Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி -10
"ரோஜா வீட்டோட இன்னொரு சாவி உங்கிட்டயே இருக்கட்டும். ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து செடிக்கு தண்ணீர் ஊத்திடு. அப்புறம்..." என்று கனகாவின் வார்த்தை முடியும் முன்பு...
"அப்படியே மோகன் அண்ணாவின் படத்துக்கும் பூ போட்டுட்டு போறேன்" என்று ரோஜா சொன்னதும்., செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளிய கனகா, "அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல. ஏன்னா, என் மோகன் என்கூட கேரளா வராரு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்குச் சென்ற கனகாவின் காதலை கண்டு மெய் சிலிர்த்து போனாள் ரோஜா
அங்கிருந்த பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்த பின், தனக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு துர்வாவின் அருகில் வந்தவள், "நான் ரெடி போகலாமா" என்று ரோஜா கேட்டாள்.
"ம்... கனகா நாங்க கிளம்புறோம்ங்க. நாளைக்கு நீங்க எத்தனை மணிக்கு கேரளா கிளம்புறீங்க? நான் வேணும்னா உங்களை ரயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணவா?" என்று தன் காலணிகளை போட்டுக்கொண்டே கேட்டான் துர்வா.
"இல்லடா. ஆபிஸ் கேப் வரும். நான் அதுல போய்கிறேன். ரோஜா நீ எனக்கு நேரம் இருந்தா நைட்டு கால் பண்ணிப் பேசலாம். திக்ஷி பாப்பா அத்தை உனக்கு கேரளால இருந்து விளையாட்டு எல்லாம் வாங்கி வரேன். சரி ரோஜா நேரத்தோடு கிளம்புங்க. தாத்தா உங்களுக்காக காத்து இருப்பாரு" என்று கனகா சொன்னதும், குழந்தையை ரோஜா தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவள் கனகாவிடம் கை அசைத்து டாட்டா சொன்னபடி வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
துர்வா கையில் ரோஜாவின் பையை எடுத்து கொண்டு காரின் பின் கதவை திறந்து ரோஜாவை குழந்தையோடு அமரும் படி சொன்னதும், ரோஜா இன்று குழந்தை திக்ஷியின் அன்புக்கு அடிமையானவள் துர்வாவின் வீட்டுக்கு ஒரு வார காலம் தங்க வருவதை எதிர்பார்த்து துர்வாவின் தாத்தா வாசலில் நின்று இருந்தவர் இவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.
"திக்ஷி குட்டி. தாத்தாவை விட்டுட்டு எங்க போன நீ?" என்று கேட்டுக்கொண்டே குழந்தையை தன் வசம் வாங்கிக் கொண்ட துர்வாவின் தாத்தா, இவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
"எப்படி இருக்கீங்க தாத்தா?" என்று ரோஜா கேட்க,
"ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா. வா வந்து உக்காரு. துர்வா நீ ரோஜா பையை கொண்டு போய் உன் ரூம்ல வச்சிட்டு சீக்கிரம் சாப்பிட வா" என்று தாத்தா சொன்னதும், இவர்கள் அனைவரும் காலை உணவை சாப்பிட மேசையில் அமர்ந்தனர்.
"ரோஜா உனக்கு என்ன டிபன் வேணுமோ நீயே எடுத்து வச்சிக்கோமா. இது உன்னோட வீடு. கூச்சப்படக்கூடாது" என்று சொன்ன தாத்தா தன் தட்டில் உள்ள இட்லியை சாப்பிட, திக்ஷிக்கு துர்வா தோசை ஊட்டிக்கொண்டு இருந்தவன், “சாப்பிடு ரோஸ்" என்று சொல்லிக்கொண்டே தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
"என்ன தாத்தா இது. சட்னி சாம்பார்னு எதுலயும் காரமே இல்லையே. பாட்டிமா என்னாச்சு உங்களுக்கு? காரசாரம் இல்லாம சமைச்சி இருக்கீங்க?" என்று துர்வா முகத்தை சுழித்து கொண்டு கேட்டான்.
"பெரிய ஐயா தான் தம்பி எதுலயும்..." என்று பாட்டிமா சொல்லும் முன்பு,
"நான் தான் துர்வா. ரோஜா இங்க தங்கப் போற ஒரு வாரமும் சாப்பாட்டுல பச்சமிளகாய் போட வேணாம்னு சொன்னேன்" என்று சொன்ன தாத்தா யாரையும் பார்க்காமல் மீண்டும் சாப்பிட தொடங்கியதும், ரோஜா துர்வாவை பார்த்து முறைத்தாள்.
