• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி 5

ரோஜா, துர்வா தனக்காகத் தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.
"வா ரோஜா. நாளைக்கு வாரத்தின் இறுதி நாள். அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன். உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு மேசை மேல் மூன்று தட்டை வைத்தாள் கனகா.
"இங்க பக்கத்துல சர்ச் இருக்கா?" என்று ரோஜா கேட்டதும், கனகாவின் முகம் மாறியது.
"ஏய் நீ என்ன கிறிஸ்டினா?" என்று கனகா கேட்கும் கேள்வி ஒன்றும் ரோஜாவிற்கு புதிதல்ல.
"நான் தமிழ் குடிமகள். மதத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டவள். ஆனா, என் உயிர் தோழிக்கு நாளை பிறந்தநாள். அதான் அவளுக்கு பிடித்த பரமபிதாவை சந்திச்சி, அவளுக்கான மனுவை தரலாம்னு கேட்டேன" என்றாள் ரோஜா.
"ம்... உன் உயிர் தோழி பிறந்தநாளுக்காக சர்ச் போற நீ, உன் உயிர் நண்பன், அதான் என் தம்பி பிறந்தநாளுக்கு எங்க போவ?"
"அவன் பிறந்தநாளுக்கு கண்டிப்பா நான் வரதராஜன் பெருமாளை சந்திப்பேன்" என்று ரோஜா சொன்னதும், அவள் தட்டில் சிரித்து கொண்டே கனகா தோசையை வைத்தாள்.
"கை வலி இருந்தா சொல்லு. நான் ஊட்டி விடுறேன்" என்று கனகா சொன்னதும்,
"வலி எல்லாம் இல்ல. நீங்க நிம்மதியா சாப்பிடுங்க" என்று ரோஜா சொல்ல, கனகாவின் கணவன் மோகனின் ஆத்மாவுடன் சேர்ந்து மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
"சரி ரோஜா. எனக்கு ஆபீஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு. அதை முடிச்சிட்டு நான் தூங்கிடுவேன். நீயும் நேரத்தோடு போய்ப் படுத்துக்கோ. எதாவதுனா என் ரூம் கதவைத் தட்டு" என்று சொன்ன கனகா, கையில் லேப்டாப் தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து போனையும் எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்.
ரோஜா மாடியில் உள்ள தன் அறைக்கு வந்தவள், கட்டிலில் அமர்ந்து, அவள் தந்தையை கைபேசி மூலம் அழைத்தாள். ரோஜாவின் அழைப்புக்காக காத்து இருந்த அவளின் தந்தை மறுமுனையில், "ரோஜாமா எப்படிமா இருக்க? போன இடத்துல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? நீ தனியாவா தங்கி இருக்க? நீ சாப்பிட்டியா? இந்த அப்பா மேல உனக்கு எந்த கோவமும் இல்லயில்ல" என்று கேட்ட எல்லா கேள்விகளும் ரோஜா மீது அவர் கொண்ட அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது.
"அப்பா நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னோட ஒரே பதில், நான் நானா சந்தோசமா இருக்கேன்" என்று மனநிறைவோடு ரோஜா சொன்னாள்.
"சரிமா நாளைக்கு நான் உன்னை பாக்க வரேன். நீ எங்க இருக்கன்னு முகவரி அனுப்புடா" என்றார்.
தந்தை முகவரி கேட்டதும், அவருக்கு விடையாக ரோஜாவின் மௌவனம் மட்டுமே கிடைத்தது.
"சரி சரிம்மா. இனி கேக்கல. நீ நல்லா இரு. எனக்கு அதே போதும். தினமும் எனக்கு போன் பண்ணு" என்று ரோஜாவின் தந்தை அன்பு கட்டளையிட,
"ம்... சரி அப்பா. நீங்க ஜாக்கிரதை" என்று சொன்ன ரோஜா கைபேசி இணைப்பைத் துண்டித்தாள்.
துர்வா இவளுக்கு தந்த புத்தகத்தைப் பார்த்ததும், அவனின் குழந்தை நினைவுக்கு வர, தன் பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை அழுத்தினாள்.
நீண்ட நேரம் போன் ரிங் ஆனதும், துர்வா வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர் அலைபேசியை எடுத்து, “ஹலோ யாருங்க பேசுறீங்க?" என்று கேட்க,
"துர்கா... சாரி துர்வா சார் இல்லையா?" என்று மரியாதையாக கேட்டாள் ரோஜா.
