட பேசுறது இல்லை.
அவ கையால எனக்கு பச்சை தண்ணி கூட தருவதில்லை என்று சொல்லியவர், பதவி ஆசையும், கேட்பார் பேச்சை கேட்டு அறிவிழந்து போய்ட்டேன்.
அநியாயமா வேதாவோட வாழ்க்கை என்னாலே போய்ட்டே, இந்த பாவத்தை எங்கு போய் தீர்ப்பேனென்று கதறி அழுதார்.
கதிரு உண்மை என்னனு தெரிஞ்சிட்டு இல்லை. இதுக்கு என்ன பண்ண போற?.
சொல்லு?...
எல்லாரையும் போல தானே உன்னை வளர்த்தேன்?, உன் மனசுல இவ்வளவு விஷம் இருக்குனு தெரியாம போய்ட்டே? என்றார் வள்ளி அப்பாயி.
அப்பாயி நான் தப்பா புரிஞ்சிக்கிட்டு தான் இப்படி பண்ணிட்டேனென்று கதிர் சொல்ல, ம்கும், உன் அப்பன் என் மவளையும், மருமவனையும் அசிங்க படுத்துனான்.
உன் சித்தப்பன், என் நாத்தனார் பொண்ணு வாழ்க்கையை கெடுத்தான்.
நீ என் பேத்தி வாழ்க்கையை கெடுத்த...
எவ்வளவு நல்ல காரியம் பண்ணிருக்கீங்க மூன்று பேரும்..
நல்லவனே உன் கேள்விக்கு பதில் தெரிஞ்சிட்டு தானே என்று வளவனை பார்த்து பெருமாள் கேட்க,வீட்டினரை ஒரு பார்வை பார்த்தவன் ச்சை என்று வெளியே சென்று விட்டான்.
செல்வம் தான் மற்றவர்களை போய் வேலைய பாருங்க என்று அனுப்பி வைத்தார்.
பார்வதி போய் டீய போட்டுக்கொடு.
மாமா எவ்வளவு நேரமா பட்னியா கிடக்க?, போய் வேலைய பாரு என்றவர், எலேய் என்ன வேடிக்கை?.
காத்தாட வெளியே போய்ட்டு வாங்க என்று கதிரை காட்டி ஜானிடம் சொல்ல, சரி மாமா என்றவன், வேலுவையும், கதிரையும் இரு கையில் பிடித்துக்கொண்டு, ஏரிக்கரையை நோக்கிச்சென்றான்.
செல்வி, இதையெல்லாம் மனசுல வச்சிக்க கூடாது, போய் உன் அத்தைக்கு கூட மாட எதாவது செய் என்றவர், நிலவா நீ வா மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு வரலாம் என்று சொல்லி, அனைவரையும் அந்த சூழலில் இருந்து அழாகாய் வெளியே கொண்டு வந்தார் செல்வம்.
மாமா என்றான் நிலவன்.
சொல்லு மாப்பிள்ளை என்றவாறே, ஊற வச்சிருந்த புண்ணாக்கை கரைத்து, மாடுகளுக்கு வைத்துக்கொண்டிருந்தார்.
இப்போ வேதாம்மா எங்கே இருக்காங்க மாமா?.
அவன் கேள்வியில் ஒரு நிமிடம் செய்த வேலையை நிறுத்தியவர், பின்னர் நீலகிரில என்று சொல்லி மற்ற மாடுகளுக்கு தீவனத்தை வைத்து விட்டு, கிணற்றில் இருந்து நீரை இறைத்து கையை கழுவினார்.
ஏன் மாமா, அண்ணி எங்க போயிருப்பாங்க? என்று மீண்டும் நிலவன் கேட்க,தெரியலையே சாமி. நான் தூக்கி வளர்த்த புள்ளைடா தாமரை...ஏழு வயசு வரை இந்த நெஞ்சில தான் தூங்கும், ராவுக்கு மட்டும் தான் கவிதா கூட படுக்கும்.
பெத்தது வேண்டுமானால் கவிதாவா இருக்கலாம், முக்கால் வாசி நேரம் என்கிட்டயும், உன் அத்தை கிட்ட தான் இருக்கும்.
பகலெல்லாம் உன் அத்தைக்காரி போய் தூக்கிட்டு வந்துருவாள், பொழுது சாய்ந்து தூங்குன பிறகு தான் கொண்டு போய் விட்டு வருவாள்.
தாமரைய பார்வதிக்கு ரொம்ப புடிக்க காரணம் சிந்துவைப்போலவே இருப்பதால் தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர்,இப்போ எம் புள்ளை எங்க இருக்குனே தெரியலையே மாப்பிள்ளைனு செல்வமும் கண் கலங்கினார்.
செல்வத்தின் கண்ணீரை பார்த்தவன்,ஏன் மாமா இப்படி?.இவ்வளவு நேரம் எங்க எல்லாருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு, இப்போ நீ கண் கலங்குறியே, இது சரியா?.
இது ஏதோ சோதனைக்காலம் போல மாமா.கூடிய சீக்கிரம் நம்ப அய்யனார் புண்ணியத்தில் எல்லா பிரச்சினையும் தீர்ந்து, நல்லதே நடக்கும் மாமா நம்பிக்கையோட இருப்போம்.
அவன் வார்தையை கேட்ட செல்வம், உன் வாய் வார்தை போலவே ஆகட்டும் மாப்பிள்ளையென்றார்.