• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சென்னை சிம்ஹன் பேலஸ்:

"கணவரிடம் போனில் பேசிக்கொண்டே லிப்டில் ஏறிய தேவி,கீழே இருக்கும் கார் பார்க்கிங்கில் வந்து இறங்க,அங்கே டிரைவரும் ரெடியாக இருந்தார்".


"பின்னர்,பின்பக்க கார் கதவை திறந்த தேவி உள்ளே உட்கார்ந்ததும், டிரைவர் வண்டியை வீட்டை நோக்கி ஓட்டினார்".

"ஓஓஓஓ வீட்டிற்கு கிளம்பிட்டியா டார்லிங்கென்று தனா கேட்க, ம்ம்,சரி நான் மெசேஜிற்கு வரேனென்று சொல்ல,வீட்டுக்கு போய் பேசுறேங்கனு அழைப்பை கட் பண்ணினார்".

"அரை மணி நேரம் பயணமோ,டிராபிக் காரணத்தால் மேலும் கால் மணி நேரம் அதிகமானது".இந்த மக்கள் எல்லாம் எங்கே தான் போய் தொலையறாங்கன்னு தெரியலை?.

எப்ப பார்த்தாலும் இந்த ட்ராபிக் உயிரை வாங்குதே என்று கோவமாக தேவி சொல்ல,ஏசியில் உட்கார்ந்திருக்கும் இந்த அம்மாவிற்கு கொடைச்சலா தான் இருக்குமென்று, டிரைவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

மேலும் பத்து நிமிடங்கள் சென்றே, பேலஸிற்குள் கார் வந்து நுழைந்தது.

ச்சூஊஊஊ என்று அலுத்துக்கொண்டு கதவை திறந்து இறங்கிய தேவி,வீட்டின் உள்ளே செல்லும் போதே,அங்கிருந்த வேலையாளிடம்,சுகர் இல்லாமல் ஒரு ஆப்பிள் ஜூஸென்று ஆர்டர் கொடுத்து விட்டு படியில் ஏறி,மேலே இருக்கு தனது அறைக்குள் சென்றார்.

"மாடியில் இருந்த தனது அறைக்கு வந்து,குளித்து முடித்து பிரஷ்ஷாகவும்,வேலையாள் வந்து கதவு தட்டவும் சரியாக இருந்தது".

வாங்க என்று சொன்னதும்,கதவைத் திறந்து கொண்டு கையில் ஜூஸோடு உள்ளே வந்தார்,தேவியின் ஆருயிர் தோழியும், வீட்டின் மேற்பார்வையாளருமான வசந்தி.

"தேவி ஜூஸ்,வா வசந்தி உட்காரு".

"இருக்கட்டும் தேவி,நீ முதலில் இந்த ஜூஸை குடினு தேவியிடம் நீட்டினார்".

"அதை வாங்கிக்கொண்டவர்,நீ இருக்கியேடி என்றபடியே குடித்து முடித்தவர்,உட்காரு வசந்தி".

"இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா?,அதான் உன் முகத்தை பார்த்தாலே நல்லா தெரியுதேனு வசந்தி சிரித்தார்".

"ஆமா வசந்தி,உள்ளுக்குள் இருக்கும் சந்தோஷம் தான் முகத்தில் தெரியுதுடி".

போயும் போயி ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவளா,என் வீட்டு மருமகள்?.

இங்குள்ள பணக்காரவங்கள் இந்த கோடீஸ்வரி விசாலாதேவிக்கு பொண்ணு கொடுக்க, நீ- நானென்று போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க, ".

"அப்படி இருக்கும் போதும்,ஒரு அன்னக்காவடியை போய் என் பையன் கல்யாணம் பண்ணியிருக்கானென்று நினைக்க, ரொம்ப கேவலமா இருக்கு வசந்தி".

"தேவி,இந்த விஷயம் வீராவுக்கு தெரியாமல் பார்த்துக்க வேண்டியது உன்னுடைய கடமையென்று வசந்தி சொல்ல,அவன் இங்கு வர வாய்ப்பே இல்லை".

" இந்தியா வந்தால் தானே,டைவர்ஸ் ஆனது பற்றி தெரியுமென்று, கர்வமாக சொன்னாள்".

