- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
32
நட்சத்திரா சென்று அரைமணி நேரம் கழித்து கீழே வந்த அரிச்சந்திரன் மனைவியைத் தேட, தங்கையின் முறைப்பு மட்டுமே கண்ணில்பட்டது. “என்ன பார்வை முறைப்பா வருது? ஆமா நதி. மை நதீரா எங்கே?” என்றான் அவள் அருகில் இல்லாத தைரியத்தில்.
“இதை, இந்தப் பெயரை அவள்கிட்ட சொல்லிட்டியா?”
“இல்ல சொல்லணும். ஏன் கேட்கிற?”
“ஒரு பிரச்சனையைத் தீர்க்க நாங்க முடிவு பண்ணினா, நீ தொடரும் போட்டு வச்சிருக்க. ஒரே வார்த்தையில அவளோட கேள்விக்குப் பதில் சொல்ல எங்களால முடியாதா என்ன? ஏன் சொல்லலை? நீ சொல்லி அவள் புரிஞ்சிக்கணும். உங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வரணும்னுதான். ஆனா, நீ? ஏன்ணா சொல்லலை?” என்று கோவத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடித்தாள்.
“சில விஷயங்கள் கோவத்தில் இருக்கும்போது சொன்னா தவறாகிரும் மின்னல்மா. அவள் அமைதியா இருக்கும்போது பேசிக்கலாம்னுதான் சொல்லலை. சரி நதி எங்க? வீட்ல இருக்கிற மாதிரி தெரியலையே?” என்றவன் கண்கள் வீட்டினுள் சுழன்றது.
“ம்... அவளோட அம்மா வீட்டுக்குப் போயிருக்கா?”
“தனியாவா? ஏன்?”
“உன்மேல உள்ள கோவத்துல போறா.”
“சேச்சே... நதிக்காவது கோவமாவது. உளறாத மின்னல். அவள் என்கிட்ட கோவப்படமாட்டா” என்றான்.
“அப்ப நான் பொய் சொல்றேனா? நிஜமாவே கோவத்துல தான்ணா போயிருக்கா.”
“இல்லை இருக்காது” என வாய் சொன்னாலும், மனம் ‘ஐயோ’ என்றலறியது. வேகமாக தன் அறைக்குச் சென்று கைபேசியை எடுத்து மனைவிக்கு அழைக்க, ரிங் மட்டுமே சென்று நின்றது. “ப்ச்... எடு நதி. நீயே என்னைப் புரிஞ்சிக்கலைன்னா எப்படி? ப்ளீஸ் நதிமா பிக்கப் தெ போன்” என்றவன் வேறு வழியில்லாது அதை அனுப்பினான்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
திருக்குறளுக்கு அவளிடமிருந்து பதிலில்லை என்றதும் ‘நம்பிக்கை அதானே எல்லாம்’ என்றனுப்பினான்.
அதைக் கண்டவள், ‘என்ன சொல்ல வர்றாங்க’ என புரியாமல் விழித்து “என்ன சொல்ல வர்றீங்க?” என்பதைக் கேட்க டைப் செய்து அனுப்பாது அப்படியே வைத்தாள்.
அடுத்ததாக ‘நம்பினோர் கைவிடப்படார்’ என்ற மெசேஜ் வர முறுவல் அவள் இதழில். அடுத்ததாக ‘மனிதனுக்குத் தேவை நம்பிக்கை! யானைக்குத் தேவை தும்பிக்கை!’ என்று வந்தது.
அதைக் கண்டதும் முறுவல் மலர்ந்த புன்னகையாக வர, டைப் செய்து வைத்த மெசேஜை சுட்டுவிரல் அழுத்தியது.
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சியவள் கோவத்தை
தீர்க்க வழி சொல்லம்மா
பறந்து வருவேன் உன்னகத்தே!
பதில் வந்ததில் எழுந்த சந்தோஷத்தில் அனுப்பினான்.
“கொழுப்பு” என திட்டி கோவமாக பல்லைக்காட்டும் எமோஜியுடன், இதயம் உடைந்த எமோஜியும் அனுப்பினாள்.
போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நானிறப்பேன்
அப்பாடலைக் கண்டவள் “அபசகுனமா என்ன சாங் இது? தொலைச்சிருவேன்” என்று கோவ ஸ்மைலிகளைத் தட்டிவிட மனம் படபடப்பானது.
எப்பொழுதும் மனசு சேலாகும் சாட்டிங் இன்று கணமாக. கணவனிடம் இருந்து வந்த மன்னிப்பை லட்சியம் செய்யாது, பழைய மெசேஜைப் பார்த்தாள். அப்படியே மேலே உள்ள மெசேஜை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்க, மறைமுகமாகச் சொல்லப்பட்டதில் எதோ புரிவது போலிருந்தது.
