• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

அஞ்சலியின் வீட்டு வாசலில் நண்பர்களோடு சேர்ந்து டாக்டரும் நிற்க்க, ஹாலிங் பெல்லை அழுத்தினான் ராஜா.

அஞ்சலி தான் கதவை திறந்தாள், அவர்கள் அனைவரையும் அருகில் பார்க்கவும் அவளது எண்ண ஓட்டத்தை அவளாலேயே கணிக்க முடியவில்லை, அவர்களிடம் என்ன பேசுவது உள்ளே அழைக்க வேண்டுமா கூடாதா என்ற எந்த எண்ணமும் இல்லாமல் அப்படியே பார்க்க,

டாக்டர் மௌனம் கலைத்தார்.

அவள் நிற்கும் விதத்திலேயே கணித்து விட்டார் இவள் தான் அஞ்சலி என்று,

" என்னம்மா அஞ்சலி வீட்டுக்கு ஆள் வந்தா உள்ள வாங்க உட்காருங்கன்னு சொல்லி தண்ணி கிண்ணி கொடுக்கணும் ம்மா, அத செய்யாம பாத்துட்டே நிக்கியே... இப்படி நின்னா அப்படியே போய்விடுவோம்ன்னு பாக்கியா? அதெல்லாம் போகமாட்டோம் உள்ள போயிட்டு டீ கீ போட்டு எடுத்துட்டு வா " என்று சொல்ல,

" அச்சச்சோ " என்று சொல்லிய அஞ்சலி கதவை முழுவதுமாக திறந்து உள்ளே வர அனைவரையும் பணிந்தாள்.

ராஜாவும் டாக்டரும் உள்ளே வரும்போது இன்முகமும்,

மோகன் உள்ளே வரும்போது குற்ற உணர்வு அல்லாத வருத்தம் தாங்கிய முகத்தையும் காட்டினாள்,
அவளது முகத்தோற்றமே அவனிடம் அவள் மன்னிப்பு வேண்டுகிறாள் என்பதை காட்டியது,
அதைக் கண்டு உணர்ந்து தலையை கவிழ்ந்து கொண்டு அவளின் மீது அவனுக்கு இருக்கும் வருத்தத்தை காட்டி உள்ளே சென்றான் மோகன்.

அவனுக்கு பின் நின்ற வீராவை பார்க்கவும் அவளது மனதில் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க, அதன் வண்ணம் முழுவதும் முகத்தில் தெரிந்தது. வண்ணம் ஜொலிக்கும் முகத்தோடு அவனை வரவேற்றாள்,

" வா மாமு முதல்முறையா நம்ம வீட்டுக்குள்ள நீ உடலும் உயிருமா வார மாமு " அவளது கொண்டாட்டம் கூடியது,

" செம ஸ்பெஷல் டே மாமா இன்னைக்கு வா வா உள்ள வா " என்று அவனது கையைப் பிடித்து உள்ளே அழைத்தாள் அஞ்சலி, அவனது கையை பற்றி அழைத்த பின்பு அடிவயிற்றில் இருந்து குரல் மேல் எழும்பியது,
" அம்மா அம்மா " என்று...

அடுக்கலையில் சமைத்துக் கொண்டிருந்த வேணி வேகமாக வெளியே வந்தார், வந்தவரின் கண்ணில் மோகன் விழ திடுக்கிட்டு போனார். இருந்தும் தன்னை சமாளித்து கொண்டு,

" வாங்க தம்பி உக்காருங்க " என்று சோபாவை காட்ட ராஜாவும் டாக்டரும் அவனோடு சேர்ந்து அமர்ந்தார்கள்.

அஞ்சலி அதற்கு பின்னால் வீராவை கையோடு அழைத்துக் கொண்டு வந்தாள் அவள் வீராவின் கையை பிடித்து இருப்பதை பார்த்து வேணி அதட்டும் விதமாக கண் ஜாடை செய்தார், கூடவே என்னங்க என்ற சத்தமும்....

