Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு!
அத்தை நாங்க கோயிலுக்கு போய் விட்டு வருகிறோம் என்ற ராதாவிற்கு, பார்த்து போய்ட்டு வாங்கம்மா என்றார் வள்ளி பாட்டி.
சரிங்கத்தை என்று சொல்லிய சீதா, செல்வி...செல்வி...இன்னும் என்ன பண்ணுற?,இதோ வந்துட்டேன் மா என சொல்லிக்கொண்டே மாடி படியிலிருந்து வேகமாக இறங்கி வந்தாள்.
"அப்பொழுது உள்ளே வந்த கதிர், என்னம்மா கோயிலுக்கா என்க, ஆமாப்பா என்ற சீதா,வாயேன் பா நீயும்?,ஹம் நீங்க போய் கிட்டே இருங்கம்மா நான் வந்துடுறேன் என்றவன்,படியில் ஏறி தனது அறைக்குச் சென்றான்.
"அறைக்குள் வந்தவன் வேக வேகமாக குளித்து விட்டு,ஆடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவன்,அப்பாயி நானும் கோவிலுக்கு போயிட்டு வருகிறேனென்க,பேரனை பார்த்தவர் என்னைக்கும் என் அப்பு கருப்பு வைரம் தான்.போய்டு வாப்பு.
"கதிர் கோயிலுக்கு வரும் காரணமே அல்லியிடம் பேசி,அன்று கூட வந்தவள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக தான்.இன்று துர்க்கை அம்மனுக்கு விளக்க போடுவற்தாக அவர்கள் வழக்கமாக கோயிலுக்கு போவார்கள் என்பது அவனுக்கு முன்பே தெரியும்.
அவன் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் என்பதால் தன்னவள் யாரென்று யோசித்துக்கொண்டே நடந்து சென்றவன்,நீ யாரென்று இன்று தெரிய போகுதுடி?ஆமாம்,ஏன் இதுவரை நீ செயின் தொலைந்ததை பற்றி தேடி வரவில்லை?அப்போ அது உன்னுடையதாக இருக்காதோ?என பலவாராக தனக்குள்ளே கேள்விகளை கேட்டுக்கொண்டே கோயிலுக்கு நடந்து சென்றவனுக்கு நண்பனின் நினைவு வர,தனது போனிலிருந்து வேலுவிற்கு கால் பண்ணினான்.
தாமரை வீடு:
"தன் மொபைல் ரிங்டோன் சத்தம் கேட்டதும் வேலுவோ எடுத்து அட்டென்ட் பண்ணியவன் சொல்லுடா மச்சான்,மாப்பிள்ளை எங்கடா இருக்க?. இப்பதாண்டா நம்ப சல்மான் கிட்ட பேசிட்டு வரேன்.அடுத்த படத்துக்கு அப்பாயின்மென்ட் கேட்டார்.நான் ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு வரேன்
"நண்பன் சொன்னதை கேட்ட கதிரோ, என்னடா நக்கலா என்க,வீணா போனவனே,இப்ப தானேடா சொல்லிட்டு வந்தேன் சித்தி வீட்டுக்கு போறேன்னு. அதுக்குள்ளே எங்கடா இருக்க? நொங்கடா இருக்கேன்னு?கேட்டால் வேற என்ன சொல்ல முடியும்னு வேலு திட்ட,சரி...சரி நான் வந்துட்டு இருக்கேன்,கோயிலுக்கு போலாம் நீயும் வந்துடு என்றான்.
"ஏண்டா...என்னை சாமியாராக ஆக்கிடலாமென்று முடிவே பண்ணிட்டியா?கோயில்ல இருந்து இப்போ தானேடா வந்தேன்.45 நாளைக்கு பிறகு இன்னைக்கு தான் ஆசாமியா ஆகிருக்கேன்டா,அது உனக்கு பொறுக்கலையா?உன்னை போல நண்பன் இருந்தாலே போதும் டா விளங்கிடும்.
சரி பேசுனது போதும் சீக்கிரம் வா,நம்ப செட்டியார் கடைகிட்ட நிக்கிறேன் என்றபடி கதிர் கட் பண்ணினான்.
