• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி 11

“இவன் எப்படி இங்கே? என்று ஆராய்ச்சியாய்ப் பார்த்திருந்தாள் காருடன் நின்றிருந்த துர்வாவையும், அவனின் குடும்பத்தினரையும்.
"என்னமா அப்படி பாக்குற? உன் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லன்னு கனகா துர்வாவுக்கு கால் பண்ணாள். நான் தான் நம்ம எல்லோருமே போய் உன் அப்பாவை பாக்கலாம்ன்னு சொன்னேன். வா நம்ம காருலேயே உன் ஊருக்கு போகலாம்" என்று துர்வாவின் தாத்தா சொல்ல, குழந்தை திக்ஷி காரின் பின் இருக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
"எதை பற்றியும் யோசிக்காத ரோஜா. அப்பாவுக்கு பயப்படுற மாதிரி ஏதும் நடக்காது. நீ வா நம்ம துர்வா காருல போகலாம்" என்று கனகா ரோஜாவிற்கு தைரியம் சொல்ல, ரோஜா, துர்வா, கனகா, தாத்தா என்று அனைவரும் குழந்தை திக்ஷியுடன் ரோஜாவின் ஊருக்கு கிளம்பினார்கள்.
வழியெல்லாம் ரோஜா தன் தந்தையை நினைத்து கவலையாக அழுதவளை ஆறுதல் படுத்தியது துர்வா தாத்தாவின் வார்த்தைகள்.
குழந்தை திக்ஷி காரில் பயணம் செய்யும் களைப்பில் நிம்மதியாக உறங்கி கொண்டு வந்தாள். பயணிக்கும் வழியில் வண்டியை நிறுத்தி வயிற்றுக்கு உணவை தந்தவர்கள், சில மணி நேர பயணத்தில் ரோஜாவின் ஊரை சென்று அடைந்தார்கள்.
"ரோஜா! என் தம்பிக்கு நான் கால் பண்ணிட்டேன். உன் அப்பாவை இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்காங்களாம். சோ நம்ம உன் வீட்டுக்கே போயிடலாம்" என்று கனகா சொன்னதும், துர்வா தன் காரை ரோஜாவின் வீட்டை நோக்கி விரட்டினான்.
தன் வீட்டு வாசலில் துர்வாவின் கார் நின்றதும், ரோஜா காரில் இருந்து வேகமாக தன் வீட்டுக்குள் இறங்கி ஓட, கண் எதிரில் சோர்வாக கட்டிலில் அமர்ந்து இருந்தார் அவர்.
"அப்பா" என்று அழைத்த ரோஜா தன் தந்தையைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினாள்.
"அம்மாடி ரோஜா. ஏன்டா அழற? அப்பாவுக்கு ஒன்னும் இல்லடா. நான் நல்லா தான் இருக்கேன்" என்று தன் வலியை மறைத்து கொண்டு ரோஜாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார் ரோஜாவின் தந்தை.
"என்ன அங்கிள்? இப்போ எப்படி இருக்கிங்க? என்னாச்சு உங்களுக்கு?" என்று உரிமையாக கேட்டாள் கனகா.
"நீ... நீ கனகா தானே? இப்போ தான் உன் தம்பி, உன்கூட தான் ரோஜா இருக்கிறதாகவும், என்னை பார்க்க வர போறான்னு சொன்னான். வாமா எப்படி இருக்க?" என்று பதிலுக்கு விசாரித்த ரோஜாவின் தந்தை கண் எதிரில் துர்வாவின் தாத்தாவும் துர்வாவும் குழந்தையுடன் நின்று இருந்தனர்.
"வணக்கம் ஐயா. எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்று தூர்வாவின் தாத்தா கேட்டதும்,
"நீங்க?” என்று கேட்டு மகளிடம் திரும்பி, “ஏன்மா ரோஜா, இந்தப் பெரியவர், அந்த தம்பி எல்லாம் யாரு?” என்று கேட்டார்.
"அப்பா. இவரு என்னோட காலேஜ் சீனியர். இவரோட தாத்தா தான் இவங்க. அந்த குட்டி பாப்பா" என்று ரோஜா திக்ஷியை பற்றி சொல்லும் முன்பு,
"அம்மா யார் இந்த தாத்தா?" என்று கேட்ட திக்ஷி துர்வா கையில் இருந்து விடுபட்டவள் ரோஜாவின் கரங்களில் சேர்ந்தாள்.
"என்ன அம்மாவா? என்னமா ரோஜா, இந்த குழந்தை உன்னை ஏன் அம்மான்னு கூப்பிடுறா?" என்று ரோஜாவின் அப்பா புரியாமல் குழம்பிய தருணம்.
