- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
2
இரவு ஒருமணி இருக்கும். அரையெங்கும் இருள் மட்டுமே! திடீரென அனுரதி அங்கங்கள் முரட்டு கையுள்ள ஆண் ஒருவனால் தொடப்பட, பதறியடித்து எழ நினைத்தும், எழ முடியாமல் போனது. கத்தப் போனவளின் வாயை இடது கையால் மூடி, வலது கையால் அவள் உடல் முழுவதும் தடவ, போராடி திணறித் துடித்து எதுவும் செய்ய இயலாது தவித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் பெண்ணின் உடலை தொட்டுத் தடவியவன், இருளைப் பயன்படுத்தி அங்கிருந்து ஓடி மறைந்தான்.
‘யார்? யார் அவன்?’ மனமும், உடலும் துடிக்க, ஆடையை சரி செய்து மின்விளக்கை ஒளிரவிட, சுற்றிலும் உறவினர்கள் படுத்திருந்தார்கள். அதிர்ச்சிதான் அவளுக்கு. ‘இத்தனை பேர் இருக்கும்பொழுது எப்படி தைரியம் வந்தது அவனுக்கு? இந்த மாலினி எங்கே போனாள்?’ தோழியும் இல்லாது போக, உள்ளக் குமுறல்களைக் கொட்ட வழியில்லாது தவித்தாள் பாவை.
‘இதுவும் கனவாக இருந்திருக்கக் கூடாதா’ என்ற தவிப்பு அவள் உள்ளமெங்கும். ஆனால், நடந்தது நிஜமல்லவா. ‘எப்படி மறப்பது? எனக்கு இந்தக் கொடுமையைச் செய்தது யார்?’ கேள்வி மட்டுமே அவளிடம் இருக்க, திரும்பவும் அச்சம்பவம் நடந்துவிடுமோ என்ற பயத்திலேயே உறக்கம் இல்லாமல் அவ்விரவு கழிந்தது.
காலை நான்கு மணிபோல் மணமகளை எழுப்பி குளிக்க வைத்து, அழகு நிலையப் பெண்கள் அலங்காரம் செய்து முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் பெண்ணழைக்க, தன் தம்பி, மாலினி மற்றும் சில பெண்களுடன் மேடையேறினாள்.
அடுத்த சில நிமிடங்களில் கெட்டிமேளச் சத்தம் கேட்க, ரவிசங்கர் அனுரதி கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் பயத்திலும், படபடப்பிலும், உள்ளக் கொதிப்பிலும் இருந்தவளுக்கு இப்போது சற்றே ஆசுவாசமாகியது.
சடங்கு சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கையில், மாலினியைக் கண்ட அனுரதி, ‘ஜோடிப்பொருத்தம் எப்படி?’ என்பதைக் கண்களால் கேட்க, ‘சூப்பர்’ என்றாள் அவளும். அதில் புன்னகைத்து கணவனைக் காண, அவன் பார்வையோ எங்கோ இருக்க, எங்கேயென்று பார்த்தவள் சற்றே அதிர்ந்துதான் போனாள்.
படங்களில் நகைச்சுவைக்காக சொல்வதுபோல், ‘காமப்பார்வையால்ல இருக்கு’ என்றிருந்தது அவன் பார்வை. மேலும் அவனின் பார்வை போன இடங்கள் சற்றே அருவருப்பு கொடுத்தது என்றால் மிகையில்லை. நேற்றைய அவனின் பார்வைக்கான அர்த்தம் தற்பொழுது புரிந்தது. ஆம். காமம் மட்டுமே அப்பார்வைதனில். சிறிதும் காதலென்பது அதிலில்லை. ஏனோ உடலெங்கும் சிறு நடுக்கம். ‘திருமணமென்றால் காமமும் அதில் உண்டுதானே. அதனால் பார்க்கிறானோ? பின் ஏன் தனக்குப் பயம் வரவேண்டும்? தன் மனைவி என்ற உரிமையில் பார்த்திருக்கலாம்’ என தனக்குத்தானே சமாதானம் செய்து புன்னகையுடன் அடுத்தடுத்த சடங்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
முதலில் பெண் வீடு சென்று சில சம்பிரதாயங்கள் முடித்து, அடுத்து பையன் வீடு சென்று விளக்கேற்றி, பால்பழம் கொடுத்து என மாலை நான்கு மணிபோல் ‘மறுவீடு அழைக்க நாளை வருகிறோம்’ என்று தாய், தம்பியுடன் இன்னும் சில உறவுகளும் விடைபெற, ஏனோ மனம் மாலினியைத் தேடியது.
