Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
வீரா தனக்கு நேரும் நிகழ்வுகளின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள நண்பர்களோடு போராடிக் கொண்டிருந்த நேரம் அஞ்சலி தனது அறையில் சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள் அன்னை தந்தையிடம் தனது ஆசை நாயகனை பற்றி சொன்ன பின்பு அவளது மனம் இன்னும் லேசானது, அதற்கு காரணமும் இருந்தது அன்னையும் தந்தையும் அவனை சற்று புரிந்து கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கனவு என்ற விஷயம் மட்டுமே அவர்களுக்கு நெருடலாக இருந்தது மற்றபடி வீரா சொல்லிக் கொடுத்தான் என்று அவள் சொன்ன விஷயத்தை கேட்டதிலிருந்து அவர்கள் இருவருக்கும் வீராவின் மீது மதிப்பும் மரியாதையும் கூடி இருந்தது.
அதனால் அவர்கள் அமைதியாக இருக்க அஞ்சலி கொண்டாட்டமாக இருந்தாள் முன்பிருந்த கவலையோ வருத்தமோ எதுவும் அவளுக்கு இல்லை வீராவை பற்றிய நினைவுகளில் சுற்றி சுழன்று வந்து கொண்டிருந்தவளுக்கு இன்னொரு சம்பவம் நினைவிற்கு வந்தது....
அன்று அவளின் இஷ்ட தெய்வமான அந்த எம்பெருமான் ஈசனை தேடி கோவிலுக்கு சென்றிருந்தாள், அவளுக்கு ஈசனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு அந்த கோவிலில் இருக்கும் தெப்பக்குளத்தையும் பிடிக்கும், அந்த ஒற்றை அரசமரம் படர்ந்து விரிந்து இருக்க அதன் நிழலில் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மீன்களை ரசிப்பதில் அவளுக்கு கொள்ளை பிரியம். அந்த மீன்களுக்காகவே அரிசிபொரியையும் கையோடு வாங்கி கொண்டு வந்து அமர்ந்து விடுவாள். அன்றும் அப்படி தான் வந்து அமர்ந்து இருந்தாள், பொரியை தூவி விட மீன்கள் முட்டி மோதி கொண்டு இரையை கவ்வி கொண்டிருந்தது, அது ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இரையை எடுப்பதை பார்த்து அஞ்சலி சிரித்து கொண்டிருக்க அவளின் அருகில் வந்து அமர்ந்தான் வீரா.
" அம்மு செம்ம குஷியா இருக்க போல "
" வீரா வா வா அங்க பாரேன் அந்த மீன் எல்லாம் எப்படி போட்டி போட்டு இரையை புடிக்குது, ஒன்னோட ஒன்னு போட்டி போட்டு " அவள் சிரித்து கொண்டே சொல்ல, வீராவின் கண்கள் குளத்தில் பதிந்தது. சில நொடிகள் அப்படியே அவனது கண்கள் குளத்தை ஆழமாக ஊடுருவ அது ஊடுருவிய திசையை அஞ்சலியின் கண்களும் பார்த்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை பொறுத்திருந்த அஞ்சலிக்கு அதற்கு மேல் பொறுமை இழந்த போக,
" வீரா உன்ன மீனை தான பார்க்கச் சொன்னேன் நீ ரொம்ப ஆழமா பாத்துக்கிட்டு இருக்கே என்ன பாக்குற? "
" அம்மு சொல்லுக்கு மறுசொல் ஏது மீனத்தான் அம்மு பாத்துக்கிட்டு இருக்கேன் "
" மீனை பாக்குறவன் ஏன் இவ்வளவு கூர்மையா பாக்குற வீரா? "
" அம்மு பாக்க சொன்னா அதுல எவ்ளோ அழகியல் இருக்கும் அத இப்படி பார்த்துட்டு அப்படி கண்ணை திருப்ப முடியாது அம்மு அதான் ரொம்ப டீப்பா பார்த்துட்டு இருக்கோம் "
" டீப்பா பாக்குற அளவுக்கு என்ன இருக்கு வீரா? "
" சொன்னா வெக்க பட கூடாது "
" வெக்கமா? "
" ம்ம்ம் "
" வெக்க பட மீன்ல என்ன இருக்கு வீரா? "
" கொஞ்சம் அங்க பாரு அம்மு "
" எங்க "
" அங்க " கையை நீட்டி காட்ட கை சென்ற திசையை அஞ்சலி பார்த்தாள்,
அங்கு அவளுக்கு ஒன்றும் தெரியாமல் போக,
" ஒன்னும் புரியல வீரா " யோசனையாக பார்க்க, வீரா சிரித்தான்.