"எப்படி சொல்ற தேவியென்று வசந்தி கேட்க,ஆமாடி அவன் கவனம் எல்லாம் இப்போதைக்கு புது பிராஞ்ச் ஓப்பன் பண்ணுவதிலும்,அவனோட தாத்தா பிசினஸிலும் தான் இருக்கு".

"அது நல்லா தெரிஞ்ச பிறகு தான், இதை நான் மூவ் பண்ணுனேன்டி".

"முதன் முதலில் அதை நான் பார்க்கும் போது,எனக்கு அப்படியே பச்சை மிளகாய் அரைச்சி உடம்பெல்லாம் பூசியது போல எரிஞ்சது தெரியுமா?".

"சரி இந்த விஷயத்தை இன்றோடு விட்டு விடுடி.அதான் அந்த பொண்ணுக்கும்,வீராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கோர்ட்டு முடிவு பண்ணிடுச்சு.பிறகு என்னடி, விட்டு தள்ளென்றார்.

"அய்யோ வசந்தி இந்த சந்தோஷத்தை தான் என்னால கொண்டாட முடியலைடி".

"இதை பற்றி யாருக்கும் தெரியாமல், டைவர்ஸ் வாங்க உன்னோட உதவி தான் பெருசா இருந்தது.

"இதுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் உனக்கு தகாது என்று தேவி சொல்ல,அடியேய்,நாம ரெண்டு பேரும் சின்ன வயசு தோழிங்கடி".

"உனக்கு செய்யாமல், வேற யாருக்கு செய்யப் போறேன்.பின்னர்,மேலும் சிறிது நேரம் இருவரும் பேசி விட்டு,கீழே வந்து மதிய உணவை சாப்பிட்டு முடித்தனர்".

"வசந்தி நம்ம ரெண்டு பேரும் வெளியில போலாமா?,அவரும் ஊர்ல இல்லை தானே?,எவ்வளவு நாளாவது நம்ம வெளியில போயினு தேவி சொல்ல,ம்ம் தாராளமாக போலாம்".

"எங்க போகலாம் என்று வசந்தி கேட்க,ம்ம் அப்போ நாம மகாபலிபுரம் போகலாமாடி,ஓகேடி என்றார் வசந்தி".

"பின்னர் இருவரும் சிறிது நிமிடத்தில் தயாராகி வெளியே இருக்கும் காரில் ஏற,டிரைவர் மகாபலிபுரம் நோக்கி காரை ஓட்டினார்".

பொள்ளாச்சி:

" நம்ப அன்பு,அடுத்த மாசம் சிங்கப்பூர்ல இருந்து மூன்று மாசம் லீவுக்கு வரான்மா".

" வயசும் 27 ஆகிடுச்சி".

" என்னதான் நான் தேனு பாலும் ஊற்றி வளர்த்தாலும்,அம்மாவா ஆக முடியாதே?,இந்த முறை அன்புக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பலான்னு,உன் மருமவன் சொல்லிட்டார்".

" நம்ப ஊட்ல பொண்ணு இருக்கும் போது,எதுக்கு வெளியே பாக்கணும்?, போய் அத்தை கிட்ட சொல்லிட்டு வாடினு அனுப்பி வச்சார்மானு தான் வந்த விஷயத்தை மலர் சொல்ல,ஆத்தா மீனாட்சி,உன்னை கும்புட்டதுக்கு,நீ கை விடலைம்மா என்றார் கண்ணம்மா பாட்டி".

"பின்னர்,ஏத்தா மலரு,நெசமா நீ உண்மைய தான் சொல்லுறியா?என்று கண்ணம்மா பாட்டி நம்பிக்கையில்லாமல் கேட்க,அய்யோ அம்மா,நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்ல போறேன்".

"அன்பு என்ன தான் என்னுடைய நாத்தனார் பிள்ளையா இருந்தாலும், பெத்த புள்ளையா தான் நான் வளர்த்தேன்".

"அவன் ரெண்டு வயசு குழந்தையா இருக்கும் போது,என் நாத்தனார் இறந்து போனாங்க.அதிலிருந்து ஆத்தா-அப்பனா இருந்து நானும் அவரும் தானமா வளர்த்தோம்".