"ஐயோ ரோஸ். நான் நேத்து கனகா வீட்ல நம்ம போட்ட டீல் பற்றி தாத்தாக்கிட்ட சொன்னேன். அத தான் இவரு இப்படி உளறுறாரு" என்று துர்வா பதற்றதுடன் சொன்னதும், ரோஜா அவனை மேலும் முறைத்தப்படி சாப்பிட்டு முடித்தாள்.
"இன்னைக்கு நம்ம எங்காவது வெளிய போகலாமா துர்வா?" என்று தாத்தா கேட்டார்.
"எங்க போறதுன்னு நீங்களே சொல்லுங்க. போயிட்டு வருவோம். நான் இன்னைக்கு ப்ரீதான்" என்றான் துர்வா.
"ஏன் ரோஜா? நீ சென்னையில சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட இடம் எதாவது இருக்கா?" என்று தாத்தா கேக்க,
"சொன்னா சிரிக்க மாட்டிங்க இல்ல" என்று சொன்ன ரோஜாவின் வெட்க்கத்தை ரசித்தான் துர்வா.
"நான் சிரிக்கிற மாதிரி அப்படி என்னமா சொல்ல போற நீ?" என்று தாத்தா ஆர்வமாகக் கேட்டார்.
"தாத்தா இவளுக்கு வண்டலூர் ஜூக்கு போய், அங்க தூங்கிகிட்டு இருக்குற மிருகங்களை எல்லாம் கத்தி எழுப்பி விடணும்ன்னு ஆசை" என்று என்றோ துர்வாவிடம் இவள் சொன்ன ஆசையை, இன்று அவன் தாத்தாவிடம் சொல்லும் அழகை ரோஜாவும் ரசித்தாள்.
"என்னமா இது. இப்படியெல்லாம் கூடவா ஒரு ஆசை இருக்கும்?" என்று தாத்தா சிரித்து கொண்டார்.
"சரி நானே உங்கள வெளிய அழைச்சிட்டு போறேன். போய் கிளம்புங்க. இன்னைக்கு நம்ம லஞ்ச், டின்னர் வெளிய சாப்பிடலாம்" என்று துர்வா சொன்னவன் தன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
"ரோஜா நீ இங்க இருக்க போற ஒரு வாரமும், துர்வாவோட ரூம் உனக்கும் திக்ஷிக்கும் மட்டும் தான். என் பேரன் என்கூட தங்கிப்பான்" என்று தாத்தா சொன்னதும், ரோஜா குழந்தையை தூக்கி கொண்டு துர்வாவின் அறைக்குள் நுழைய, அங்கே இவளுக்காக மேசையில் சில புத்தகங்கள் காத்து கொண்டு இருந்தது.
"அம்மா நம்ம எங்க போறோம்?" என்று கேள்வி கேட்ட குழந்தையை கீழே இறக்கி விட்டாள் ரோஜா.
"எனக்கும் தெரியல தங்கம். உங்க அப்பா தான் நம்மள எங்கேயோ அழைச்சிட்டு போக போறாரு" என்று ரோஜா குழந்தையிடம் பேச்சு கொடுக்க,
"கிளம்பியாச்சா? போகலாமா?" என்று அறையின் வாசலில் இருந்து துர்வாவின் குரல் கேட்டதும் ரோஜா குழந்தையை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.
"தாத்தா நீங்க இவங்கள அழைச்சிட்டு போய் காருல உக்காருங்க. நான் எதுக்கும் திக்ஷி குட்டிக்கு இன்னொரு ட்ரெஸும் தண்ணியும் எடுத்துட்டு வரேன்" என்று துர்வா சொன்னவன் தன் அறைக்குள் நுழைந்தான்.
காலை பதினோரு மணி அளவில் ரோஜா, துர்வா, திக்ஷி பாப்பா, துர்வாவின் தாத்தா என்று அனைவரும் டிரைவருடன் ஊரை சுற்றி பார்க்க கிளம்பியவர்கள், மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்ட பின்பு, கோவில், அருங்காட்சியகம், கடற்கரை என்று சென்னையில் உள்ள சில இடங்களை சுற்றி பார்த்தவர்கள், இரவு உணவையும் ஹோட்டலில் சாப்பிட்டப்படி அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கடந்து வந்தார்கள்.
இரவு பத்து மணி அளவில் இவர்கள் மீண்டும் வீடு திரும்ப, இன்றைய தினத்தின் நிகழ்வுகளை நினைத்து கொண்டே, துர்வாவின் அறையில் குழந்தை திக்ஷியை கட்டி அணைத்து கொண்டு கண்கள் மூடினாள் ரோஜா.