"சின்ன ஐயாவும் பெரிய ஐயாவும் திக்ஷி பாப்பாவை தூக்கிகிட்டு ஹாஸ்பிடல் போய் இருக்காங்கங்க. நீங்க சின்ன ஐயா செல்போன் நம்பர் இருந்தா அதுல கூப்பிட்டு பாருங்க" என்று அந்த நபர் சொன்னதும்,
"குழந்தைக்கு என்னாச்சு" என்று ரோஜா பதறியபடி கேக்கும் முன்பே அலைபேசியின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது..
"ஐயோ பிள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே" என்று வாய் விட்டு புலம்பியவள் வேகமாக துர்வாவின் கைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.
புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் எடுத்தவன், “ஹலோ சொல்லுங்க. யார் பேசுறது?" என்று பொறுமையாக துர்வா கேட்டான்.
"துர்கா நான்..." என்று ரோஜா தன்னை கைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தி கொள்ளும் முன்பாக, “ரோஸ் நீயா? என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க? ஏதாவது பிரச்சனையா?" என்று தன் சூழ்நிலையை மறைத்து துர்வா ரோஜாவை கேள்வி கேட்டான்.
"பாப்பாவுக்கு என்னாச்சு துர்கா? ஏன் நீங்க இந்த நேரத்துல ஹாஸ்பிடல்ல இருக்கீங்க?" என்று ரோஜா பதற்றதுடன் கேட்டாள்.
"அது... அது வந்து ரோஸ், நான் தான் அவகிட்ட கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன். அதனால ரொம்ப அழுது ஹை பீவர் வந்து கண்ணு திறக்க முடியாம அனத்த ஆரம்பிச்சிட்டா. அதான் பயந்து போய் நானும், தாத்தாவும். திக்ஷியை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தோம்" என்று துர்வா மனதில் உள்ள வலிகளை வலிமை இழந்த வார்த்தைகளாக சொல்லி முடித்தான்.
"துர்கா நான் உங்க குழந்தையை உடனே பாக்கணும். முடியுமா?" என்று ரோஜா எதை பற்றியும் யோசிக்காமல் கேட்டு விட்டாள்.
"என்ன? இந்த நேரத்துலயா? வேணா ரோஸ். உன் கணவர் எதாவது சொல்ல போறாரு" என்று துர்வா பெண்களுக்கு உரிய கட்டமைப்பை யோசித்து ரோஜாவை அங்கே வர வேண்டாம் என்று சொன்னான்.
"நான் உங்க பொண்ணை பாக்கணும். எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நான் பார்த்தா உங்களுக்கு எதாவது ப்ரோப்ளம் வரும்னா சொல்லுங்க நான் வரல." என்று ரோஜா தெளிவாகச் சொன்னாள்.
"இந்த நேரத்துல நீ தனியா வர வேணாம். உன்னை ஈவினிங் ட்ரோப் பண்ண டிரைவரையே அனுப்புறேன். அவர் கூட வா. மறுபடியும் சொல்றேன், உன் புகுந்த வீட்டுல பிரச்சனை எதாவது வரப்போகுது யோசிச்சிக்கோ" என்று துர்வா மீண்டும் ஆரம்பித்த வார்த்தையில் வந்து நின்றான்..
"நேர்ல சந்திப்போம். உங்க டிரைவர் சார்க்காக நான் காத்து இருப்பேன்" என்று சொன்ன ரோஜா, தன் பையில் இருந்து பச்சை நிற புடவையை எடுத்தவள் கண் இமைக்கும் நேரத்தில் உடையை மாற்றிக்கொண்டு கைப்பையுடன் கீழே இறங்கினாள்.
கனகா அவள் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்பது, அவளின் குறட்டை ஒலி இவளுக்கு ஒளிவு மறைவும் இன்றி காட்டிக் கொடுத்தது.