"எந்த கெட்ட பழக்கமும் அன்புக்கு கிடையாது.ஐடிஐ படிச்சான். வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைத்தது".

"கடன் வாங்கி அனுப்பி வச்சோம்.அந்த கடனையும் அடைச்சான்.நல்லபடியா வீட்டை கட்டி, இன்னைக்கு சந்தோசமா இருக்கிறோம்மா".

"அந்த பிள்ளைக்கு,ஒரு கல்யாணம் காட்சி செய்து பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதாம்மா?.

"யாரோ ஒருத்தி வந்து,நம்ப வீட்டில் வாழுறதுக்கு,நம்ம தங்கச்சி பொண்ணு வந்தால்,காலத்துக்கும் நல்லா இருக்குமென்று எனக்கும் மனசுக்குள்ள தோணிச்சி".

"இத நான் சொன்னா அவர் பேராசைல சொல்றேன்னு நினைப்பாரு.அதனால் தான் நான் அமைதியா இருக்க,அவர் வாயாலே இந்த வார்த்தை வந்துச்சுமா".

"சொன்னது போதுன்னு நான் உடனே கிளம்பி வந்துட்டேன் என்று மலர் சொல்லி முடிக்க,சரித்தா, சரித்தா.ரொம்ப சந்தோஷம்".

"சரி வா நம்ம உடனே போயிட்டு அங்க ராக்கம்மா கிட்ட சொல்லலாம் என்று கண்ணம்மா பாட்டி எந்திரிக்க,பின்னர் மலரும் எழுந்து கொள்ள,இருவரும் வெளியே வந்தவர்கள்,வாசல் கதவை சாத்தி விட்டு,பத்து வீடு தள்ளி இருக்கும்,ஜனனியின் வீட்டை நோக்கி இருவரும் சென்றனர்".

"போகும் வழியில் சிலர் மலரை பார்த்தவர்கள் வா மலரு,எப்ப வந்த?,நல்லா இருக்கியா?புள்ள குட்டி சௌக்கியமா?என்று விசாரிக்க,மலரும் அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு,நலம் விசாரித்துக் கொண்டே சென்றனர்".

"இருவரும் ஜனனி வீட்டிற்கு வர, அங்கு திண்ணையில் உட்கார்ந்திருந்த மாரியப்பன் இருவரையும் பார்த்தவர்,அண்ணி வாங்க,வாங்க எப்ப வந்தீங்க?என்று விசாரித்தார்".

"இப்ப தாங்க வந்தேன்.
நல்லா இருக்கீங்களா?,என்னங்க கொழுந்தனாரே,கையில அடிபட்டுருக்கு,ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை என்று மலர் வருத்தமாக கேட்க, சின்ன அடி தாங்கண்ணி".

"அப்புறம் அண்ணி,வீட்டில் அண்ணன்,பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?".

"எல்லாரும் நல்லா இருக்காங்க கொழுந்தனாரே.நீங்க,அத்தை, ஜனனி மூணு பேரும் எப்படி இருக்கீங்க?.

இருக்கோம்ணி.ஜனனி நம்ப பெரிய வீட்டுக்கு கணக்கெழுத போயிருக்கு என்று சொல்ல,அப்படியாங்க, பன்னிரெண்டாவது படிக்கும் போது பார்த்தது.

ஆளு நல்லா வளந்துருப்பாள் தானே,ஆமா ஆமா உங்க தங்கச்சி போல மகளும் இருக்கு,மல்லிகா உசுரோட இருந்தால் வருவீங்க.தங்கச்சி இல்லையென்றதும், வரமாட்டீங்கிறீங்களே.

"அய்யோ கொழுந்தனாரே, அப்படிலாம் எதுவும் இல்லைங்க, வேணிய கட்டி குடுத்தது,அடுத்து புள்ள பேறு,வீடு கட்டுனதுனு,வேலைகள் இருந்ததால் இந்த பக்கம் வர முடியலைங்க".

"என் தங்கச்சி உசுரோட இல்லைணு, நான் நினைக்கலைங்க.முதல்ல எனக்கு இது மாமன் வீடுங்க,பிறகு தான்,என் தங்கச்சி வாழ வந்த வீடென்று சொல்லியவர்,தனது சித்தி மகளான மல்லிகாவை நினைத்து கண் கலங்கினார்".