"மாமா... மாமா" என்று ரோஜாவின் அப்பாவை உரிமையாக அழைத்தப்படி வீட்டுக்குள் நுழைந்தான் ரோஜாவின் முன்னாள் கணவன் ராஜன்.
ராஜனைத் தொடர்ந்து அவனின் அம்மாவும், அக்காவும் உள்ளே நுழைந்தவர்கள், ரோஜாவின் தந்தையை பார்த்து நலம் விசாரிக்க, ரோஜாவின் முகம் மேலும் இறுக்கமாக மாறியது...
"வாடி ரோஜா எப்போ வந்த?" என்று கேட்டுக்கொண்டே கையில் இருந்த பழங்களை மேசை மேல் வைத்த ரோஜாவின் தோழியைத் தொடர்ந்து அவளின் தோழனும் உள்ளே நுழைந்தான்.
"பக்கத்துல இருந்த கடைக்கு போயிட்டு வந்தோம். நீ வர்றதுக்குள்ள வந்திடலாம்னு போனா லேட்டாகிடுச்ச். சாரி" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தவன், தன் அக்கா கனகாவை பார்த்து சிரித்துக்கொண்டே, "வா அக்கா. துர்வா எப்படி இருக்கீங்க? உங்கள பார்த்து எத்தனை வருஷமாச்சு?" என்று கேட்டான் ரோஜாவின் தோழன்.
"என்ன ரோஜா இது? அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்ப்பிட்டல்ல எல்லாம் சேர்த்து இருக்கீங்க. ஏன் எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லல? யாரோ மூணாவது மனுஷங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியனுமா?" என்று அலுத்து கொண்டாள் ரோஜாவின் முன்னாள் மாமியார்....
"இப்போ நீங்க எதுக்கு இங்க வந்திங்க? அதான் உங்களுக்கும், ரோஜாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு ஆச்சு இல்ல. இப்போ என்ன புதுசா இங்க வந்து சீன் போடுறீங்க?" என்று ராஜனின் குடும்பத்தை பார்த்து கோவமாக கேட்டாள் ரோஜாவின் தோழி.
"ஆயிரம் தான் இருந்தாலும் என் சம்மந்திமா இவரு. இவருக்கு எதாவதுனா நாங்க தானே பாக்கணும். இந்த கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் சும்மாமா. என்னதான் சொல்லு, ரோஜா எங்க வீட்டு மருமக" என்று ராஜனின் அம்மா சொன்னதும், ரோஜாவின் கண்கள் துர்வாவைப் பார்த்தது.
"தாத்தா இங்க சூழ்நிலை சரியில்ல. இந்த நேரத்துல நம்ம இங்க இருந்தா, அது ரோஸ் வாழ்கைக்கு இன்னும் பிரெச்சனையை உண்டாக்கும். அதனால நம்ம அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம் வாங்க"
என்று துர்வா சொன்னவன், தன் குழந்தையை ரோஜாவிடம் இருந்து வாங்கி கொண்டான்..
"என்ன மாமா? உடம்ப பாத்துக்க கூடாதா? ஹார்ட் அட்டாக் வர வேண்டிய வயசா இது? சரி டாக்டர் என்ன சொன்னாரு? நான் வேணும்னா உங்கள பெரிய ஹாஸ்ப்பிட்டல் அழைச்சிட்டு போய் புல் செக்கப் பண்ணட்டுமா? ஏன் ரோஜா, நம்ம மாமாவை வேற ஹாஸ்பிடல்ல காமிப்போமா?" என்று ராஜன் கேட்டதும், ரோஜாவின் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் தன் தந்தையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"என்ன ரோஜா இது? வெளிய தான் காக்காங்க தொல்லை அதிகமா இருக்குன்னு பார்த்தா, வீட்டுக்குள்ள கூட காக்கா அதிகமா ஆகிடுது போல" என்று கிண்டல் செய்த ரோஜாவின் தோழியை பார்த்து ராஜன் முறைத்தான்.
"அங்கிள் நாங்க கிளம்புறோம். உங்க உடல் நிலையை பார்த்துக்கோங்க. இந்த மாதிரி நேரத்துல தேவையில்லாத விஷயங்களை எல்லாம் யோசிக்காதிங்க. நாங்க வரோம்" என்று துர்வா சொன்னான்.
"தம்பி நீங்க யாருன்னே இன்னும் சொல்லலையே? ஏம்மா ரோஜா, இவங்க எல்லாம் யாருடா?" என்று ரோஜாவின் அப்பா கேட்டார்.