ஒரு வார காலம் துர்வாவின் வீட்டில் ரோஜா குழந்தை திக்ஷிக்காக தங்கியது அவளுக்கு வரமாகத் தோன்றியது. குழந்தையின் கள்ளம் இல்லாத உள்ளத்துக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருந்தாள் ரோஜா.
துர்வாவின் தாத்தாவிற்கு தன்னுடைய பேரனின் கல்லூரி காலத்துக் காதலி தான் ரோஜா என்று தெரிந்த கணத்தில் இருந்தே, ரோஜாவிற்கும், துர்வாவிற்கும் மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் பசு மரத்து ஆணியை போல பதிந்து இருந்தது.
ரோஜாவின் வருகையால் தன் மகளின் தாய் அன்பு தேடல் நின்று இருந்ததை எண்ணி துர்வாவும் மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரு வார காலம் குழந்தையுடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
கனகா கேரளாவில் இருந்து வீடு திரும்பியதை அறிந்து கொண்ட ரோஜா, அன்றைய தினம் கனகாவின் வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவு செய்து அங்கிருந்து கிளம்பும் முன்பு உறங்கி கொண்டு இருந்த பிள்ளையை பார்த்து மனம் வாடி போனாள்.
"என்னமா. ஏன் சோகமா இருக்க? குழந்தையை விட்டுட்டு போக மனமில்லையா?" என்று ரோஜாவின் கவலையை உணர்ந்து இருந்த தாத்தா ரோஜாவின் அருகில் வந்ததும் ரோஜா கண்கள் கலங்கியவள்,
"ஏன் தாத்தா? திக்ஷியை என்கூடவே வச்சிக்க நீங்க சம்மதிப்பீங்களா?" என்று ரோஜா மனதில் பட்டதை சட்டென்று கேட்டு விட்டாள்.
சத்தமாக சிரித்த தாத்தா, "இதுல என்ன இருக்கு. பாப்பாவை நீ உன்கூடவே வச்சிக்கலாம். ஆனா இந்த பாப்பா உனக்கு வேணும்னா, இவளை பெற்ற தகப்பனையும் நீ உன்கூடவே அழைச்சிட்டு போகணும். உனக்கு அதுக்கு சம்மதம்னா சொல்லு. இப்போவே குழந்தையை உன்கிட்ட தர நான் ஏற்பாடு பண்றேன்" என்று தாத்தா சொன்ன வார்த்தையில் மறைந்து இருந்த கருத்தை புரிந்து கொண்ட ரோஜா, பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தாள்.
"இங்க பாரு ரோஜா. நான் வெளிப்படையாவே கேக்குறேன். என் பேரனை நீ மறுமணம் பண்ணிக்கிறியா?" என்று அவர் கேட்டதும் ரோஜாவின் கண்களில் கண்ணீர் பெருக்கேடுத்தது.
"அழாதமா. என்னடா இந்த ஆளு, இவரோட பேத்தியை வளர்க்க நம்ம வாழ்க்கையை அடகு வைக்க சொல்லுறாருன்னு எல்லாம் யோசிக்காத. நீயே சொல்லுமா? என் பேரனும் நீயும் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறிங்க. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சா, அது உங்களுக்கு மட்டும் இல்ல குழந்தை திக்ஷிக்கும் நல்லது தானே?" என்று அவர் மனதில் பட்டதை தாத்தா ரோஜாவிடம் தெளிவாக சொல்லி முடித்தவர், "சரிமா. நீ ஏதும் யோசிக்காத. நான் உன் அப்பாகிட்ட பேசுறேன். நீ அவரோட போன் நம்பர் தந்துட்டு போ" என்று துர்வாவின் தாத்தா கேட்டதும் ரோஜா பயந்தாள்.
"ஐயோ வேணா தாத்தா. என் அப்பா என்னை ரொம்ப தப்பா நினைச்சிடுவாரு. என்னடா இவ ஊருக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு, மறுமணம் அது இதுன்னு வந்து நிக்குறான்னு என்னை கேவலமா நினைச்சிட்டா, அதோட நான் என் உசுரையே விட்டுடுவேன். பிளீஸ் தாத்தா இனிமே இந்த விஷயத்தை பற்றி பேசாதீங்க. நான் இனி இந்த வீட்டுக்கு வரல. குழந்தைகிட்ட உன் அம்மா மறுபடியும் சாமிகிட்ட போயிட்டாங்க, இனிமே வர மாட்டாங்கன்னு சொல்லிடுங்க. என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. நான் போறேன்" என்று கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிய ரோஜாவின் பெயரை சொல்லி தாத்தா அழைத்தார்.