" டேய் என்னன்னு சொல்லிட்டு சிரி டா " முறைப்பாக சொல்ல,
" அப்படியே பார்த்தா எப்படி அம்மு தெரியும், "
" பின்ன எப்படி சார் பாக்கணும் " அவள் கேலியாக கேட்க,
" அம்மு "
" ம்ம்ம் "
" கொஞ்சம் கிட்ட வா "
" ம்ம் "
" அந்த கூட்டமா இருக்குற அந்த மீனை தாண்டி கொஞ்சம் பாரு "
" ம்ம்ம் "
அங்கு இரண்டு மீன்கள் மட்டும் தனியாக கூட்டத்தில் சேராமல் இருந்தது. அதில் ஒற்றை மீன் திரும்பி இருக்க அதற்கு பின்னால் இருந்த இனொரு மீன் பொரியை கவ்வி கொண்டு அதற்கு கொடுக்க சென்றது ஆனால் திரும்பி இருந்த மீன் அதை கண்டு கொள்ளாமல் இருந்தது, அதை தான் அஞ்சலிக்கு வீரா காட்டினான்.
" அஞ்சலி சிரித்து கொண்டே சூப்பர் இல்ல வீரா பாரேன் அது எப்படி பொரிய கொண்டு போய் கொடுக்குது "
" கொய்யால பொரி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது " என்று வாய்க்குள் வீரா சொல்ல,
" என்ன வீரா " என்று சிரித்துக் கொண்டே வீராவை பார்த்தாள்,
அவன் சிரித்து கொண்டே தலையை ஆட்டினான் ஒன்றும் இல்லை என்பதற்கு அறிகுறியாய்,அவள் அவனை ஆராய அவளின் கவனத்தை திசை மாற்றும் வண்ணம்
" அம்மு கொஞ்சம் அந்த பொரிய தான்டி பாரேன், பொரி எப்பவோ தண்ணியில போயிருச்சு ஆனா அந்த மீன் ரெண்டு என்ன செய்வதுன்னு பாரு,
கோபத்தில் இருந்த காதலியை கொஞ்சி சரி செய்யும் காதலனை போல் திரும்பி இருந்த மீனை சரி செய்து அதன் இதழோடு தன் இதழை பொருத்தி ஒன்றின் இதழை இன்னொன்று உணவாக உட்கொண்டு கொண்டிருந்தது...
அப்போதுதான் அஞ்சலிக்கது புரிந்திருக்க வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள் அச்சோ என்று.