ஏற்கனவே அஞ்சலியின் இறைச்சல் அவரது காதில் விழுந்திருக்க அவரும் ஹாலில் அசம்பல் ஆகி இருந்தார் அவருக்கும் மோகனை பார்த்ததும் சிறு சங்கடம் எழ அப்படியே நின்றார்.

ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை எந்த எண்ணமும் அவளை எதுவும் செய்யவில்லை அவளின் அவளோடு அவள் இரண்டற கலந்து அங்கு இருக்கும் சூழலையே மறந்திருந்தாள் அவளின் நடவடிக்கையை வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தார் டாக்டர்.

முத்தம் பற்றி பேசிய போது திணறிய வீராவிடமும் அவள் அவனை பற்றியிருக்கும் அந்த தருணத்தில் எந்தவிதமான சங்கட உணர்வும் இல்லை மாறாக மகிழ்ச்சி நிறைந்து இருந்தது அவனது முகத்தில்...

வேணி அவர்களை தடுக்கும் பொருட்டு பேச வர அவரை தடுத்து நிறுத்தினார் டாக்டர்,

" என்ன ம்மா என்ன செய்ய போறீங்க? "

" இல்லங்க அய்யா எல்லாரும் வந்து இருக்கீங்க, வந்தவங்களுக்கு எதாவது கொடுக்கணும்ல அத விட்டுட்டு, "

" அவ வீட்டுக்காரர பார்த்துட்டே நிக்கான்னு சொல்ல வாறீங்களா? " அவர் முடிக்கும் முன்பே டாக்டர் வேறு மாதிரி முடிக்க அனைவரிடமும் அதிர்ச்சி,

" அய்யயோ அய்யா அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல " என்று சொல்லிய வேணியால் அதற்கு மேல் பேச முடியாமல் சங்கடம் ஆட்கொள்ள அப்படியே பேச்சை நிறுத்தினார்.

" அட என்ன ம்மா நீங்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகலன்னு சொல்றீங்க ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள அத்தனை பொருத்தம் இருக்கே, அங்க பாருங்க நம்ம எல்லாரும் இருந்தாலும் கூட அவங்களுக்கு அவங்க மட்டும் தனியா ஒரு உலகத்துல இருக்கிற மாதிரி உணர்வுல இருக்காங்களே இப்படிப்பட்ட உணர்வு எல்லாம் அத்தனை சாதாரணமா வந்துறாதே... " என்று டாக்டர் சொல்ல வேணியால் மறுத்தும் பேச முடியவில்லை, வேறு பதிலும் சொல்ல முடியவில்லை.

" இத்தனை உணர்வு நிறைந்த உன்னதமான உறவ கணவன் மனைவின்னு சொல்லாம என்ன சொல்ல சொல்லுறீங்க? "

அங்கிருந்த யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை,

" ஏன் மோகனு கொஞ்சம் அவங்க ரெண்டு பேர பாரு டா உன் மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சு போகும் டா. " மோகன் அவர்களை பார்க்க இருவரது முகத்திலும் இருந்த சந்தோச உணர்வை தெல்லென உணர்ந்தான்.

தன்னோடு டாக்டர் வீட்டில் இருந்த வீராவிற்கும், அஞ்சலியோடு இப்போது இருக்கும் வீராவிற்குமான வித்தியாசத்தை நினைத்து பார்த்தவன் பிரம்மித்து தான் போனான். நிச்சயம் ஒருவனால் இப்படி நடிக்க முடியாது அதே நேரம் வீரா இதுவரை எதற்காகவும் யாரிடமும் பொய்யாக நடித்தது இல்லை, சிறு வயதிலிருந்து வீராவை பார்க்கும் மோகனுக்கு அவனது ஒவ்வொரு செயலும் அத்துப்பிடி, அந்த வகையில் பார்க்கயில் அங்கு டாக்டர் வீட்டில் இருந்த வீராவின் கவலை நிறைந்த முகமும் உண்மை தான், இங்கு அஞ்சலியோடு சந்தோசம் நிறைந்து நிற்கும் வீராவின் முகமும் உண்மை தான் என்பது உணர்ந்த நேரம் சோபாவில் இருந்து எழுந்து,