தன் கைப்பையில் இருந்த இவளது கைக்குறிப்பு புத்தகத்தின் கடைசி பக்கத்தைக் கிழித்தவள அதில், "காலை வணக்கம் கனகா. துர்காவின் மகளுக்கு உடல் நிலை சரியில்லை. அதனால், நான் குழந்தையை பார்க்க மருத்துவமனை போகிறேன். காலையில் உன் குழம்பி தயாராகும் முன்பு வீட்டிற்கு திரும்ப முயற்சி செய்கிறேன். ரோஜா🌹" என்ற சிறிய தகவலை எழுத்தால் தெரியப்படுத்தியவள், அந்தக் காகிதத்தை மேசை மேல் வைத்து, காகிதம் பறந்து விடாமல் இருக்க, அதன் மேல் கனகாவின் கணவர் மோகனின் சின்ன புகைப்படத்தை ஏந்திய போட்டோ வைத்தவள் துர்வாவின் காருக்காக காத்து இருந்தாள்.
கார் இவளை சுமந்து செல்ல வந்து இருப்பதை அறிந்து, வீட்டின் நுழைவாயில் கதவை தன் கையில் இருந்த துறப்பை கொண்டு பூட்டியவள், துர்வாவின் காரில் ஏறி அமர, கார் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையில் சீறிப் பாய்ந்தது.
காரை விட்டு இறங்கிய ரோஜா, டிரைவரின் உதவியோடு துர்வாவின் மகளை சேர்த்து இருக்கும் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
"மேடம் அதோ அங்க பெரிய ஐயா நிக்கிறாரு பாருங்க" என்று டிரைவர் சொன்னதும், தன் நடையில் வேகத்தை கூட்டிய ரோஜா அவர் எதிரில் போய் நின்றாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
"வா மா. என்ன நீ? ஏன் இந்த நேரத்துல வந்த? உனக்கு இதனால எதாவது பிரெச்சனை வரப்போகுதுமா," என்று துர்வாவின் தாத்தா கேட்க,
"அதெல்லாம் விடுங்க தாத்தா. பாப்பாக்கு என்னாச்சு? ஏன் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திங்க?" என்று ரோஜா கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.
"என்னத்த சொல்ல சொல்றமா. எல்லாம் அந்த குழந்தை வாங்கி வந்த வரம். தீக்ஷி குட்டிக்கு தனக்கு அம்மா இல்லை என்று புரிந்து கொள்ளும் வயசு இல்லை. அதனால உன் அம்மா சாமிகிட்ட போய் இருக்காங்கன்னு சொல்லி தான் துர்வா இத்தனை மாசமா அவளை சமாதானப்படுத்தி வைத்திருந்தான். இன்னைக்கு கடை தெருவில் அவ உன்னை பார்த்ததும் சாமிகிட்ட போன அம்மா திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லி ரொம்ப சந்தோஷமா இருந்தாள். ஆனா, நீ அவகிட்ட சொல்லாம உன் வீட்டுக்கு போனதும் துர்வாகிட்ட உன்னை கேட்டு ரொம்ப அடம் பிடித்து சாப்பிட மாட்டேன்னு சொல்லி அழ தொடங்கிட்டாள். கொஞ்சம் கோவமா துர்வா குழந்தையை ஏசிட்டான். அழுது அழுது குழந்தை சாப்பிடாம தூங்கிட்டாள். குழந்தை அனத்தும் சத்தம் கேட்டு நான் அவள் அறைக்குப் போகும் போது பாப்பாவுக்கு ஜுரம் அதிகமாக இருந்தது. குழந்தையால கண் திறக்கவே முடியல. அதனால தான் பயந்து போய் நானும் துருவாவும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்" என்று துருவாவின் தாத்தாவும் கண்கள் கலங்கியபடி குழந்தையின் வேதனையை தன் கண்ணீரால் தெரியப்படுத்தினார்
"டாக்டர் என்ன சொன்னாங்க தாத்தா? இப்போ நான் போய் குழந்தையை பார்க்கலாமா? துர்கா எங்க?" என்று ரோஜா கேட்டாள்.
"இப்பதான்மா துர்வா மருந்து வாங்க மருந்துக் கடைக்கு போய் இருக்கான். டாக்டர் இன்னும் ஏதும் சொல்லல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஹ்ம்... என்ன சொல்ல சொல்ற. அந்தக் குழந்தைக்கு தனக்கு அம்மா இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள கூடிய வயசு இல்ல. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ. அந்தக் கடவுளுக்கு ஒரு உயிர் வேண்டுமென்றால் என் உயிர எடுத்து இருக்கலாம். எதுக்கு வாழ வேண்டிய வயசுள்ள சின்னஞ்சிறுசோட உசுரை எடுத்து இந்த கொடுமையை எல்லாம் என்னை பார்க்க வைச்சு மகிழ்கிறார் என்று தெரியவில்லை" என்று துர்வாவின் தாத்தா மேலும் கவலை கொண்டார்.