"நடந்து முடிஞ்சத பேசி என்ன ஆகப்போகுதென்ற மாரியப்பான்,அம்மா அம்மா என்று குரல் கொடுத்தார்".

தோட்டத்தில் இருந்த ராக்கமா பாட்டியோ மகன் சத்தம் கேட்டு,இதோ வரேன் தம்பினு சொல்லிக் கொண்டே வந்தவர்,அங்கிருந்து மலரை பார்த்து, ஏத்தா மலரு,வாத்தா எப்ப வந்த?.

"நல்லா இருக்கியா?,பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?".

"எல்லாரும் நல்லா இருக்காங்கத்தை.நீங்க நல்லா இருக்கீங்களா?,எனக்கு என்னத்தா".

"உன் மவள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிறாள்.அவளை ஒருவன் கையில புடிச்சி குடுத்துட்டால், நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்".

ஏங்கத்தை இப்படி பேசுறீங்க என்றவர்,ஒரு நல்லா விஷயமாக தான் பேசிட்டு போலானு வந்திருக்கிறேன் என்று மலர் சொல்ல,என்னத்தா சொல்லுற என்று கேட்கும் போது,மூலையில் பல்லி சத்தம் போடும் சகுனம் கேட்டது.

நல்ல சகுனமா இருக்குத்தா. விஷயத்தை சொல்லு என்று,அந்த திண்ணையிலே ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டு ராக்கம்மா பாட்டி கேட்க,அன்புக்காக பொண்ணு கேட்டு வந்ததை பற்றி சொன்னார்.

ஆத்தா மகமாயி,என் பேத்திக்கு ஒரு நல்ல வழியை காட்டினியே தாயே என்று,கிழக்கே பார்த்து கையை எடுத்து கும்பிட்டார் ராக்கம்மா பாட்டி.

யார் வீட்டுக்கோ மருமகளா போறதுக்கு,உன் தங்கச்சி மவள் உன் வீட்டுக்கே மருமகளா வருவது எனக்கு ரொம்ப திருப்தி தான் ஆத்தா என்று சொல்லிய ராக்கம்மா பாட்டி,தம்பி மாரியப்பா நீ என்னப்பா சொல்லுற என்று மகனிடம் கேட்டார்.

நான் என்னம்மா சொல்லுறது, உங்களுக்கெல்லாம் புடிச்சிருந்தால், தாராளமா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.

பொம்பள புள்ளைய வீட்டுல வச்சிக்கிட்டு இருக்கிறது,வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு சமம் தான் என்றவர், ஆத்தாக்காரி இருந்திருந்தால், இதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாள் என்று சொல்லியவாறு மாரியப்பன் கண் கலங்கினார்.

"ஏங்க கொழுந்தனாரே,பெத்த ஆத்தா தான் இல்லை.பெரிய ஆத்தா இன்னும் உசுரோட தானே இருக்கிறேன் என்று கோவமாக மலர் சொல்ல,ஐயோ அண்ணி,தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க".

"அந்த நேரம் பார்த்து ஜனனியும் வீட்டுக்கு வந்தவள்,திண்ணையில் உட்கார்ந்திருந்தவரை பார்த்து விட்டு, பெரியம்மா என வேகமாய் வந்து மலரை கட்டிக் கொண்டாள்".

"அம்மாடி ஜனனி,நல்லா இருக்கியாடா கண்ணு என்று,தங்கை மகளை கிள்ளி முத்தம் கொடுத்தவருக்கு,நல்லா இருக்கேன்மா.நீங்க எப்படி இருக்கீங்க?,அக்கா,தம்பி பெரியப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா.

எல்லாரும் நல்லா இருக்காங்கடா.உன் அக்காக்காரி தான் குழந்தையோட லோல் பட்டுக்கிட்டு இருக்குறாளாம்.

