• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

வேணியுடன் பேசி கொண்டிருந்த அஞ்சலி அன்னையிடமும் தன் அரணை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்,

" அப்போ நான் பிளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன், ஒரு பையன் என்னை கேலி கிண்டல் பண்ணி, சடையை பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு இருந்தான்னு சொன்னேன் உனக்கு நினைவு இருக்கா ம்மா? "

" இப்ப எதுக்கு அதெல்லாம் நீ கேட்டுட்டு இருக்க, " சற்றே கடுகடுத்தார் கிருஷ்ணவேணி,

" ம்மா கேட்டா பதில் சொல்லுமா, "

" நினைவு இருக்குடி அதுக்கு என்ன இப்போ? "

" அதுக்கு நீ ஒரு தீர்வு சொன்னியே அது நினைவிருக்கா? "

" என்ன சொன்னேன்? "
எங்கே தனது மகள் தன்னை தாழ்த்தி அவனை உயர்த்தி விடுவாளோ என்ற அச்சம் அவரது குரலில் அப்படமாக தெரிந்தது...

" பயப்படாத ம்மா பயப்படாம சொல்லு, "

" ம்ம்ம்..... " என்று தலையை மேல் நோக்கி உயர்த்தி யோசிப்பது போல் பாவளா செய்துவிட்டு,

" உங்க வாத்தியார் கிட்ட போய் சொல்ல சொன்னேன், நீ பயமா இருக்குனு சொன்ன அதனால மறுநாள் காலையில நானே வந்து சொன்னேன், அவரும் அந்த பையனை மட்டும் தனியா வர வச்சி கண்டிச்சாரு அதோட அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சே. "

" அப்படின்னு நீ நினைச்சுகிட்ட அப்படி தான ம்மா? "

" நினைக்க என்ன டி வேண்டி கிடக்கு அதான் முடிஞ்சு போச்சே.. "

" வாத்தியார் கண்டிச்ச பின்னாடி அவன் வம்பு பண்ண வந்தான்னு சொல்லி உன்கிட்ட சொன்னேனே நினைவு இல்லையா? "

" ம்ம்ம் சொன்ன நீ கண்டுக்காம வந்துரு அவனும் ஒதுங்கிருவான்னு சொன்னேன்ல டி, பொம்பள புள்ள விஷயம் இல்லையா அதனால யாருக்கும் தெரிய கூடாது தெரிஞ்சா நாளைக்கு கண்ணு காது மூக்கு வச்சி பெருசா பிரச்சனை வரும் அப்படின்னு உங்க அப்பாவுக்கு கூட இன்னைக்கு வரைக்கும் நான் சொல்லலையே பிரண்ட் அந்த விஷயத்தை... "

" கரெக்ட் ம்மா நீ இதைத்தான் சொன்ன செஞ்ச, ஆனா அவன் என்ன செய்ய சொன்னா தெரியுமா? "

" எவன் என்ன செய்ய சொன்னான்? "

" ம்ம்ம் என் வீரா " என்று சொல்லியவள்,
அன்றைய நாளை நினைவுக்கு கொண்டு வந்து அன்னையிடம் அதை பகிர ஆரம்பித்தாள்,

" நீ சொன்ன மாதிரி நானும் ஒதுங்கி போக நினைச்சேன் ஆனா அவன் விடல ம்மா, ஓயாம வம்பு பண்ணுனான், அங்க இங்க நின்னுட்டு கமெண்ட் அடிச்சிட்டு இருந்தான், எனக்கு ஸ்கூல் போகவே விருப்பம் இல்ல, அன்னைக்கு எக்ஸாம் வேற இருந்துச்சு போயே ஆகணும், ஆனாலும் உள்ளுக்குள்ள பயம் மனசெல்லாம் திக் திக்ன்னு இருந்துச்சு, அப்போ அவன் குரல் கேட்டுச்சு ம்மா "

" அம்மு அம்மு "

" ம்ம்ம் "

" என்ன அம்மு ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்க எக்ஸாம்க்கு கிளம்பளையா? "

" ம்ம்ம் கிளம்பிட்டேன் வீரா "

" எக்ஸாம்க்கு போறவா பரபரப்பா கிளம்பாம இப்படி சோர்ந்து போய் இருக்க? "

" நா என்ன வீரா பண்ண எனக்கு பயமா இருக்கு "

" ஏன் பயம்? "

" எல்லாம் தெரிஞ்சுட்டு நீயே இப்படி கேட்டா எப்படி வீரா? "

வீரா கல கலவென சிரித்தான்.

" டேய் நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன் நீ வேற ஏன் டா சிரிச்சு கூட கொஞ்சம் கடுப்பு அடிக்க, " உஷ்ணமாக வந்தது அஞ்சலியின் குரல்.