"உங்க பேத்திக்கு இப்போ பீவர் நார்மலா இருக்கு. ஆனா, குழந்தை அப்பா, அம்மான்னு அனத்திகிட்டு இருக்காள். நீங்க போய்ப் பாருங்க" என்று டாக்டர் சொன்னதும், துர்வாவின் தாத்தா ரோஜாவுடன் சிகிச்சை அறைக்குள் நுழையும் முன்பு....
"ரோஸ் ப்ளீஸ் உள்ள நீ போகாத" என்று ரோஜாவை அழைத்தபடி துர்வா கையில் மருந்து பொருட்களுடன் இவர்களை நோக்கி வந்தான்.
"ஏன் துர்கா? நான் ஏன் உள்ள போகக்கூடாது?"
ரோஜா கேட்ட கேள்விக்கு துர்வாவின் பதில், "உன்னை பார்த்தா மறுபடியும் திக்ஷிதா அவ அம்மா நீ தான்னு நினைச்சு உன்னை விடமாட்டா" என்று துர்வா சொன்னவன், தன் தாத்தாவை அழைத்து கொண்டு குழந்தை திக்ஷிதா இருக்கும் சிகிச்சை அறைக்குள் சென்றான்.
குழந்தை திக்ஷிதாவை பார்த்த துர்வா கண்கள் கலங்கி அவள் அருகில் அமர்ந்தவன், "திக்ஷி குட்டி.... அப்பா வந்து இருக்கேன் பாரு. இங்க பாரு மா" என்று அன்பாக குழந்தையிடம் துர்வா பேசினான்.
"பாப்பா தாத்தா வந்து இருக்கேன் பாருமா. இங்க பாரு செல்லம் தாத்தாதவை" என்று துர்வாவின் தாத்தாவும் திக்ஷிதாவை அழைக்க,
குழந்தை கண்கள் திறக்காமல், "அம்மா, அம்மா..." என்று அனத்தினாள்..
"என்ன தாத்தா இது? முன்னாடி எல்லாம் உன் அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்கன்னு சொன்னா, அம்மாவை சீக்கிரம் வர சொல்லுங்கன்னு சொல்லிட்டு நார்மலா விளையாட ஆரம்பிச்சிடுவா. ஆனா இப்போ என்ன, அம்மா அம்மான்னு இப்படி வந்து ஹாஸ்பிடல்ல படுத்துட்டா" என்று துர்வா அவன் தாத்தாவிடம் புலம்பினான்.
"துர்வா இன்னைக்கு ரோஜாவை பார்த்ததும் நானே உன் பொண்டாட்டி உசுரோட வந்துட்டான்னு தான் நினைச்சேன். ஆனா பாவம்டா குழந்தை. அவளுக்கு எப்படி தெரியும் நிழல் எது, நிஜம் எது என்று..." என துர்வாவின் தாத்தா அவனிடம் குழந்தையின் மனநிலையை எடுத்து உரைத்தார்.
"தாத்தா ரோஸ் இவ அம்மா இல்ல. அத குழந்தைக்கு நம்ம தான் புரிய
வைக்கணும்" என்று துர்வா தன் மனதில் பட்டதைச் சொன்னான்.
"அப்பா அம்மா எங்க? அம்மா... அம்மா எங்க தாத்தா?" என்று குழந்தை திக்ஷிதா மழலை குரலில் இவர்களை கேள்வி கேக்க, பதில் சொல்ல முடியாமல் இருவரும் தயங்கி நின்றார்கள்.
குழந்தையின் மன நிலையைக் கண்டு வாசலில் நின்று அழுவதை காட்டிலும், உள்ளே சென்று பிள்ளையை கட்டி தழுவி முத்தமிட வேண்டும் என்று முடிவு செய்த ரோஜா, துர்வாவின் சொல்லை மீறி குழந்தை திக்ஷியின் அருகில் சென்றாள்.