நகரும் புள்ள இல்லையா,எதாவது எடுத்து வாய்ல வைக்கவும்,உன் மாமா பார்த்துட்டு சத்தம் போடுறாங்கனு, தினமும் புகார் சொல்லவே உன் அக்காகாரிக்கு நேரம் சரியா இருக்கென்று சிரித்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இலங்கை இரத்தினபுரி:

"கிரிஜா, இத்தனை வருஷமாக இந்த உண்மையை நம்ப மனசுக்குள்ளே தான் புதைத்து வச்சிருக்கோம்".அது அப்படியே இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது.இல்லை என்றால் தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்து,இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் நம்பிடமிருந்து பரிபோய்விடுமென்றார்".


"நீங்கள் சொல்வது என் அறிவிற்கு புரியுதுங்க மாமா,ஆனால் என் கூட பிறந்த ரத்தமாச்சேனு கிரிஜா பாட்டி கண்கலங்க,ஏண்டி அப்போ எனக்கு மட்டும் போனவளை நினைத்து கொஞ்சம் கூட கவலையே இல்லையாடி?".

"அய்யோ மாமா,நான் ஒன்னும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை".

" உங்களுக்கு என்னை விட அவள் மேல் தான் பேசம் அதிகமென்று தெரியுமென்க,ஹேய் கிரி நீ என் செல்ல பொண்டாட்டி.அவள் என் பாப்புடி என்றவாறு கண் கலங்கினார்"

"அய்யோ மாமா,நீங்க வருத்தப்படாதீங்கயென்று கணவரை சமாதானப்படுத்தியவர்,சரி வாங்க மாமா,போய் நம்ப ஜோசியரை பார்த்துவிட்டு வரலாமென்க,ம்ம் போகலாம்மா".

" பின்னர் இருவரும் ஆது மற்றும் ருத்ரன்,இருவருடைய ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வர, டிரைவர் அவர்களுக்கு முன்பு வந்து காரை நிறுத்தினார்".

"இருவரும் கதவைத் திறந்து பின் சீட்டில் உட்கார்ந்ததும்,தம்பி ஜோசியர் வீட்டுக்கு போப்பா என்றார் சிம்ஹன் தாத்தா".

"ஓகே சார் என்றபடியே ஜோசியர் வீட்டை நோக்கி,டிரைவர் காரை ஓட்டிச்சென்றார்".ஒரு மணி நேர பயணத்தில், ஜோசியர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

" காரிலிருந்து கீழே இறங்கிய இருவரும்,அங்கிருந்த கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று கை கூப்பி வணங்கினர்".

" எவ்வளவு சஞ்சலத்தோடு வந்தாலும், இந்த கண்ணனை பார்த்து விட்டால் மனம் இளகுவாகிடுதுங்கனு கிரிஜா பாட்டி சொல்ல,ஆமா கிரிஜா".

"ஜோசியம் பார்க்க வந்த போல தெரியவில்லை, ஏதோ தியானத்திற்கு வந்த போல தான் இருக்கென்றவர், சரி வாம்மா உள்ளே போகலாம்".

" மீண்டும் கண்ணனை வணங்கி விட்டு,கணவரோடு கிரிஜா பாட்டியும் இணைந்து கொண்டார்".

" இவர்கள் போன நேரம் வேறு யாரும் வராததால்,ஜோசியரும் ஃப்ரியாக தான் இருந்தார்".

"வணக்கம் என்ற சிம்ஹன் தம்பதியின் குரலை கேட்டு,எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜோசியர் நிமிர்ந்து பார்த்து விட்டு,வாங்கோ சார், வாங்கோ மா என்றார்".

" பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, வந்த விஷயத்தை கிரிஜா பாட்டி சொல்ல,அவர் நீட்டிய ஜாதக நோட்டை வாங்கி பார்க்கலானார்".

" இருவரின் ஜாதகத்தை கணித்து முடித்து நிமிர்ந்தவர்,தாராளமாக நாளை மறுநாள் கடையை ஓபன் பண்ணலாம்.ரெண்டு பேரும் சீரும் சிறப்போடு நல்லா வருவாங்க".

" தொட்டது எல்லாம் பொன்னாகும்".

" ஆரம்பத்தில் பெருசா போகாதுமா, போகப்போக,அசூர வளர்ச்சி தான்".

"நட்புக்கு இலக்கணமா இந்த ரெண்டு பையனுங்க தான் இருப்பாங்க என்றவர்,அப்புறம் ஒரு விஷயமென்று தயங்கினார்".