தனது மன்னிப்புக்குப் பதிலில்லை என்றதும், மனைவியைத் தேடி வருகையில், தன்யாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன் அர்ஜெண்ட் ஒர்க் என்றதும் மனைவியை வந்து சமாதானம் செய்யலாம் என்று கிளம்பிவிட்டான்.
‘எப்படியும் வருவான்’ என நினைத்தவள் எண்ணம் நேரமாக ஆக தவிடுபொடியாகி, அவ்வளவு நேரம் இல்லாத கோவம் தன்னாலே வர, மதியம் சாப்பிடக் கூப்பிட்ட தாயை உண்டு இல்லையென்று செய்துவிட்டாள்.
“உன் வீட்ல உள்ள கோபத்தை இங்க ஏன்டி காட்டுற?” என்று யசோதாவும் கேட்டுவிட,
“இதுவும் என் வீடுதான்ற எண்ணம் இருக்கிறதால காட்டுறேன் போதுமா. பிராடுங்க! என்னைச்சுற்றி எல்லாருமே பக்கா பிராடுங்க. நான் மட்டும் எதுவுமே தெரியாமல் இருந்திருக்கேன். உங்க மருமகனோ ஒரு படி மேல போய்... உங்களை என்ன செய்தால் தகும்?” என்று பல்லைக்கடித்தாள்.
“ஏங்க இவளுக்குக் கோவம் வர்றதே அபூர்வம். சீக்கிரத்துல சாந்தமடையாது. எதுக்கும் மருமகனுக்கு போன் பண்ணுங்களேன்.” யசோதா தவிப்புடன் கணவனிடம் சொல்ல,
“அவரை ஏன் யசோ வரச்சொல்ற? இந்த நேரம் வந்தார்னா பாவம்.”
“அப்ப உங்க பொண்ணுகிட்டப் பேசி சமாதானம் பண்ணுங்க.”
“இப்பவா? சம்ஹாரம் பண்ணப்போற காளி மாதிரியிருக்கா” என்றார் பயந்தாற்போல்.
“உங்களை...” என கணவனை முறைத்து, “நதி இப்ப என்னதான் வேணும் உனக்கு?” என்று கேட்டார்.
“தெரிஞ்சா சொல்லமாட்டேனா. நான் உங்க பொண்ணுதான? எனக்கு என்ன வேணும்னு நீங்களே சொல்லுங்க?” கேள்வியைத் தாயிடமே திருப்பினாள்.
“ஏய் உன் பொண்ணு தெளிவா இருக்கா. நீயே பதில் சொல்லு” என்று நக்கலாகச் சொன்னார் நந்தகுமார்.
“இவள் உங்களுக்குதான் செல்லம். அதனால நீங்களே சமாளிங்க” என்று பல்லைக்கடிக்க,
“அங்க என்ன பேச்சு? முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க?” கோபத்தில எரி நட்சத்திரமாகவே மாறியிருந்தாளோ!
“உனக்குப் பதில் உன் புருஷன்தான் நதி. உன் கோவம், ஆத்திரம் எல்லாத்தையும் அவர்கிட்ட காண்பி. இப்ப எங்களை விடு. சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். காலையிலதான் கோவத்துல சாப்பிடலை. இப்பவாவது சாப்பிடு. சாப்பிட்டா கோவம் போகும். மருமகன் வந்ததும் கொஞ்சம் தன்மையாய் பேசு. நாங்க வெளில போயிட்டு வர்றோம். வாங்க போகலாம்” என்று கணவனையும் இழுத்துக்கொண்டு செல்ல,
“அம்மாஆஆ... ம்மா...” என்ன அழைத்தும் அவர்கள் நிற்கவில்லை. காலை தரையில் உதைத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
வெளியே சென்றவர்கள் வாசல் அருகில் நின்றிருந்தவனைக் கண்டு “நீங்க எப்ப வந்தீங்க?” என்றார் யசோதா.
“அப்பவே” என்று அப்பாவியாய் உரைத்து, “நீங்க என்னை ஏமாத்திட்டீங்க மாமா?” என்று குற்றம் சாட்டினான்.
சட்டென்று அதிர்ந்து “நா...நானா? நான் என்ன...?” நந்தகுமார் தடுமாற்றத்துடன் கேட்க,
“என் பொண்ணு பிராக்டிகலா யோசிக்கிறவள்னு நீங்கதான சொன்னீங்க? இங்க இருக்கிற நிலையைப் பார்த்தா அப்படித் தெரியலையே?”