"அப்பா இவரு என் சீனியர். பெயர் துர்கா. இல்ல இல்ல துர்வா. இவரோட தாத்தா இவங்க. இந்த குட்டிப் பொண்ணு துர்வாவோட பொண்ணு. பெயர் திக்ஷிதா" என்று ரோஜா தன் தந்தைக்கு இவர்களை அறிமுகப்படுத்தியவள், துர்வா கையில் இருந்த திக்ஷியை தன் வசம் வாங்கியப்படி, "உக்காருங்க துர்கா. தாத்தா நீங்களும் உக்காருங்க. திக்ஷி பாப்பா இங்க பாருங்க தாத்தாகிட்ட போங்க" என்று சொன்னவள் குழந்தையை தன் தந்தையின் மடியில் அமர வைத்தாள்.
குழந்தையை அன்போடு கட்டி அணைத்து ரோஜாவின் தந்தையும் குழந்தையிடம் கொஞ்சி மகிழ்ந்து கொண்டு இருந்த சமயம், "சீனியரா? அதுவும் காலேஜ் டைம்லையா? சரி அப்படியே இருந்தாலும் இவருக்கு இங்க என்ன வேலை?" என்று ராஜன் ரோஜாவை பார்த்து கேட்கும் கேள்விக்கு ரோஜாவின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள துர்வா தன் காதை கூர்மையாக்கினான்.
"திக்ஷி குட்டி என்ன சாப்பிடுறிங்க? இங்க பாருங்க ஆப்பிள்" என்று மேசை மேல் இருந்த பழத்தை கழுவி குழந்தையின் கையில் கொடுத்தாள் ரோஜா.
"சரி... நீங்க எல்லாம் பேசிகிட்டு இருங்க. நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்". என்று சொன்ன கனகா சமையலறை எங்கே என்று தேடியவளின் கைகளைப் பிடித்து, சமையல் அறைக்குள் இழுத்து சென்றாள் ரோஜாவின் தோழி.
"துர்வா நீங்க வாங்க/ நம்ம அந்த ரூம்ல போய் பேசுவோம். தாத்தா நீங்களும் வாங்க" என்று இவர்கள் இருவரையும் வேறு இடத்திற்கு அழைத்து சென்றான் ரோஜாவின் நண்பன்.
"இங்க என்னடா நடக்குது? நம்ம வந்து இவ்வளவு நேரம் ஆகுது. இன்னும் உன் பொஞ்சாதி நம்மகிட்ட முகம் கொடுத்து பேசல. உன் மாமனார் நம்ம இருக்குற பக்கம் கூட திரும்பல. என்ன கொழுப்பு பார்த்தியா இவுங்களுக்கு" என்று ராஜனின் அக்கா தன் அம்மா, தம்பியின் காதைக் கடித்தாள்.
"அம்மா! எனக்கு ஆப்பிள் வேணாம்" என்று குழந்தை திக்ஷி ரோஜாவை பார்த்து "அம்மா" என்று அழைத்ததும், ராஜனின் குடும்பம் அதிர்ச்சியில் உரைந்து போனது.
"ஏன் செல்லம் ஆப்பிள் வேணாமா? சரி வாங்க. அம்மா உங்களுக்கு திராட்சை தரேன்" என்று சொன்ன ரோஜா திக்ஷியை தன் தந்தையின் மடியில் இருந்து தூக்கி கொண்டாள்.
"என்ன அம்மாவா? ஏய் ரோஜா இங்க என்னடி நடக்குது? யாருடி இந்தக் குழந்தை? இது எதுக்கு உன்னை அம்மானு சொல்லுது? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீ எனக்கு தெரியாம வேற எதாவது தப்பு பண்ணியா என்ன? ஏன் மாமா, உங்க பொண்ணோட யோக்கியத்தை தெரிந்துதான் உங்களுக்கு நெஞ்சு வலி வந்துச்சா" என்று ராஜன் கோவமாக வார்த்தையை விட, விட்டவன் கன்னத்தை பதம் பார்த்தது ரோஜாவின் தந்தையின் கரங்கள்.
"யார்யா நீ? என் மகளை பற்றி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு?" என்று ரோஜாவின் தந்தை எழுப்பிய கேள்வியின் சத்தத்தை கேட்டு மொத்த நபரும் ஒன்றாக ஹாலில் வந்து நின்றனர்.
"ஏங்க என் தம்பியை அடிக்கிற அளவுக்கு உங்களுக்கு தைரியமா? உங்க வீட்டு மாப்பிளை என்ற மட்டு மரியாதை கூட இல்லையா உங்களுக்கு?" என்று ராஜனின் அக்கா, ரோஜாவின் தந்தையை பார்த்து கோவமாக கேள்வி கேட்டாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“ஹலோ ஹலோ யாரு இந்த வீட்டு மாப்பிள்ள? அதெல்லாம் என் பிரண்ட் வாழ்க்கையில நீங்க இல்லவே இல்லைன்னு கோர்ட் மூலியமா விவாகரத்து பண்ணியாச்சு இல்ல. பின்ன என்ன மாப்பிள்ள வேப்பிள்ளன்னு. முதல்ல நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போங்க" என்று சமையல் அறையில் இருந்து கோவமாக வெளியே வந்த ரோஜாவின் தோழி பதில் சொன்னாள்.