"ரோஸ் நீ ஏன் உள்ள வந்த? குழந்தை உன்னப் பார்த்தா அப்புறம் உன்னை அவ கூடவே இருக்க சொல்லி அடம் பிடிப்பா" என்று துர்வா கண்டிப்பான குரலில் ரோஜாவிற்கு சூழ்நிலையை எடுத்துரைத்தான்.
"நாளைய கதையை அப்புறம் பாத்துக்கலாம் துர்கா. குழந்தை இப்படி அழும் போது. என்னால எப்படி பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்"
என்று துர்வாவிடம் வாதம் செய்த ரோஜா குழந்தையை தூக்கி தன் மார்போடு கட்டி அணைத்து கொண்டாள்.
"அம்மா... எங்க போனீங்க நீங்க? இந்த அப்பா நீங்க சாமிகிட்ட போயிட்டீங்க, இனிமே திரும்பி வரவே மாட்டிங்கன்னு சொல்லி என்கிட்ட கோவமா பேசினாரு" என்று கொஞ்சும் குரலில் மழலை பாஷையில் ரோஜாவின் கழுத்தை கட்டிக்கொண்டு பேசும் திக்ஷியின் அன்புக்கு, ரோஜா தன்னை அறியாமல் அடிமையாக மாறி இருந்தாள்.
"நான் இங்க தான் இருக்கேன். நீங்க அழக்கூடாது. சமத்து பொண்ணா இருக்கனும் புரியுதா?" என்று ரோஜா செல்லம் கொஞ்சியவளின் முத்தம் திக்ஷிக்கு சஞ்சீவி மலை மூலிகையாக மாறியது.
மருத்துவரின் அறிவுரையை கேட்ட பின்னர், ரோஜாவின் தோளில் உறங்கி கொண்டு இருந்த குழந்தை திக்ஷிதாவை வீட்டிற்கு அழைத்து போக முடிவு செய்தான் துர்வா.
"சரி ரோஸ். நான் டிரைவரை வர சொல்றேன். நீ கிளம்பு. இப்போவே லேட் நைட் ஆகிடுது" என்று சொன்ன துர்வா, ரோஜாவின் தோளில் உறுங்கி கொண்டு இருந்த குழந்தையை தூக்கப் போனான்.
"இல்ல துர்கா. பிளீஸ் நான்... நான் உங்க கூடவே, உங்க வீட்டுக்கு வந்து குழந்தையை தூங்க வச்சிட்டு போறேனே" என ரோஜா சம்மதம் கேட்பதை நம்ப முடியாதவனாக பார்த்திருந்தான் துர்வா.
"ரோஜா இதனால உன் குடும்பத்துல எதாவது பிரச்சனை வர போகுதுமா" என்று துர்வாவின் தாத்தா அஞ்சியப்படி கேட்டார்.
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது தாத்தா. நான் உங்க வீட்ல கொஞ்ச நேரம் குழந்தைக் கூட இருந்துட்டுப் போறேன்” என்று சொன்னாள் ரோஜா.
ரோஜா, குழந்தை திக்ஷிதாவை தோளில் தூக்கி கொள்ள, துர்வா காரின் பின் கதவை திறக்க, துர்வாவின் தாத்தாவுடன் குழந்தையை தாங்கிக் கொண்டு ரோஜா காரின் பின் இருக்கையில் அமர்ந்ததும், டிரைவர் பக்கத்தில் துர்வா அமர்ந்து கொண்டான்.
நேரம் அதிகாலை மூன்று மணி அளவில், ஆளில்லா சாலையில் கார் வேகத்தை பிடிக்க, அடுத்த சில நிமிடங்களில் கார் துர்வாவின் வீட்டை சென்றடைந்தது.
காரின் பின் கதவை திறந்த துர்வா, "குழந்தையை என்கிட்ட தா ரோஸ்" என்று கேட்டான்.
“இட்ஸ் ஓகே துர்கா. நானே குழந்தையை தூக்கிட்டு வரேனே" என்று சொன்ன ரோஜா தன் கரங்களால் திக்ஷிதாவை தூக்கி கொண்டு துர்வாவின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
குழந்தை மீது ரோஜா கொண்ட அக்கறை, இவர்கள் வாழ்க்கையை ஆனந்தமாக்குமா என்பதை வரும் பகுதிகளில் பார்ப்போம்.

குறை ஒன்றும் இல்லை!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இனி அல்லோல் தான் 🤣🤣🤣🤗🤗🤗
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top