எதா இருந்தாலும் சொல்லுங்களென்று சிம்ஹன் தாத்தா சொல்ல,இந்த தம்பிக்கு ஒரு கண்டம் வரும்.அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

"உயிருக்கு ஆபத்து இல்லை".

"ஆனால்,எதிர்பாராத நேரத்தில் இந்த பையனோட வாழ்க்கையில் எல்லாமே நடந்து முடிஞ்சிடுமென்று,ருத்ரனின் ஜாதகத்தை காட்டி சொல்லி முடித்தார்".

அவர் சொன்னதை கேட்டவர்கள், அய்யோ என் பேரனுக்கு என்னாகுமோ என்று பதற,அம்மா, அந்த தெய்வத்தின் மேலே நம்பிக்கை வையுங்கள்.

பின்னர் அவருக்கான பணத்தைக் கொடுத்து விட்டு,இருவரும் வெளியே வந்தனர்.

கிரிஜா இதையெல்லாம் மனசுல போட்டு குழம்பாதடி என்றவரிடம்,மாமா சாமி கும்பிட்டு போகலாமென்க,சரி என்று இருவரும் மீண்டும் கண்ணன் சிலை இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.

நீயே எல்லாம் பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு காரில் ஏறி வீட்டிற்கு வந்த சிம்ஹன் தம்பதியினர் இருவரும் ஜோசியர் சொன்னதையே நினைத்துக் கொண்டு,ஏனோ தானோவென்று இரவு உணவை சாப்பிட்டு முடித்ததும்,வீட்டுக்கதவை பூட்டினர்.

ருத்ரனிடம் இன்னொரு சாவி இருப்பதால்,கவலையின்றி தங்களது அறைக்குள் சென்று படுத்துவிட்டனர்.

அதிகாலையில் ஆதவன், தனது செங்கதிர்களை தங்கமாய் வீசிக்கொண்டு கிழக்கே உதயமானான்.

வழக்கம் போல எழுந்த சிம்ஹன் தம்பதியினர், வாக்கிங் செல்வதற்காக உள்ள புல் தரையில், இருவரும் நடை பயிற்ச்சியை ஆரம்பித்தனர்.

நடை பயிற்ச்சியை முடித்து இருவரும் உள்ளே வந்து சோபாவில் உட்கார, வேலையாள் ஒருவர் அங்கு வந்து, இருவருக்கும் ராகி கஞ்சியை கொடுத்தார்.

இன்றைக்கும் இதே கஞ்சியானு பல்லை கடித்த சிம்ஹன் தாத்தா, கண்ணை மூடி உப்பு சப்பில்லாத கஞ்சியை குடித்து முடித்தவர், கண்ணாடி டீப்பாயின் மேல் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினார்.

கிரிஜா பாட்டியும் ராகி கஞ்சியை விரும்பி குடித்து விட்டு( நாட்டு சர்க்கரை கலந்தது) தங்களது ரூமிற்கு சென்றவர் குளித்து முடித்து,கணவர் வாங்கி தந்த புது புடவையை கட்டிக்கொண்டு கீழே வந்தார்.

மனைவியை பார்த்த சிம்ஹன் தாத்தா,வாவ் அழகி தான் என் பொண்டாட்டி என்க, வேலையாட்களோ அவர் சொல்வதை கேட்டு சிரித்தனர்.

ஏய் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?,எம் பொண்டாட்டி அழகா இருக்காணு நான் பொய் சொல்லுவது போல இருக்கேனு சிம்ஹன் தாத்தா சொல்ல,அதற்கும் சிரித்தனர்.

கணவரை ஒரு முறை முறைத்து விட்டு,பூஜையறைக்கு சென்று வழக்கமான பூஜையை செய்தவர், சாமி கும்பிட்டு வெளியே வந்தார்.

திருச்சூர்:

"ஆர்கலியின் அதிர்ச்சியை பார்த்த கிரிஜா பாட்டி,ஆமா அம்மு,எழுபது வருஷத்திற்கு முன்னர்,இந்நாளில் தான் நான் பிறந்தேனென்றார்".