"இந்தா பொண்ணு யாரு நீ? இது எங்க குடும்பப் பிரெச்சனை. நீ இதுல எல்லாம் தலையிடாத. ரோஜா என்ன நீ நம்ம குடும்ப விஷயத்துல தலையிட இவங்கயெல்லாம் யாரு" என்று ராஜனின் அம்மா ரோஜாவை பார்த்து கேட்டாள்.
"என்ன? நாங்க யாரா? நாங்க ரோஜாவோட நண்பர்கள். எங்களுக்கு தான் இனி ரோஜா மேல எல்லா உரிமையும் இருக்கு. சோ ப்ளீஸ் நீங்க வெளிய போங்க" என்று தன் கரங்களை வாசலை நோக்கி நீட்டினான் ரோஜாவின் தோழன்.
"இங்க என்ன நடக்குது ரோஜா? உன் அப்பா என்னை கை நீட்டி அடிக்கிறாரு. நீ என்னடானா இங்க நடக்குற கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குற" என்று ராஜன் சத்தமாக குரலை உசத்தி கத்தினான்.
"இங்க பாருங்க மிஸ்டர். இப்போ தான் அங்கிள்க்கு ஹார்ட் அட்டாக் வந்து, என் தம்பியும், அவன் தோழியும் அவரை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போயிட்டு வந்து இருக்காங்க. சோ பிளீஸ் இந்த மாதிரி நேரத்துல அவர் மனசு கஷ்டப்படும்படி பேசாதீங்க" என்று கனகா இந்த பிரச்சனையை சுமுகமாக பேசி முடிக்க முயற்சி செய்தாள்.
"ஆமா நீங்க எல்லாம் யாரு? எங்க குடும்ப விஷயத்துல நீங்க ஏன் தலையிடுறீங்க. ரோஜா, இவங்கள எல்லாம் முதல்ல வெளிய போகச் சொல்லு. மாமா நான் ரோஜாவை என்கூட அழைச்சிட்டு போறேன். வேணும்னா நீங்களும் வந்து எங்ககூட கொஞ்ச நாள் இருங்க. பழசை எல்லாம் மறந்துட்டு நானும், ரோஜாவும் மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறோம்" என்று ராஜன் குரலை தாழ்த்தி ரோஜாவின் அப்பாவிடம் பணிவாகப் பேசினான்.
இங்கே நடக்கும் விஷயங்களைப் பார்த்து, ரோஜாவின் அப்பா மீண்டும் நெஞ்சில் கை வைத்து கட்டிலில் சோர்வாக அமர்ந்தார்.
துர்வாவின் தாத்தா சூழ்நிலை சரியில்லாத காரணத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்தார்.
ராஜன் பேசிய வார்த்தையை நினைத்து கோவப்படாத கனகாவும், ரோஜாவின் தோழனும், தோழியும் ரோஜாவின் அமைதியை பார்த்து கோவம் கொண்டனர்.
இவ்வளவு நடந்தும் ரோஜா மீண்டும் ராஜன் வீட்டுக்கு போக போறாளா என்று துர்வா மனதில் சந்தேகம் எழுந்தது.
சில நிமிட மௌனத்திற்கு பிறகு ரோஜா சமையல் அறைக்குள் நுழைந்தவள், கையில் காபி நிறைந்த கோப்பைகளோடு வெளியே வந்தாள்.
கனகா காபி எடுத்துக்கோங்க. துர்கா நீங்களும் எடுத்துக்கோங்க. தாத்தா உங்களுக்கு டீ. டேய் இந்தாடா நீயும் அவளும் காபி எடுத்துக்கோங்க. கனகா சமையல் கட்டுல மூணு டீ இருக்கு. கொஞ்சம் வந்தவுங்களுக்கு எடுத்துட்டு வந்து தரீங்களா?” என்று இயல்பாக சொன்ன ரோஜா திக்ஷியை தூக்கிக்கொண்டு தன் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"பாப்பா இப்போ தானே நீங்க திராட்சை சாப்பிட்டிங்க. அம்மா உங்களுக்கு அப்புறமா ஹார்லிக்ஸ் தரேன்" என்று திக்ஷியிடம் சிரித்த முகத்துடன் பேசும் ரோஜாவை கண்டு அவள் தந்தையின் முகமும் மலர்ந்து இருந்தது.
"இந்தாங்க டீ எடுத்துக்கோங்க" என்று கனகா ராஜனின் குடும்பத்தினரை நோக்கி தட்டை நீட்ட, ராஜன் கோவமாக அந்த தட்டைத் தள்ளி விட்ட்டான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top