" ஆத்தாடி என் அம்முக்கு கோபத்தை பாரேன்... "

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை அதே முறைப்போடு கோபத்தில் அமர்ந்து இருக்க,

" அம்மு " என்று தனிந்து வந்தது வீராவின் குரல்,

" ம்ம்ம் " அதே உஷ்ணம்

" ஏன் அம்மு இதே கோபத்தை ஏன் நீ அவன் கிட்ட காட்டல?, "

" என்னது... " கொஞ்சம் அதிர்ந்து வந்தது அஞ்சலியின் குரல்

" இதே கோபத்தை நீ ஏன் அவன் கிட்ட காட்டலைன்னு கேட்டேன். "

" அவன் கிட்ட எப்படி காட்ட அவனை பார்த்தாலே எனக்குள்ள ஒரு உதறல் வருது... "

" அப்போ என்கிட்ட மட்டும் வருது "

" உன்கிட்ட காட்டுறதுல எனக்கு என்ன பயம் இருக்க போகுது, என் உடலோட இருக்குற நிழல் மாதிரி இருக்க "

" ம்ம்ம் கூடவே இருக்குறவங்க கிட்ட காட்ட முடியுது அடுத்தவன் கிட்ட காட்ட முடியலை அப்படி தான, "

" அப்படி இல்ல வீரா நா என்ன செஞ்சாலும் நீ என்னை கஷ்டபடுத்துற மாதிரி எதுவும் பண்ண மாட்ட ஆனா அவன் என்னை கஷ்டபடுத்துற மாதிரி மட்டும் தான் பன்னிட்டு இருக்கான், எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு, கூடவே பயமும்... "

" ம்ம்ம் இப்படி பயந்துட்டே இருந்தா எப்படி? ஒருநாள் எதிர்த்து நின்னு முறைச்சு தான் பாரேன் "

" பயமா இருக்கே "

" ஒரு குட்டி விளக்கம் சொல்லட்டுமா அம்மு "

" ம்ம்ம் "

" நாய் இருக்குல்ல நாய் "

" ஆமா "

" அது வல்லு வல்லுன்னு குறைச்சிக்கிட்டு பின்னாடியே வரும், நாம பயந்து ஓடுனா நம்மள விடாம விரட்டி வரும், நாமலும் ஓடிட்டே இருப்போம் அதுவும் விடாம துரத்தும், ஒரு கடத்துல நமக்கு மூச்சு முட்டி ஓட முடியாம கொய்யாலன்னு அத எதிர்த்து பார்ப்போம் பாரு அந்த பார்வையே அதுக்கு ஒரு பயத்தை கொடுக்கும், என்ன டா இவ்ளோ நேரம் பயந்து ஓடினான் இப்போ எதிர்த்து நிக்கானே ஒருவேளை நம்மள கல்ல எடுத்து எரிஞ்சுருவானோன்னு அது நினைச்சு முழிக்கும், நாம கல்லு எல்லாம் எடுக்க வேண்டாம் கீழ குனிஞ்சா போதும் அந்த நாய் ஓடியே போயிரும்.... அப்போ தான் நமக்கு தெரியும் இந்த நாயோட பலம் என்னனு... அந்த நாய் மாதிரி தான், நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கேன் அம்மு... " சிரித்த முகமாய் அவளை அவன் பார்க்க

அவளும் சிரித்தாள்.

" போ அம்மு பொம்பள புள்ளைங்க இந்த மாதிரி பல நாய்கள வாழ்க்கையில பாக்க வேண்டியது வரும், பாக்குற நாய் எல்லாம் பார்த்து பயந்து ஓட முடியாது எதிர்த்து நில்லு உனக்கு எதிரா ஒரு நாய் கூட நிக்காது. நீ பொம்பள புள்ள அம்மு ஆம்பளய விட ஆயிரம் மடங்கு தைரியமா இருக்கனும். "
வீராவின் பேச்சில் அவளுக்கு ஒரு தெளிவு பிறக்க, அஞ்சலி முகம் தெளிவானது.

" அம்மு "

" ம்ம் வீரா "

" உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா அம்மு "

" என்ன வீரா? "

" ஒரு பொண்ணோட எரிக்கும் பார்வையை ஒரு ஆணால எதிர்த்து பாக்க கூட முடியாது தெரியுமா? "

" ம்ம்ம் நிஜமாவா? "

" இன்னைக்கு எக்ஸாம் போய்ட்டு வரும் போது பாரு அம்மு உன் பார்வை எதிர்ல இருக்குறவனுக்கு பயத்தை கொடுக்குதா இல்லையான்னு உனக்கே தெரியும்... "

அஞ்சலி சொல்லவும் வேணி வாயை பிளந்தார், அவரை அறியாமலே சொன்னார்,

" எவ்வளவு உண்மை நிறைஞ்ச வார்த்தை அஞ்சலி அவன் சொன்னது... "

அஞ்சலி சிரித்தாள்,

" இப்போ சொல்லு ம்மா அவன் அப்பாவா மட்டும் இல்ல அம்மாவாவும் இருந்து இருக்கானான்னு? "

அவர் அவளை அர்த்தமாக பார்த்தார், அந்த பார்வை அஞ்சலியின் மனதில் துள்ளலை இன்னும் அதிகமாக்கியது...

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

அம்மா விக்கெட் காலி
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top