"இவ்வளவு நேரம் வேலு போனில் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தற்பொழுது சத்தமிட்டு சிரித்தனர், தாமரையை தவிர.அப்பொழுது அல்லியோ அண்ணா,அந்த சிடுமூஞ்சி சித்தப்பன் கிட்ட எப்படி தான் இத்தனை வருஷம் குப்பை கொட்டுற நீ?.
"ஏய்... வாலு,என்ன கொழுப்பா?மச்சானை அப்படிலாம் சொல்லக்கூடாது சரியா என்று சொல்லி அவள் தலையில் கொட்டிய வேலு,சரி சித்தி நான் கிளம்புறேன்னு கதிர் நிற்கும் கடைக்கு சென்றான்.
"அல்லி,தாமரை இரண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாங்க கோவிலுக்கு போகணும் என்றவர், சிவா...டீ போட்டு ரெடியா வச்சிருக்கேன் அப்பா,தாத்தா,பாட்டி மூன்று பேரும் வந்த பிறகு சூடு பண்ணி மட்டும் கொடுத்திடு.நாங்க போய் விளக்கு போட்டு வரோம்பா என்று சொல்லிக்கொண்டே தனது அறைக்கு சென்றார்.
"மூவரும் சிறிது நிமிடங்களில் ரெடியாகி வெளியே வந்தவர்கள்,சிவாவிடம் சொல்லிக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தார்கள்.போகும் வழியில் தெரிந்தவர் எல்லாரும் கவிதாவிடம் கூட வருவது யார் என்று கேட்க,தனது பெரிய மகள் என்று சொல்லிக்கொண்டே போனார்.
" எடுத்து வந்த எலுமிச்சை பழத்தை இரண்டா கட் பண்ணி மகள்களிடம் கவிதா கொடுக்க,அல்லியும் தாமரையும் அதில் உள்ள சாற்றை பிழுந்து விட்டு, அதனுள் எண்ணெய் ஊற்றி,திரியை வைத்தனர்.
மூவரும் ஆளுக்கு ஆறு விளக்கை ஏற்றி துர்க்கை அம்மனிடம் மனதுருக வேண்டிய பின்,சன்னதியின் உள்ளே இருக்கும் அம்மனிடம் செல்லும் போது தாமரையின் செல்லிற்கு கால் வர, எடுத்து பார்த்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.
மகளின் முகத்தை பார்த்த கவிதா, என்ன தாமரைனு அவள் தோளை தொட,தாயிடம் செல் போனை காட்டியவளின் கண்கள் கலங்கியது. எடுத்து பேசுடா என்றவாறு தோளை தட்டி கொடுத்தார்
போனோடு ஓரமாக சென்று அட்டென் பண்ணியவள் ஹலோ என்க,மைடியர் ஏஞ்சல் என்ற குரல் ஆங்கிலத்தில் கேட்டது.தாமரையும் அவரும் ஆங்கிலத்தில் பேசுவதை இங்கு தமிழிலே எழுதியிருக்கின்றேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கேட்கும் குரல் தான்,ஆனால் அதே அன்பு அந்த குரலில் மாறாமல் இருப்பதில் அவளின் கண்ணிலிருந்து நீர் வழிந்து ஓடியது.
என்ன ஏஞ்சல் என்னை மறந்திட்டியா என்கும் அந்த குரலுக்கு சொந்தமான ஜீவனோ,உலகெங்கும் தனது பிரத்யோகிய ஆடைகள் மூலமாய்
கொடிகட்டி பறக்கும்,பேமஸ் டிசைனரான வி.வி.என்று பலரால் அழைக்கப்படும், விஷாகா வில்லியம்ஸ்.
ஏஞ்சல்....என்று மீண்டும் அழைக்க, தற்பொழுது நினைவிற்கு வந்தவளுக்கு அழுகை தான் வந்தது.என்ன லோட்டஸ் இத்தனை வருஷம் போய் கால் பண்ணியிருக்கேன்,பேசாமல் இருக்கியே என்று மீண்டும் கேட்டார் வி. வி.
"ஆன்ட்டி என அழுது கொண்டே தாமரை கூப்பிட,ம்ம் என்றவர் எப்படி இருக்க ஏஞ்சல்?.ஹம் என்றவளிடம் சீமக்கரை எப்படி இருக்கு?என்க,ஓஓஓ.... அத்தையம்மா சொல்லிட்டாங்களோ?.
அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்த வி. வி.வாழ்த்துக்கள் ஏஞ்சல். வெற்றிகரமாக படிப்பை முடித்து விட்டாய்.இன்னும் சில மாதங்களில் மேடம் சிங்கப்பூர்கு பறந்து வரப்போறீங்கள்.
என் ஏஞ்சலை நானும் நேரில் பார்க்க போகிறேன் என்றவர்,உனக்கு ஒரு ப்ராஜெக்ட் வொர்க் தரப் போறேன் இன்னும் 5 மினிட்ஸ்ல வீடியோ கால்ல வரேன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ணினார் வி.வி.
"அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே கவிதாவின் அருகில் வந்த தாமரை, வி. வி.சொன்னதை சொல்ல,சரி நீயும் அல்லியும் வீட்டுக்கு போங்க நான் வரேன் என்றவர்,அம்மன் இருக்கும் கருவரையை நோக்கி செல்ல,அங்கே, சீதா,ராதா,செல்வி மூவரும் இருப்பது தெரிந்தது.
அல்லி இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு போகணும் கொஞ்சம் வேகமா நடந்துவாடி என்று தாமரை சொல்ல,சரிக்கா என்றவள்,வா குறுக்கு சந்து வழியா போகலாம் என அக்காவை அழைத்துக் கொண்டு வேகமாக இரண்டு வீடுகளுக்கு இடையில் இருக்கும் சந்துகளில் புகுந்து சென்றாள்.
இருவரும் வீட்டிற்குள் வந்து சேரவும் கால் வரவும் சரியாக இருந்தது.உடனே வேகமாக ஓடிப்போய் தனது பேகில் இருந்து லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணி தன் போனில் கனைக்ட் பண்ணியவள் கால் அட்டென்ட் பண்ண அங்கு தெரிந்த உருவத்தை பார்த்த தாமரையோ அதிர்ந்து போனாள்.
சிறு வயதில் பார்த்த உருவம் அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை அந்த குரலை மட்டும் அவள் கேட்டிருக்கிறாள்.அதும் கடந்த ஐந்து வருடங்களாக இல்லை.
என்ன ஏஞ்சல் அதிர்ச்சியாக இருக்குதா என்று வி வி கேட்க,ம்ம் என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.ஆமாம் அவள் சிறுவயதில் பார்த்த உருவமோ அவ்வளவு மார்டனாக இருந்தது. இப்பொழுது பார்கும் உருவமோ நம்ப பக்கத்து வீட்டு மடிசார் மாமியை பார்பது போல இருந்தது தாமரைக்கு.
"ஏஞ்சல்,இதை பற்றி பிறகு பேசலாம் என்றவர்,இங்கு இருக்கும் பலர் கோயில் சிற்பங்களை புடவையா ரெடி பண்ணி கேட்கிறார்கள்.அதான் உனக்கு மூணு மாசம் டைம் இருக்கே.உன்னால எத்தனை சிற்பங்கள் டிசைன் பண்ண முடியுமா அத்தனையும் வரைந்து எனக்கு மெயில்ல சென்ட் பண்ணு.
இந்த முறை உன் டிசைன் கலெக்க்ஷனை தான் இன்ட்ரோ பண்ண போறேன் என்று வி.வி சொல்ல,இது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய டிசைனை இவ்வளவு பெரிய டிசைனர் அறிமுகப்படுத்தப் போவதை நினைத்து அவளுக்கு வார்த்தையே வரவில்லை.
உன் பிரின்ஸ்பல் உன்னை பத்தி நல்ல விதமா சொன்னாங்க.இங்க நீ வருவதற்கு முன்னாடியே ஒரு நல்ல அங்கீகாரம் உனக்கு கிடைக்கணும்னு எனக்கு தோணிச்சு.நம்ம லீனாவும் அதே தான் சொன்னாள்.இந்தியன் கல்ச்சர் பத்தி உனக்கு நல்லா தெரியும்.இதுவரைக்கும் நான் இந்த மாடல் புடவைகள் தயாரித்தது இல்லை.