“ஹையோ மாப்ள. அவள் ரொம்ப பொறுமைசாலிதான். பொறுமை எல்லை மீறும் போது இப்படி லைட்டா...”
“எது? இது லைட்டா?”
ஆமென்று நந்தகுமார் தலையாட்ட,
“செம ஹாட் மாமா” என்றான் அவன்.
“அவளோட கோவமும் நியாயம்தான். பேசினால் எல்லாம் சரியாகிரும். நாங்க உங்க வீட்டுக்குதான் போறோம். பாசிட்டிவான ரிசல்ட் வந்ததும் தகவல் சொல்லுங்க. அப்புறமா வர்றோம்” என்றார்.
“ரெண்டு நாளானா கூட ஓகேவா?”
“எத்தனை நாளானாலும் நாங்க காத்திருக்கோம்” என்று அவர்கள் செல்ல, தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மனைவியின் முன் வந்து நின்றான்.
கணவன் வரவை உணர்ந்தும் அவள் நிமிராமல் இருக்க, “நதிமா! புதுசா கல்யாணமான ஹஸ்பண்ட் பூ வாங்கித் தரணுமாம் பாட்டி சொன்னாங்க. உன்னைப் பார்க்கதான் வந்தேன் நதி. அதுக்குள்ள தன்யா மேம் அவசரமான வேலைன்னு கூப்பிட்டதுல போயிட்டு வர லேட்டாகிருச்சி” என்று விளக்கம் கொடுத்தான்.
நிமிர்ந்து கணவன் முகம் காணாமல் கைகளைக் காண,
“இது பூ! இது அல்வா! ஒய்ஃப்கு வாங்கித் தந்தா நல்லதாம்” என்றான் எச்சில் விழுங்கியபடி.
“எது அல்வாதான? ஏன் ஏற்கனவே கொடுத்தது பத்தாதா?”
“நதி! நதீரா பற்றி உன்கிட்ட...”
அவனைப் பேசவிடாமல் கைநீட்டித் தடுத்தவள், “நான்தான் நீங்க சொன்ன நதீராவா? ஆமாம்னு மட்டும் சொல்லிராதீங்க” என்றாள் அவன் பதிலளிக்கும் முன்னதாகவே.
“உண்மை அதுதான்றப்ப எப்படி நதி சொல்லாமல் இருக்கிறது?”
‘உண்மை கசக்குமா? இதோ கசக்கிறதே நட்சத்திரப் பெண்ணவளுக்கு.’
“நதீரா நானா? நான் எப்படி நதீராவாக முடியும்? எப்படி நதீராவானேன்?”
“நதிமா! நான் சொல்ல வருவதை கொஞ்சம் அமைதியா கேளேன்?”
“நேத்து கேட்டேனே ஏன் சொல்லலை? அப்ப இப்ப நான் ஏன் கேட்கணும்?” என்று எதிர்வாதம் புரிந்தாள்.
“நேத்து நீ எமோஷனலா இருந்த. அப்ப சொன்னா சரிவராதுன்னு...”
“இப்பவும் நான் அப்படிதான் இருக்கேன். அதனால, எதுவும் சொல்லத் தேவையில்லை” என்றாள் பட்டென்று.
“நதி ஒரு பைவ் மினிட்ஸ் நான் சொல்ல வர்றதைக் கேளு. எனக்காக! உன் சந்துருக்காக! எழுந்து ரூம்கு வா” என்று எழுவதற்குக் கை கொடுத்தான்.
‘எதுக்கு நேத்து மாதிரி பேச்சை டைவர்ட் பண்ணவா?’ கேட்கத் தோன்றிய நாவை அடக்கி அவன் பின்னே சென்று கட்டிலில் அமர,
“உன்னை நான் எப்ப பார்த்தேன் தெரியுமா?” என்றான்.
“மார்கழி ஒண்ணு.”
“ஹேய்! உனக்கெப்படி?” கோவிலில் பார்த்தது தெரியுமென்பதாய் கேட்க,
“அந்த இடப்பிரச்சனை சால்வ் பண்ணிட்டு உங்க தங்கச்சியோட வந்தப்ப பார்த்திருப்பீங்க. அப்பக் கூட என்னைப் பார்த்தீங்களா தெரியலை. செகண்ட் மகாபலிபுரத்துல பார்த்தீங்க.”
“இரண்டுமே இல்ல நதி. நான் பார்த்ததும் நீ என்னைப் பார்த்த அதே முருகர் கோவில்லதான்.”
“என்ன? நிஜமாவா?” ஆச்சர்யம் அவளுக்குள்.