New member
- Joined
- Nov 9, 2025
- Messages
- 2
- Thread Author
- #1
1. அன்னை மடி நீ!
தஞ்சை பகுதியை சேர்ந்த அழகிய நெல் பூக்கும் பூமி அது.ஊர் பெயர் கூட பூந்துறை தான். இன்னமும் மண் வாசனை மாறாத கிராமம். இருபுறமும் பசிய புல்வெளிகளை பக்க துணையாக கொண்ட குறுகிய தார் ரோட்டு சாலைகளை இப்பொழுதும் இங்கு பார்க்கலாம். வயல்கள் மட்டுமன்றி சாலையை ஒட்டி நிழல் பரப்பும் புளிய மரம், நாவல் மரம், தூங்கு மூஞ்சி மரங்களும் உண்டு.ஒரு காலத்தில் சூட்டிங் க்கு பயன்பட்ட இந்த அழகிய பகுதி இப்போது இன்ஸ்டா மற்றும் யூடுயூப் பிரபலங்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது ( இவர்கள் உண்மையிலேயே பிரபலமானவர்கள் தானா என்ற சந்தேகமும் கிராம மக்கள் மத்தியில் உலவி வருகிறது)
இந்த பூந்துறை கிராமத்தின் கடைக்கோடி எல்லையில் இருக்கும் ஓர் அழகிய கிராமபுறத்து வீடு அது. அளவில் பெரியது என்றாலும் கொஞ்சம் பழங்காலத்து வகையறா வீடு. டைனிங் டேபிளில் அமர்ந்து உரக்க கத்தி கொண்டு இருந்தாள், பார்வதி." அண்ணா என்ன இது பொங்கலா எனக்கு வேணாம்" என்று தட்டை நகர்த்தினாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சுசீலாவின் சமையல் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும்.தளதளவென்று இல்லாமல் கட்டியாக காய்ந்து இருந்த அந்த பொங்கலை பார்க்கவே பிடிக்கவில்லை, பார்வதிக்கு. " ஏய் பார்வதி , என்ன இது அலுச்சாட்டியம் ? நாங்க எல்லாம் இதான சாப்பிடுறோம் " என்று பதிலுக்கு கத்தினார், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த மணிவண்ணன். இவர் பார்வதி மற்றும் மதுசூதனனின் ( பாருவின் அன்பு அண்ணன்) ஒரே தாய்மாமன். இவரது குடும்பம் திருச்சியில் இருக்கிறது.
" விடுங்க மாமா " என்று ஏதோ பேச வந்த மதுசுதனை நோக்கி " நீ பேசாத டா.உன்னோட செல்லத்துல தான் இந்த பொண்ணு வீணா போயிட்டு இருக்கு.இப்படியே இருந்தா நாளைக்கு போற வீட்டுல என்ன பண்ணும்? " என்று மனத்தாங்கலாக கேட்டார், மணிவண்ணன். " நான் என் அண்ணனை விட்டு எங்கேயும் போக மாட்டேன். சொல்லுங்க அண்ணா மாமா கிட்ட " என்று சிணுங்கினாள், பார்வதி. " இப்படி சொன்ன பல பொண்ணுங்களை இப்ப நான் குழந்தை குட்டியோட பாத்துட்டு இருக்கேன். கல்யாணம் ஆனா நாங்க எல்லாம் உன் நினைவு ல்ல கூட இருக்க மாட்டோம்.இதோ பாரு மதுசூதனா . முதல்ல உனக்கு கல்யாணம் முடிச்ச கையோட இந்த குட்டிக்கு கல்யாணம் பண்ணி புருசன் வீட்டுக்கு அனுப்பிரணும்.ஆமா " என்றவரை நோக்கி, " அது குழந்தை மாமா( கை தங்கையின் தலையை வாஞ்சையாக தடவியது) எனக்கும் தான் கல்யாணத்துக்கு என்ன அவசரம். நீங்க தான் தேவையில்லாம
பிடிவாதமா ஒவ்வொரு முறையும் பொண்ணு பார்க்க கூட்டி போறீங்க. புரிஞ்சுக்கோங்க மாமா" என்றான், மதுசுதன். " என்னடா புரிஞ்சுக்கிறது உனக்கு வயசு முப்பதாக போகுது. இப்பல்லாம் பசங்களுக்கு தான்டா பொண்ணு கிடைக்க மாட்டுது. நல்ல வேலையில இருக்கிற படிச்ச பசங்க கூட முப்பத்தைந்து நாப்பது வரைக்கும் கல்யாணம் ஆகாம கஷ்டப்படுறாங்க. அதுனால தான் டா மாமா இவ்ளோ துடிக்கிறேன் " என்றார், மணிவண்ணன் உருக்கமாக.