" வீரா மீன் கூட இதெல்லாம் பண்ணுமா " வெட்கம் கலந்த ஆர்வமும் அவளது குரலில்
" இதெல்லாம் பண்ணாம எப்படி இனப்பெருக்கம் நடக்கும் அம்மு " குறும்பு கலந்த குரலில் அவன்,
" ஐயோ சீ போடா " என்று வெட்கத்தில் மீண்டும் முகத்தை மூடிக்கொள்ள,
" அதான் அப்பவே சொன்னேன் சொன்ன பின்னாடி வெட்கப்பட கூடாதுன்னு இப்ப எப்படி வெக்கப்படுற பாத்தியா? "
" போடா நீ இப்படி காட்டினா வெட்கம் வராமல் எப்படி இருக்குமாம் பேட் பாய், "
" நானா பேட் பாய் அங்க பாரு அம்மு இன்னொரு பேட் பாய் என்ன செய்றான்னு "
" இன்னொரு பேட் பாயா? அவன் என்ன செய்யுறான் " வெட்கம் கலந்த திகிலோடு பார்க்க,
" அங்க பாரு " என்று மீண்டும் கையை நீட்டிக் காட்ட,
அங்கே உணவுக்காக இரண்டு மீன்கள் பயங்கரமாக சண்டை செய்து கொண்டிருந்தன,
ஒரு பொரியை இரண்டும் இருமுனைகளில் பிடித்துக் கொண்டு ஒன்னிடம் இருந்து இன்னொன்று புடுங்குவதற்கு பலமாக முயற்சி செய்து கொண்டிருந்தது.
" என்ன செய்து வீரா இரண்டும் சண்டை போடுதா? "
" ஆமா அம்மு ரெண்டும் பங்காளியா இருக்கும் போல இருக்கு அதான் இப்படி சண்டை போட்டுட்டு கிடக்குதுங்க " என்று சொல்லிக்கொண்டே அம்மு அம்மு என்று வேகமாக அழைத்த வீரா,
அதிலிருந்து சற்று தள்ளி இன்னொரு மீன் கூட்டத்தை காட்டினான்.
அங்கு ஐந்தாறு மீன்கள் இருந்தது அதில் மூன்று மீன்கள் மட்டுமே பொறியை கவ்விக் கொண்டிருந்தது அந்த பொறியை மிச்சம் இருந்த இரண்டு மீன்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவை ஐந்தும் ஒன்றாக உண்டு கொண்டிருந்தன.
" பாத்தியா அம்மு மீனு கிட்ட கூட பகுத்து சாப்பிடற பழக்கம் இருக்கு " என்று வீரா விளக்கம் சொல்ல அஞ்சலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
" என்ன அம்மு அப்படி பாக்குற "
" உன் பார்வையே புதுசா இருக்கு வீரா, இத்தனை நாள் நானும் எல்லாரும் மாதிரியும் வருவேன் குளத்துல உட்காருவேன் அந்த அலை அடிக்கிறதை பார்ப்பேன் பொரிய வாங்கி போடுவேன் மீனு துள்ளி துள்ளி விளையாண்டு அதை அள்ளிட்டு போகும் அத பார்த்துட்டு கடந்து போயிருவேன், ஆனா அந்த மீன்களுக்குள்ள என்னென்ன விஷயம் எப்படி எப்படி எல்லாம் நடக்குதுன்னு எவ்வளவு அழகா ரசித்து பார்த்து இருக்க, இந்த ரசனை உன்னைத் தவிர வேற எங்கேயும் நான் பாக்கல டா நெஜமாவே நீ பெரிய ரசிகன்டா உன்கிட்ட இருந்து ரசனையா ரசிக்கிறது எப்படின்னு கத்துக்கிட்டேன் வீரா " என்று சொல்லி அவன் விழியில் தன் விழியை கலக்க புகழ்ச்சியின் வெட்கத்தில் அவனும் அவளை பார்த்து சிரித்து அப்படியே காற்றோடு காற்றாக கலந்தான்.
அந்த நினைவுகளை மனதில் ஓட்டி பார்த்த அஞ்சலி அவனது வரைபடத்தை எடுத்து கன்னத்தை கொஞ்சிக் கொண்டாள்.
" என் அழகு ரசிகன்டா மாமு நீ உம்ம்மா...... " என்று அந்த வரைபடத்திற்கு முத்தமும் கொடுக்க, அங்கு வீரா கன்னத்தை தொட்டு கொண்டான்.....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......