இதை நீ பெஸ்ட்டா செஞ்சு முடிப்பாயென்று நான் நம்புறேன். அக்ரிமெண்ட் பேப்பர் உன்னோட இமெயில் க்கு அனுப்பியிருக்கேன். படிச்சு பாத்துட்டு சைன் பண்ணி சென்ட் பண்ணு.
இதற்கு பிறகு நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்.இனி நீ நேரில் வந்த பிறகு பேசிக்கிறேன் என்றவர்,உன் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிக்க ஆல் தி பெஸ்ட் ஏஞ்சல் என்று சொல்லியபடி வீடியோ கால் கட் ஆனது.
இதுவரை அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அல்லியும், சிவாவும் ஹேய்.... வாழ்த்துக்கள் கா என்று கத்தி சொல்ல,தம்பி தங்கையின் குரலில் கலைந்தவள் பின் தனது மெயிலை ஓப்பன் பண்ணி படித்தவள்,வி.வி. க்கு மெயில் அனுப்பினாள்.
இந்த அக்ரிமெண்ட் எனக்கு தேவையில்லை.முதல் முறையாக எனக்கு கொடுத்த வேலையை என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்வேன் என்று அனுப்பி விட்டு,லேப்டாப்பை ஆப் பண்ணியவள்,நேராக சாமியறைக்கு சென்று கண் மூடி வணங்கினாள்.
அல்லியோ சமையலறைக்கு சென்று வேலு வாங்கி வந்த பஞ்சாமிர்தத்தை எடுத்து வந்தவள் தாமரை பூஜையறையிலிருந்து வெளியே வர, அக்கா ஆ காட்டு என்க,என்னடி என்றாள்.
நீ காட்டு என்க,தாமைரையும் வாயை திறக்க,அவள் வாயில் ஒரு ஸ்பூன் பஞ்சாமிர்தத்தை வைத்தவள், இனிப்போடு வாழ்த்துகள் கா.
தேங்க்ஸ்டி என்றவள்,இதை முதல்ல வேதாம்மாக்கு சொல்லணும் என்று சொல்லி விட்டு,தனது செல்லில் இருந்து வேதாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,அவருக்கும் மருமகள் சொல்லிய விஷயத்தை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது.
அக்கா தங்கை இருவரும் கவிதாவை பார்த்து தலையசைத்து விட்டு,அம்மனுக்கு புஜை செய்வதை கவனிக்க தொடங்கினர்.கவிதாவும் கண்ணை மூடி அம்மனை வணங்கிய பின்னர் கருவறையினுள் இருக்கும் அம்மனை பார்க்க,ஆரத்தி தட்டோடு அய்யரும் வெளியே வந்தார்.
தன்னிடமுள்ள பூவை அர்ச்சனை தட்டின் மேல் வைத்த கவிதா,அய்யரிடம் மெஷின் வாங்கியதை பற்றி சொல்லி மகளின் பேருக்கு அர்ச்சனை பண்ண சொல்ல,அதேப்போல மந்திரம் ஓதி பூஜை செய்தவர் இரண்டு எலுமிச்சை பழத்தையும் சிறிது துண்டு பூவையும் கவிதாவிடம் வந்து கொடுத்து,பழத்தை அறிந்து மெஷினின் இரண்டு புறம் குங்குமம் தடவி வைக்க சொல்லி விட்டு, அவருக்கு குங்குமத்தையும் பூவையும் கொடுத்து உள்ளே சென்றார்.
"கவிதா, தாமரை வந்திருக்கான்னு கேள்விப்பட்டோம்" என்று சீதா சொல்ல,
"ஆமாங்கண்ணி. அவளும் தான் கோயிலுக்கு வந்திருந்தாள். அதுக்குள்ளே வேலை விஷயமாக போன் வந்ததுனு அல்லி கூட வீட்டுக்கு போயிட்டாள்."
"நாங்க அவளை பார்க்கலாம்னு ஆசையா இருந்தோம்" என ராதா சொல்ல,
"தெரியும் அண்ணி. வளவன் வந்து உங்களிடம் சொல்லி இருக்கும்னு நினைத்துக் கொண்டு தான் இருந்தேன்."