அவளிடம் மனம் விட்டுப் பேசினால், தன் பயம் தீருமோ என்பதற்காக அவளை எங்கே என்று தாயிடம் கேட்க, “ஏன்னு தெரியலைம்மா. இரண்டு நாள் வரை உன்கூட இருப்பேன்னுதான் சொன்னா. ஏதோ அவசரம்னு கிளம்பிட்டா” என்றார் சாரதா.
“சரிம்மா. காலையில சீக்கிரம் வந்திருங்க. வர அரைமணி நேரம் தாமதமானாலும் நாங்க அங்க வந்திருவோம்” என்றாள் மிரட்டலாக.
“அது சரி” என சிரித்தவர், “நல்லாயிருக்கணும் அனுமா” மகளின் நெற்றியில் முத்தமிட்டு கலங்கிய கண்களைத் துடைத்தபடி சென்றார்.
தாய் சென்றதும் அழுத முகத்தை அழுந்தத் துடைத்து, ரவிசங்கரின் தாயிடம் பாத்ரூம் எங்கேயென கேட்டு போய் வந்தவள், “உங்க பையன் எங்கே அத்தை? ஆளையே காணோம்?” என கேட்டாள்.
அவரோ, “எ...என் பையன்.. ஆ...ஆங்... ப...பக்கத்து ரூம்ல ட்ரெஸ் மாற்றப் போயிருக்கான்மா.” சற்று திணறலாகவே பதில் சொன்னார்.
“உங்களுக்கு திக்குவாயா அத்தை?”
“இல்லையேமா” என்று உடனடி பதில் கொடுத்தார்.
“கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து நிறைய தடுமாருறீங்க. அதான் தெரிஞ்சிக்கக் கேட்டேன்” என்றாள்.
“அ...அது தொண்டைப் பிரச்சனைமா” என செருமிக் காண்பித்து, “நீ ஹால்ல உட்காருமா இப்ப வந்திருவான். வந்ததும் இரண்டு பேரும் சாப்பிட்டு தூங்கப் போங்க” என்றார்.
“ம்... சரிங்க அத்தை” என்றவள் முகத்தில் சிறிதாக வெட்கம்.
என்ன நினைத்தாரோ, “ஜாக்கிரதையா இருந்துக்கோமா” என அறிவுறுத்தி பெருமூச்சுடன் அங்கிருந்து அகல, ‘என்ன வார்த்தை இது? ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு.’ செல்லும் அவரையே வித்தியாசமாகப் பார்த்திருந்தாள் அனுரதி.
‘இந்த மானி ஏன் போன் பண்ணலை? நாம பண்ணுவோமா? நோ நோ ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் அவளை வெறுப்பேத்துறதுக்காக பண்ணலாம்’ என்றெண்ணி தோழிக்கு அழைப்பதை கைவிட்டாள்.
சம்பிரதாயத்திற்காக என்று கூட அருகில் எவருமில்லை. வீடே வெறிச்சோடி இருக்க திகில் படம் பார்க்கும் உணர்வு வந்தது. ‘சே... முதல் ராத்திரியில் எதிர்மறையான எண்ணம் எதற்கு அனு? நேர்மறை எண்ணம் இருந்தால் நல்லதே நடக்கும்’ என்றெண்ணி, எந்தவித அலங்காரமும் இல்லாமல் பால் செம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.