" அம்மாச்சி,இன்று தான் எனக்கும் பர்த்டே என்று ஆர்கலி சொல்ல, என்னாவென்று இப்பொழுது சைலஜா பாட்டியும் அதிர்ந்தார்".

" சுந்தரபாண்டியன் தாத்தாவோ, மனைவியின் முகத்தை பார்க்க திராணியின்றி,வேறு பக்கம் தனது முகத்தை திருப்பிக்கொண்டார்".

" மாடியில் இருந்து இறங்கி வந்த வசுந்தரா,அம்மு ஹேப்பி பர்த்டே என்க,உங்களுக்கு எப்படி மேடம் என் பர்த்டே இன்று தான் என்பது தெரியுமென்று கேட்டாள்?..".

"பெற்றவளுக்கு தெரியாதா பிள்ளையோட பிறந்தநாளென்று,வசு தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டவர்,நீ அம்மாகிட்ட சொன்னதை கேட்டேன்".

" சரி போய் குளிச்சிட்டு வா அம்முனு அவளை அனுப்பி விட்டு, இருபத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு பூஜையறைக்கு சென்ற வசு, என் மகள் நல்லா இருக்கணுமென்று வேண்டிக்கொண்டு, அங்கிருந்து சென்றார்".

"மகளின் இந்த மாற்றத்தை கண்ட, சைலஜா பாட்டிக்கு கண் கலங்கியது".

" கடந்த 23 வருடங்களாக,இந்த நாளில் வசு எதையோ பறிகொடுத்த போல இருந்ததற்கான காரணம், இத்தனை வருடத்திற்கு பிறகு இன்று தான் சைலஜா பாட்டிக்கு புரிந்தது".

" என் மகள் எவ்வளவு வேதனை பட்டிருப்பாளென்றவர்,நிச்சயமாக இந்த விஷயத்தில் நான் உங்களை மன்னிக்கமாட்டேனென்று கணவரிடம் சொல்லி விட்டு,கிச்சனிற்குள் சென்றார்".

" தனது அன்பு மனைவி சொல்லிச் சென்றதை கேட்ட சுந்தரபாண்டியனுக்கு மனது மிகவும் வலித்தது".

அன்று தான் செய்தது நல்லது என்று நினைக்க, இன்றோ அது எத்தனை பெரிய வலியை கொடுத்திருக்கிறது என்பது காலம் கடந்தே அவருக்கு புரிந்தது.

ஒரு வேளை மகளிடம்,குழந்தை பற்றி சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்குமோ என்று நினைத்து காலம் கடந்து சென்று இன்று வருத்தப்பட்டார்.

" வழக்கம் போல் இந்த நாளில், ஆசிரமத்திற்கு சென்று தனது குழந்தையை நினைத்து, அங்குள்ளவர்களுக்கு உணவும் உடையும் வழங்குவது, வசுவின் வழக்கம்".

" எப்பொழுதும் சோகத்தை தாங்கிய முகத்தில்,லேசான புன்னைகையோடு செய்ய சொல்லுவார்".

ஆனால் இந்த முறை மகிழ்ச்சியோடு, அங்கிருப்பவர்களுக்கு உணவு வகைகளை ஏற்பாடு செய்ய சொல்லி பணத்தை கொடுத்த வசுவின் முகத்தை பார்த்த ஆசிரம மேலாளர், இந்த மகிழ்ச்சி எப்போதும் உங்களோடு நிலைத்திருக்கட்டுமா என்றார்.

ஆர்கலியும் குளித்து முடித்தவள், முதல் நாள் வரும் வழியில்,தனது அக்கவுண்டில் இருந்த சொற்ப பணத்தில் எளிமையான உடைகளை இரண்டு செட் வாங்கியிருந்தாள்.

அதில் ஒரு புடவையை எடுத்து கட்டிக்கொண்டு,நீண்ட பின்னலை ஈரம் போக துவட்டியவள்,இரு பக்கமும் சிறிது முடியை எடுத்து கிளிப்பை போட்டுக்கொண்டு,லேசாக கீழே உள்ள முடியை பிண்ணி ஹேர்பேண்டை போட்டுக்கொண்டாள்.

பின்னர் நெற்றியில் சின்ன பொட்டை வைத்துக்கொண்டு வெளியே வந்தவள்,நேராக சாமி ரூம் வாசலில் நின்று மனதிற்குள் எதையோ வேண்டிக்கொண்டாள்.