" உன் கனவு, நீங்க உணறுற உணர்வு இதெல்லாம் எனக்கு புரியாத புதிர் தான் டா ஆனா உங்க காதல் மட்டும் நிஜம்ன்னு எனக்கு உறுதியா தெரியுது.
இதுக்கு முன்னாடி இதே அஞ்சலிய நானும் சில முறை பார்த்து இருக்கேன் டா அப்போ எல்லாம் அவ சாரி அவங்க முகம் அழகா எனக்கு தெரியும் டா, அதுல ஒரு குட்டி சிரிப்பு இருக்கும், ஆனா இன்னைக்கு அவங்க முகம் பூரிச்சு போய் இருக்கு டா, மனசு நிறைஞ்சு இருந்தா தான் அந்த பூரிப்பு முகத்துல தெரியும்ன்னு யாரோ சொல்லி கேள்விபட்டுருக்கேன் டா ஆனா அத முதல் முறையா பார்த்து உணருறேன் உங்களோட இந்த உண்மையான காதல் மூலம்.

ரொம்ப தேங்ஸ் டாக்டர், நா கூட நீங்க இங்க வரணும்ன்னு சொல்லவும் எங்க பிரச்சனை ஆகுமோ? விஷயம் இன்னும் பூதாகரம் ஆகுமோன்னு தான் யோசிச்சேன் ஆனா இங்க வந்தா, இவங்க ரெண்டு பேரும் சந்திச்சா போதும் என் மனசும் தெளிஞ்சு போகும்ன்னு நீங்க சொன்னதை அப்போ நா நம்பல இப்போ முழுசா நம்புறேன் டாக்டர்.

ஒரு உறவை காதல் இணைக்குற மாதிரி கல்யாணம் இணைக்காதுன்னும் புரிஞ்சிகிட்டேன் டாக்டர், ஒருவேளை வீராவும் அஞ்சலியும் வாழ்கைல சந்திக்காம போயிருந்தா பேர் அளவுலயும், மனசலவுலயும் கணவன்ங்குற பெயர்ல புரிதல் இல்லாத ஒரு வாழ்கை தான் வாழ்ந்து இருப்பேன் டாக்டர், இதோ நிக்கிறானே இவன் இடத்துக்கு என்னால ஒரு நொடி கூட உயர்ந்து இருக்க முடியாது டாக்டர்.

பாருங்களேன் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு அவன் ஒரு வார்த்தை பேசல அவங்க அவனை பிடிச்சு இருக்குற மாதிரி பிடிச்சு கூட இருக்கல அவனோட அருகாமை அவங்களுக்கு எவ்ளோ பெரிய இன்பத்தை கொடுத்து இருக்கு. இதெல்லாம் பெரிய விஷயம் டாக்டர்.

உணர்வுகள் கலந்து கொடுக்கும் காதலை போல உள்ளம் கலந்தாலும் கொடுக்க முடியாது....

உள்ளம் சமயத்திற்கு தகுந்தவாறு மாற்றம் அடைய கூடியது,
உணர்வு உயிர் வாழும் வரைக்கும் நிலையாக இருக்க கூடியது....
உணர்வில் கலந்த இவர்களின் காதல் உள்ளமும் உடலும் கலந்து இன்னும் உயர்ந்து போகட்டும்..... " என்று சொல்லி மனம் நிறைந்த வாழ்த்துகளோடு அவர்களிடமிருந்து விடை பெற்று கிளம்பினான் மோகன்.

மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

எங்கிருந்தாலும் வாழ்க மோகன் 🥰🥰🤗
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top