நுழைந்த நொடியிலிருந்து பதற்றம், தவிப்பு, ஆர்வம் எல்லாம் சேர்ந்து வியர்வையை உருவாக்க, ‘பயத்தைக் குறை அனு’ என மானசீகமாகத் தலையில் அடித்தவள், “ஏய்! என்ன ஸ்லோவா வர்ற” என்ற அவனின் கடுமையான குரலில், நிஜத்தில் பயம் வர நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சீக்கிரம் வா வேலையிருக்கு” என்றான்.
‘வேலையா? என்ன வேலை?’ ஏனோ படித்த யாவும் நினைவில் இல்லாது போக, பெண்ணின் தயக்கமோ இன்னும் அதிகரிக்க, அவன் அருகில் சென்றதும் பாலை நீட்டினாள் அவன் அவசரம் புரியாது.
“ஏய் அறிவிருக்காடி? இந்த நேரத்தில் பாலைக்குடிச்சா வயிறு நிறைஞ்சிரும். அப்புறம் எதுவும் பண்ண மூட் வராது” என்று அதை வாங்கி ஓரம் வைத்து அவளை நெருங்க, அவனின் அறிவிருக்காடி வார்த்தையிலேயே அரண்டு போனவள், அவன் அருகில் வரும் வேகம் கண்டு பயந்து போனாள்.
‘கடவுளே! ஆரம்பமே நெருடுதே. வார்த்தைகள்ல நாகரீகம்னு ஒண்ணு இருக்கிறார்போல் இல்லவேயில்லை. ‘டி’ என்கிற வார்த்தை கணவன் சொன்னா அழகாயிருக்கும்னு சொன்னா அந்த லூசு. இவன் ‘டி’ சொன்னா வாந்தில்ல வருது’ என நினைத்து முடிக்கும் முன், அவள் உடல் அங்கங்களில் அவன் கைவைக்கவும், “ஏய் என்ன பண்றீங்க?” என்று கத்தி பதறித்துடித்து விலகப்பார்க்க, அவன் விட்டால்தானே!
கட்டிலில் தள்ளியவன் அவள் மேல் படர்கையில் தடுத்தவளுக்கு ஏதேதோ தோன்ற, அவனின் இந்த செயலில் கண்கள் கண்ணீரைச் சிந்த, “நே...நேத்து நைட் நீ... நீங்கதான்...” வார்த்தைகள் சிக்கித் தவித்தது,
“ஆமாடி. கல்யாணத்துக்கு முன்ன கட்டிக்கப் போறவளைத் தொட்டதே இல்லையான்னு ஃப்ரண்ட்ஸ் கிண்டல் செய்தாங்கடி. அதான் வந்து... அதுக்கு மேல போகலாம்னா சுற்றிலும் ஆள்கள் இருந்தாங்க. இல்லைன்னா...”
ச்சீ... என வெறுத்துப்போனது அனுரதிக்கு. தன் திருமண வாழ்க்கையின் ஆரம்பம் இப்படி இருக்குமென்று கனவிலும் நினைத்தாளில்லை. அவனோ அவளை விடாதிருக்க, “இப்ப வேண்டாமே ப்ளீஸ். எனக்குப் பயமாயிருக்கு” என அவளால் முடிந்த மட்டும் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தாள்.
அதில் பொறுமை இழந்தவனோ, “வேண்டாமா? இதுக்குத்தான இன்னைக்கு நடந்த எல்லாமே. நானே வெறியில் இருக்கேன் பேசாம அனுபவி. இல்லை அமைதியா இரு. எதாவது பேசின” என்ற எச்சரிக்கையுடன் அவளின் ஆடையில் கைவைத்தான்.
“இல்ல முடியாது. எனக்கு இது வேண்டாம். என்னை விடு” என்று தடுக்கத் தடுக்க, அவனின் மூர்க்கத்தனமும் அதிகமாகி அவளை ஒருவழியாக்க, கத்திக் கதறிவிட்டாள்.