அங்கு வந்த சைலஜா பாட்டி,உள்ளே போய் குங்கும தட்டை எடுத்து வந்து, பேத்தியின் நெற்றியில் மஞ்சள்- குங்குமத்தை திலகமிட்டார்.

அவர் செயலில் கண் திறந்தவள், அம்மாச்சி என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கயென்று அவர் காலில் விழ, அம்மாடி புள்ளதாச்சிகாரி இப்படி கீழே குனியாதம்மா என்று பேத்தியை தூக்கி விட்டார்.

சுந்தரபாண்டியன் எதிரில் சென்றவள்,தாத்தா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கனு அவருடைய காலிலும் விழப்போக, பேத்தியை குனிய விடாமல் தடுத்து நிறுத்தியவர்,தீர்க்க சுமங்கலியாக நல்லா இருடா அம்முனு அவரும் ஆசீர்வதித்தார்.

உங்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாச்சினு ஆர்கலி சொல்ல,மகிழ்ச்சிடா அம்மு.

பிறந்தநாள் பேபிக்கு கிப்ட் கொடுக்கணுமே சைலஜா என்று மனைவியை பார்த்து சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க, ஆமாங்க,கண்டிப்பா கொடுக்கணும் என்றவாறு தனது அறைக்குள் சென்றார்.

சிறிதா நிமிடங்கள் சென்று வெளியே வந்தவர்,இந்த அம்மாச்சி- தாத்தாவோட பரிசு அம்மு என்று கையில் இருந்த தாம்பாளத்தை ஆர்கலியின் முன்பு நீட்ட,அதை பார்த்து மலைத்து நின்றாள்.

"என்னடா அம்மு,ஏன் இப்படி நிக்கிறாயென்றார் சைலஜா பாட்டி".

அவர் குரலில் நினைவுக்கு வந்தவள், அம்மாச்சி நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துக்காதீங்க.

"உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் மட்டுமே போதும்,இந்த பரிசு எல்லாம் எனக்கு வேண்டாம் என்று ஆர்கலி, பிடிவாதமாக மறுத்து விட்டாள்".

அம்மாடி இது என்னோட பிறந்தநாளுக்கு நான் கொடுக்கிறேன் என்று சொல்ல,அதற்கு மேலும் மறுக்க முடியாமல்,புடவை மற்றும் குங்குமச்சிமிழையும் எடுத்துக் கொண்டாள்.

"பாட்டியும்,தாத்தாவும்,இதையாவது எடுத்துக்கொண்டாளேனு திருப்திபட்டுக்கொண்டனர் ".

"சரி அம்மாச்சி".

நான் போய் இந்த புடவையை ரூமில் வைத்து விட்டு வருகிறேனென்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

ஏங்க,என்றபடியே சைலஜா பாட்டி கண்கலங்க,அவங்களும் நல்லா தான் இருப்பாங்க சைலுமா.

"மனசு கேட்களையேங்கனு சொல்லி மீண்டும் சைலு பாட்டி கண் கலங்கினார்".

அப்பொழு அம்மா என்ற குரலோடு வீட்டிற்குள் வந்த மைக்கேல், பெரியவர்கள் இருவரும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று,அவர்கள் காலில் விழ,நோய் நொடியின்றி நல்லா இருப்பா என்றனர்.

இந்தாங்கம்மா என்று கையில் இருந்த பார்சலை கொடுக்க,சந்தோஷம்பா என்றபடியே மைக்கேல் நீட்டிய பார்சலை வாங்கிக்கொண்டார்.

உன்னையும் ஒரு குடும்பமாக பார்த்துட்டால்,எங்களுக்கு பரிபூரண திருப்தியாகிடும் தம்பியென்று தம்பதியினர் இருவரும் சொல்ல,அதான் நீங்க இருக்கீங்களேம்மா என்றவர்,அம்மு அம்மு என்று கூப்பிட்டார்.

இதோ வரேன் மாமா என்று ஆர்கலி சொல்வதை கேட்டு,சைலு பாட்டியும், தாத்தாவும் அதிர்ந்தனர்!!.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top