உண்மைதான். இவ்வளவு பேசும் மணிவண்ணனின் மகன் முரளிக்கு முப்பத்தைந்து ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இத்தனைக்கும் சொந்த வீடு, நல்ல வேலை எல்லாம் இருக்கிறது. வேண்டாத தெய்வமில்லை. செய்யாத பரிகாரமில்லை. ஆனால் பலன்தான் பூஜ்ஜியம். அதுதான் மருமகனை கல்யாண விடயத்தில் இந்த விரட்டு விரட்டுகிறார். காது பாட்டுக்கு மாமன் பேச்சை கேட்டு கொண்டு இருக்க, கை தங்கைக்கு பொங்கலை சாம்பாரில் நன்கு பிசைந்து ஊட்டி கொண்டு இருந்தது. அவளும் அண்ணன் கையாலே சமர்த்தாக சாப்பிட்டு கொண்டு இருந்தாள். இடையே தாய்மாமனை பார்த்து கண்சிமிட்டல் வேறு.
" ஏன்டா நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். திருந்தவே மாட்டீங்க டா நீங்க" என்று சலித்து கொண்டார், மணி. " புரியுது மாமா பாப்போம் " என்று மது பவ்யமாக கூற , பார்வதி மாமனுக்கு பழிப்பு காட்டினாள்; அந்த பெண்ணின் சாடையில் தங்கையை கண்ட நம் பாசமிகு தாய் மாமனின் மனதில் பழைய நினைவுகள் ஊஞ்சலாடின.
மணிவண்ணனின் ஒரே தங்கை ராதாவை பூந்துறையை சேர்ந்த கேசவமூர்த்திக்கு கல்யாணம் கட்டி கொடுத்து இருந்தார்கள். மணிக்கும் அப்போது பக்கத்து ஊர் தான். காலப்போக்கில் திருச்சிக்கு இடம்பெயர்ந்து விட்டார். கேசவ் மூர்த்திக்கு நிறைய நிலம் நீச்சு இருந்தது. நல்ல முறையில் விவசாயம் செய்து வந்தார். ராதாவையும் அன்பாக பார்த்து கொண்டார். முதலாவதாக ஆண் பிள்ளை பிறந்ததும் ஊரை கூட்டி விருந்து வைத்து கொண்டாடினார்.
உண்மையிலேயே ஒரு நல்ல கணவனாகவும் , நல்ல தகப்பனாகவும் விளங்கினார்.எட்டு வருடங்கள் கழித்து பார்வதி பிறக்கும் வரை எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பிரசவத்தில் ஏதோ சிக்கல். பெரிய டாக்டர் வேறு வர இயலாத நிலை. என்ன ஏதென்று பார்த்து எதேனும் செய்வதற்குள் குழந்தை பிறந்து விட்டது. ஆனால் தாய் மரணம். விதி யாரை விட்டது?
பிறக்கும் போதே தாயை விழுங்கிய குழந்தையாக இல்லை சைத்தானாக பெற்ற தகப்பனாலேயே தூற்றப்பட்டாள் , பார்வதி. மனைவி மீதிருந்த அத்துணை பாசமும் மகள் மீதான வெறுப்பாகி போனது தான் கொடுமை. மாறாக, எட்டு வயது பாலகனான மது தங்கையை தாயாகவும் தந்தையாகவும் தாங்கினான். இவ்வுலகை விட்டு செல்லும் போது தாயால் தனக்கு வழங்கப்பட்ட பரிசாக தங்கையை கருதினான். அந்த வயதிலேயே அவனுக்கு அவ்வளவு மனமுதிர்ச்சி இருந்தது. தாயின் சிறிய நகலாக தெரிந்த தங்கையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான், மது. பார்வதி அப்பாவின் கண்ணில் பட்டால் தானே பிரச்சினை. அதிகம் அவரை அண்ட விடாமல் பொத்தி பொத்தி பாதுகாத்தான். அவருக்கும் ஒரு வகையில் இது பாரத்தை குறைப்பதாக இருக்கவும், மகனை அவன் போக்கில் விட்டு விட்டார். இப்படி தங்கைக்கும் தந்தைக்கும் பாலமாக இருந்து ஒருவாறு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தான் மது.
விதி மீண்டும் தன் கோர முகத்தை காட்டியது.